♡~75
#அம்மா
என் உள்ளத்தில் நீதான்-என்றும்
உன் எண்ணத்தில் நான் தான்
விட்டுக்கொடுக்காமல் வாதித்திடுவாய்-என்னை
கெட்டுப்போகாமல் காத்திடுவாய்
கருவறையில் புதுவரவாய் என்னை சுமக்க
கருவிழியில் புதுகனவாய் என்னை நீ இமைக்க
கருணையில் காவலாய் என்னை வளர்க்க
கனமுழுதும் ஆவலாய் என்றும் நினைக்க
உன்போல் உலகில் யாருமில்லை-உன்
உள்ளம்போல் உன்னதம் எங்குமில்லை
உணர்வுகள் மத்தியில் முதலிடம் உன்னிடமே
உறவுகள் மொத்தத்தில் நீயே தனித்துவமே
தாளாத இன்பம் தாய்அகம் தான்
தாய்மையே தியாகம் தான்
அறிந்ததும்🌹அறியாததும்☆
Ămmű (s)....🌹
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro