19
என்னதான் முன்பு போல் இருக்க பேசிக் கொண்டாலும் அஜய், சஞ்சனா இருவராலுமே முன்பு போல் இருக்க முடியவில்லை. அஜய் அவளிடம் பேச முயற்சி செய்யாமல் இல்லை. ஆனால் அவனை கண்டாலே இதயம் படபடக்க விலகிப் போனாள் அவள்.
அவளுக்கும் அவனைப் பிடித்திருக்கிறது என்பது அவள் பார்வையிலேயே தெரியும், ஆனால் அதை புரிந்து கொள்ளாமலே இருந்தாள் அவள். நாட்கள் யாருக்காகவும் காத்திருக்காமல் நகர்ந்தன. 3rd year, 4th year first semester முடிய கல்லூரியின் இறுதி நாட்களில் காலடி எடுத்து வைத்தார்கள்.
வார இறுதியில் வீட்டுக்கு போனாள் சஞ்சு. சஞ்சனா, வந்தனா, யாழினி மூவருமாய் Shopping கிளம்பினார்கள்.வந்தனா Bill போடுமிடத்தில் நிற்க சஞ்சனா, யாழினியை கூட்டிக் கொண்டு வெளியே வந்தாள் . அப்போது பாதையின் அடுத்த பக்கம் நின்ற ராமை கண்டு அப்பா என்று கத்தினாள் யாழினி. நீண்ட நாட்களின் பின் மகளை பார்த்த மகிழ்ச்சியில் ராம் பாதையை கடக்க வேகமாய் வந்த லாரியில் அடிபட்டு தூக்கி வீசப் பட்டான் ராம்.
Hospital இல் யாழினி அழுது கொண்டிருக்க அவளை தேற்றக் கூட தோன்றாமல் உறைந்து போய் அமர்ந்திருந்தாள் வந்தனா. கடையில் இருந்து வெளியே வந்தவள் கண்டது இரத்த வெள்ளத்தில் கிடந்த ராமை தான். அதிலிருந்து இப்படி தான் இருக்கிறாள் . ராமை ICU இனுள் எடுத்துச் சென்று ஒரு மணி நேரம்ஆகிவிட்டது, இன்னும் எந்த தகவலும் சொல்லவில்லை.
"என்னம்மா, இப்போ எப்டி இருக்கு? " பதறிக் கொண்டு வந்தார்கள் தேவியும் சத்திய மூர்த்தியும்.
இன்னும் எதுவும் தெரியலப்பா, உள்ள கொண்டு போய் One hour ஆச்சு. இன்னும் யாரும் எதும் சொல்ல மாட்றாங்க.
அப்போது nurse வெளியே வர அவரிடம் விசாரித்தார் சத்தியமூர்த்தி. " தலைல அடி பட்டிருக்குங்க, Conscious வந்தா தான் எதுவும் சொல்ல முடியும் "
சஞ்சு யாழினிய இங்க வெச்சிக்க வேணாம், நீ அவள கூட்டிட்டு வீட்டுக்கு போ
அப்பா, அக்கா? Accident ஆனதுல இருந்து எதுவுமே பேசாம கல்லு மாரி இருக்கா.
அவ இங்கயே இருக்கட்டும். நாங்க பாத்துக்குறோம். நீ யாழினிய கூட்டிட்டு போ.
யாழினியை கூட்டிக் கொண்டு வீட்டுக்கு கிளம்பினாள் சஞ்சனா. அவர்கள் கிளம்பி சிறிது நேரத்தில் அங்கே அழுதபடி வந்து சேர்ந்தார் ராமின் அம்மா யமுனா. விம்மிக் கொண்டே வந்தவர் வந்தவர் அங்கே அமர்ந்திருந்த வந்தனாவை கண்டதும் அங்கே வந்தார்.
"அவன் நல்லா இருக்கும் போது அவன சித்திரவத பண்ணது போதாதா, இப்போ அவன் சாகக் கெடக்குற நேரத்துல இங்க எதுக்கு வந்திருக்க " கத்தியபடி வந்தனாவை உலுக்க அவ்வளவு நேரம் உறைந்து போய் நின்றவள் வீரிட்டு அழத் தொடங்கினாள். அவள் செயலை சற்றும் எதிர் பாராதவர் கண்ணீர் மல்க அவளை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்.
ராமுக்கு இரண்டு நாட்களாய் நினைவு திரும்பாமல் இருந்தது. கூடவே இருந்து கவனித்துக் கொண்டாள் வந்தனா . வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்திருந்தாள் சஞ்சனா.
அக்கா Lunch எடுத்துட்டு வந்திருக்கேன் சாப்டு
எனக்கு வேணாம் சஞ்சு. அத்தைய சாப்ட சொல்லு.
நா அவங்கள சாப்ட சொல்றேன், நீயும் கொஞ்சம் சாப்புடு. நீ காலைலயும் எதுவும் சாப்டல
"எனக்கு வேணாம் சஞ்சு " விம்மத் தொடங்கினாள் வந்தனா.
அக்கா ... மாமாக்கு எதுவும் ஆகாது, நீ அழுது அழுது உடம்ப கெடுத்துக்காத. மாமா சீக்கிரமா கண் முழிச்சிடுவாரு.
இல்ல, சஞ்சு அவன் என்கிட்ட வந்து எவ்ளோ கெஞ்சியும் நா அவன கண்டுக்கவே இல்ல, ஆனா இப்போ அவன இந்த நெலமைல பாக்க முடியல. ராம நெரந்தரமா பிரிஞ்சிடுவேனோன்னு ரொம்ப பயமா இருக்கு.
அப்டி எதுவும் ஆகாதுக்கா. நீ தைரியமா இரு. மாமா பொழச்சிடுவாரு. நீங்க ரெண்டு பேரும் ரொம்ப நாள் சந்தோஷமா இருப்பீங்க.
வந்தனாவையும் யமுனாவையும் வற்புறுத்தி சாப்பிட வைத்து விட்டு கனத்த மனதுடன் வீடு திரும்பினாள் சஞ்சனா.
"அவன் என்கிட்ட வந்து எவ்ளோ கெஞ்சியும் நா அவன கண்டுக்கவே இல்ல. ... நெரந்தரமா பிரிஞ்சிடுவேனோன்னு ரொம்ப பயமா இருக்கு. " வந்தனாவின் வார்த்தைகள் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டே இருந்தன.
அவளும் அப்படியே தானே நடந்து கொண்டிருக்கிறாள் . ராமை போல் தான் அஜய்யும் கெஞ்சினான் . அய்யோ அவன் நினைவு வந்ததுமே உடல் நடுங்கத் தொடங்கியது. அஜய் இல்லாமல் ஒரு வாழ்க்கையை அவளால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? அவனை பிரிந்து அவளால் வாழத் தான் முடியுமா? அஜய் இல்லாவிட்டால் வாழ்க்கையே இருண்டுவிடும் போலிருந்தது அவளுக்கு.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro