அலை - 16
தொடர்ந்து வந்தவண்ணமிருந்த அழைப்புகளை பற்களை கடித்து எடுக்காமல் வெறித்து அமர்ந்திருந்தார் ராகவ். அவர் எதிரில் பயத்தில் கையை பிசைந்த வாக்கிலே மதி அமர்ந்திருக்க, அவர்கள் புதல்வன் சித்தார்த்துக்கு தான் என்ன செய்வதென புரியவில்லை.
அஸ்வினுக்கு அத்தனை முறை அழைத்தாயிற்று, எடுக்காமல் பிடிவாதம் பிடிக்கிறான்.
திருமணத்திற்கு முன்பென்றால் ராகவ் நடவடிக்கையே வேறு, இப்பொழுது மருமகளையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
"மருமக எங்க?"
"தூங்கிட்டு இருக்கா ப்பா" என்றான் சித்தார்த்.
"நான் வேணும்னா அவளை கொஞ்சம் வெளிய கூட்டிட்டு போகவா?"
"எவ்ளோ நேரம் மதி உண்மைய மறைக்க முடியும்? தெரிஞ்சு தானே ஆகணும். தெரியட்டும்" என்றார் ராகவ் கோவமாக.
"அஸ்வின் மேல தப்பிருக்காது ப்பா. இது என்ன அபீஷியல் நியூஸா இவ்ளோ ரியாக்ட் பண்றீங்க" தந்தை கோவத்தின் அளவு சிறிதும் பொருத்தமற்றது என தான் தோன்றியது.
"என் பையனை பத்தி எனக்கு தெரியாதாடா? அவன் அம்மாக்காக கல்யாணம் பண்ணாலும் அவனுக்காக மட்டும் தான் இந்த வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கான். அப்டிப்பட்டவன் இந்த மாதிரி சின்ன பேச்சுக்கு கூட இடம் குடுக்க கூடாதுனு கோவம்" கோவம் அடங்காமல் தன்னுடைய தொடையில் கைகளை கொண்டு குத்துக்கொண்டே பேசினார்.
"இதுக்கு தான் விஷயத்தை வெளிய சொல்லி ஒரு பங்க்ஷன் வச்சிடலாம்னு தலைப்பாடா அடிச்சிக்குட்டேன். அடங்குறானா? எந்த விசியத்துலையும் என் பேச்சை கேக்குறதே இல்ல"
"நம்பிக்கை இருக்குறவர் ஏன் இப்டி பொலம்பணுமாம்?" மதி வாய்க்குள்ளேயே முணுமுணுக்க அமைதியாக இருந்த அந்த அறையில் அவர் பேசியது ராகவுக்கு கேட்காமலா போகும்?
"நம்பிக்கை மனசுல மட்டும் இருந்தா போதும்ல? இப்போ பாரு வர்ற ஒட்டுமொத்த போன் கால்ஸ்க்கும் நான் தான் பதில் சொல்லணும், என் பையன் அப்டி இல்ல இப்டி இல்லனு"
"அதுக்குன்னு இந்த சில்லறை நியூஸ்க்கு இவ்ளோ இம்பார்ட்டன்ஸ் குடுக்காதிங்க"
"டேய் உன் அண்ணன் தான் இப்போ இந்தியா ஹாட் நியூஸ். வந்துட்டான் பேச" மகனிடம் காய்ந்தார்.
"மேட்ச் நெஸ்ட் வீக் தானே மாமா ஸ்டார்ட் ஆகுது அதுக்குள்ள அவர் எப்படி ஹாட் நியூஸ் ஆனார்?"
திடீரென கேட்ட மருமகளின் குரலில் ராகவ் கண்களை மூடி திறக்க, சித்தார்த் தலையில் அடித்துக்கொண்டான், "இது ஒரு அரை வேக்காடு" என்று.
"டேய்" அன்னை தந்தை இருவரும் ஒருங்கே மகனை முறைத்தனர். அவர்களை பொறுத்தவரை ஆரோஹி அந்த வீட்டிற்கு காண கிடைக்காத பொக்கிஷம், வீட்டிற்கே செல்ல மகள்.
"என்ன நியூஸ் மாமா?"
"ஒன்னுமில்ல ம்மா. காபி ஆர் டீ?"
"நோ அத்தை. இன்னைக்கு உங்களுக்கு ரெஸ்ட். நான் எல்லாருக்கும் டீ காபி போடுறேன். டேய் சித்து வாடா"
"உன் புருஷன் ஒரு வகைல உயிரை வாங்குனா நீ இன்னொரு வகைல எங்க உயிரை வாங்கு"
சலித்துக்கொண்டாலும் அவள் பின்னே செல்ல தான் செய்தான் அந்த நண்பன். சச்சரவாக இருந்தது சமையலறை சிறிது நேரம்.
கூறியதை போலவே சில நிமிடங்களில் அனைவருக்கும் சூடாக தேநீரை பரிமாறினாள்.
"பரவால்ல ஏதோ போடுற தான். என்ன கொஞ்சம் கசக்குது" சித்தார்த் அவளிடமிருந்து அடியை வாங்கிக்கொண்டே உண்மையை மொழிந்தான்.
"இதுக்காகவே லஞ்ச் உனக்கு என் கைல இருந்து தான்" மகனை முறைத்தவர் மனைவிக்கு கண் அசைத்தார் ராகவ்.
ஆரோஹி கையை பிடித்து அவள் அருகே அமர்ந்த மதி மெல்ல தயக்கத்தோடே பேச துவங்கினார், "நான் இப்ப உன்கிட்ட ஒன்னு சொல்ல போறேன், நிதானமா யோசிச்சு இப்டி நடந்துருக்குமா, அது உண்மையா என்னனு நீயே யோசிச்சு ரியாக்ட் பண்ணனும். அவசரப்பட்டு எந்த ஒரு முடிவுக்கும்..."
அன்னையிடம் இருந்த பொறுமை அங்கிருந்த இரண்டு இளசுகளுக்கு இல்லை, ஆரோஹிக்கு அவர் பேசுவதில் ஏதோ ரகசியம் இருப்பது போல் ஆர்வம் தூள் பறக்க துவங்கியது.
அவளது இந்த ஆர்வம் கூட நல்லதல்ல என்பதை உணர்ந்த சித்தார்த் வேகமாக அன்னையை நிறுத்தினான்.
"சொல்ல வேண்டிய கல்யாண விஷயத்தையே இதோ மருமகனு ஒடைச்சிங்க, இதுக்கு ஏன் இப்டி சுத்தி வளைச்சு பேசுறீங்க" கைபேசியை எடுத்து ஆரோஹி முன்பு வைத்தான்.
"நேத்து நீ என்கிட்ட கேட்ட அதே டவுட்ட இன்னைக்கு மீடியா கேட்ருக்கு, புதுசா ஒரு பிரச்சனை. ஆனா இந்த நியூஸ் எல்லாம் யவ்னிகா ட்ரஸ்டட் பீப்பிள்ஸ் சொன்ன நியூஸ்னு சொல்றாங்க"
தொடுதிரையில் பதிந்த ஆரோஹியின் கண்கள் அச்செய்தியை உள்வாங்கிய வியப்பில் அவள் கண் எல்லாம் குளம் கட்டி கன்னம் சிவந்து போனது வேதனையில். விரல்கள் நடுங்கினாலும் செய்தியினை தொடர்ந்து படித்தவள் அழுகை அதிகமானது.
"ஆரோஹி காம் டவுன்"
"ரோஹி, நல்லா யோசிடா. எல்லாரும் ஒரே விஷயத்தை பத்தி பேசியிருந்தாலும் உண்மைன்னு ஒன்னு இருக்கு. நீ அழுகாத"
மாமனார் மருமகள் இருவரும் பெண்ணை சமாதானப்படுத்த முயற்சிக்க வேகமாக இரு கன்னத்தையும் துடைத்து சிரிக்க முயன்றாள். வீட்டிலுள்ளவர்களுக்காக மூளை யோசித்தாலும் மனம் கேட்க வேண்டுமே, நிற்கவே இல்லை கண்ணீர்.
இந்த செய்தியை எல்லாம் அவள் சிறிதும் எதிர்பார்த்திராத ஒன்று. அஸ்வினை பற்றி பேசியதோடு நில்லாமல் சித்தார்த் பற்றியும் அவன் சில நாட்கள் அதிகம் வெளியில் ஒரு பெண்ணோடு தென்படுவதாகவும் பல செய்திகள்.
அவர்கள் காதலர்கள், உறவில் இருப்பவர்கள் என பல வதந்திகள் வேறு. துடித்து போனாள் பெண். இதழ் கடித்து விழுங்கிய அழுகை எல்லாம் விசும்பலாய் உருமாறியது.
சகோதரனாய், நண்பனாய் நினைத்தவனோடு சேர்த்து பேச கூடாததெல்லாம் பேசி உறவையே கொச்சைப்படுத்துகிறார்களே. சில புகைப்படத்தில் ஆரோஹியின் முகம் ஒரு பக்கம் நன்றாகவே தெரிந்தது.
அதன் பிறகு தான் சித்தார்த் அவளது முக மாற்றத்தை கவனித்து கைபேசியை வாங்கி பார்க்க, இது அவர்களை சம்மந்தப்படுத்தி வந்த செய்தி என புரிந்து உடனே கைபேசியை வாங்கிக்கொண்டான்.
இந்த செய்திகள் நேற்று இரவில் இவர்கள் வெளியே சென்று வந்ததிலிருந்து பரவ துவங்கியது.
சித்தார்த் அஸ்வினின் சகோதரனாகவும், தொழில் துறையில் உள்ள அழகும் அறிவும்மிக்க இளைஞனாகவும் ஊடங்கங்களுக்கு அதிகமாகவே பழக்கப்பட்டவன், அதன் தாக்கம் தான் அவன் வாழ்க்கையை அறிந்துகொள்ளும் இவர்களின் ஆர்வமும் ஆனது.
இதற்கு அவன் பழக்கப்பட்டிருந்தாலும் அந்த செய்தி அவளை எவ்வகையில் தாக்கும் என்பதே அவன் பயந்த ஒன்று. அவளுக்கு தெரிய கூடாதென தான் முதலில் அஸ்வின் சார்ந்த செய்தியை வைக்க, தொடர்ந்து படித்தவளுக்கு அவளை பற்றிய செய்தியும் வர நொறுங்கி தான் போனாள்.
"இதை யார் உன்ன பாக்க சொன்னா, அதெல்லாம் ஒன்னுமில்ல" என்றவனுக்கே அந்த வார்த்தை ஆறுதல் வழங்கவில்லை, "ம்மா... அவள அழுக வேணாம்னு சொல்லுங்க"
"நாங்க சும்மா தான்த்தை வெளிய போவோம், அவங்க ஏன் இப்டி எல்லாம் சொல்றாங்க?" அவர் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டு பிதற்றினாள்.
மதிக்கோ ஒன்றும் புரியவில்லை, அஸ்வினை பற்றிய தகவல்களை மட்டுமே கேட்டு ராகவ், மதி தம்பதி கோவத்தில் இருக்க இந்த தகவல் அவர்களுக்கு புதிது. விசயம் தெரியாமல் அவளிடமும் பேச முடியாமலும் சித்தார்த்தை பார்க்க இவர்கள் இருவரும் நேற்று இரவு வெளியே சென்ற புகைப்படம் ஒன்று இருந்ததை பார்க்கவும் புரிந்துவிட்டது.
ஆரோஹிக்கோ அவர் மௌனம் மேலும் ஒரு அடியாக விழுந்தது, "மாமா, ஐ ஸ்வேர் நாங்க சும்மா வெளிய சாப்பிட போனோம், இல்ல இல்ல அடிக்கடி உங்ககிட்ட பொய் சொல்லிட்டு போயிருக்கோம் அத்தை"
அவள் வாயை அடைத்து, "ரோஹி இதெல்லாம் நீ எதுக்கு என்கிட்ட சொல்லணும் என் பசங்கள பத்தி எனக்கு தெரியும், இதெல்லாம் ஒரு விஷயமா எடுத்துக்குட்டு அழுவியா?" அதட்டினாள் தான் இவள் அமைதியாவாள் என சற்று குரலை உயர்த்தினார்.
ஆனாலும் அவள் மனம் ஆறவில்லை, "அஸ்வின் என்ன எதுவும் தப்பா நினைப்பாரா அத்தை? அதுனால தான் காலைல நான் கால் பண்ணப்ப அவர் எடுக்கலயா? சித்து உன் அண்ணாகிட்ட சொல்லேன் இதெல்லாம் பொய்னு" கண்கள் சுருங்க இறைஞ்சினாள் சித்துவிடம்.
"அண்ணின்னு கூட பாக்க மாட்டேன் ரோஹி அறைஞ்சிடுவேன் இப்டி எல்லாம் பேசுனா. என் அண்ணனுக்கு தெரியும் அவன் தம்பி பதியும் அவன் வைப் பத்தியும். இந்த மாதிரி சில..." சிகையை அழுத்தமாக கோதி கோவத்தை அடக்கினான்.
"சித்தார்த் ரூம் போ" மகனின் கோவம் உணர்ந்து ராகவ் அவனை அப்புறப்படுத்த முயல மகனோ திமிறினான் இன்னும்.
"ரூம்க்கு போகல வெளிய போறேன். வேலை ஒன்னு இருக்கு" சிலிர்த்துக்கொண்டு நின்றான்.
"சொன்னதை செய், நான் பாத்துக்குறேன்" தந்தை கோவம் உணர்ந்து ஆரோஹியை பார்த்தான்.
இரு ஆண்களின் கோவத்தை கண்டு சிறு குழந்தை போல் விழி விரித்து அமைதியாக அமர்ந்திருந்தாள் அவன் அன்னையின் கையை இறுக்கமாக பிடித்து.
"காரணமே இல்லாம அழுதனு தெரிஞ்சது கொன்னுடுவேன்" அவளை மிரட்டி பார்க்க, அவன் மிரட்டியது அவளுக்கோ சிரிப்பை வரவழைக்க அழுகையோடு சிரித்துவிட்டாள்.
அவளது அந்த மெல்லிய சிரிப்பை பார்த்ததும் தான் சித்தார்த்துக்கு உயிரே வந்தது போல் இருந்தது. இங்கு ஒரு பெண்ணை சமாதானப்படுத்தியாயிற்று, இன்னொரு பெண்?
இவள் பேசியே கொள்பவள் என்றால் அங்கு அவள் பேசாமலே மெல்ல மெல்ல உயிரை வேரோடு அறுப்பாள். இவ்விடயம் அவளுக்கு தெரியவே கூடாதென மனம் வேண்டியது. சித்தார்த் சென்றவுடன் ஆரோஹியிடம் தெளிவாக நிலவரத்தை எடுத்துரைத்தார் ராகவ்.
"சொசைட்டில நாலு பொதுமக்களுக்கு தெரியிற நிலைமைக்கு வந்த அப்றம் இந்த மாதிரி மீடியா, சோசியல் மீடியா, கிசுகிசு எல்லாம் ரொம்ப சாதாரணம். சில நேரம் உண்மை வெளி வரும், சில நேரம் நம்மளையே உடைக்கிற மாதிரி போலியான தகவல் வரும்.
உண்மைக்கு எப்படி ரியாக்ட் பண்ணாம போறோமோ அதே மாதிரி இதையும் அமைதியா கடக்குறது தான் புத்திசாலித்தனம். இதுக்கெல்லாம் நம்மளோட பீலிங்ஸ், நேரத்தை போட்டு வேஸ்ட் பண்றது நம்மளோட வாழ்க்கைக்கு நாமளே செய்வினை வந்ததுக்கு சமம்"
"உன் மாமா சொல்ற மாதிரி நாங்க நிறையா பாத்தாச்சு ரோஹி. ஏன் இவர் வேற ரிலேஷன் வச்சிருக்காருனு கூட கொஞ்ச வருஷம் முன்னாடி சொன்னாங்க. ஆனா பாரு இவரு அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டார்னு எனக்கு தானே தெரியும், இவருக்கு நான் வாழ்க்கை கொடுத்ததே அதிசயம். இதுல இன்னொரு பொண்ணு தானா வந்து விழுமா சொல்லு?"
அவளை தேற்றும் சாக்கில் கணவனை ஓரக்கண்ணால் சீண்டினார் மதி. இருவரின் காதல் விளையாட்டிலும் பேச்சிலும் ஆரோஹி முகத்தில் சோக ரேகை மெல்ல மறைந்து சிரிப்பு மலர்ந்தது.
"எங்களை விடு, நீயே சொல்லு அஸ்வின் பத்தின நியூஸ் பாத்து உனக்கு அவன் மேல சந்தேகம் வந்துச்சா?" அவள் வேகமாக இல்லை என தலையை ஆட்டினாள்.
"ம்ம். இவ்ளோ தான். இது உனக்கான ஒரு சின்ன எக்ஸாமா கூட எடுத்துக்கலாம். இனி இது மாதிரியோ இதை விட அதிகமாவோ உன்ன பத்தி, அஸ்வின் பத்தி பேசுவாங்க.
இப்போ செஞ்சியே அஸ்வின் மேல நம்பிக்கை வச்சு கோவத்தை காட்டாம, அது மாதிரி எல்லாத்தையும் உடைக்கிற அளவு உங்களுக்குள்ள நம்பிக்கை ஆணித்தரமா வேணும்" மெல்ல தெரிந்திருந்தது அவள் மனம்.
ஆனாலும் முகத்தின் வாட்டம் மட்டுப்படவில்லை, "அவங்க பேசுறது தப்பு தானே த்தை, சித்துவ நான் ஒரு பிரதர், ஃப்ரண்ட் மாதிரி நினைச்சு வெளிய போனேன். இத்தனைக்கும் அவன் மனசுல வேற..."
உண்மையை உரைக்க வந்தவள் சட்டென சுதாரித்துவிட்டு, "வேற பொண்ணு இருந்தா அவங்க ரிலேஷன் என்னாகும்னு யோசிக்க மாட்டாங்களா, ஏன் சித்தார்த் அவர் ஃப்ரண்ட் கூட எங்கையும் வெளிய போனாலும் அதுக்கு தப்பான அர்த்தம் தானா? எழுதுரத்துல உண்மை, பொய், அவங்க மனசு எதையும் பாக்க மாட்டாங்களா?" மனந்தங்களாய் கேட்டவளை பார்த்து சிரிப்பு தான் வந்தது.
"எந்த காலத்துல ம்மா இருக்க? ரெண்டு பேர் மனசை கொன்னு, ஆயிரம் பேர் கவனத்தை திருப்புனா தான் ஒருத்தன் குடும்பத்துக்கு ஒரு வேளை சாப்பாடு கிடைக்கும். அந்த ஒரு வேலை சாப்பாடு போட அவன் இந்த மாதிரி எத்தனை மனசை வேணாலும் கொல்லுவான். அவன் பொழப்பு அப்டி. பணம் பத்தும் செய்யும், நாம தான் எல்லாத்தையும் கடந்து வரணும்"
கணவன் கூறியதை ஆமோதித்தார் மதியும், "நேத்து போன மாதிரியே சித்து கூட தாராளமா போ. உண்மை வெளிய தெரிய வர்ற நேரம் தானா வரும். அவங்க மாற மாட்டாங்க, அதே மாதிரி உன்னையும் நீ இவங்களுக்காக மாதிக்காத. எப்பவும் கேர் ப்ரீயா இருக்க ஆரோஹி தான் எங்களுக்கு வேணும்"
ஒருவழியாக ஆரோஹியை சமாதானம் செய்து இரண்டே நாட்களில் அவளை ஓரளவிற்கு மாற்றிவிட்டனர். ஓரளவிற்கு தான்.
பேச வேண்டியவன் பேசாமல், ஆறுதல் தராமல் ஓரளவிற்கு மேல் மனம் சமன்பட மறுத்தது. எதிலும் லயித்து போகாமல், ஒரே தோழியின் வளைகாப்பு, அவள் ஆவலாய் எதிர்பார்த்த ஒரு விசேஷம்.
கண் முன்னே அனைவரும் அதற்கு தான் ஆயத்தமாகியிருக்க, ஒரு உடையை கூட தேர்ந்தெடுக்காமல் கடமையே என அங்கும் இங்கும் காரணமில்லாமல் அலைந்தது அவள் கால்கள்.
அவள் கால்கள் வீட்டினை அளந்தால், அவள் மனமோ ஆயிரம் வினாவை தேடி தனதாக்கி பிதற்றியது.
உரியவன் குரல் கேட்டே பல நாள் ஆகியது. விழாவிற்கும் வரப்போவதில்லை என்பது சித்தார்த் மூலம் வந்த தூது. எதிர்பார்த்தே இருந்ததால் பேதைக்கு ஏமாற்றம் இல்லை, மாறாக ஏக்கம் அதிகம் கூடியது.
இன்னும் ஒரு மாதம் ஆகும் அவன் வீடு வர, அவன் ஸ்பரிசம் உணர முப்பது நாட்களுக்கு மேல் ஆகும். அவன் பார்வை தீண்ட பல நூறு மணி நேரங்கள் ஆகும். பித்தானவள் சிந்தை எல்லாம் அவனை மட்டுமே தேடியது.
கைபேசியை பார்க்கும் பொழுதெல்லாம் அவனுக்கு அழைத்து பேசிவிடலாமா என தாவும் மனதினை பிடித்து வைக்க வேண்டியுள்ளது. "உன் அண்ணன் பேசுனாரா, பேசுனா என்கிட்ட தரியா?"
அவளும் கேட்டு சோர்ந்து போனது தான் மிச்சம். சகோதரனுக்கு கூட அழைப்பு வருவது நின்றுவிட்டது. இந்த ஒரு வாரத்தில் இருந்த மாற்றம் அஸ்வினை பற்றி பரவிய செய்தி போலியானதென்பது மட்டுமே.
அதில் கூட மகிழ்ச்சியடைய அவள் மனம் விரும்பவில்லை. இதை காரணம் வைத்தாவது அவனோடு சண்டையிடலாமே என்கிற அல்ப மகிழ்ச்சிக்கு கூட ஆயுள் குறைவு தான் போல.
அழைப்பில்லா அவள் குரலில் பல்லாயிரம் ரூபத்தில் கானாவில் வந்து இம்சித்தான் அவள் நாராயணன். கனவில் பேசி, கனவில் சிணுங்கி, கனவில் அணைத்து, கனவிலே விடைபெற்றான். பித்தானவள் தான் அந்த கனவிலிருந்து வெளிவராமல் நிஜத்திலும் உலா வர வேண்டியிருந்தது.
வளைகாப்பு விழா நாளும் விடிந்து வீடே பரபரப்பாக இருந்தது.
பதினோரு வகையான கலவை சாதம், குலுங்க குலுங்க சிரிக்கும் கண்ணாடி வளையல்கள், சிறியவர்கள், பெரியவர்கள் என வகை வகையாக வயதிற்கு ஏற்றார் போல் பெண்களுக்கு பரிசு காகிதங்களில் ஒளிந்திருக்கும் பரிசு பொருட்கள், பஞ்சமே இல்லாமல் நாவோடு மனதையும் இனிக்க வைக்கும் பலகாரங்கள் என வீடே தேவலோக மயம் தான்.
'யாரென்றே தெரியாத பெண்ணிற்கு எதற்கு இந்த பகட்டு விழா?' கூட்டத்தில் அதிகம் பேசப்பட்ட கேள்விக்கு விடை கொடுக்க பெரியவர்கள் மாறனை மாப்பிள்ளையாகி அனைவர் முன்பும் அழைக்க, திவ்யாவை சித்தார்த் அவ்விடமே கேட்கும்படி அத்தனை அக்கா போட்டான். மூட வைத்தது அனைவரின் வாயினை.
சுவாரஸ்யமே இல்லாமல் சாதாரண ஒரு சுடிதாரோடு அமர்ந்திருந்த மருமகள் கையில் கனமான புடவை ஒன்றை வைத்தார் மதி.
"அத்தை மூட் இல்ல" என்றாள்.
"உன்ன இன்னைக்கு முக்கியமான சொந்தத்துக்கு அறிமுகப்படுத்த போறேன். இவ்ளோ சிம்பிளா வந்து நிப்பியா?"
"பரவால்ல போங்க இதுவே போதும்" என்றுவிட்டாள்.
திருமண நாளில் கூட சாதாரண சுடிதார் அணிந்து அவசரத்தில் சிறு முக அலங்காரம் கூட அவளுக்கில்லை. இன்று தான் எடுத்து கொடுத்த பட்டுபுடவையில் முகம் எல்லாம் பூரிப்போடு கழுத்து நிறைய நகை என பார்க்கவே மனம் நிறைந்து போனது மாறனுக்கு.
விழியோரம் துளிர்த்த கண்ணீரை கூட வேகமாக துடைத்துக்கொண்டான். சித்தார்த்தின் கேமரா ஆரோஹி வசமானது. தோழியை விதவிதமான கோணைங்களில் நிறுத்தி புகைப்படம் எடுத்தவளை சீண்டவே சித்தார்த் இழுத்து சென்று தோட்டத்தில் தன்னை வைத்து புகைப்படம் எடுக்க கூறி நச்சரித்துவிட்டான்.
அவனிடமிருந்து தப்பித்து ஓடியவளை, "இந்த ஒரே ஒரு பிக். இதுக்கு மேல கேக்க மாட்டேன்"
"உயிரை வாங்குறடா" சலித்துக்கொண்டே திரும்பியவள் காமெராவை நேரே வைத்து கண்களை சுருக்கி வியூ பைண்டர் என்னும் காட்சிப்பேழை வழியாக பார்க்க, அங்கு சித்தார்த் பதிலாக கொள்ளைகொள்ளும் சிரித்த முகத்தோடு நின்றிருந்தான்.
உறைந்த அவள் உடல் கண்ணை கூட சுருக்கத்திலிருந்து விடுவிக்கவில்லை. அவனென்று வந்துவிட்டால் அவனை மனதில் சுமக்கும் அவள் கூட இரண்டாம் பட்சமாகிவிடுகிறாள் அவளுக்கு.
அவள் கனவில் பார்த்து அனுதினமும் பிரமித்த தோற்றம் இன்று கண் முன்னே.
அதே கவர்ந்திழுக்கும் சிரிப்பு, கண்களில் ஆயிரம் ஆசையை தாங்கி நிற்கிறது. அவனே தன்னை வந்து இறுக்கமாக அணைத்தது போல் உடலை சிறிதும் அசைக்க முடியவில்லை.
தெம்பை வரவழைத்து காமெராவை கீழிறக்கியவள் கைகளில் நெகிழ துவங்கிய காமெராவை வேகமாக சித்தார்த் பிடித்துக்கொண்டான்.
"ஏன்டா உங்க காதலுக்கு என்னோட காமெராவை ஏன்டா பலியாக்குறிங்க" அவன் புலம்பலை கேட்கும் நிலை இருவருக்கும் இல்லை.
இனங்கிய மனம் சாரலில் நனைந்து குளிரில் நடுங்கியது. வலுவிழந்து அவனை பார்த்தவளிடம் புருவம் உயர்த்தி என்ன என்றான்.
சொக்கு போடி போட்டு மயக்குவதெல்லாம் என்ன மாயை, ஒரே கண்ணசைவில் உடலின் செயல்பாட்டையே மாற்றுவதல்லவோ மாயை, காதல் மாயை. அவன் கேள்வியில் இத்தனை நேரம் இருந்தது போல் காட்டிக்கொண்ட தைரியமெல்லாம் இடிந்து விழுந்தது.
ஆயிரம் அறிவுரைகள், ஆதரவு கரங்கள் நீண்டாலும் காதலாய் அவன் பார்க்கும் அந்த ஒரு பார்வைக்காக ஏங்கி தவித்தவள் கண்ணீர் கன்னத்தை தொட, அவள் கணவன் கையை கொஞ்சம் விரித்து அவன் மார்புக்கு வழி காட்டினான்.
ஒரு பக்கம் மெல்ல தலை அசைத்து தன்னுடைய மறுப்பை காட்டினாள்.
அஸ்வினுக்கோ புரியவில்லை அவளது செயல், கூச்சம் கொள்கிறாளோ என எண்ணி ஏன் என்றான் தலையை அசைத்தே சந்தேகமாக. இதழ் துடிக்க கைகளை அகலமாக விரித்து காட்டினாள்.
அவளது அன்பினில் உடல் சிலிர்த்தவன் தலை குனிந்து இதழ் கடித்து சிரித்து, அதே வெட்கத்தோடு சுற்றம் பார்த்தான்.
வீட்டினுள் இருந்த அதே கூட்டம் இல்லை என்றாலும் குறைந்தது பத்து பேர் இருந்தனர், அத்தனை பேர் பார்வையும் இவர்கள் மேல் தான், என்ன செய்கின்றனர் என்கிற ஒரு வினோத வேடிக்கை எண்ணம்.
இவர்களுக்காக அவனது பட்டாம்பூச்சியின் கட்டளையை செய்யாமல் செல்வது பிறவு பிழையாகிவிடுமே.
குறுகி விரித்த கையை அகலமாக விரித்து அவளை பார்த்து தன்னோடு அடைக்கலமாக்க தலை அசைத்து அழைத்தான்.
சிகரத்திலிருந்த நீரானது மேடு பள்ளம் பாராது சேர வேண்டிய மண்ணை சேர்வது போல் இறுகிய பாறையாகிய அவன் மார்பினில் சட்டென வந்து சேர்ந்தாள்.
பூவை எதிர்பார்த்தவனுக்கு பூ மழையே பெய்தது போல் அத்தனை பிரகாசம் முகத்தினில்.
அத்தனை கெடுபுடி அவனுக்கு அங்கு இந்திய அணியினில். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்னையை சந்திக்க நேர்வது போல் கடந்த ஒரு வாரமாக யவ்னிகா வித விதமாக அவளும் அவள் தந்தையும் அவனை தினம் வந்து சந்தித்து அவன் மனதினை மாற்ற முயற்சிக்க, அசைந்துகொடுக்கவே இல்லை அவன்.
கோவத்தை மொத்தம் காட்டி அவர்கள் பரப்பிய செய்தியை ஒரே நாளில் அவர்களே பரப்பிய செய்தியை திரும்பப்பெற செய்தான்.
இது தான் இனி அவன் வாழ்க்கை, இவள் தான் அவன் மனைவி என்பதையும் தெள்ளத்தெளிவாக உண்மையை உரைத்து வந்தான்.
இதன் நடுவே சித்தார்த், ஆரோஹி பற்றிய செய்தி அவனை சென்று சேர சில நாட்கள் பிடித்தது.
விஷயம் அறிந்த உடனே மேலிடத்தில் சண்டையிட்டு மனைவியை காண அவளுக்காகவே மட்டும் வந்துவிட்டான்.
அவன் எதிர்பார்த்தது போல் அவள் முகத்தில் ஒளியே இல்லை. பெரிய வாதம் கண்ணில் தென்பட்டது, உடல் மெலிந்து கன்னங்கள் சதைப்பற்றை இழந்து காணப்பட்டது.
"ஏன் போன் பண்ணல?" என அவள் கேட்க,
"நீ ஏன்டா இவ்ளோ டல்லா இருக்க?" பதில் கேள்வி வைத்தான் அவன்.
"என் மேல கோவமா இருக்கீங்களா நாராயணா?"
மனைவியின் கேள்வியில் அவளை தன்னை விட்டு பிரித்து நிறுத்தினான், "இப்பயே பதில் சொல்லனுமா?"
அவளிடம் கேட்டுக்கொண்டே தன்னுடைய கைக்குட்டையை காற்சட்டையிலிருந்து எடுத்து அவள் கண்ணீரை துடைத்தான். அதனை வாங்கி கண்களை அழுத்தமாக துடைத்தவள், 'ம்ம்' என பதில் வேண்டி நின்றாள்.
"எனக்கு பதில் சொல்லுற மூட் இல்ல. இது என்ன டிரஸ்? வேற மாத்து" என்றான்.
"கிரிக்கெட்டரே..." அவள் சிணுங்கல் மொழி அப்பொழுது அவனிடம் வேலைசெய்யவில்லை.
"வா ஆரூ, பங்க்ஷன் ஆரமிக்க போகுது"
தன்னோடு ஏதோ பேச எண்ணுகிறாள் என்பது தயங்கி அவள் வருவதில் தெரிந்தது. அதற்கு நேரம் தான் இல்லை. அவள் கை பற்றி வீட்டினுள் இழுத்து சென்று வேறு உடையை தாங்கிய பையையும் அவள் கையில் ஒப்படைத்தான்.
வீட்டிற்கு வந்த விருந்தினரிடம் சிறிது நேரம் அளவளாவிவிட்டு அவன் அறைக்கு வர அவன் மனைவி அவன் எடுத்துக்கொடுத்த தாவணியில் பாந்தமாக தயாராகி நின்றாள்.
அவன் இல்லாத பொழுது மங்கிப்போயிருந்த முகத்தில் இப்பொழுது வண்ணத்தின் வாசனை, ஒப்பனையின் சாயல். மஞ்சள் நிற பாவாடை, அடர் பச்சை நிற தாவணியில் கொள்ளைகொண்டாள் கணவன் மனதினை.
சிகை கூட அழகாக வாரி நெருக்கமாக தொடுத்திருந்த ஜாதிமுல்லை சூடியிருந்தாள். கதவை திறந்ததுமே அதன் மனம் தான் முதலில் அஸ்வினை நாடியது.
"தாவணி ரொம்ப அழகா இருக்கு கிரிக்கெட்டரே"
"ம்ம்ஹ்ம்ம்" என்றவன் அவளை தாண்டி தன்னுடைய உடையை எடுத்து குளியலறைக்குள் மறைந்தான்.
ஐந்தே நிமிடத்தில் திரும்பி வந்தவன் உடையை மாற்றி வர, "நான் வேற டிரஸ் மாத்திடவா?" என வந்து நின்றாள்.
"ஏன் இப்ப தானே நல்லா இருக்குனு சொன்ன?" அவள் எடை குறைந்தபடியால் அளவு சற்று மாறுபட்டிருந்தது, மற்றபடி உடனே மாற்றும் அளவிற்கு மோசம் என்று சொல்லிவிட முடியாது.
"இப்பவும் அழகா இருக்கு, ஆனா இதை போட்டா அங்க வந்து நிக்கிறது? எதுவும் தப்ப நினைப்பாங்கள்ல எல்லாரும்?"
"தாவணி போடுறதுல என்ன தப்பு கண்டு புடிச்சிடுவாங்க, ஜீன்ஸ், மிடிஸ், மினிஸ் போட்டு நின்னா கூட தப்பில்ல. சும்மா வா" என்றான் தன்னுடைய முகத்திற்கு ஏதோ கிரீம் தடவி.
அவள் தயங்கியே நிற்க, "இன்னும் என்ன?" என்றான் அவளை திரும்பி பார்த்து.
"ஏன் எந்த ரியாக்ஷனும் இல்லாம இருக்கீங்க?" அவன் முகத்தை படிக்க முயன்று தோற்றுப்போனாள்.
"டைம் அச்சுலடா வா வந்து பேசலாம்" நகரபோனவளை நிறுத்தி நவரத்தினங்கள் பதித்த நான்கு தங்க வளையல்களை ஒப்படைத்தான், "நம்ம சார்பா"
"இல்ல நானே வெள்ளில வளையல் வாங்கியிருக்கேன்" தயக்கமாக இருந்தது அதனை வாங்க பெண்ணுக்கு.
"ரொம்ப நல்லதா போச்சு. வெள்ளி சூடு குறைக்கும்ல? அப்போ அதை மொத போட்டுட்டு இதை அப்றம் போடு" அவளை அதிகம் யோசிக்க விடாமல் இழுத்து சென்றான்.
விழா அழகாக துவங்கி மகிழ்ச்சியாக முடிந்தது.
நிறைவான மனதோடு திவ்யாவை தானே வீட்டில் வைத்து பார்த்துக்கொள்வதாக மதி கூற, மாறனுக்கு முகமே இல்லை. இன்னும் இரண்டு மாதத்திற்கு பிறகு தானே வருவதாக வாக்குறுதி கொடுத்து மதியை சமாதானம் செய்தாள் திவ்யா.
அனைத்தும் முடிந்து மதிய உணவிற்கு பிறகு அவரவர் அறைக்குள் தஞ்சம் புகுந்தனர். சோர்வாக தென்பட்ட ஆரோஹி மெல்ல படியினில் ஏற அவள் பின்னே வந்த அஸ்வின் வேகமாக அவளை நெருங்கி மனைவியை சட்டென கைகளில் அள்ளிக்கொண்டான்.
திடீரென காற்றில் மிதந்த தன்னை நம்பாமல் அவள் ஜீரணிக்கும் முன்பே அஸ்வின் மனைவியை பத்திரமாக கைகளில் நெஞ்சோடு அணைத்து சிறை செய்திருந்தான்.
"நாராயணா..."
அலறியவளை, "ஷ்ஷ்... கத்தாதடி" வீட்டினருக்கு கேட்டுவிடுமோ என்கிற பயத்தில் மெல்ல அதட்டினான்.
"நாராயணா இறக்கி விடுங்க" ஹஸ்கி குரலில் கெஞ்சினாள்.
"முடியாது" அவளை போலவே ஹஸ்கி குரலில் பதில் கொடுத்தவன் படியேறினான்.
"என்ன முடியாது, காலைல இருந்து உங்க பின்னாடி எப்படி சுத்திட்டே இருந்தேன். அப்போ எல்லாம் கண்டுக்காம இப்ப மட்டும் என்ன?"
அவள் கைகளில் திமிறியவாளை பதறி பிடித்தான் அஸ்வின், "ஆரூ உயிரே போச்சு ஒரு நிமிஷம். விழுந்திருந்தா என்ன ஆகும்" குரலை உயர்த்தாமல் அதே ஹஸ்கி குரலில் தொடர அவன் பட்டபாடு... அப்பப்பா. அவளை திட்டியே அறைக்குள் வந்தவன் கதவை காட்டினான் அவளிடம்.
"தொறக்க மாட்டேன். ஏன் என்ன இக்னோர் பண்ணீங்கனு சொல்லுங்க"
"நான் உன்ன எப்போ இக்னோர் பண்ணேன், உன் கைய புடிச்சிட்டே தானே சுத்துனேன்"
அவன் நெஞ்சிலே அடித்தாள், "பொய். சிரிச்சு கூட பேசல. சுத்தி சுத்தி எல்லாருக்கும் இன்ட்ரோ குடுத்ததோட சரி. இந்த டிரஸ் நல்லா இருக்குனு கூட சொல்லல"
"சரி கதவை திற உள்ள போய் பேசலாம்"
"மாட்டேன். ஒன்னு பதில் சொல்லுங்க இல்லையா என்ன இறக்கி விடுங்க" கணவனிடம் நிர்பந்தம் வைத்தாள் அஸ்வின் மனைவி.
"இறக்கி விட மனசு வரல, காரணம் சொல்றேன் ஆனா உள்ள போய் சொல்றேன். திற" அவள் எதுவும் பேசாமல் முகத்தை திருப்பி வைத்தாள்.
"சரி நீ ரொம்ப அழகா இருக்க, இந்த தாவணி அதை விட அழகா இருக்கு. போதுமா?"
"பாவப்பட்டு சொல்றது எனக்கு வேணாம். இறக்கிவிடுங்க" இம்முறை பலமாக திமிறியவள் லாவகரமாக கீழே இறங்கியும்விட்டாள்.
"ஆரூ" கோவப்பட்டு சென்ற மனைவியின் கையை பிடித்து துரிதமாக அறை கதவையும் திறந்தவன் அவளை உள்ளே அடைத்து தாளிட்டான்.
"போங்க, பேசாதீங்க. உங்கள பாத்து எவ்ளோ நாள் ஆச்சுன்னு நான் பீல் பண்ணிட்டு இருக்கேன். இதுல அந்த நியூஸ் வேற, தெரியும் தானே உங்களுக்கு? நான் எவ்ளோ அழுதேன் தெரியுமா... ஆறுதலா பேச கூட நீங்க எனக்கு கால் பண்ணல. இப்ப இந்த பங்க்ஷன்க்கு வரலைனா இன்னும் ஒரு மாசம் கழிச்சு தான் உங்கள பாத்துருக்க முடியும்" விழிகளை உருட்டி கோவம் காட்டினாள்.
"ஓ ஆமா மறந்துட்டேன், அதெல்லாம் இக்னோர் பண்ணிடு ஆரு சரியா?"
கணவனது இந்த உதாசீனம் அவளை மெல்ல ஆட்டி பார்க்க முகத்தை திருப்பி கண்ணீரை மறைக்க முயன்றாள்.
அளவுகடந்த புரிதல் மட்டுமே காதலை மென்மேலும் நிலைப்படுத்துவதில்லை, சில நேரங்களில் ஆகச்சிறந்த முட்டாள்தனமும் காதலின் வேரினை உயிர்ப்பித்துவிடுகிறது.
கதவினில் சாய்ந்து விசும்பியவள் கையை பிடித்து ஒரு பக்கம் கதவின் மேல் இறுக்கமாக பிடித்துக்கொண்டான்.
"டேய் ஆரு" அஸ்வின் அழைப்பில் கண் மூடி நின்றவள் நாடியும் இதழ்களும் துடித்தது அழுகையில்.
"என் பட்டாம்பூச்சி அழுகுதா?" மயிலிறகாய் வருடியவன் மூச்சுக்காற்று பெண்ணின் பிறைநுதல் தீண்ட, அவன் இதழ்கள் அவளது விழியினில் மையம் கொண்டது.
அவன் ஸ்பரிசத்தால் மோட்சம் அடைந்த நீர் துளிகளை துடைக்க போனவள் மற்றொரு கையையும் அவனது மற்றொரு கை சிறைபிடிக்க, மிரண்டு கண் திறந்து பார்த்தாள் ஆரோஹி.
பேதையின் கன்னத்தில் இளைப்பாறிய அவன் நெற்றியை மெல்ல விடுவித்து தன்னை பார்த்து விழிக்கும் அவள் கண்ணை பார்த்தவன் மந்திர புன்னகை ஒன்றை சிந்தினான்.
"ஏன் அவாய்ட் பன்றேன்னு கேட்டல? பதில் சொல்லவா?" முத்தம் கொடுத்து மூச்சு முட்ட வைத்தவன் செயலில் அவள் எங்கே பதில் கொடுப்பது?
அவனே பேசினான், "எந்த எக்ஸ்படேஷனும் இல்லாம வந்தவனை சுத்தி அத்தனை பேரும் இருந்தும் யோசிக்காம டைட் ஹக் குடுத்தியே அப்போ தோணுச்சு இந்த விபரீத எண்ணம்..." நிறுத்தினான் அவளது மென்மையான சருமத்தின் மேன்மையை உணர்ந்தவனாய்.
"எது?" கிரகத்திலும் காரியமே கண்ணாய் கேட்டாள்.
கண்களில் குறும்பு பெறுக வலது கை அவளது நாடியின் அடிப்பாகத்தை மெல்ல வருடி சற்று மேலே தூக்கியது.
அவள் விழி தாழ்ந்து தரையை நோக்காமல் தடித்த அவன் முரட்டு இதழ்களில் பதிந்தது அவள் பிழையும் அல்ல.
நாடி உரசிய அவன் விரல்கள் மெல்ல உயர்ந்து அவள் இதழ் வரிகளில் வருடி தன் இதழ்களுக்கு கடத்தி அதன் மென்மையின் பரிசாய் ஒரு முத்தம் ஒன்று வைக்க, உச்சாணிக்கொம்பிலிருக்கும் மோகமே முக்தி பெற்று அரண்டோடியது.
அஸ்வினுக்கு அந்த இதழ் தீண்டல் அவன் விறல் வழியே நிகழ்ந்தாலுமே வாழ்வின் அந்தாதியை பெற்ற உணர்வு.
உரியவள் கண்களோ, 'அவ்வளவு தானா?' என்கிற வினாவோடு தொக்கி ஏமாற்றமாக நிற்க மனையாட்டிக்கு இந்த வேதனையை கொடுக்க விரும்பாமல் மெய் மறந்து நொடியில் அவள் இதழ்களை கவ்விக்கொண்டான்.
முரண் இல்லா அவளது குணத்தில் இத்தனை நாள் கட்டுண்டு கிடந்தவனுக்கு, இலக்கணமே பரிசானது போல் அவளோடான முதல் முத்த போர்.
அனுபவமில்லா அவளது முத்தத்தில் பித்தானவன் கிறங்கி உடல் தளர போனவள் இடை வளைத்து பத்திரமாக தன்னுடலோடு பிணைத்துக்கொண்டான்.
ஆழந்த நிம்மதியான உறக்கத்தில் இருந்தவனுக்கு சாமரம் வீசியது போல் அவளது இமை முடிகள் அவனது கண்ணெதிரில் உரசி சிலிர்க்க, அஸ்வின் ஒரு கை மனைவியின் கழுத்தில் பதிந்து தனக்கு வாகாக திசைமாற்றி இன்னும் முத்தத்தை ஆழத்தில் இழுத்து சென்றது.
கடலின் ஆழம் சென்றும், தேடிய முத்து கிடைத்தும் பொறாமைக்காரனுக்கு போதவில்லையாம். இன்னும் இன்னும் புதையலை தேடினான். பாவம் அவள் நிலை உணர்ந்தானோ என்னவோ விட்டான் அவளது இதழ்களை.
கண்ணை மூடியபடியே ஆழந்த மூச்சை இழுத்தவள் சற்று ஆசுவாசமடைந்து விழி திறக்கையில், செய்த பிழையெல்லாம் இம்முறை சரிசெய்கிறேன் என்கிற போலியான கரிசனையோடு மீண்டும் மனைவியின் செவ்விதழ்களை தனதாக்கினான் அந்த கணவன் என்கிற கள்ளன்.
பெண்ணவளும் கள்ளி தான் போல, ஒரே எடுத்துக்காட்டில் கை தேர்ந்த வித்தகன் போல அவன் அசைவிற்கேற்றவாறு தன்னை சரி செய்துகொண்டு வழிநடக்க, கயவன் கைகள் அவளது தாவணி ஒதுக்கி வஞ்சியவள் வஞ்சகம் இல்லாத தளிர் மேனியில் ஊர்வலம் சென்றது.
அஸ்வின் இத்தாதுக்குதலை எதிர்பாராதவள் மெல்ல அலறி அவன் கையை பிடிக்க முயல, அவளது இதழ் தேனை மேலும் ருசி பார்க்க அவனுக்கு வாகாக அமைந்தது.
இனிப்பை தேடி அதன் சுவை உள்ளவரை பருக நினைத்து சென்றவனுக்கு கரும்பு ஆலை அதுவென தெரிந்த பிறகு தற்காலிகமாக ஓய்வெடுத்து நின்றான்.
அஸ்வினின் அடாவடியான தேடலில் கன்னம் சிவந்து, நெஞ்சுக்குழி தாறுமாறாக ஏறி இறங்கியது பெண்ணுக்கு. முகத்தை தூக்கி பார்க்க கூட அத்தனை தயக்கம், வெட்கம் பிடுங்கி தின்றது. அவளது தாவணி சரி செய்து, நெற்றியில் இதழொற்றி கன்னம் தங்கினான்.
"உனக்காக தான் வந்தேன். உனக்காக மட்டும் தான் வந்தேன். அதுவும் இதை மட்டும் தான் சொல்ல. போதுமா?"
குனிந்து அவள் கண் பார்த்து கேட்டான். வேறென்ன வேண்டும் அவளுக்கு? அத்தனை பிரச்சனை தாண்டி, பலரை எதிர்த்து அவள் முகம் பார்த்து, 'உனக்காக' என சொல்லும் உறவு அமைவதெல்லாம் எத்தனை பெரிய பாக்கியம்? அவள் கணவன் அவளுக்கு பொக்கிஷம் தான்.
ஆனால்... ஹ்ம்ம்... மற்றவை எல்லாம் யோசிக்க அவள் விரும்பவில்லை. இந்த நொடி அவன், அவள் என்பதை தாண்டி அவள் வாழ்க்கையில் எதுவுமில்லை.
அவளுக்காக ஒரு உயிர், அவளை உயிராய் நினைக்கும் ஒரு ஜீவன், அவள் ஜீவன். போதுமே.
இனி மரணமே நிகழ்ந்தாலும் அதையும் சிரிப்போடு ஏற்பாள். தாவி கணவன் கழுத்தை கட்டிக்கொண்ட ஆரோஹி அந்த நொடி மோட்சம் அடைந்தாள், அவனிலும், அவன் காதலிலும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro