Part 8
குழந்தை பிறந்த உடன், குழந்தையை சுத்தப்படுத்தி தாயிடம் தருவார்கள். தாயும் தனது மார்பகத்தை சூடான தண்ணீரில் நனைத்த துணியால் நன்கு அழுத்தி துடைத்து சுத்தமாக்கி, முதலில் வரும் சீம்பாலை குழந்தைக்கு அளிக்க வேண்டும்.
குழந்தை பிறந்த உடனேயே எந்த தயக்கமும் இல்லாமல் தாய்ப்பால் கொடுக்க துவங்கிவிட வேண்டும்.
சிறிது பால் அருந்திய குழந்தையை தாய் தன் மார்போடு அணைத்துக் கொள்ள வேண்டும். இப்படி செய்வதால் தாயின் மார்பிலிருந்து பால்சுரப்பதை தூண்டுவேதாடு தாய்க்கும் சேய்க்கும் இடையிலான பாசப்பினைப்பை ஏற்படுத்தும், பல அயல்நாடுகளில் பெரும்பாலான மருத்துவமனைகளில் பிறந்த குழந்தையை தாயின் மார்பகத்தின் மீது போட்டு வைப்பார்கள். இதனால் குழந்தை வயிற்றுக்குள் இருக்கும் போது ஏற்பட்ட ஒரு பாதுகாப்பு மற்றும் வெப்ப உணர்வு கிடைக்கிறது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro