அலை - 19
"அக்கா நீங்க எப்பவும் இவ்ளோ அமைதியா தான் இருப்பிங்களா?"
தனக்கு ட்ரிப்ஸ் மாற்றிக்கொண்டிருந்த செவிலியர் முகம் பார்த்து ஆரோஹி ஒரு ஆர்வத்தில் கேட்டுவிட, "ஆரூ" அஸ்வின் மனைவியை அதட்டினான்.
"சும்மா தான் நாராயணா கேட்டேன். ஒரு பொண்ணோட மனசு ஒரு பொண்ணுக்கு தானே தெரியும். என்ன க்கா நான் சொல்றது சரி தானே?"
"ஆரூம்மா நீ படு" என்றான் அஸ்வின் மீண்டும்.
"இல்ல சார் அவங்க படுக்க வேணாம், கொஞ்சம் ஒக்காந்து இருக்கட்டும்" என்ற அந்த செவிலியர் ஆரோஹி முகம் பார்த்து மெல்ல புன்னகைத்தாள்,
"நான் எப்பவும் இப்டி தான் மேம். கொஞ்சம் வலிக்கும் வேணும்னா என் கை புடிச்சுக்கோங்க"
அந்த பெண் கூறவும் வேகமாக எழுந்து வந்த அஸ்வின் ஆரோஹி தோளோடு அணைத்துக்கொள்ள, அவன் காதல் பார்த்து அந்த பெண்ணின் இதழில் மெல்ல புன்னகை அரும்பியது.
தான் வந்த பணியை முடித்து ஆரோஹியின் உடல்நிலையை ஒருமுறை பரிசோதித்தவள் அதே அறையில் தனக்கு கொடுக்கப்பட்டிருந்த சிறு மேஜையில் குறிப்புகளை எழுதி வைத்து யாருடனோ கைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தாள். அவளை கண் எடுக்காமல் ஆரோஹி பார்க்க அஸ்வினுக்கே அது சங்கடமாக இருந்தது.
"ஹே லூசு பொண்ணே இப்படியா ஒருத்தர வச்ச கண்ணு வாங்காம பாப்ப?"
"கிரிக்கெட்டரே எனக்கு அவங்கள பாத்து நர்ஸ் ஆகணும்னு ஆசையா இருக்கு. படிக்க வக்கிரீங்களா?"
"என்ன திடீர்னு? இதுக்கு முன்னாடி நர்ஸ் பாத்ததே இல்லையா?"
"பாத்துருக்கேன், ஆனா இவங்க ரொம்ப சாப்ட். அவங்க போடுற ஊசி கூட ரொம்ப வலிக்கல. குழந்தையை பாத்துக்குற மாதிரி பாத்துக்குறாங்க"
அஸ்வின், "நீ ஸ்பெஷல்லடா அதுனாலயா இருக்கலாம்"
"ஷி இஸ் ஆல்வேஸ் லைக் திஸ்" திடீரென தன் பின்னே கேட்ட குரலில் இருவரும் படக்கென திரும்ப அங்கு ஒரு மருத்துவன்.
வாட்ட சாட்டமான உடல்வாகு, பார்க்கவே ஒரு வசீகரம் அவன் முகத்தில் தெரிந்தது. அது நிமிர்வாலா இல்லை இயற்கையிலே வந்த வசீகரமா என்பது யாரும் அறியார்.
"அவங்களுக்கு ஸ்பெஷல் ஆர்டினரி எல்லாம் தெரியாது. எல்லாரும் ஒரே மாதிரியான முகத்தை தான் காட்டுவாங்க"
அதோடு அந்த தன்னுடைய பார்வையையும் அவளிடமிருந்து திரும்பியவன் அஸ்வினை பார்த்து கை நீட்டினான், "ஹலோ மிஸ்டர் அஸ்வின், ஐ அம் அர்ஜுன், நியூராலஜிஸ்ட். வரதராஜன் என்னோட அப்பா. உங்க கண்டிஷனை செக் பண்ணிட்டு வர சொன்னாங்க. மிஸ்ஸஸ் ஆரோஹி கேன் வி டாக்?"
ஆரோஹி தலை அசைக்க, அவளது மனநிலையை மெல்ல பேசி தெரிந்துகொண்டான். அவன் பேசியது ஆரோஹி பதில் கொடுத்தது எல்லாம் அந்த செவிலியர் குறிப்பெடுத்துக்கொண்டாள்.
"ஓகே குட்" எழுந்து நின்ற அர்ஜுன், "அஸ்வின் நாளைக்கு மார்னிங் டெஸ்ட் ரிசல்ட்ஸ் வந்துடும். பர்த்தர் டிரீட்மென்ட் பத்தி அப்போ பேசலாம். ரிலாக்ஸ் இப்போ"
ஆறுதல் வார்த்தை கூறி கதவை அடைந்தவன் திரும்பி அந்த செவிலியரை பார்த்து, "இலக்கியா என் கேபின்க்கு வாங்க" என்றான்.
"அக்கா உங்க பேர் இலக்கியாவா?" ஆரோஹி அந்த பெண்ணை பார்த்து கேள்வி கேட்க ஆரோஹிக்கு சன்னமான சிரிப்போடு ஆமாம் என்றவள் அர்ஜுனிடம்,
"என் டியூட்டி டைம் ஓவர் சார், நான் வீட்டுக்கு கெளம்பனும்" என்றாள் எழுத்தில் கவனமாக.
'திமிரு' முணுமுணுப்போடு அவளை முறைத்தவன் அதே உஷ்ணபார்வையோடு வேகமாக வெளியேறியிருக்க அவன் சென்றதும் கழுத்தை திருப்பி அவன் சென்ற திசையை பார்த்தவள் அடுத்த பத்து நிமிடத்தில் வேறொரு செவிலியரை அங்கு அமர்த்தி வெளியேறிவிட, அஸ்வினை ஆரோஹி ஒரு மாதிரி பார்த்து சிரித்தாள்.
"என்ன?" என்றான் அஸ்வின் மனைவி கையை பிடித்து அருகிலே அமர்ந்து.
"அவங்களுக்குள்ள என்னமோ இருக்கு கிரிக்கெட்டரே"
"எவங்களுக்குள்ள?"
"அந்த டாக்டர் அப்றம் இந்த இலக்கியா அக்கா"
"ஆமா வந்து ஒரே நாள்ல நர்ஸ் ஆகணும்னு ஆசை வரும், யாருன்னே தெரியாத ரெண்டு பேரை சம்மந்தமே இல்லாம சேர்த்து வைக்கணும்னு கூட ஆசை வரும், ஆனா உன்னையே சுத்தி சுத்தி வர்றவனை பத்தி ஒரு நிமிஷம் யோசிக்க தோணிருக்காது. அப்டி தானேடா?" போலியான சிரிப்போடு அஸ்வின் அவள் முகம் பார்த்து கேட்க, ஆரோஹி நெஞ்சினில் பயம் ஒட்டிக்கொண்டது.
கோவம் என்பது அஸ்வின் குரலில் துளியும் தென்படவில்லை, எதையோ இழக்கப்போகும் ஒரு வேதனையின் சாயல் அது.
எப்பயோ துவங்குமென அவள் எதிர்பார்த்த அந்த கேள்வி இப்பொழுது தான் துவங்குகிறது. உறக்க மருந்தை கொடுத்து உறங்க வைத்தவள் கண் விழிக்கும் பொழுது இருந்தது முற்றிலும் வேறான மருத்துவ சூழல்.
அவள் கண் விழிக்கையிலே வாடிய முகமாய் இரு பக்கம் அரனாய் மதியும் திவ்யாவும் காத்திருந்தனர். அப்பொழுது விழித்தவளை பார்த்து சிரமப்பட்டு சிரிக்க முயன்ற திவ்யாவிடம், "லிப்ஸ் ரொம்ப ட்ரையா இருக்கு திவ்யா நீ உன்ன கவனிக்கிறது இல்லையா?"
திவ்யா, "ரோஹி... வலிக்கிதா?"
ஆரோஹி, "வலியா எனக்கா... இப்ப கூட எந்திரிச்சு ஒரு ஓட்டம் ஓடிடுவேன். பாக்கறியா?"
மதி, "ம்ம்ம். நீ ஓடுறதுலையே இருடா" வேகமாக தோழிகளை இடையிட்டு பதில் கொடுத்த மதிவர்தினி மணத்தாங்களை எப்படி கூறவென தெரியாமல் மீண்டும் கண்ணீர் உதிர்க்க துவங்க, ஓரம் நின்ற அஸ்வின் தந்தையிடம், "ப்பா ப்ளீஸ் எல்லாரையும் கூட்டிட்டு வீட்டுக்கு போங்க"
"அது சரி வராது அஸ்வின்" உடனே தந்தையானவரிடமிருந்து பதில் வந்தது.
"ஆமா அஸ்வின், எங்களால வீட்டுல நிம்மதியா இருக்க முடியாது. நாங்க இங்கையே இருக்கோம்" என்றான் மாறனும் உடன்.
"இல்ல மாறன், நேத்துல இருந்து எல்லாரும் இங்க தான் இருக்கீங்க, திவ்யாக்கு ஹாஸ்பிடல்ல இருக்குறதால ஏதாவது அலர்ஜி ஆகிட்டா ரொம்ப கஷ்டம். நீங்க எல்லாரும் என் வீட்டுக்கு போங்க. பக்கம் தான். காலைல வாங்க" என்றான் அஸ்வின்.
"சரி எல்லாரும் போகட்டும் நான் இருக்கேன்" அடமாக நின்றான் சித்தார்த். அவன் பார்வை மொத்தமும் ஆரோஹி மேல் தான்.
நேற்றிலிருந்து அவன் முகம் சிறிதும் சரியில்லை எதையோ நினைத்து பெரிதும் அழுத்திகொண்டுள்ளான். ஆரோஹி சார்ந்த கவலை மட்டுமே என அஸ்வின் நினைக்க, அது மட்டுமல்ல என்றது அவனது சிந்தனை சூழ்ந்த முகம்.
"டேய் போ" அஸ்வின் சித்தார்த்தை பார்த்து முறைக்க, "இல்ல அஸ்வின்..." என்றவனை தடுத்து,
"வேலை எல்லாம் முடிச்சிட்டு வா. என் ஆரூவ நான் எங்கையும் போக விட மாட்டேன்"
அவன் கொடுத்த அழுத்தமே ஆண்களை சம்மதிக்க வைக்க பெண்கள் இருவரையும் அவ்விடத்தை விட்டு அப்புறப்படுத்த தத்தம் கணவன்மார்கள் தான் பாடு பட வேண்டி இருந்தது. அனைவரும் சென்ற பிறகு இறுதியாக அறையை விட்டு நகர்ந்த சித்தார்த், "எதுவா இருந்தாலும் ஒடனே கால் பண்ணு அஸ்வின்" என வெளியேற,
"டேய் சித்து... சித்து சித்து... டேய் ஜனனி புருஷனே" என்ன அழைத்தும் திரும்பியே பார்க்காமல் போனவனின் கோவம் புரிந்தாலும் விடாமல் அழைத்து பார்க்க அவன் நிற்கவே இல்லை.
"ஆரூ மெதுவா பேசு"
"அவன் ஏன் பேச மாட்டிக்கிறான் கிரிக்கெட்டரே?"
"பேசாம படு" அவளும் அவனோடு என்னென்னவோ பேச முயன்று தோற்று போய் இறுதியில் உறங்கியே விட்டாள்.
அடுத்த நாள் காலையில் ஆரோஹிக்கு தேவையான மருந்தை கொடுத்து வீட்டினருக்காக காத்திருக்கையில் தான் அஸ்வின் அந்த கேள்வியை வைத்தான். மனைவியோடு தனியாக இருந்தவனால் என்ன அடக்கியும் மனதிலிருந்த கேள்வியை கேட்காமல் இருக்க முடியவில்லை.
"நாராயணா..."
"வேணாம் ஆரூ நீ என்ன காரணம் சொன்னாலும் என்னால அதை ஏத்துக்க முடியாது. எப்படிடி இப்டி எல்லாம் யோசிக்க முடிஞ்சது?"
"இல்ல ப்பா நான் சொல்ல கூடாதுனு நினைக்கல" அவளது கண்ணீரை பொருட்படுத்தாமல் இரும்பென மாறிய தொண்டையை செறுமி அவள் முகத்தை ஏறிட்டான்.
"உனக்கு எப்ப ஆரூ இந்த பிரச்சனை தெரிஞ்சது?"
"கிரிக்கெட்டரே கோவப்படாதிங்க..." அவள் கெஞ்சியத்தில் தலை அசைத்து அனுமதி கொடுத்தான்.
"நம்ம கல்யாணம் முன்னாடியே தெரியும்"
"ஓ..." அவன் குரலில் தெரிந்த அந்த சலனமற்ற ஓ என்கிற வார்த்தை ஆரோஹியை கொல்லாமல் கொன்று புதைத்தது.
"நான் உங்க வாழ்க்கைல வந்துருக்கவே கூடாதோ நாராயணா?" உடைந்து வந்த அவள் குரலில் தன்னுடைய கைகளை அவளிடமிருந்து மெல்ல எடுக்க பார்க்க, பதறி அவன் கையை பிடித்துக்கொண்டாள்.
"அஸ்வின்..." அவள் தவிப்பை உணர்ந்தவன், "போகல" என்றான் உடனே.
தலை அசைத்து கண்ணீரை துடைத்தாலும் நிற்க மாட்டாமல் அழுகை வெடித்தது ஆரோஹி பெண்ணுக்கு, "உங்க லைப்பயும் சேர்த்து ஸ்பாயில் பண்ணிட்டேனா நான்?" அவனது அமைதியை எவ்வாறு எடுக்கவென அவளுக்கு தெரியவில்லை.
நிம்மதியான அவன் வாழ்க்கையில் வந்த தடையாக தன்னை அவன் நினைத்துவிடுவானோ என்கிற பயம் உடல் முழுதும் வியாபிக்க செய்வதறியாமல் அவன் முகத்தை தவிப்போடு பார்த்தாள்.
பேச வருவதும் தயங்குவதுமாய் இருந்தவன் ஒரு கட்டத்தில் வெடித்தேவிட்டான், "மொத்தமா சிதைச்சிட்ட ஆரோஹி" உஷ்ணம் அவன் சிரஸிலிருந்து கண்களில் மொத்தமாய் ஆக்ரமித்துவிட்டது.
அத்தனை கோவம் அதில், இவளது வார்த்தனை இன்னும் வருத்தியது மனதினை. நேசிப்பை உண்மையாய் வைத்த மனதிற்கு தான் அதிகமான அடி கிடைக்குமாம்.
அது அவன் வாழ்வில் நிரூபணமானது. அவனுக்கு இந்த நிலையென்றால் யோசிக்காமல் வெளியேறிய அஸ்வின் வார்த்தை அவன் மனைவியை சுக்கு நூறாக உடைத்துவிட்டது. அவளின் இயக்கமே நின்று போனதை போல் பெண் சிலையாகினாள்.
"ஒவ்வொரு நிமிஷமும் உன்னால செத்துட்டு இருக்கேன். யாருக்கும் கஷ்டம் குடுக்க கூடாதுனு தானே ஆரோஹி நீ நினைச்ச, ஆனா உண்மை என்னனா உன்னால மத்தவங்களுக்கு என்னைக்குமே கஷ்டம் மட்டும் தான்"
தடம் மாறிய அவன் வார்த்தை கேட்டவள் கண்களை மூடிக்கொண்டு வெறுப்புறம் திரும்பிவிட்டாள். மனைவி அழுவாள் என அஸ்வின் எதிர்பார்க்க அவளோ உடல் இறுகி கற்சிலையாய் மாறிவிட இன்னும் ஆத்திரம் அடங்கவில்லை போல அவனுக்கு.
"எத்தனை நாடகம், எத்தனை பொய்? தியாகியா மாற ட்ரை பண்றிங்களோ. பட் சாத்தியமா சொல்றேன் உன்னோட இந்த துரோகத்தை என்னால என்னைக்கும் ஏத்துக்கவே முடியாது"
விரல்களை இறுக்கமாய் உள்ளங்கைகளுக்குள் பொத்தி கொண்டவள் செயலால் அவள் உடலின் ரத்தம் நரம்பு ஊசியின் மூலம் சில நொடிகளில் ட்ரிப்ஸ் பாட்டிலோடு கலந்துவிட்டது.
நிறமற்ற அந்த திரவம் செந்நிறமாய் உருமாற அதை உடனே கவனித்த அஸ்வின் உடனே பதறி வெளியே சென்றிருந்த செவிலியரிடம் தகவல் கொடுக்க உள்ளே வந்த அந்த பெண் ஆரோகியின் செயலால் தான் அது நிகழ்ந்ததென அறிந்து, "மேடம் கைய லூஸ் பண்ணுங்க" என்றாள் வேகமாக.
அஸ்வினும் அப்பொழுது தான் அவளை பார்த்து, "ஆரோஹி கைய ப்ரீயா விடு" கொஞ்சமும் அவளது கைகளின் இறுக்கம் மட்டுப்படவில்லை.
"மேடம்..."
"ஆரூ" அவள் பார்வை வெற்று சுவற்றில் நிலைநாட்டியிருப்பதை உணர்ந்தவன் தானே அவள் விரல்களை பிரிக்க பார்க்க இரும்பா இதுவென ஆடி தான் போனான் அவள் கணவன்.
எத்தனை முயன்றும் சிறிதும் தளரவில்லை அந்த பிடி. அவளது உறுதியில் அரண்டவன் அந்த செவிலியரையும் கருத்தில் கொள்ளாது வேகமாக மனைவியின் முகத்தை கருத்தினில் போதித்து தன்னை பார்க்க வைத்தான்.
"ஆரூ... ரிலாக்ஸ் ம்மா"
"ஆரூ... என்னடா இது பார்வை?" கண் சிமிட்டாமல் தன்னை கூர்ந்து கவனிக்கும் அந்த பார்வையில் சிறிதும் அவன் ஆரோஹி தென்படவில்லை, இவள் வேறொருத்தி.
உணர்ச்சிகள், கவலை, கோவம், குறும்பு என மொத்தம் துறந்த வேறொரு பெண் இவள். கண்ணீர் திரையிட்ட விழிகளோடு அவள் கன்னம் வருடினான்.
இந்த பெண் அவனை வார்த்தையே இல்லாமல் அரட்டினாள், "ஹே பட்டாம்பூச்சி பயமா இருக்குடா. என்ன மன்னிச்சுடு ம்மா... ப்ளீஸ்..."
மழை மழையாய் அவன் கண்ணீர் தன்னில் சிந்தியும் அசையவில்லை, "ப்ளீஸ்... ஆரூ. ப்ளீஸ் ப்ளீஸ்... ப்ளீஸ் ரிலாக்ஸ் ஆகு. ப்ளீஸ் ஆரூ, என் மேல உள்ள கோவத்துல உன்ன நீயே ஹர்ட் பண்ணிக்காத. ப்ளீஸ்டா..."
மண்டியிட்டு அவள் கையை தன்னுடைய தலையில் வைத்து அவன் கதறிய பிறகே மெல்ல தளர்ந்தது பெண் உடல். அவளை விட்டு அசையவில்லை அவன். குன்றியிருந்த குற்றஉணர்வுகளை மேலும் தானே புண்ணை சொரிவது போல் கீறிவிட்டான் அஸ்வின்.
அந்த குற்றஉணர்வே அவள் காலடியில் மீண்டும் சரணடைய செய்துவிட்டது. தரையில் அமர்ந்து அவளது கால்களுக்கருகில் தலை வைத்து அவளை பார்த்தே அமர்ந்துவிட்டான் மன்னிப்பு கேட்கும் யாசகனை போல்.
நிமிடங்கள் கடந்தும் அவளும் அவனை பார்க்க கூட இல்லை, அவனும் அவள் முகத்தை விட்டு பார்வையை நகர்த்தவும் இல்லை. இருவருக்குமான பிடிவாதத்தில் வென்றது என்னவோ பெண் தான்.
ஏழு மணிக்கெல்லாம் வீட்டினர் வந்துவிட, ஆரோஹியின் நிலை சகஜமானாலும் அவளையே பார்த்திருக்கும் அஸ்வினுக்கும் திவ்யாவுக்கும் அவளது மாற்றம் தெளிவாக காட்டிக்கொடுத்தது.
அஸ்வின் பக்கம் பார்வையை கூட திருப்பாத தோழியின் செயலும் அவளையே ஏக்கமாய் பார்த்து அமைதியின் உருவமாய் நின்ற அஸ்வினையும் திவ்யா கவனித்துவிட்டாள்.
ஆரோஹியாலும் அதிகம் உண்மையை மறைத்து சிரிக்க முடியவில்லை, உறக்கம் வருவதாக கண் மூடி அவள் படுத்துவிட, அவளுக்கான அமைதியை கொடுத்து அனைவரும் வெளியேறினர் அஸ்வின் உட்பட. திவ்யா மட்டும் அங்கேயே இருக்க, உறக்கம் வராமல் கண் விழித்த ஆரோஹி திவ்யாவை அங்கு சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
"நீ வீட்டுக்கு போகலையா திவி?"
"உன்ன இப்டி விட்டு எப்படிடி எனக்கு போக மனசு வரும்?"
"எனக்காக வேணாம் என் மருமகனுக்காக நீ போகணும்ல..." என்றவள் தோழியை மேடிட்ட வயிற்றில் கை வைத்து, "என்னடா குட்டி பையா உன் அம்மாகிட்ட சொல்ல மாட்டியா? நீ உள்ள இருந்து ஹெல்த்தியா வந்துடுவ தானே?"
"கண்டிப்பா பைல்வானா தான் வருவ. உன் அப்பா கவனிப்பு அப்டி, டேய் குட்டி பையா உன்ன இப்பயே தூக்கணும் போல இருக்குடா"
தோழியின் வயிற்றில் பதிருந்திருந்த அவள் பார்வை திவ்யாவை பார்த்தது, "நான் அவனை ஹக் பண்ணிக்கவா திவி?" இந்த பெண்ணின் மனதினில் என்ன ஓடுகிறதென தெரியாமல் தவித்த திவ்யா தோழியின் வசதிக்காக அவள் படுத்திருந்த மெத்தையில் அமர்ந்துகொள்ள, ஒருக்களித்து படுத்த ஆரோஹி அவள் வயிற்றோடு கட்டிக்கொண்டாள்.
திவ்யா ஆரோஹியின் சிரசை மென்மையாக வருட வார்த்தை இல்லாத அந்த அறையினுள் மெல்ல மெல்ல ஆரோஹியின் விசும்பல் அதிகரிக்க, திவ்யாவுக்கு பயம் உச்சியை தொட்டது.
எவ்வளவு சமாதானம் கூறியும் பெண்ணானவள் சிறிதும் அசைந்துகொடுக்கவில்லை. நினைத்து நினைத்து அழுதது போல் இடைவெளிவிட்டு அழுக தானே மனம் வைத்து தான் விலகி படுத்தாள்.
"ரோஹி என்னடி எதுக்கு இந்த அழுக? வலிக்கிதா, டாக்டர் வர சொல்லவா?" எதற்கும் இல்லை என தலை அசைத்து படுத்தவள் தான் உறங்குவது போல் மீண்டும் பாவனை செய்துவிட, திவ்யா சென்று நின்றது அஸ்வினிடம்.
இரவு ஏதோ காரணம் கூறி அஸ்வினை தானே தன்னுடைய வீட்டிற்கு விடுமாறு மாறனை வைத்து பேச வைத்து விட்டாள்.
இதோ அஸ்வினோடு பயணத்தில் இருந்த பொழுது, "ரோஹி கிட்ட ஏதாவது சொன்னிங்களா?"
"உன்கிட்டயாவது ஏதாவது பேசுனாலா ம்மா?"
இல்லை என தலை ஆட்டினாள், அஸ்வினுக்கு மட்டும் கேட்கும் வகையில், "ரொம்ப அழுகை ண்ணா. அவ இப்டி அழுது நான் பாத்ததே இல்ல, ஏன் ண்ணா?" இவளும் அழுக ஏற்கனவே குற்றஉணர்ச்சியில் இருந்தவனை இது இன்னும் பாதித்தது.
"ஏன் முன்னாடியே சொல்லலனு கேட்டு கொஞ்சம் ஹார்ஷா பேசிட்டேன் ம்மா" என்றுரைத்தவனுக்கு அவளது எதிர்வினை இன்னும் நெஞ்சினில் திகிலூட்டியது.
"என்கிட்ட கேக்க அவளுக்கு என்ன திவ்யா இப்டி ஒரு யோசனை? பணத்துக்காக லோன் வர போய்... இப்போ கஷ்டப்படுறது யார்? அவளை இப்டி பாக்க முடியாம நான் தவிக்கிற தவிப்பு எனக்கு தான் தெரியும்..."
"உங்க கஷ்டம் எனக்கு புரியாம இல்ல, அவளுக்கு ஏதாவது ஒரு ரீசன் இருக்கும்"
"அப்டி என்ன உயிரை பணயம் வக்கிர ரீசன் இருந்துட போகுது? நல்லது பன்றேன்னு நினைச்சு எல்லாரோட நிம்மதியையும் மொத்தமா சூறையாடிட்டு போக பாக்குறா" வருத்தத்தை பிடியில் இருந்தவனுக்கு மீண்டும் கோவம் வந்து ஒட்டிக்கொண்டது.
"அண்ணா..." திகைத்தாள் திவ்யா அஸ்வினின் பேசினில்.
"இத மாதிரியே தான் ரோஹிக்கிட்ட பேசுனீங்களா?"
"இந்த மாதிரி இல்ல, இதையே தான் சொன்னேன்" என்றான் அஸ்வின் வெடுக்கென.
தோழியின் மனம் என்ன பாடுபடுமென உணர்ந்தவளுக்கு தன்னையும் மீறி அழுகை பிறந்தது.
"ஏதோ கோவம் திவ்யா, சாரி ம்மா"
"சாரி சொல்லி ஒன்னும் ஆகப்போறதில்ல ண்ணா" திவ்யாவின் கோவம் அஸ்வினை சற்று அதிர தான் வைத்தது.
"கோவம் மனுஷனை எவ்ளோ தூரம் உறவுல இருந்து தள்ளி வைக்கணும்னு தெரியாது உங்களுக்கு, அந்த கோவத்தால வர்ற வார்த்தைல மொத்தமும் இழந்து நிக்கிற என் ரோஹிக்கு தான் தெரியும்" அஸ்வின் புரியாமல் திவ்யாவை பார்த்து மீண்டும் தெருவினில் கவனம் செலுத்தினான். '
"ரோஹி அப்பா யார் தெரியுமா?" இல்லை என்றவனிடம், "கதிர்வேலன் இண்டஸ்ட்ரீஸ், தெரியுமா?" அது தெரியாமல் போகுமா, தென் இந்தியாவில் பிரசித்தி பெற்ற ஆடை உற்பத்தி மையம்.
"அதோட ஒரே வாரிசு தான்ஆரோஹி" திவ்யாவின் செய்தியில் அஸ்வின் கைகளில் இருந்த வாகனம் சற்று தடுமாறி பின் சீரானது.
"அப்றம் ஏன்?"
"வாழ்க்கைல சந்தோசத்தை மட்டுமே பாத்து வளர்ந்த பொண்ணுக்கு திடீர்னு சந்தோஷம்னா என்னன்னே தெரியாம போனா அதோட வேதனை வார்த்தையால சொல்ல முடியாதுல... அப்டி தான் ஆராஹிக்கு.
அவ நயந்த் படிக்கிறப்போ அம்மா அப்பா ஒரு ஆக்சிடென்ட்ல அவ கண்ணு முன்னாடியே இறந்துட்டாங்க. ரொம்ப அழகான கபிள்ஸ், ஒருத்தர் ஒருத்தர் அவ்வளவு அனுசரணையா, மத்தவங்க சந்தோசத்தை முகத்தை பார்த்தே தெரிஞ்சு புரிஞ்சு நடக்குறவங்க.
அவங்க உலகமே ஆரோஹி தான். எவ்ளோ வேலை இருந்தாலும் தன்னோட குடும்பத்துக்கு குடுக்குற முக்கியத்துவம், நேரம் பாத்து எனக்கே பொறாமையா இருக்கும். ஒரு குடும்பம்னா இப்டி தான் இருக்கணும்னு பாக்குற எல்லாருக்கும் ஆசை வரும்.
அப்டி இருந்த பெத்தவங்க இறப்பு தன்னோட கண் முன்னாடி நடந்து அதுக்கு நாம எதுவுமே பண்ண முடியாம தவிக்கிரதை விட கொடுமையான விஷயம் வேற எதுவும் இல்ல.
ரொம்ப சின்ன வயசு, அவ அன்னைக்கு அழுத அழுகையை பாத்து அந்த கூட்டமே அழுதுச்சு. யாராலயும் சமாதானம் படுத்த முடியல. ரொம்ப நொறுங்கி போய்ட்டா...
இதுக்கு அவ அன்னைக்கே இறந்து போயிருக்கலாம் போல அடுத்த அடுத்த சம்பவம். அதுவரை தொழில், குடும்பத்து மேல கொஞ்சமும் அக்கறை இல்லாத அவ சித்தப்பா வந்து தொழில்ல ஆரம்பத்துல அபகரிச்சு, அப்றம் ஆரோஹிய டார்ச்சர் பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டாங்க.
அவளோட பெத்தவங்க இறப்புக்கு காரணமே அவ தான், அவங்க குடும்ப நிம்மதி போனதே அவ தான்னு இல்லாததை பேசி பேசி மெண்டல் டார்ச்சர் பண்ணி சூசைட் வர போய்ட்டா ண்ணா"
வாகனத்தை ஓரம் நிறுத்தியவன் திவ்யாவை விழிகள் விரித்து பார்க்க அதில் மொத்தமும் பயம் தான்.
"என் ஆரூ..." அவனால் பேச முடியவில்லை.
"ஸ்கூல் விட்டு எல்லாரும் வீட்டுக்கு போனப்போ இவளை காணம்னு தேடிட்டு இருந்தேன் ண்ணா, அப்போ... *விசும்பல்* மாடில நின்னு குதிக்க ரெடியா இருந்தா. என்... என் *விசும்பல்* உயிரே போச்சு. கத்தினேன், அழுதேன் கேக்கவே இல்ல, பேய் புடிச்ச மாதிரி என்ன வெறிச்சு பாத்துட்டே இருந்தா.
அந்த நேரம் அங்க எதேச்சையா வந்த ரெண்டு பொண்ணுங்க அவளை புடிச்சிட்டாங்க. கொஞ்சம் விட்டிருந்தாலும் என் ஆரோஹி எனக்கு இல்லாமலே போயிருப்பா. இந்த விஷயம் அவ சித்திக்கு தெரிஞ்சு அதையும் பெருசாக்குணங்க. பைத்தியம் புடிச்சிடுச்சுனு டிரீட்மென்ட் எல்லாம் குடுத்தாங்க" அடி வயிற்றினை பிடித்து கண்களை மூடி அழுதாள் திவ்யா.
"அதையே சாக்கா வச்சு பிஸ்னஸ், வீடு எல்லாம் அவ சித்தப்பா பேர்க்கு மாறிடுச்சு. அவ்ளோ தான் அவங்களுக்கு அவ தேவை போல, சென்னைல ஒரு ஹாஸ்டல்ல டென்த் சேர்த்துவிட்டு போய்ட்டாங்க.
அந்த ஒரு வருசமும் எங்களுக்கு நீ தொல்லை, இடைஞ்சல்னு வார்த்தையை கேக்க முடியாம உயிரையே விட துணிஞ்சிட்டா ண்ணா. வெளிய எவ்ளோ சிரிச்சாலும் அவளோட சோகம் அந்த சிரிப்புல மறைஞ்சு நிக்கும்.
எப்ப தான் அந்த முகத்துல உண்மையான சிரிப்பை பாக்க போறேன்னு தவிச்ச எனக்கு என்னோட வளைகாப்புல தான் நிம்மதி பிறந்துச்சு. உங்கள உங்க குடும்பத்தை முழுசா ஏத்துக்க பழகிட்டா ண்ணா. அவளோட நம்பிக்கையை வீணாக்கிடாதீங்க ப்ளீஸ்"
கை எடுத்து கும்பிட்டு திவ்யா கேட்க பட்டென அவள் கையை பிடித்து தடுத்தவன் நினைவெல்லாம் திவ்யா கூறிய ஒரு விஷயத்தில் வந்து நின்றது.
அன்று தற்கொலைக்கு முயன்ற பொழுது அவள் கொடுத்த அதே வெறித்த பார்வையோடு இன்று தான் பார்த்த ஆரோஹியின் இலக்கில்லா வெறித்த பார்வையும் ஒன்றாக இருந்துவிட கூடாதென அவன் வாகனத்தில் காட்டிய வேகம் நினைவிலாத அவனுக்கே தெரியவில்லை.
திவ்யாவை வீட்டினில் சேர்த்து புயலென மருத்துவமனை அடைந்திருந்தான். நிம்மதி மூச்சு விட முடிந்தது அவன் மனைவியை கண்ணில் பார்த்த பிறகு தான். இலக்கியா என்கிற அந்த செவிலியரோடு பேசிக்கொண்டிருந்தாள் ஆரோஹி.
நேற்று இருந்த துள்ளல் கொஞ்சமும் இல்லை. இவன் வந்ததும் பெற்றோரை அனுப்பி வைக்க அஸ்வினின் தொடர்ந்த பார்வையை உணர்ந்த அந்த செவிலியர் இருவருக்குமேயான தனிமையை கொடுத்து வெளியேறியிருந்தாள். தான் வந்ததும் மீண்டும் நாடகம் நடத்த துவங்கியிருந்தது அந்த பெண் மயில்.
நேரம் பொறுத்து பார்த்தான். அவளும் உறங்குவது போல் கண்ணை மூட சிரமப்படுவது அப்பட்டமாக தெரிந்தது.
அதற்கு மேல் பொறுக்காமல் ஊடல் என்னும் கோலத்திற்கு முதல் புள்ளியை வரைய அவளருகே சென்றவன் சுருங்கி மூடியிருந்த அந்த பட்டாம்பூச்சி இமைகளின் மேல் தன்னுடைய அழுத்தமான இதழ்களை பதித்து அவள் இடையோடு கைகளை கட்டிக்கொண்டான்.
அஸ்வின் தன்னை நெருங்குவதை அவன் வாசனை வைத்தே உணர்ந்திருந்த ஆரோஹி விழிகளை மெல்ல மலர்த்த எத்தனிக்க அவன் இதழ் சூட்டில் வியர்வையை வெளியேற்றியது அவள் கண் இமைகள். அதோடு நில்லாமல் அவளை ஒரு பக்கமிருந்து நெஞ்சோடு கணவன் அணைக்க பட்ட பாடெல்லாம் வீணானது தான் மிச்சம்.
"போதும்டா என் பட்டாம்பூச்சி அனுபவிக்கிற வேதனை" இதழ்கள் இமைகளில் உரசிய வண்ணம் மற்றொரு இமைக்கு இடம் மாறியது.
"ரிலாக்ஸ் ஆரூ" இறகாய் வருடிய அவன் வார்த்தையின் தாக்கத்தில் கைகள் ஆறுதலை தேட துவங்கியது. அவள் வேதனை உணர்ந்தவன் கண்ணீர் வழியும் கன்னத்தை கன்னம் உரசி துடைக்க, அவன் சட்டை பிடித்து சற்று தள்ளி நிறுத்தினாள்.
அஸ்வின் உள்ளம் தன்னை இறுக்கமாய் பற்றியிருந்த மனைவியின் கைகளை குறிப்பெடுத்துக் கொண்டது. இன்னும் கோவமும் தெரியவில்லை அவள் விழியினில், நீ என் அருகில் வரவே வேண்டாம் என்னும் உத்தரவு மட்டுமே அதிலிருந்து.
"ஆரூம்மா உன் நாராயணா மேல கோவமா?" அவனை தள்ளி நிறுத்த முயன்று தோற்று போனது பெண் பாவை.
"பேசு ஆரூ" மன்றாடினான் அவள் முகம் நெருங்கி.
"உன் மேல தப்பு இருக்கு தானே ஆரூ, ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லிருக்கலாம்ல. என்ன பத்தி யோசிக்கவே இல்ல தானே நீ? எப்படி நீ இல்லாம நான் இருப்பேன்? இல்ல என் மேல நம்பிக்கை இல்லாம போச்சா உனக்கு?"
"இலக்கியா க்கா..." ஆரோஹி சத்தமாய் அந்த செவிலியரை அழைக்க அவளது அழைப்பில் வேகமாக உள்ளே வந்த அந்த பெண் அஸ்வின் ஆரோஹியை அணைத்த வாக்கில் நின்றதை பார்த்து தயக்கமாய் அப்படியே நின்றுவிட்டாள்.
அஸ்வின் தான், "நீங்க போங்க நான் பாத்துக்குறேன்" என்றான்.
அவளோ வெளியே செல்ல தயக்கமாய் ஆரோஹிக்கு தன்னுடைய தேவையோ என நிற்க, "என் ஆரூவ நான் பாத்துக்குவேன் சிஸ்டர்" அவனது உறுதியான வார்த்தையில் அந்த பெண் சன்னமான சிரிப்போடு வெளியேறியிருந்தாள்.
"என்ன தவற எல்லோர்கிட்டையும் நீ பேசுவ அப்டி தான?" அவளது மௌனம் அவனை சுட்டெரிக்க, "என் கஷ்டம் உனக்கு புரியவே இல்ல தானே ஆரூ?"
"நல்லாவே புரியிது, எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடியே தெரிஞ்சும் உங்கள ஏமாத்திட்டேன்னு நீங்க கஷ்டப்படுறது எனக்கு ரொம்ப நல்லாவே புரியிது" ஸ்தம்பித்து போனான் அஸ்வின்.
இது என்ன தான் வாகனத்தை ஒரு வழியில் செலுத்த சக்கரமோ வேறு பாதையில் கட்டுப்பாட்டை மீறி பயணிக்கிறதே. சொல்லின், வார்த்தையின் வீரியத்தை அவள் வேதனை முதன்முறையாக அஸ்வினுக்கு உணர்த்தியது.
"டேய் ஆரூ தப்பா புரிஞ்சிகிட்ட"
"எனக்கு தூக்கம் வருது" தன்னை அணைத்திருந்த அஸ்வின் கையை பிரித்தெடுத்து திரும்பி படுத்து கண் மூடினாள்.
அவளையே சில கணங்கள் பார்த்த அஸ்வின் வெளியே சென்று விட, உள்ளே வந்த செவிலியர் ஆரோஹி கைகளில் மாட்டியிருந்த ஊசியை அவிழ்த்து வைத்தாள்.
"போகலாம் சார்" அஸ்வினிடம் அந்த பெண் கூற, அவளுக்கு நன்றியை வைத்தவன் ஆரோஹியிடம்.
"என் கூட வெளிய வருவியா ஆரூ?" இருண்டு கிடந்த அஸ்வின் முகம் அவன் மனைவியின் மனதினை நெறிக்க நீர் கோர்த்த விழிகளோடு வெளியேற, அவள் பதில் உணர்ந்தவன் அவள் பின்னோடு சென்று கைகளை அவளுக்கு வலிக்காதவாறு பிணைத்துக்கொண்டு தனியான ஒரு பாதையில் அழைத்து சென்றான்.
அது தினமும் அஸ்வின் வீட்டினர் மட்டும் பயன்படுத்தும் பாதை. மருத்துவமனையின் உள் பகுதியில் எவரும் அரிதாய் பயன்படுத்தும் பாதையை அஸ்வினுக்கும் பயன்படுத்த அனுமதி கொடுக்க பட்டிருந்தது.
மனைவியை அமர வைத்தவன் அவள் வசதிக்கு ஏற்றார் போல் தண்ணீர், மருந்து, தலையணை என சகலமும் வசதி செய்து கொடுக்க அவனது அன்பினில் நெகிழ்ந்து உருகியது ஆரோஹி மனம்.
ஆரோஹியின் நலனை அடிக்கடி திரும்பி பார்த்து உறுதி செய்தவன் அவளிடம் பேச மட்டும் இல்லை. வாகனம் இறுதியாக செல்லும் திசை, நின்ற இடம் பார்த்து அதிர்ந்த ஆரோஹி அதிர்ச்சியோடு அவ்விடமே அமர்ந்திருக்க, அஸ்வின் தான் அவளை அழைத்து செல்ல வேண்டியதாகியது.
கதவினை திறந்து அஸ்வின் வழி விட, எதுவும் பேசாமல் அந்த அடுக்கு மல்லி செடிகளை பார்வையிட்டு அமைதியாக நின்றவளிடம், "உன் பிறந்தநாள் அன்னைக்கு என்ன நீ ஏன் இங்க கூட்டிட்டு வந்தனு எனக்கு தெரியாது ஆரூ, இன்னைக்கு உன்ன இங்க கூட்டிட்டு வரணும்னு தோணுச்சு"
உள்ளுக்குள் பரவி விரிந்த உணர்வினை கட்டுப்படுத்தி மரத்தினடியில் அமர்ந்தவள் கண்களை மூடி சாய்ந்துவிட்டாள்.
அவளுக்கு தேவையான நேரம் கொடுத்து அவளையே பார்த்திருந்த அஸ்வினுக்கு மனைவியை மார்போடு அணைத்து ஆறுதல் கூற அத்தனை ஆவேசம் பிறந்தது.
ஒரு மணி நேரம் கடந்தும் மனைவி தண்ணீர் கூட அருந்தவில்லை என்பதற்காக அவள் அருகே மண்டியிட்டு அமர்ந்தவன் முடிச்சிட்டிருந்த அவள் நெற்றியினை பெருவிரல் கொண்டு மென்மையாக வருடினான்.
அவள் சோம்பலாக விழி மலர்த்தி பார்க்க, தண்ணீரை நீட்டினான் அஸ்வின். அவன் நீட்டியதை வாங்காமல் அவனையே பார்த்திருந்தவளின் பார்வை சம்பாஷணை புரியாதவன்,
"பசிக்கிதா? இரு உனக்கு புடிச்ச பூரி ஆர்டர் பண்ணேன், கார்ல இருக்கு எடுத்துட்டு வர்றேன்" நகர போன அஸ்வின் கை பிடித்து எழ விடாமல் தடுத்தவள் எண்ண ஓட்டம் புரியாமல் தடுமாறினான் அஸ்வின்.
"ஆரூ..." அவ்வளவு தான் அவன் கையை விட்டு அவன் கழுத்தை கட்டிக்கொண்டு கதறினாள்.
அவளது அழுகை சத்தம் அவ்விடத்தையே நிறைக்க, மனைவியை தேற்ற வழி தெரியாமல் தடுமாறி போனான் அஸ்வின். இயன்ற மட்டும் அழுத்தவள் சோர்வாய் அவனை விட்டு பிரித்து அவன் முகத்தை கைகளில் பிடித்து,
"என்ன புடிக்காம போச்சா அஸ்வின் உங்களுக்கு?"
ஈர விழிகளோடு அவள் கேட்ட கேள்வி இவனை ரணமாய் வாட்டியது, "இல்லடா. நீ என் உயிருடா நீ, உன்ன புடிக்காம போகுமா"
"அப்றம் ஏன் என்கிட்ட அப்டி பேசுனீங்க?" அவனிடம் பதிலே இல்லை.
"எனக்கு... எனக்கு அப்பாகிட்ட போகணும் போல இருக்கு" உதடு துடிக்க அழுதபடியே அவள் கூறியதில் அஸ்வின் மடிந்தே போனான்.
"ஆரூ..."
"வேணாம், எனக்கு இங்க மூச்சு முட்டுது. எல்லாருக்கும் என்னால கஷ்டம் தானே, உங்களுக்கும். நான் அப்பாகிட்ட போறேன், அப்பா அம்மாவை பாக்கணும் போல இருக்கு"
சிறு பிள்ளை போல் அழுதவளுக்கு இந்த கனமான சூழலை கையாளும் சக்தியோ நம்பிக்கையோ மொத்தமாய் சிதைந்திருந்தது. துணை நிற்க ஒரு உறவு இல்லையே என்கிற ஏக்கம் வேறு அஸ்வினின் கோவ வார்த்தையில் உதிக்க, உலகினில் தனிமைப்பட்டு உணர்வு.
"தெரியாம சொல்லிட்டேன் ஆரூ, உன்னால எனக்கு என்னைக்கும் கஷ்டமே இல்ல ம்மா"
அவன் கூற இல்லை என தலை அசைத்தவள் அவன் முகத்தையே பார்க்க மறுத்தாள், "இந்த மாதிரி எல்லாம் பேசி என்ன கொஞ்சம் கொஞ்சமா கொல்லாத ஆரூ. நானும் மனுஷன் தானேடி.
ஆசை, காதல், உற்சாகம்னு ஒவ்வொன்னையும் இத்தனை நாள் கண் முன்னாடி காட்டி திடீர்னு எங்கையோ இருட்டுல மறைஞ்சு நின்ன போல நீ காணாம போக போறனு சொன்னா எனக்கும் கோவம் வரும் தானே? இது தான் வாழ்க்கை, இனி இவ தான் நம்ம உலகம்னு இந்த வாழ்நாள்ல மிச்சமிருக்க ஒவ்வொரு நாளைக்கும் என் மனசு ஒரு பிளான் போட்டு வச்சிருக்கு.
அதெல்லாம் நடக்காதுடா மடையா, உன்ன ஏமாத்த தான் வந்தேன்னு நீ கண்ணாமூச்சி ஆடிட்டு போனா எனக்கு ஏற்படுற வழி உனக்கு தெரியல தான?"
"இப்பவும் நீ பண்ண காரியம் உனக்கு புரியல, என்னோட ரெண்டு நிமிச வார்த்தை தான் உனக்கு பெருசா படுது. ஆனா எனக்கு நீ தான்டி வேணும். உனக்காக இந்த உலகத்தோடு என்ன, உன்கூடவே நான் சண்டை போட தயாரா தான் இருக்கேன்.
இதுல உனக்கு என் மேல எவ்ளோ கோவம் வந்தாலும் எனக்கு கவலை இல்லை. பேச மாட்டியா பேசாமையே இரு. இனி என்னோட முழு கவனமும் என்னோட பட்டாம்பூச்சியை மறுபடியும் சந்தோசமா பறக்க வைக்கணும். அவ்ளோ தான்"
அவ்வளவு தான் என் பேச்சு என முடித்தவன் தன் கன்னம் பற்றியிருந்த ஆரோஹி கைகளை எடுத்து, "போகலாமா?" என கேட்டான்.
பெண்ணவளோ ஒதுங்கி அமர்ந்து காய்ந்த இலை, மலர்களை ஒதுக்கி அவன் முகம் பார்த்தாள்.
"இந்த பார்வைக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல" முணுமுணுப்போடு அவள் அருகே அமர்ந்தவன் காதில், "இந்த அண்டர்ஸ்டாண்டிங்க்கு ஒன்னும் குறைச்சல் இல்ல" என மனைவி கூறியதும் காதில் கேட்க இவன் இதழில் மெல்லிய புன்னகை.
அவன் பட்டாம்பூச்சி சிறகடிக்க தயாராகிவிட்டதென்கிற தெம்பே அவனுக்கு போதுமானதாக இருந்தது.
அஸ்வின் அமரவும் அவன் கை வளைத்து தோள் சாய்ந்தவள், "இந்த தோட்டம் அம்மாவுக்கு ரொம்ப புடிச்சது" கூறும் பொழுதே குரல் கமறியது ஆரோஹிக்கு.
"அதோ தெரியிற வீட்டுக்கு தான் நாங்க ஒரு அடிக்கடி வந்து போவோம்" அந்த தோட்டத்தின் இறுதியில் தென்பட்ட பெரிய வீட்டினை காட்டினாள்.
"சென்னைல ஒரு வேலைக்கு அப்பா இங்க இருக்க வேண்டிய சூழ்நிலை, அதுனால வீக் எண்டுல இங்க வந்துடுவோம். எங்களுக்கே எங்களுக்கான ஒரு அமைதி இங்க இருக்கும். அப்பா அம்மா விவசாயா மாறிடுவாங்க. நாங்க உருவாக்குவது தான் அங்க இருக்க தென்னை மரம் எல்லாம்.
இந்த அடுக்குமல்லி அம்மாவுக்கு அவ்ளோ இஷ்டம். அதுக்காக அப்பா நிறையா வச்சிட்டாங்க. அம்மா அதை கோர்த்து வக்கிரபோ அப்பா முகத்துல அப்டி ஒரு சந்தோசம் வரும்.
எனக்காக அந்த வீடு பக்கத்துல ஒரு குட்டி குளம் மாதிரி கட்டி விட்டாங்க, இப்டி இந்த இடம் எங்களுக்கு ரொம்ப நெருக்கம். அதுக்காக தான் உங்கள கூட இங்க கூட்டிட்டு வந்தேன்.
கோயம்பத்தூர் போனாலும் அடிக்கடி இங்க வருவோம். அப்டி ஒரு நாள் வந்தப்போ தான் அம்மா அப்பாவை கண்டல் பண்ணி ரோட்டுக்கு ஓடிட்டாங்க. துரத்திட்டே போன அப்பா பின்னாடியே நானும் போனேன்"
அன்றைய நாளில் நினைவில் அஸ்வின் கையில் கண்ணீர் துடைத்தவள் அங்கேயே நெற்றி முட்டி அவன் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டாள்.
"நைட் நேரம் கிரிக்கெட்டரே... அம்மா கவனிக்கல அங்க வந்த லாரிய. நான் பாத்து போகுறதுக்குள்ள என்ன தள்ளிவிட்டு அப்பா அம்மாகிட்ட போய்ட்டாங்க. லாரி வந்த ஸ்பீட்ல கண்ட்ரோல் இல்லாம என் கண் முன்னாடியே..." பேச முடியாமல் அவனையே ஆறுதலாய் எண்ணி அழுது கரைந்தாள்.
"ரொம்ப கஷ்ட பட்டேன் கிரிக்கெட்டரே... நினைச்சு பாக்க முடியாத அளவு அழுதேன். என் குடும்பம்னு நம்புனவங்க எங்க சொத்துக்காக மட்டுமே கூட இருந்து என்ன பைத்தியமாக்கி சொத்து எல்லாம் அவங்க பேர்க்கு மாத்திட்டாங்க. இந்த தோப்பு கூட என் சித்தப்பா பேர்ல தான் இருக்கு.
ராசியில்லாதவ, அடங்காபிடாரி, திமிரு புடிச்சவ, அதிகபிரசிங்கினு என் அப்பா அம்மா போனதும் நான் வாங்காத பட்டமே இல்ல. எல்லாத்தையும் தங்கிட்ட என்னால என்னோட கஷ்டத்தை மறைச்சு சிரிச்சதுக்கு பைத்தியக்காரினு குடுத்த பேர் தான் ஏத்துக்கவே முடியல.
என் அப்பா அம்மா மேல தப்பு தானே நாராயணா? என்ன தனியா விட்டுட்டு போனது தப்பு. அன்பை தவிர சூழ்ச்சி வஞ்சகம் எல்லாம் நிறைஞ்ச மனுசங்க இந்த உலகத்துல இருக்காங்கனு சொல்லி தராம போனது அதை விட பெரிய தப்பு.
இதுகெல்லாம் மேல, பிரச்சனை வந்தா அதை எதிர்த்து நிக்க சொல்லி தராம அவங்க கைக்குள்ளயே வச்சது இப்போ வர சரியா தப்பானு எனக்கு தெரியலையே..."
"நம்ம கல்யாணம் முன்னாடி எனக்கு கேன்சர் இருக்குறது தெரிஞ்சு அதை எப்படி க்யூர் பண்றதுனு தான் யோசிச்சேன். பணம் எல்லாம் ரெடி பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டேன்.
திடீர்னு கல்யாணம். அதுல இருந்து வெளிய வந்து இன்னொரு தடவ டெஸ்ட் எதுக்கு பாக்குறப்போ தான் தெரிஞ்சது இனி ஆபரேஷன் பண்றது கூட ரிஸ்க்னு"
"ஓ நீங்களே முடிவு பண்ணிட்டிங்களா மேடம்?"
"நா... நான் பேசுகிறேன் நாராயணா" என்றவள் அவனை ஆறுதல்படுத்த முதுகை வருடினாள், "ஏதோ லூசு மாதிரி யோசிச்சிட்டேன், இனி எதுக்கு எல்லாரையும் உண்மை சொல்லி ஹர்ட் பண்ணிட்டுனு மிச்சம் இருக்குற கொஞ்ச நாள்ல சந்தோசமா உங்க கூட வாழ்த்துடனும்னு..."
திக்கி திணறி பேசியவளை இறுக்கமாக அணைத்து அவள் தோள் சாய்ந்தே அழுதான்.
அவளது முட்டாள்தனத்தை இப்பொழுது சுட்டிக்காட்டி அவளை மேலும் வேதனைப்படுத்த விரும்பாமல், அவளை சூழ்ந்திருந்த இருளை அகற்றி வெளிச்சத்திற்கு கொண்டு வர மட்டுமே முனைந்தான்.
அவனது இளவேனில் அவள், அவனது வாழ்க்கையை சிறை செய்து வாழும் பருவசிறை அவள். அந்த பனி சாரல் இல்லாது அவனது உயிர் செடி தான் துளிர்ந்திடுமா? பேதை பெண் போட்ட கணக்கு தவறி அவனை அல்லவா இப்பொழுது தாக்கிவிட்டது.
காற்றின் தூரத்து இசையில் அவளை மீட்டெடுப்பேன் என கணவன் வாக்குறுதி கொடுத்து மார்பினில் மனைவியை தங்கியிருக்க, சாபமாய் வந்தது சித்தார்த்தின் அழைப்பு,
"டிரீட்மென்ட் பண்ணலாம் அஸ்வின்... ஆனா... சான்ஸ் 75 - 25 தான்" செய்தி கொடுத்த அவனுக்கே நிலை பரிதாபமெனில், செய்தியை கேட்டு ம்ம் கொட்டி உயிரை கையில் ஏந்தி அதை பாதுகாப்பேனென சபதமெடுத்த அஸ்வினின் நிலை தான் பரிதாபமானது.
அவளென்னும் உயிர் கிடங்கை வசப்படுத்த அந்த காதல் உரிமையாளனுக்கு எத்தனை சோதனை தான் தருமோ இந்த காதல்...?!
How is the chapter? Comment plz...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro