14
வந்தனா யாழினியை தூக்கிக் கொண்டு வெளியே போக " வந்தனா!! " என்று கத்தினான் ராம். அவன் குரலில் ஒரு நிமிடம் திடுக்கிட்டவள், திரும்பிப் பார்த்தாள்.
அவள் பக்கம் போனவன், அவள் கையில் இருந்த Bag ஐ பறித்து உள்ளே எறிந்தான். " நா இங்க இருக்குறது தானே உன்னோட Problem, அப்போ நான் போறேன், நீ எங்கயும் போக வேணாம் " அவளிடம் சொல்லிவிட்டு அவன் தங்கியிருந்த அறைக்குப் போனவன், அவன் பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியே போனான்.
"அய்யோ உன் தலைல நீயே மண்ணள்ளிப் போட்டுக்கிட்டியே " நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதாள் அம்மா தேவி. யாரையும் பார்க்காமல் குழந்தையை இறக்கிவிட்டு விட்டு தன் அறைக்குப் போய் கதவை அடைத்துக் கொண்டாள் வந்தனா. சத்தியமூர்த்தி விரக்தியாய் ஒரு பெருமூச்சு விட்டவர் தன் அறைக்குப் போய்விட்டார்.
" அழாதம்மா, Please " சஞ்சனா அம்மாவை அழைத்துப் போய் Dining hall இல் அமர வைத்தவள் அவளை எப்படி சமாதானப் படுத்துவது என்றே புரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.
இந்தா தண்ணி குடி, அம்மா நீ இப்டி ஒடஞ்சி போய்ட்டா யாழுவ யாரு .... யாழு!!
அப்போது தான் யாழினியின் நினைவு வந்தவள் யாழினியை தேடிக் கொண்டு Hall க்கு வந்தாள். அங்கே சோபாவில் அமர்ந்தபடி வாசலை வெறித்துக் கொண்டிருந்தாள் யாழினி.
யாழு குட்டி இங்க என்ன பண்றீங்க? வாங்க சாப்டுட்டு போய் தூங்கலாம்.
அவள் பேசியதற்கு குழந்தையிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அவள் பார்வை வாசலில் நிலைத்திருந்தது. அவள் அமைதி தன்னை பயமுறுத்த யாழினியை தூக்கி தன் மார்போடு அணைத்துக் கொண்டாள் சஞ்சனா. அவளையறியாமலே கண்கள் ஈரமாக யாழினியை தூக்கிக் கொண்டு தன் அறைக்குப் போனாள். அவளை அங்கே படுக்க வைத்துவிட்டு சமையலறைக்குப் போய் பால் காய்ச்சி அதை ஒரு கப்பில் எடுத்துக் கொண்டு மேலே வந்தாள்.
"யாழினி Good girl இல்ல, இத மட்டும் குடிச்சிட்டு படுடா " மறுப்பாய் தலையசைத்த குழந்தையை கட்டாயப் படுத்தி குடிக்க வைத்துவிட்டு அவளை அணைத்த படி படுத்தாள். பால் கொண்டுவரப் போன போது அம்மா சமையலறையில் இல்லை, அவள் தன் அறைக்குப் போயிருக்க வேண்டும். அம்மாவுடன் காலையில் பேசிக் கொள்ளலாம். இப்போது யாழினியின் அருகில் இருப்பது தான் முக்கியம்.
இரவு முழுக்க தூக்கத்தில் முணங்கிக் கொண்டிருந்தாள் யாழினி. அவள் தலையை வருடிய படி படுத்திருந்த சஞ்சனா எப்போது உறங்கினாள் என்றே தெரியாமல் உறங்கிப் போனாள்.
அடுத்த நாள் பொழுது விடிந்த பின்னும் மனது என்னவோ போல் தான் இருந்தது. யாழினி விழித்து விடாதவாறு எழுந்து குளியலறைக்குப் போய் Fresh ஆகிவிட்டு கீழே வந்தாள் சஞ்சனா. வந்தனா அறையில் இருந்து வெளியே வந்திருக்கவில்லை . அப்பா Hall இல் அமர்ந்திருந்தார். TV ஓடிக் கொண்டிருந்தது . ஆனால் அவர் கவனம் அதில் இல்லை என்பது நன்றாகவே தெரிந்தது. சமையலறையில் அம்மா Tea போட்டுக் கொண்டிருந்தாள். அவளது கண்களில் லேசான வீக்கம். இரவு நீண்ட நேரம் அழுதிருக்க வேண்டும். அவள் அருகில் போய் நிற்க எதுவும் பேசாமல் சஞ்சு விடம் Tea cup ஐ நீட்டி விட்டு சத்தியமூர்த்திக்கு Tea எடுத்துக் கொண்டு ஹாலுக்கு போனாள் அம்மா.
தோசை ஊற்றிக் கொண்டிருந்த போது சித்தி என்றபடி அங்கே வந்து நின்றாள் யாழினி.
Good morning யாழு குட்டி
அடுப்பை அணைத்து விட்டு அவளை தூக்கிக் கொண்டு போய் பல் துலக்கி முகம் கழுவ வைத்து கூட்டிக் கொண்டு வந்தாள்.
"பால் குடிச்சிட்டு தீபி வீட்டுக்கு போய் விளையாடலாம் சரியா " அவள் பாலை ஊற்றிக் கொடுக்க சரியென தலையாட்டிவிட்டு வாங்கிக் கொண்டாள் யாழினி.நேற்று இருந்ததை விட தேறிவிட்டாள், ஆனால் இன்னும் அவள் இயல்புக்கு திரும்பவில்லை என்பது புரிந்தது. என்னென்னவோ கதை சொல்லி ஒரு வழியாக ஒரு தோசையை ஊட்டிவிட்டாள். அதன் பின் அவளை பக்கத்து வீட்டுக்கு கூட்டிப் போய் தீபிகாவுடன் விளையாட விட்டுவிட்டு இவளும் திவ்யாவுடன் பேசிக் கொண்டிருந்தாள். திவ்யா தீபியின் அம்மா. அவர்கள் பக்கத்து வீட்டுக்கு குடிவந்து ஒரு வருடம் தான் இருக்கும். ஆனால் குழந்தைகள் இருவரும் நல்ல நண்பர்களாகி விட்டதால் அவளும் சஞ்சுவின் வீட்டினருடன் நெருங்கிப் பழகுவாள்.
தீபிகாவை கண்டதுமே அவளுடன் உற்சாகமாய் விளையாடத் தொடங்கிவிட்டாள் யாழினி. நேற்று அத்தனை பெரிய பிரச்சினை பண்ணுமுன் வந்தனா யாழினியை கொஞ்சம் நினைத்துப் பார்த்திருக்கலாம். ஆனால் அவள் தான் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுப்பதே இல்லையே. இரவு நடந்த சம்பவத்தின் பின் வந்தனா ராமுடன் சேர்ந்து விடுவாள் என்ற நம்பிக்கையே இல்லால் போய் விட்டது சஞ்சனாவுக்கு. அவள் முடிந்தவரை முயன்று பார்த்து விட்டாள் இப்போது எல்லாம் கையை மீறிப் போய்விட்டது.
அடுத்த நாள் அக்ஷராவிடம் நடந்தவற்றை புலம்பிக் கொண்டிருந்தாள் சஞ்சு.
ஒரே வெறுப்பா இருக்கு அச்சு. அன்னைக்கு Incident க்கு அப்புறம் வீட்ல யாருமே யார்கிட்டயும் ஒழுங்கா பேசிக்கிறதே இல்ல தெரியுமா. யாழினி ரொம்ப பாவம். ரொம்ப பயந்துட்டா. இப்பெல்லாம் அம்மா எங்கயாவது தூக்கிட்டு போய்டுவான்ற பயத்துல அவ வந்தனா கிட்ட போகவே மாட்டேங்குறா. வீடே என்னமோ மாரி இருக்கு.
வீட்லயே இருந்து ஒருத்தர் மூஞ்சிய ஒருத்தர் பாத்துட்டு இருந்தா இப்டி தான் இருக்கும். நீ Evening எங்க வீட்டுக்கு வாயேன், யாழுவ கூட்டிட்டு. அவளுக்கும் ஒரு Change ஆ இருக்கும்ல .
இல்ல அச்சு, எனக்கு எங்கயும் போக மனசே இல்ல .
ஒன்ன எங்கயோ போக சொல்லல, என் வீட்டுக்கு தான் வர சொன்னேன். நீ கண்டிப்பா வர்ர. இங்க பக்கத்துல இருக்குற Children's park க்கு யாழினிய கூட்டிட்டு போவோம். கொழந்தயும் கொஞ்சம் Relax ஆகிடுவா.
ம்ம் கண்டிப்பா வரணுமா?
நீ வர்ரியா இல்ல நா வந்து இழுத்துட்டு வரட்டுமா?
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro