அம்மா
உயிர்கொடுத்து உருகொடுத்து உதிரந்தனை நீ கொடுத்து
இம்மண்ணில் மலரச்செய்'தாயே'..!
உணவளித்து ஊக்கமளித்து மொழிதனையும் நீ அளித்து
இச்சமூகத்தில் உலவச்செய்'தாயே'..!
பரிவளித்து பண்பளித்து பக்குவந்தனை நீ அளித்து
இப்பாரினையே எதிர்க்க வைத்'தாயே..!
அன்பளித்து அக்கரையளித்து அத்தனையும் நீ அளித்து
அச்சமின்றி நடக்கச்செய்'தாயே'..!
அர்பணிப்பில் உனைநான் மிஞ்சிட உனக்கு எதைநான் அளிப்பேன் தாயே..!
இப்பிறவியில் நீ செய்திட்ட அத்தனையும் மறுபிறவியில் நான் செய்திட
வாய்ப்புத் தந்திடு மகளாய் மடியில் தவழந்திடு..!
பெற்றகடன் நீ தீர்த்து விட்டாய் - நான் வளர்ந்த கடன் தீர்ப்பாயோ?
ஏக்கத்தோடு நானிருக்க ஏதுமறியாமல் நீ இருப்பாயோ?
கவலை காணாமல் வளர்ந்த எனை கடன்காரனாய் மடிய விடுவாயோ?
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro