அம்மா
எது பிழை என்றபோதும் அழுகையை
புடவையால் கலைத்துவிட்டு அன்பே என்று ஆரத்தழுவி தூக்கி இடுப்பில் என்றும் சுமக்கும் சுமைகாரி.
நிலா என்ன ஒரு வாய் உணவிற்காக வானத்தையே கட்டி இழுத்து வந்து வீட்டின் முற்றத்தில் கட்டி வைத்துச் சோறுட்டும் கெட்டிக்காரி.
கேட்க வேண்டும் தினம் அவள் வாய் அமுதை அஆ.. இஈ... அன்னைத்தமிழ் இந்த பிள்ளைக்கு அவள் ஊட்டிய
செந்தமிழுக்கு சொந்தக்காரி.
மிதிவண்டி ஓட்ட தெரியாது கடிகாரம்
முள்ளை கணிக்க தெரியாது என்றும் காய்கறி வேண்டி கடைவீதிக்கு வந்ததில்லை வீட்டுக்காரி.
பெற்ற பிள்ளைகளை எல்லையாய்
கொண்டவள்,கட்டிய கணவனையே
உலகம் என்று கருதியவள் இனிதே
பேசும் பாசக்காரி.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro