Part 2
அம்மா என்ற வார்த்தையில்
அகிலம் அடங்குதடி.
பாசத்தின் அகராதி நீயடி,
கடவுளின் கருணை நீயடி,
பெண்மையின் சிறப்பு நீயடி,
புரியாத புதுமை நீயடி,
புனிதத்தின் பிறப்பிடம் நீயடி,
பொறுமையின் தலைமை பீடம் நீயடி,
பண்பின் பல்கலை கழகம் நீயடி,
பிஞ்சு கையின் பிடிமானம் நீயடி ,
பிள்ளைகளின் ஆசான் நீயடி,
குடும்பத்தின் குணவதி நீயடி,
தியாகத்தின் திருபீடம் நீயடி,
திருவருள் தரும் தெய்வம் நீயடி,
அதுவே என் அம்மா.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro