22
Good morning அஜய்
Good morning sweetheart இப்போ தான் உன்ன நெனச்சேன், அதுக்குள்ள நீயே போன் பண்ணிட்ட. அப்றம் .. கல்யாணப் பொண்ணு Night நல்லா தூங்கினீங்களா?
கல்யாணப் பொண்ணு நல்லா தூங்கி இப்போ தான் எழுந்திரிச்சேன். மாப்பிள்ள Sir தூங்கினீங்களா இல்லையா?
தூக்கமே வரல டி, உன்ன பாக்கணும் பாக்கணும் போல இருக்கு.
ஹேய் Meet பண்ணி மூனு நாள் தானே ஆச்சு, அதுக்குள்ள என்னடா?
மூனு நாள் தான் ஆச்சா? பாவி மூ...னு நாள் ஆச்சு. வீட்டுக்கு வரேன்னு சொன்னா வேணாம்னு சொல்லிட்ட, சரி வெளிய Meet பண்ணலாம்னா அதுக்கும் முடியாதுன்னு சொல்லிட்ட. Torchure பண்ற சஞ்சு.
ஹேய் அது தான் கல்யாணம் பண்ணி உன் கூடவே தானே இருக்க போறேன். இந்த One week பாத்துக்காம இருப்போம்.
ம்ம்ம் என்ன போட்டு படுத்துற சஞ்சு. Marriage முடியட்டும் ஒனக்கு இருக்கு.
ஹஹா Just one week தான் Darling, wait பண்ணு.
ஆமால்ல, அப்றம் நீ என் Wife ஆகிடுவ. ரொம்ப சந்தோஷமா இருக்கு.
ம்ம் எனக்கும் தான். ரொம்ப Exciting ஆ இருக்கு. You are the best thing that ever happened to me அஜய். இனிமே Life long உன் கூட தான்.
I love you சஞ்சு.
I love you
ஹேய் Love you சொன்னியா?
ஆமா வேற எதாவது கேட்டிச்சா?
சஞ்சூ... நா எப்ப Love சொன்னாலும் தெரியும்னு பதில் சொல்லுவ. இன்னைக்கி First time I love you சொல்லிருக்க.
ம்ம் பாவம்ல என் அஜய் செல்ல குட்டி. அதான் கல்யாணத்துக்கு One week முன்னாடி Love சொல்லிட்டேன்.
சஞ்சு எனக்கு இப்பவே உன்ன பாக்கணும் போல இருக்கு, வீட்டுக்கு வரட்டுமா?
அதெல்லாம் முடியாது. நாம Already பேசிட்ட மாரி மண்டபத்துல தான் Meet பண்ணணும்.
பாவி, என்ன அலைய வெக்கிறதுலயே இரு.
ஹஹா இன்னும் ஒரு Week தான் அஜய் அப்றம் உன் கூடவே தான் இருப்பேன்.
ஆமாம் இன்னும் ஒரு வாரத்தில் அவர்களுக்குத் திருமணம். UG முடித்து விட்டு இருவரும் ஒன்றாக MBA சேர்ந்தார்கள். இப்போது மூன்று வருடத்தின் பின் இரு வீட்டாரதும் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள்.
அவர்களின் அழகான வாழ்க்கைக்கு நாமும் வாழ்த்துவோம்.
❤❤❤ சுபம் ❤❤❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro