♡~7
தாய் 😘
கருவினில் உனை சுமந்து காணாத உனக்காய் பல கனவுகளை கண்டவள் அம்மா
வாலு பன்னி வயிற்றினுள் நீ உதைத்து வதை கொடுத்தாலும் சிரித்து மகிழ்பவள் அம்மா
உலகை காண நீ வர அவள் உயிர் துடிக்க வலி காண்பவள் அம்மா
வலி கண்டு வராத கண்ணீர் உனை கண்டு ஆனந்த கண்ணீர் வடித்தவள் அம்மா
உதிரத்தை உரையாக்கி உன் பசி தீர்க்க பால் தந்தவள் அம்மா
உறக்கத்தில் உனை ஆழ்த்த உறங்காமல் கண் விழிப்பவள் அம்மா
குறும்புகள் நீ செய்ய குதூகலமாய் அதை ரசித்தவள் அம்மா
கல்வி அறிவை உனக்கேற்ற அயலாது உனை ஊக்குவிப்பவள் அம்மா
பட்டினியாய் உனை போடாமல் பரிதாபமாய் பசித்திருப்பவள் அம்மா
கணக்கிட்டு பார்த்தால் கடவுளின் அவதாரம் நீ அம்மா
உனை வாழ்த்த நாட்கள் பார்க்க தேவை இல்லை
நாள்தோறும் வாழ்த்த வேண்டும் ஆனால் வாழ்த்த வார்த்தை போதவில்லை
☆அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் அம்மா
அறிந்ததும்🌹அறியாததும்☆
Ămmű (s)....🌹
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro