முன்னோட்டம்
ஏ.. பெரிய மாமோவ் .... என்ன இன்னிக்கு கடலக்கா(நிலக்கடலை) புடுங்குவியா மாட்டியா??, கையில் இருந்த மாங்காயை மென்றபடியே கேட்டாள் அவள்.
ஏ அரடிக்கட்டு, என்னடி என்னைய போய் பெரிய மாமான்னு கூப்பிட்டு திரியிற. உங்கமாளுக்கு நான் மட்டும் தான் டி அண்ணன்..
ம்ம்ம்.. எனக்கென்ன ஆசையா ஒரே.. தாய்மாமன பெரிய... மாமா... ன்னு கூப்பிட.. என்று இழுத்து இழுத்து வம்பு செய்தாவாறு பக்கத்தில் இருந்தவனை பார்க்க, அவனோ வேண்டாம் என்று செய்கை செய்தான்.
பின்ன என்னத்துக்கு அப்படி கூப்பிட்டியாம்??
உங்க மகந்தான் அவுங்களை மாமா ன்னு கூப்புட சொன்னாரு.. என்று அவன் பக்கம் பார்க்காதவள் போல பேசினாள் அவள்.
அவள் மாமாவோ, அடேய் இன்னும் மீசையே முளக்கலயாம் அதுக்குள்ள அத்தமக மாமான்னு கூப்புடணுமோ.. என்று அருகில் இருந்த மகனின் தோளில் தட்ட, அவனோ மாட்டி விட்ட தன் அத்தை மகளை முறைத்தான்.
அவளோ.. நான் போய்ட்டு வர்றேன் மாமா.. வர்றேன் பெரியமாமா என்று அவனை நக்கலாக பார்த்து நாக்கை துருத்தி விட்டு மாங்காயை கடித்தபடி நடந்து சென்றாள்.
◆◆◆◆◆◆◆
ஏண்டா உண்மைலுமே நீ இதே ஊர்ல அதே வீட்ல தான டா இருக்க? தன்னருகில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தவனை விசித்திரமாக பார்த்தபடி கேட்டான் சேகர்.
சேகரு .. வர வர நீ சரில்லடா.. உன்ட சொல்லாம எங்குட்டாச்சும் போயிருப்பேனா டா நானு.., என்று கடுப்புடன் சொன்னான் அவன்.
அடேய்.. முரட்டு ஆளா இருந்தா மட்டும் பத்தாது டா , கொஞ்சூடாச்சும் அங்கிட்டு இங்கிட்டு பாக்கணும். வெளிய இல்லாட்டியும் வீட்டிக்குள்ளயாச்சும் பாக்கணும் டா.
என்னடா சொல்ற என்று புரியாமல் கேட்டான் அவன்.
யாரு சொன்னாலும் நம்பிடுவியா டா? உனக்கே தெரியாதா?, அவம் செயலால் கடுப்பு மேலோங்க கேட்டான் சேகர்.
யாரோ எங்கடா.. எங்கம்மால்ல டா சொல்லுச்சு. அப்பறம் நம்பாம எப்பிடிடா.. என்று பிரகாசமாக சொன்னவனை என்ன சொல்லி திட்டுவது என்று தெரியாமல் இருந்தான் சேகர்.
உன் அன்பை யாரும் பயன் படுத்திக்காம பாத்துக்க டா மாப்ள . என்று எழுந்து போனான்..
◆◆◆◆◆◆◆
மேஜர் அங்கிள், நைட் முழுசா முழிச்சிட்டேன். தூங்கவே இல்ல. யாராச்சும் வந்தா மட்டும் கூப்பிடுங்க. நான் ரெஸ்ட் எடுக்கிறேன். என்று உள்ளே போனாள் அவள்.
சரி டா என்று வாசல் ஈசி சேரில் அமர்ந்தார் .
எங்க பாப்பாளை காணம்.. என்று உள்ளே வந்த கிழவியை பார்த்து முகத்தில் கடுமை வர,
நீ எங்கே வந்த ?
என்னய்யா நீ வந்த நாள் தொட்டு என்னய உள்ளார விடவே மாட்டேங்கிற.. எரிச்சல் பட்டாள் கிழவி.
நீ வம்பளக்கிற, அதான் சரி வராதுன்னு யோசிச்சேன் என்றார். தான் அவளை தவிர்ப்பதை புரிந்து கொண்டதற்கு அவளை மனதினுள் மெச்சவும் செய்தார்.
என்னய பார்த்தா அப்பிடி சொல்ற, இன்னிக்கு வரைக்கும் என் ராசாத்தி விசயம் ஒண்ண இந்த ஊருக்கு சொல்லியிருப்பேனா?? இந்த வீட்டு உப்பை தின்ன செருப்புய்யா நானு.. என்று சொல்லிவிட்டு மடமட வென்று வெளியேறினாள்.
தப்பா நெனச்சிட்டோமோ என்று வருந்தினார் மேஜர்.
◆◆◆◆◆◆◆
இந்த பிள்ளைய எண்ட குடுங்குறேன்.. கிழவி கேட்க,
இருக்கட்டும் அம்மத்தா.., தராமல் நின்றாள் சரோஜா.
ஏ சரோ யாரு புள்ளை டி இது. இப்படி விடாம அழுவுது. கேட்ட படி வந்தார் அந்தம்மா..
அவளை கண்டதும் மரியாதை நிமித்தம் தலையை அசைத்துவிட்டு, கைமாறி இருக்கறதால அழுது ஆத்தா.. வேற ஒன்னும் இல்ல..
யாரு புள்ளைன்னு கேட்டனே.. நீ ஏன் தூக்கிட்டு அலையிற
நம்ம டாக்டர் வீட்டு புள்ள. வீராயி மகளுக்கு பிரசவ வலி ,அந்தம்மா பிரசவம் முடிக்கிற வரைல ஒத்தாசைக்கு நான் புள்ளய வச்சிருக்கேன்..
நானு இன்னும் அந்த டாக்டரை பாக்கல. வரணும் என்றார் யோசனையாக.
அப்படியே கிளம்பிவிட்டார்.
இந்த சரோஜா.. புள்ளிய குடுன்னு கேட்டேன்ல.. குடு.. என்று கேட்க,
என்ன அம்மத்தா சொல்லிட்டு தானே தூக்கிட்டு வந்தேன்.
ஆனா காட்ட கூடாத ஆளுக்கெல்லாம் காட்றியே,என்று வேகமாக வாங்கி சென்றார் முத்தம்மா..
◆◆◆◆
அரடிக்கட்டு யாரு?டாக்டர் யாரு? மேஜர் யாரு? முரட்டு ஆள் யாரு ?? இப்படி பல யாரு தோணுதா.. எல்லாரும் அன்பின் வழியது உயிர்நிலை ல வரபோறவங்க தான். அதனால இனிமே மறக்காம வாரம் மூணு நாள் இவங்களை சந்திச்சிட்டு போங்க. வரும் வெள்ளி முதல் திங்கள், புதன்,வெள்ளி மூன்று நாட்கள் கதை பதிவு செய்கிறேன். மறக்காம படிங்க.
DIsclaimer: இது வட்டார மொழி கதை இல்லை. நான் பார்த்த எங்கள் பக்க கிராம பேச்சு வழக்கை கதையில் கொண்டு வந்து இருக்கிறேன். மற்ற படி ஒன்றும் இல்லை.
◆◆◆◆
ஜெயலட்சுமி கார்த்திக்
© காப்புரிமை வாங்கப்பட்ட கதை.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro