7
Class room இல் இருப்புக் கொள்ளாமல் வெளியே கல் பெஞ்ச்சில் அமர்ந்து ஆழ்ந்த யோசனையில் இருந்தாள் சஞ்சு. அந்தப் பக்கமாய் வந்த அஜய் அவளை கண்டதும் Good morning சொல்லிக் கொண்டு அவள் அருகில் அமர்ந்தான்.
Dull ஆஹ் இருக்க, என்ன Problem?
வீட்ல ஒரு சின்ன Problem அஜய்.
பாத்தா சின்ன Problem மாரி தெரியலயே!
அக்காக்கும் மாமாக்கும் சண்ட, ரெண்டு மாசமா அவ வீட்ல தான் இருக்கா. போன வாரம் மாமா கிட்ட இருந்து Divorce notice வந்திருக்கு.
ஓஹ் வீட்ல Parents என்ன சொல்றாங்க? யாரும் மாமா கிட்ட பேச Try பண்ணலயா?
மாமாகிட்ட பேசுறதுக்கு ஒன்னும் இல்ல அஜய். தப்பு அக்கா மேலத்தான். அவரே வீட்டுக்கு வந்து கூப்டும் இவ போக முடியாதுன்னு சொல்லிட்டா. அதான் அவரு கோவத்துல Divorce Notice அனுப்பிருக்காரு.
ஹ்ம் நீ அதயே யோசிச்சிட்டு இருக்காதே, எல்லாம் சரி ஆகிடும். அக்காவோட Husband நல்லவருன்னா எப்டியாவது அவர பேசி Convince பண்ணிடலாம்.... நீ சாப்டியா?
இல்ல அஜய்.
பசியோட இருக்குறது எதுக்கும் Solution இல்ல சஞ்சு, வா Canteen போலாம்.
அக்ஷராவை தவிர வேறு யாரிடமும் அவள் இதை பகிர்ந்திருக்கவில்லை. ஏனோ அஜய் கேட்டதும் எல்லாவற்றையும் சொல்லிவிட்டாள். அவனது நெருக்கம் அவளுக்கு பிடித்திருந்தது. அவன் அருகில் இருந்தாலே மனம் அமைதியாய் இருந்தது.
இருவருமாய் Canteen போனார்கள். சாப்பிட்டு விட்டு அரட்டை அடிக்கத் தொடங்கியதில் அன்றைய நாள் நன்றாகவே கழிந்தது.
அஜய் சொன்னது போல் மாமாவுக்கு Call செய்து பேசினாள் சஞ்சு. குழந்தை யாழினியை வந்தனா காட்ட மாட்டேன் என்று சொன்னதாலேயே அவர் Divorce notice அனுப்பியிருந்தார். மற்றபடி அவருக்கு விவாகரத்து செய்யும் எண்ணமில்லை என்பது அவர் பேசியதிலே புரிந்தது. எந்த அவசர முடிவும் எடுக்காமல் கொஞ்ச நாள் பொறுமையாய் இருக்கும்படி கெஞ்சி கேட்டுவிட்டு Call ஐ Cut செய்தாள். அப்படியே அம்மாவுக்கு போன் செய்து நடந்ததை கூறிவிட்டு எதையும் வந்தனாவிடம் சொல்ல வேண்டாம், வந்தனாவை சிறிது காலம் அவள் போக்கிலேயே விட்டு விடலாம் என்றும் கேட்டுக் கொண்டாள்.
அந்த வாரம் வீட்டுக்கு போனதும் மாமா ராமுக்கு வாக்கு கொடுத்த படியே யாழினியை கூட்டிக் கொண்டு Park க்கு போனாள். அப்பாவை நீண்ட நாளுக்கு பின்னர் பார்த்ததும் சந்தோஷத்தில் பொங்கினாள் குழந்தை. "அப்பா " என்று ராமை கட்டிக் கொண்டு முத்தம் கொடுத்தாள் . அப்பாவும் மகளுமாய் விளையாட தூரமாய் அமர்ந்து அவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள் சஞ்சனா. யாழினிக்கு வந்தனாவை விட ராமை தான் ரொம்ப பிடிக்கும். எப்போது கேட்டாலும் "அப்பா பொண்ணு" என்று தான் கூறுவாள். அவளை மாமாவிடமிருந்து பிரித்து வைத்ததை நினைக்கும் போது அவளுக்கு வந்தனாவுடன் கோபமாய் வந்தது. அவள் அடுத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுப்பதே இல்லை. College படிக்கும்போது ராமை காதலிப்பதாய் வந்து நின்றாள். அப்பா எதிர்ப்புத் தெரிவிக்கவே அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள். ஆனால் இப்போது அவளே விவாகரத்து வேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறாள். வீட்டில் எல்லோருக்குமே அவள் மேல் வருத்தம் இருந்தது.
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நடந்தது எல்லாம் தெரியும் . ஆகவே அடுத்தடுத்த நாட்களில் யாரும் வந்தனாவின் விவாகரத்து பற்றி அவளுடன் விவாதிக்கவோ சண்டை போடவோ இல்லை . நாட்கள் இயல்பாய் நகர்ந்தன.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro