Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

12


ராம் வீட்டுக்கு வந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. " அப்பா அப்பா " என்று ராமுடன் ஒட்டிக் கொண்டே திரிந்தாள் யாழினி. ராம் Guest room இல் தங்கியிருக்க அவளும் அப்பாவுடனே தூங்கி விடுவாள். ராம் Office இல் இருக்கும் நேரத்தில் மட்டும் தான் அவளுக்கு அம்மா ஞாபகமே வரும். யாழினி உறங்கிவிட்டதும் அவளை தூக்கி வந்து தன் அறையில் படுக்க வைக்கலாம் என்று பார்த்தால் அப்பாவும் மகளுமாய் கூத்தடித்து விட்டு உறங்கவே இரவு நீண்ட நேரம் பிடித்தது. அம்மா அவ்வப்போது வந்து ராமுடன் பேசுமாறு கேட்டுவிட்டுப் போவாள். சஞ்சனாவும் போன் செய்தால் இதை தான் சொல்வாள். அப்பா எதுவும் பேசவில்லை. எது எப்படியோ அவளால் மனதை மாற்றிக் கொள்ள முடியவில்லை. காதலித்து திருமணம் செய்தாலும் திருமணத்தின் பின் அவர்கள் இருவருக்கிடையில் நிறைய கருத்து வேறுபாடுகள் வந்துவிட்டதாய் தோன்றியது. சேர்ந்திருந்து தினமும் சண்டை போடுவதை விட பிரிந்தே இருந்து விடலாம் என எண்ணினாள்.

ராம் Office இல் இருந்து வந்ததும் அவனுடன் சேர்ந்து Color book இல் நிறம் தீட்டிக் கொண்டிருந்தாள் யாழினி. வந்தனாவும் தேவியுமாய் இரவு உணவு தயார் செய்து விட்டு எல்லாவற்றையும் மேசையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்கள்.

"அப்பாவையும் மாப்பிள்ளையையும் வர சொல்லிடு வந்தனா "

" அப்பாவ வர சொல்றேன், உன் மாப்ளய நீயே கூப்பிட்டுக்கோ "

ஹாலில் இருந்த ராமை கண்டு கொள்ளாமல் அப்பாவை கூப்பிடப் போனாள். " எப்பதான் மனசு மாறுவாளோ " பெருமூச்சு விட்டார் தேவி.


நேரம் இரவு எட்டு மணியிருக்கும். Group study பண்ணப் போன .ரம்யா தீப்தி இருவரும் ஹாஸ்டல் திரும்பியிருந்தார்கள். Earphone மாட்டிக் கொண்டு பாடல் கேட்டுக் கொண்டிருந்தாள் சஞ்சு. லேசாகப் பசி எடுக்கவே சாப்பிடப் போகலாம் என்று எண்ணியபடி கவிதாவைப் பார்த்தாள். விரித்து வைத்திருந்த புத்தகத்தில் தலைவைத்து படுத்திருந்தாள் அவள். " கவி கவி " லேசாக கூப்பிட்டுப் பார்க்க எந்த பதிலும் இல்லை. ரம்யாவின் கட்டில் பக்கம் திரும்ப அவளோ புத்தகத்தால் முகத்தை மூடியபடி படுத்திருந்தாள். சரி முதலில் தீப்தியை கூப்பிடலாம் என அவளை பார்க்க அவள் கையில் புத்தகத்துடன் சீலிங்கை பார்த்த படி ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். இதில் இடைக்கிடை நெற்றியில் விரலை தேய்த்து ஏதோ பலத்த சிந்தனை வேறு. Study holidays, இல் எல்லோரும் ஒரு Type ஆகத்தான் மாறி விடுகிறார்கள். தனக்குள் சிரித்துக் கொண்டாள் சஞ்சு.

அது மற்ற மூவருக்கும் மட்டுமல்ல, அவளுக்கும் தான் பொருந்தும். Exam stress இல் அடிக்கடி Songs கேட்பது அவள் பழக்கம். Ear phone மாட்டியதும் கவி கூப்பிடுவாள். " சஞ்சு, சஞ்சும்மா பாட்டு Exam முடிஞ்சதும் கேட்டுக்கலாம். இப்ப படிங்கம்மா " " Please கவி, ஒரே ஒரு Song ரொம்ப Stressed ஆ இருக்கு " சொன்னது போலவே ஒரு பாடலுடன் நிறுத்தி விடுவாள். ஆனால் அடுத்த அறை மணி நேரத்தில் மீண்டும் Ear phone மாட்டிக் கொண்டு கவியிடம் திட்டு வாங்குவாள்.

தீப்தி .... தீப்தி

"ம்ம் "

பேயறைந்தது போல் அவள் பக்கம் திரும்பி விழித்தாள் தீப்தி.

பசிக்குது, சாப்ட போலாமா?

ஆஹ் Lunch ஆஹ் போலாம் போலாம்

இப்போ Dinner டி, அதுங்க ரெண்டையும் எழுப்பு.

ஒருவாறு மற்ற இருவரையும் எழுப்பி விட்டு நால்வருமாய் சாப்பிடப் போனார்கள்.

சாப்பிட்டு விட்டு வந்ததும் அன்று Group study இன் போது நடந்தவைகளை சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார்கள் ரம்யாவும் தீப்தியும். கவியும் அவர்களுடன் சேர்ந்து கொள்ள போனை எடுத்துக் கொண்டு வெளியே போனாள் சஞ்சு.

வீட்டுக்கு Call செய்து அம்மாவுடனும் யாழினியுடனும் பேசிவிட்டு Call ஐ Cut செய்தாள். அப்படியே data on செய்து Whatsapp பார்க்க அஜய் இடம் இருந்து Message வந்திருந்தது. அவனை இரண்டு நாட்களாக சந்திக்கவில்லை. ஏனோ அவனை பார்த்து பேச வேண்டும் போலிருந்தது. போன் பண்ணுவோமா வேண்டாமா என்று யோசித்து வேண்டாம் என்று அவளே முடிவு செய்து விட்டு அறைக்குத் திரும்ப, அவனே போன் செய்தான்.

Hello

Hi சஞ்சு, என்ன பண்ற?

அம்மாவோட போன் பேசிட்டு இருந்தேன், அங்க என்ன நடக்குது Studies ஆ, தூக்கமா?

ரெண்டும் தான். இந்த Week வீட்டுக்கு போறியா?

இல்ல Next Monday exam start ஆகுது, so இந்த Week போகல .

இருவருமே Call ஐ Cut பண்ணத் தோன்றாமல் பேசிக் கொண்டிருக்க, அஜய்யின் அறைக்கு வந்தாள் அவன் தங்கை அனிதா. அவள் வந்தது கூடத் தெரியாமல் அஜய் போனில் Busy ஆஹ பேசிக் கொண்டிருந்து விட்டு போனை கட் செய்த பின்னர் தான் அவளை கண்டான் அஜய்.

என்ன Brother ஒரு வழியா பேசி முடிச்சிட்டீங்களா?

ஹேய் அனி,நீ எப்போ வந்த?

ம்ம் நா வந்து ரொம்ப நேரமாச்சு . அது கூட தெரியாம கடல போட்டுட்டு இருக்க .

அதெல்லாம் இல்ல, சஞ்சு கிட்ட ஒரு Doubt கேட்டுட்டு இருந்தேன்.

ஹ்ம் படிப்புல ரொம்ப தான் ஆர்வம், வேற Department students கிட்ட எல்லாம் Doubt கேக்குறீங்க.

அது ... அது வந்து

ரொம்ப Try பண்ணாத, ஒனக்கு Natural ஆ பொய் சொல்ல வரல .

ஹிஹி

அசடு வழிஞ்சது போதும், எப்போ அண்ணி கிட்ட Propose பண்ண போற?

தெரியல அனி, அவ என்கிட்ட இப்போ தான் கொஞ்சம் Close ஆ பழகுறா. நா Love பண்றேன்னு சொன்னா இருக்குற Friendship உம் இல்லாம போயிடுமோன்னு பயமா இருக்கு.

"அப்டியெல்லாம் நடக்காது டா, ஒன்ன யாருக்காவது புடிக்காம போகுமா? நீ என்னோட Sweet அண்ணனாச்சே சீக்கிரமா சொல்லிடு " என்று அவன் கன்னம் கிள்ளி விட்டு வெளியே போனாள் அனிதா.

அவள் போன பிறகும் அவள் சொன்னதையே நினைத்துக் கொண்டிருந்தான் அஜய். இப்போதெல்லாம் சஞ்சனா அவனிடம் நெருங்கிப் பழகுகிறாள். ஆனால் அவன் தன் காதலை சொன்னாள் அவள் பதில் என்னவாக இருக்கும்?

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro