Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

11



கதவை அடைத்துக் கொண்டு அறைக்குள்ளே தனித்திருந்து நீண்ட நேரம் ஆகியிருந்தது. மனம் இன்னும் அமைதி காணாமல் இருந்தாலும் எவ்வளவு நேரம் தான் இப்படியே இருப்பது? கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள் வந்தனா. சஞ்சனாவின் அறைக்கதவு பாதி திறந்திருந்தது. அவள் Bag pack செய்து கொண்டிருந்தாள். அவளுடன் எதுவும் பேசத் தோன்றவில்லை. நான்கு படிகள் இறங்கி hall ஐ பார்க்க அங்கே யாழினி அவளுடைய Toys எல்லாம் பரப்பி வைத்து ராமுக்கு காட்டிக் கொண்டிருந்தாள். யாழினி முன்னால் மீண்டும் ஒரு சண்டை வேண்டாம், மீண்டும் திரும்பி அறைக்கு போனாள். கட்டிலின் பக்கத்தில் இருந்தது ராமின் Traveling bag, சஞ்சனா வைத்துவிட்டு போனது. அதை பார்க்க கோவமாய் வந்தது. ராம் வீட்டில் இருப்பதே பிடிக்கவில்லை, அவனுடன் ஒரு அறையில் வேறு இருக்க வேண்டுமா? Bag ஐ எடுத்து வெளியே அறை வாசலில் வைத்து விட்டு மீண்டும் கதவை மூடி விட்டு படுத்தாள்.

அரை மணி நேரம் கடந்திருக்கும். சஞ்சனா கதவை தட்டினாள். " உள்ள வா சஞ்சு" கோபம் குறையாமல் பதிலளித்தாள் வந்தனா. கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தவள்

" நா போய்ட்டு வரேன் "

ஹ்ம்

மாமா கூட சண்ட போடாத Please, At least யாழினி இருக்கும் போது மட்டுமாவது சண்ட போடாம இரு. morning நீ கத்தினதுலயே யாழினி ரொம்ப Disturb ஆகிட்டா.

பதில் ஏதும் சொல்லாமல் அவள் முகம் பார்த்தவள், கோபத்தில் ஆழமாய் ஒரு பெருமூச்சு விட்டாள். அதற்கு மேல் எதுவும் பேசாமல் வெளியே போனாள் சஞ்சனா. 


பஸ் ஏறி அவளுக்கு பிடித்த ஜன்னல் சீட்டில் அமர்ந்து பாதையை வெறித்துக் கொண்டிருக்கும் போது அஜய்யிடம் இருந்து போன் வந்தது.

ஹலோ சொல்லு அஜய் 

கிளம்பிட்டியா சஞ்சு?

ம்ம், இப்ப தான் பஸ் ஏறினேன்.

ஹ்ம் Ok,  இன்னைக்கும் வரலைனா நானே ஊருக்கு வந்து ஒன்ன தூக்கிட்டு வரலாம்னு தான் பாத்தேன், நல்ல வேள நீயே கெளம்பிட்ட ...

ஹ்ம் ஒனக்கு கஷ்டம் கொடுக்காம தான் நானே வந்துட்டேன்.

ஹஹா Ok,  பத்திரமா வந்து சேருங்க Madam 

Ok sir பத்திரமா வர்ரேன்.  Bye.


Bus stand இல் இறங்கி நடக்க அங்கே அவள் எதிரில் வந்து நின்றான் அஜய். 

Hi 

ஹேய் அஜய், இங்க என்ன பண்ற?

ம்ம் ஒரு வேலையா இந்த பக்கம் வந்தேன் அப்டியே ஒன்ன ஹாஸ்டல்ல Drop பண்ணிடலாம்னு தான் நீ வர்ர வரைக்கும் Wait பண்ணேன்.  போலாமா? (ஒன்ன கூட்டிட்டு போக தான் டி வந்தேன்.  அத சொன்னா விடுவியா? )

சற்றே தயங்கியவள் சரியெனத் தலை ஆட்டினாள்.  

இருவருமாய் பைக்கில் கிளம்ப, சிறிது நேரத்தில் அந்த Coffee shop இல் பைக்கை நிறுத்தினான் அஜய்.  

ஒன்னோட Favorite coffee shop, coffee குடிச்சிட்டு போலாமா?

ஹேய் ஒனக்கு எப்டி தெரியும்?

Shopping வந்தா நீ இங்க Coffee குடிக்காம போகவே மாட்டன்னு ரம்யா சொல்லிட்டு இருந்தா.

ம்ம் அத ஞாபகம் வெச்சி கூட்டிட்டு வந்திருக்க.  உங்க Memory power chanceஏ இல்ல அஜய் Sir.

ஹிஹி Thank you madam (ஒனக்கு புடிச்ச எல்லாம் எனக்கும் புடிக்கும் Darling, அத எப்டி மறப்பேன்) 

இருவருமாய் iced Cappuccino order செய்துவிட்டு பேசிக் கொண்டிருந்தார்கள்.

அப்றம் ...  படிக்க Start பண்ணிட்டியா?

இல்ல இனிமே தான் .

நீ ரவி வீட்ல தானே படிப்ப?

ம்ம், வழக்கமா அப்டி தான் பண்ணுவோம், But இந்த தடவ நா, ரவி,  தினேஷ்,  தீப்தி, ரம்யா எல்லோரும் College ல சேந்து படிக்கலாம்னு இருக்கோம்.  

ஆஹ் அத தான் கவி சொல்லிட்டு இருந்தா போல,  ரம்யா, தீப்தி எல்லாம் Group study பண்ண போறாங்கன்னு.  எனக்கு அதெல்லாம் Set ஆகாதுப்பா, தனியா தான் படிப்பேன், Doubts வந்தா மட்டும் கவி கூட Discuss பண்ணுவேன். 

ம்ம் தெரியும்,  ஒனக்கு கூட்டமா இருக்குறத விட தனியா இருக்குறது தான் புடிக்கும்ல? 

கூடுதலா தனியா தான் இருப்பேன், School days ல இருந்தே எனக்கு Friends கம்மி தான்.  But எனக்கு மனசளவுல புடிச்சி போயிருச்சின்னா அவங்க கூட எப்பவும் Close ஆஹ் இருப்பேன்.

அக்ஷரா மாதிரி?

ம்ம் 

அகஷரா ரொம்ப Lucky ஒன்ன மாதிரி ஒரு Friend கெடக்குறதுக்கு .

"அப்டியா " எனக் கேட்டுவிட்டு அழகாய் புன்னகை செய்தாள். 

 " அக்ஷரா கிட்ட சொல்றேன், நீ இப்டி சொன்னன்னு" 

அக்ஷரா கிட்ட என்ன பத்தி சொல்லிருக்கியா?

ஹ்ம் நெறய சொல்லிருக்கேன்.

ஐயோ அந்த பொண்ணு கிட்ட என் Image அ Damage பண்ணி வெச்சிருக்கியா?

அதெல்லாம் நல்ல விதமா தான் சொல்லிருக்கேன். Don't worry. 

அங்கிருந்து கிளம்பி அவளை ஹாஸ்டலில் விட்டுவிட்டு வீட்டுக்கு கிளம்பினான் அஜய்.  இப்போதெல்லாம் அவள் அவனிடம் காட்டும் நெருக்கம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.  மனம் நிறைவாய் இருந்தது. 

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro