ஐந்தாயிரம் நட்சத்திரங்கள்
அரண்மனைச் சுவர்களில் வாழ்வது அரசர்களின் செல்வநிலை அல்ல வறியவர்களின் உழைப்பையும் வஞ்சிக்கப்பட்டவர்களின் உழைப்பையும் அது கொடியேற்றத்துடன் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.
என் மேசையின் மீதிருந்த புத்தகத்தை நகர்த்தி வைத்ததில் ஒரு சின்னஞ்சிறு உழைப்பு ஒதுங்கிக் கொண்டு வேடிக்கைப் பார்க்கிறது. பெரிய உழைப்பை விதைத்தால் தான் அது நெடிய காலம் வரை தங்கியிருக்கும் ஏனென்றால் இங்கே குடிசை வீடுகளின் நளினத்தைப் பற்றி யாரும் பேசுவதில்லை.
நீங்கள் உண்ணுகின்ற உணவு இரசமும் சோறுமாக இல்லாமல் பாசமும் அன்புமாக இருக்கட்டும் ஏனென்றால் அது சோறல்ல அது தான் சொர்க்கம். அதனால் தான் ஐந்து நட்சத்திர உணவகங்களின் வசம் இல்லாத ஐந்தாயிரம் நட்சத்திரங்கள் தாயின் கையில் உள்ளது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro