Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அனிச்சம் பூ 60

லர்கள் மலர்ந்து மணம்வீசிக் கொண்டிருந்தது , அவன் அவளுக்காகக் காத்திருந்தான் , மலர் மலர்ந்திருந்தது
பிருந்தாவனத்திலும் அல்ல ...
காத்திருந்தவன் நந்தகுமாரனும் அல்ல ...

ஆனால் பிருந்தாவனமும் தோற்றுவிடும் எழில்ச் சோலை , நந்தகுமாரனே பொறாமை கொள்ளும் காதல் வேளை , ஆம் உயிரில் நிறைந்த அன்பில் , இதையம் நிறைந்த காதலில் இருவர் இணையும் சங்கமத்திருநாள் ,

செந்துரன் அந்த அறையின் சாளரத்தின் வழியாக இரவின் இயல்பைக் கண்டு கொண்டிருந்தான் , வீசிய குளிர்காற்று முகத்தை வருடிக் கொண்டிருந்தது , மரங்களில் மோதிய காற்றில் சருகுகள் குளத்தில் உதிர , அதில் உருவான நீர்அலைகளோ மின் விளக்கின் ஒளியில் , நட்சத்திரங்கள் உருகி நீராய் மாறியது போலிருந்தது , என்றலும் செந்தூரனுக்கு ஏனோ மனம் அதில் லயிக்கவில்லை , தவிப்பும் மகிழ்ச்சியும் சரிவிகிதமாய் கலந்திருக்க , நிலையில்லாமல் தவித்த மனதோடு , கண்கள் மூடி பின்தலை கோதியவாறு ,
திரும்பி அறையைப் பார்த்தான் ..

அங்கே .. மலர்கள் மலர்ந்திருந்தது ஒரு மலர் படுகையில் , ஆம் படுகையா படுக்கையா ? சத்தியமாக எழுத்துப்பிழை இல்லை , படுகையோ எனச் சந்தேகிக்கும் அளவிற்கு ... மலர்களால் வியாபித்திருந்த படுக்கை ..

அறையின் சுவர்களில் ஒட்டிவைத்த பூச்செண்டுகள் , எட்டிப்பார்த்துச் புன்னகைப்பது போலிருந்தது அவனிற்கு .

அறையில் கண்ணாடிக் கூண்டுகளுக்குள் அழகாய் அமைதியாய் சுடர்விடும் அகல்விளக்குகளோ கண்சிமிட்டுவது போலிருந்தது .

செந்து , அருணாச்சலம் தாத்தாவின் வீட்டிற்கு வரும் போது , எப்பொழுதும் இந்த அறையில்தான் இருப்பான் , என்றாலும் இன்று ஏனோ இந்த அறை அவனுக்கு அன்னியமாய் மின்னியது .

மிதம் மிஞ்சிய மலர் அலங்காரம் வேண்டாம் என்றால் , இந்த ஆகாஷ் மாமாவும் செந்தூரியும் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை , அதிகபட்ச அலங்காரம் பார்கையில் ஏனோ இயல்பாய் இருக்க முடியமால் இதயம் படபடக்கிறது , என அவன் மனதோடு புலம்பினாலும் அவனை மீறியும் சிறு புன்னகை உதட்டோடு ஒட்டிக் கொண்டிருந்தது .

அறையெங்கும் மலர்கள் மலர்ந்து மணம்வீச , செந்துவின் மனமெங்கும் குளிர் வீச , அவன் விழிகளோ ஒளிவீசிக் காத்திருந்தது .

இதோ அவனது வசந்தகாலம் இளம்பச்சை நிற புடவையைப் பாந்தமாய் உடுத்திக் கொண்டு அவன் எதிரே வந்து நின்றது , வசந்தம் கண்டவனோ அவள் அழகில் அசந்து நின்றான் , அவன் வாழ்வில் நிரந்தரமாய் வரம் தரும் வசந்தமன்றோ அவள் .

அவள் சூடிய மல்லிகை பூக்கள் அவள் கூந்தல் கொண்ட மகிழ்வில் புதுப்பொழிவு பெற்று அவள் கழுத்தோடு கொஞ்சிக் குழைந்து நடனமாடிக் கொண்டிருந்தது , எந்தப்பாடலுக்கா ? வேறு எந்தப்பாடலுக்கு ! செந்தூரா ... செந்தூரா .. பாடலுக்குத்தான்

அவள் அந்த அறையின் அலங்காரத்தைக் கண்டு வியப்பில் விழி விரிக்கையில் , நீண்டு வளைந்த அவளது இமைகள் புருவத்தைத் தொட்ட அழகு ஆகச்சிறந்த அற்புத நிகழ்வெனத் தோன்றியது அவனுக்கு ,

அவளின் மூக்குத்திக்குக் கூட ஒளி ஈர்ப்புவிசை உண்டு போல , அறையின் ஒளியையெல்லாம் அழகாய் ஈர்த்துக் கொண்டு , பளபளக்கும் அவளின் கூரான நாசியில் குடியேறியதோடு அல்லாமல் , ஈர்த்துக் கொண்ட ஒளியெல்லாம் அவன் மீது பாய்ச்சி அவனை வம்புக்கு இழுத்து நிலைகுழையச் செய்கிறது ...

உலகப் புகழ்பெற்ற ஓவியர்களும் வரைந்துவிட இயலாத , அதி நுட்பமாய் வடிவம் கொண்ட அவள் உதட்டின் அகடு முகடுகளின் பேரழகு அவளின் மென்சிரிப்பில் மெருகேருகின்றது .

செந்தூரன் எப்பொழுதும் போல் அவளின் அசாத்திய அழகில் சிலநொடிகள் அமைதியாய் ஆழ்ந்தவன் , " என்ன ஜீவிமா அப்படியே ஷாக் ஆகிட்ட " எனக்கேட்க ,

ஏதும் பேசாமல் அமைதியாய்ப் புன்னகைத்தாள் , அவள் மனமும் நிலைகொள்ளா மகிழ்ச்சியின் பிடியில் தவித்துக் கொண்டுதான் இருந்தது ..

செந்தூரனோ அவளைப் பேசவைக்க , அவளிடம் வம்பிழுத்தான் " என்ன ஜீவிமா நீ .... ஸ்கூல் ஃபேன்ஸி ட்ரெஸ் காம்பிடேசன்ல டீச்சர் வேசம் போட்ட குழந்தை மாதிரி புடவை கட்டி வந்திருக்க ... " என , அழகாய் அவள் உடுத்திய புடவையை அபாண்டமாய் பொய் கூறி வம்பிலுத்தவனின் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை ,

இதோ , அவனை உறுத்து விழித்து ,
" போங்க மாமா .... செந்தூரி அண்ணி நல்லா இருக்குன்னுதான் சொன்னாங்க " என பாவமாய் அதோடு கொஞ்சம் கோபமாய் முகத்தை வைத்துக் கொண்டவள் , அடுத்து அவன் எதிர்பாராததையும் செய்தாள் .

ஆம் , அவள் மேசை மேலிருந்த செந்தூரனின் அலைபேசியை எடுத்து செந்தூரிக்கு அழைத்தாள் , அதைப் பார்த்த செந்துவோ , பதறி " ஏய் ..... ஜீவிமா என்ன பண்ற " எனக்கேட்டு அலைபேசியை வாங்க முற்பட ..

அங்கே செந்தூரியின் அறையிலோ கட்டிலில் சாய்நது அமர்ந்து புத்தகத்தில் விழிகளை பதித்திருந்த ஆகாஷ் , அருகில் இருந்த அலைபேசி ஒலிக்க அதன்திரையைப் பார்த்தவன் செந்தூரியை நக்கலாய் ஒரு பார்வை பார்த்து " உன் அருமைத் தம்பிதான் " எனச்சின்னச் சிரிப்பில் பரிகாசம் செய்ய , அவளோ ஆகாஷை முறைத்துவிட்டு அழைப்பை ஏற்க ,

" இங்க பாருங்க அண்ணி .. செந்துமாமாவ , நீங்க எனக்கு கட்டிவிட்ட புடவை , ஃபேன்சி ட்ரஸ் காம்பிடேசன்ல டீச்சர் வேசம் போட்ட குழந்தே மாதிரி இருக்குன்னு ... " என்று ஜீவி கூறக் கூற ஃபோனை பிடுங்கிய செந்து , " அக்கா "என ஆரம்பிக்க ,

அதை காதில் வாங்காத செந்தூரி " டேய் லூசு , பஞ்சாயத்து வைக்கிற நேரத்தபாரு " எனக் கூறிக்கொண்டிருக்க , செந்தூரன் அலைபேசியை அனைத்தான் ,

கணவனைப் பார்த்த செந்தூரி " இப்போ கால் பண்ணது என் தம்பி இல்ல , உன் தங்கச்சி " எனக் கூறி அவனை முறைக்க ..

ஆகாஷோ " அவ சின்னப் பொண்ணு .... எதா.......வது ட்வு....ட் கேட்க ஃபோன் பண்ணிஇருப்பா ... " என சமாளிக்க..

" ஆமா நலலா கேட்டா ஆகாஷ் டவுட்டு ... , ஆமா .. நீ என்ன இப்போ புதுசா புக்கெல்லாம் படிக்கற " , என அவனை ஏற இறங்க ஒரு பார்வை பார்க்க ,

அவனோ " இதுவா இந்த புக் காவல்கோட்டம் " எனக்கூற ..

" அது எனக்குத்தெரியும் அதை நீ படிக்குறியேன்னுதான் கேட்டேன் ... "

" அருணாச்சலம் தாத்தாதான் கொடுத்தாரு , நான் ஃபோன்ல படிச்சுக்கிறேன்னு சொன்னேன் , அவர்தான் புக் இருக்கும் போது எதுக்கு ஃபோனுன்னு சொன்னார் , சரின்னு படிச்சேன் நல்லா இருந்தது , சரி முழுவதும் படிச்சிறலாம்னுதான் ... ஏன் நீ படிக்கிறியா .. " எனக் கேட்க ..

அவனை முறைத்தவள் , " நான் அதெல்லாம் எப்பவோ படிச்சாச்சு .... நீ படிச்சுட்டு தூங்கு குட்நைட் ... " என்று கூறிவிட்டு ஹிம்.. புக் படிக்கிற நேரத்தைப் பாரு என்று முணங்கிவிட்டு , கோபமாக திரும்பிப்படுக்க , அவளின் மனம் அறிந்த ஆகாஷ் ,

மெளனமாய் சிரித்து விட்டு , மனதுக்குள் ம்... கோபம் வருதா ? வரும் வரும் .. , நான் கேட்கும் பொழுதெல்லாம் நோ .. நோ .. சொன்னில்ல .. , இப்போ இந்த மாமனுக்காக நீ காத்திரு கண்ணே ... என நினைத்துவிட்டு , புத்தகத்தில் பார்வை பதித்தவன் படிக்க படிக்க , ஒருபக்கம் கூட திருப்ப முடியவில்லை , அப்போதுதான் அவன் உணர்ந்தான் , கண்கள் மட்டுமே வரிகளை வருட , அவன் மூளையும் அதுகொண்ட மனமும் தன்செல்ல மனைவியிடம் சென்றுவிட்டதை , இனியும் தாமதிக்க அவன் மனம் ஏனோ இடம் கொடுக்கவில்லை ...

இங்கே செந்துவோ , அவளின் கோபத்தை ரசித்தபடி " என்ன ஜீவிமா இதுக்கு போய் கோவிச்சுக்கலாமா ? " என அவளிடம் கெஞ்சிக் கொண்டிருக்க , அவளோ அவனைக் கோபமாய் பார்க்கும் சருக்கில் அவன் அழகில் கரைந்துகொண்டிருந்தாள் ,

அவனை ரசித்துக்கொண்டிருந்த அவளின் மூளைக்குள் எகிப்திய பிரமிடுகளும் , சீனாவின் வெண்பூண்டும் , குடைபிடித்த ரோஜா மலருமாய் பலவாறான பிம்பங்கள் வந்துபோய்க் கொண்டிருந்தது , சரி இதை பிறகு பார்போம் ...

செந்தூரனின் மனதில் ஆசை இருந்தாலும் , ஜீவியின் மனதை ஆழம் பார்க்கவும் , வம்பிலுத்து அவள் கோபத்ததை ரசிக்கும் பொருட்டும் ,
" ஜீவிமா நீயும் நானும் இப்பொழுதான் காதலிக்க ஆரம்பித்திருக்கிறோம் , இன்னும் சிலமாதம் காதலித்து விட்டு , பிறகு கணவன் மனைவியாக வாழ்கையை ஆரம்பிக்கலாமா ? " எனக்கேட்க ...

துணுக்குற்றவளின் கண்களில் முணுக்கென்று கண்ணீர் மின்ன ,

" போங்க மாமா , நான் உங்க கிட்ட பேசவே மாட்டேன் நான் என் ரூமுக்கு போறேன் " , என்று எழப்போனவளை

" ஏய் ஜீவிமா ... மாமா விளையாட்டுக்குச் சொன்னேன் டா " என்று சிரித்து

" இங்கபாரு " என்றதும் ,

எழுந்தவள் அமர்ந்தாலும் கோபம் குறையாமல் முகம் திருப்பிக் கொண்டாள் .

ஜீவி கோபம் கொண்டு எல்கேஜி மழலையாய் முகம் திருப்பும் போதெல்லாம், அவளின் கொள்ளை அழகில் , அவளை அள்ளிக்கொள்ள தோன்றும் மனதைக் கட்டுப்படுத்துவது அவனுக்குப் பெரும்பாடாக இருக்கும் ,

ஆனால் இன்றோ எந்தத் தடையும் இல்லை , இன்று அவளுடைய அதே கோபம் , அவளின் கொள்ளை அழகை எல்லையில்லாமல் கூட்டியிருந்தது ,

ஆம் .. மிக மிகப் பாவமாய் அதோடு கலந்த கோபமாய் ... குழந்தையின் கோபம் கூட தோற்றுவிடும் பேரழகு ,

அவளைக் கண்களில் அள்ளிக் கொண்டவன் , கைகளிலும் அள்ளிக் கொள்ளும் ஆசையில் , எழுந்து நின்று இருகரங்களையும் விரித்து அவளை நோக்கி நீட்ட ,

அவள் அவனைப் பார்க்க , அவன் மீண்டும் கெஞ்சலாய் " வா " என்பதாய்க் கண்ணசைத்த நொடி ,
அவள் சிறுமியாய் அவன் கைகளுக்குள் சிறைபட , அவனோ பொக்கிஷம் என்றெண்ணி அவளை அணைத்துக் கொண்டான் ,

பேரன்பு , பெருங்காதல் , பேராசை என அனைத்துமாய் அவனை ஆட்கொள்ள அவளை உச்சிமுகர்ந்து அழுத்தமாய் முத்தமிட்டான் .

செந்துவின் தோளில் முகம் பதித்திருந்த ஜீவி நிமிர்ந்து சில நொடிகள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க , செந்து அவள் விழிகளை நோக்கி என்ன என்பதாய் விழி உயர்த்த ....

அவள் " மாமா நீங்க எவ்ளோ அழகு தெரியுமா ? " எனக்கூற ,

அவளின் பேச்சைக் கேட்கும் அளவிற்கெல்லாம் அவன் மனம் சமநிலையில் இல்லை என்றாலும் ,செந்து அவள் பேச்சை செவி மடுத்தான் ,

" ஹிம் .. சொல்லு ஜீவிமா எவ்ளோ அழகு ... "

" அதுவா " என கன்னத்தில் ஒரு விரல் பதித்து யோசித்தவள் ... " உங்க கண் எப்படி தெரியுமா இருக்கு ... "

" ஹிம் எப்படி இருக்கு .. "

" இந்த ... சீனா வெள்ளைப்பூண்டு இருக்குல்ல " எனவும் செந்தூரன்
என்ன வெள்ளைப்பூண்டா ?... எனத்துணுக்குற ...

" ஆமா மாமா , அந்த பூண்டை உரிச்சி அதுல நீள் வட்டமா நல்லா பளபளன்னு இருக்க ஒரு பெரிய பூண்டுக்கு நடுவுல , கண்மை எடுத்து வட்டமா பொட்டுவச்சு , அந்த பூண்டுக்கு மேலையும் கீழையும் ரோஜா இதழால ஒட்டிவச்சா எப்படி இருக்குமோ அப்படி இருக்கு மாமா உங்க கண்ணு .... " என்றவளை வினோதமாகப் பார்த்தான் ..

" அப்புறம் உங்க மூக்கு இருக்குல்ல அது ... எப்படித்தெரியுமா இருக்கு , இந்த ... பனிமலைய சிறியதா வெட்டி எடுத்து , பிரமிடு மாதிரி ஹிம் ..... இல்ல ... இல்ல .. பிரமிடவிட அழகா நுணுக்கமா செதுக்கி வைச்ச மாதிரி இருக்கு மாமா , அதுவும் அந்த பிரமிடே பார்த்து பொறாமை பட்ற அளவுக்கு அழகா இருக்கு மாமா ", என்கூற
அவள் பேசும் பாவனைகளை ரசித்தவன் , மெளனமாய் புன்னகைத்துக் கொண்டிருக்க ...

அவள் மேலும் தொடர்ந்தாள் " ம் .... அப்புறம் உங்களோட இந்த லிப்ஸிம் அதுக்கு மேல இருக்க மீசையும் பார்த்தா எப்படி இருக்கு தெரியுமா மாமா ? ஒரு அழகான ரோஜாப்பூ கருப்புக் குடைபிடிச்சமாதிரி இருக்குமாமா ... " எனக்கூற ,

சிறிதாய் வாய்விட்டுச் சிரித்தவன் ,
" அப்போ மாமாவை நல்லா சைட் அடுச்சிருக்க ... " என கூறி அவளைக் கேலியாய்ப் பார்க்க ,

அவளோ போங்க மாமா " அப்டிலாம் ஒன்னும் இல்லை " என குட்டிப்பொய் ? சொல்ல ..

" அடிப்பாவி அப்போ கார்ல போகும் போதெல்லோம் பார்பியே அது என்னவாம் ? என்றவன் , " நானும் எவ்வளவு நாள்தான் நீ பார்பதை பார்க்காத மாதிரியே நடிக்கிறது , பாவம் சின்னப் பொண்ணு சைட் அடுச்சா அடுச்சக்கட்டும்னு விட்டா ...
எனக்கு வெள்ளப்பூண்டு கண்ணா ?..
உன்னை ..... " என்று அவள் மூக்கைச் செல்லமாகக் கிள்ள ,

அவளோ , போங்கமாமா நான் ஒன்னும் உங்களை சைட் அடிக்கலை , என சிணுங்க ,

செந்து , " சரி சரி நீ என்னைப் பார்க்கவே இல்லை ... நான் தான் என் செல்ல பொண்டாட்டிய சைட் அடுச்சுக்கிட்டே இருந்தேன் போதுமா ? " எனறான் .

சில நொடி மெளனங்களுக்குப் பிறகு , ஜிவி , " மாமா எனக்குப் பெரிசா எந்த ஆசையும் இல்லமாமா ... இப்போ நீங்க என்னை எப்படி ஹக் பண்ணீருக்கீங்களோ, இதே மாதிரி எப்பவும் என்னை அன்பா ஹக்பண்ணனும் , நான் உங்க பக்கத்திலையே இருக்கனும் ... அவ்ளோதான் மாமா என் ஆசை " எனக்கூற ...

செந்துவோ கேலியோக " அதுசரி ... , உன்னை மாதிரிலாம் எனக்கு ஆசை இல்லை ஜீவிமா " என்கூற ..

ஜீவி அவனைத் துணுக்குற்றுப் பார்க்க ..

அவன் மென்புன்னகையில் " மாமாவுக்கு உன் மேல ஆசை யெல்லாம் இல்ல , பேராசை " என காதல் ததும்பும் குறும்பில் அவள் விழிகளைக் குறிவைக்க ...

செந்தூரனின் ஆசைமொழியும், அது பேசும் விழியும் ஜீவியை ஏதோ செய்ய , பதட்டமும் வெட்கமும் ஆசையும் என அனைத்தும் ஒன்று சேர்ந்த அவள் இதயதம் சிவமணியின் ட்ரம்ஸென உருமாறி இருந்தது ...

செந்துவோ அவளின் முகத்தை தன் கைகளில் ஏந்தி , மனம் ததும்பும் பெருங்காதலின் ஆசையில் அவளைப் பார்க்க ...

பாலில் விழுந்த குங்குமப்பூ தன் சிவப்பை பரப்புவதுபோல் , ஜீவியின் தேகமெங்கும் வெட்கம் அதன் வேலையை காட்டி இருந்தது ...

அவள் வெட்கம் உணர்ந்த செந்தூரனுக்கும் அவன் பெயருக்கு ஏற்ப தேகத்தின் வண்ணம் மாறிக்கொண்டுதான் இருந்தது , ஒரு இன்பப்புயல் இருவரையும் மையம் கொண்டிருக்க இருவருக்கும் இடையே இருந்த சிறிய இடைவெளியும் இப்போது விடைபெறத் தொடங்கி இருந்தது ...

வைகறை தொடர்ந்த அதி காலை ,
காலை முடிந்தே வரும் நன்பகல் ,
பகல் நிறைந்தவுடன் வரும் அந்தி மாலை
அம் மாலை முடிவில் மின்னும் யாமம் ....

என மாறிய பொழுதுகளில் , நாட்கள் நகர்நது கொண்டிருந்தது ...


அதிகாலை முடிவில்
அரைத் துயிலதனில்

அலையெனக் கைவீசி
அங்கும் இங்கும் தேடி

கட்டிலின் விளிம்பில்
எனைக் கண்டுபிடித்தே

கைபிடித்திழுத்து என்
கார்குழலதை ஒதுக்கி

என் முகமதை அவன்
மார்பில் பதுக்கி

கட்டியணைத்தே
காதல் வெப்பமூட்டி

குட்டியாய் ஒரு தூக்கமிட
சாளரத்தின் சந்தில்

எட்டிப் பார்க்கும்
இளங் கனலியே , உனைத்

தட்டிக் கேட்பாரில்லை
என்ற துணிவில் உன்

சுட்டிக் கதிர்களால்
என்னவனை நீயும்

தொட்டுத் துயில்தான்
கலைப்பாயோ ? எனைத்

திட்டவிடாமல் நீ
திரும்பப் போய்விடேன் ...

என்பது போல் , நாள்தோறும் செந்தூரனை விட்டுச் சிறிது நேரம் பிரியும் காரணிகளைக்கூட வெறுத்தாள் ,

ஆம் , கதிரொளியால் எழுப்பும் காலைக் கனலியின் மீதும் ,

அவனை அலராம் அடித்தே எழுப்பும் கடிகாரம் மீதும் ,

அவளை விடுத்து , அவன் பார்க்கும் கால்பந்தாட்டம் மீதும் ,

கால் பந்தாட்டம் ஆடும்
ரொனால்டோ , மெஸ்ஸி யின் மீதும் ,

ஒரு நிமிடம் என்று அவளிடம் கேட்டு பல நிமிடம் அவன் பேசிவரும் அலைபேசி அழைப்புக்கள் மீதும் ,

என அவன் மீதான அவளின் காதல்
அவனின் பிரிவை வெறுத்துப் பிரியம் கூட்டிக் கொண்டிருந்து ...

செந்தூரனுக்கோ அவள் காதலில்லாமல் அவனில்லை என்றானது ,

நான் என்ற வார்த்தை அவனுக்கு ஜீவியென்ற பொருளையே தந்தது ,

காலை மாலை என எப்பொழுதும் அவன் மூளையில் அவளின் நினைவுகளே ஆக்கிரமித்திருந்தது ..

நாட்கள் வளர்ந்து கொண்டிருக்க , அவர்கள் காதலும் , புதிய பரிணாமத்தில் மலர்நது கொண்டிருந்தது ,

வாசலில் வண்ணக் கோலம் வரைந்திருக்க , அடுக்காய் கோர்த்த மாவிலைகளும் , அழகாய் பின்னலிட்ட தாழம்பூ தோரணங்களும் , அழகாய் காற்றில் அசைந்தாடியபடி வீ்ட்டின் தலை வாசல் முதல் பூஜைஅறை வரை அலங்கரிக்க , சம்பங்கி , பன்னீர் ரோஜாமாலைகளின் நறுமணம் வீடெங்கும் கமழ .. ஒரு குறும்பண்டிகை நாள் போல் , உறவுகள் கூடி வீடே களைகட்டி இருந்தது ...

" பாட்டி ... பாப்பாவை குளிப்பாட்டி மேக்கப் போட்டதும் என் மடிலதான் வைக்கனும் " என்று பாட்டியிடம் அட்வான்ஸ் புக்கிங் செய்து கொண்டிருந்தான் செந்தூரி ஆகாஷின் செல்ல குட்டி விதுரன் .

" இல்ல , பாட்டி .... பாப்பாவை என் மடியில்தான் முதலில் வைக்கனும் " இது கணேஷின் குறும்பன் குட்டி இளவரசன் ப்ரத்யு .

இருவரும் ஜீவியின் அறைக்கு வெளியே அட்வான்ஸ் புக்கிங்கில் அமர்ந்திருக்க , அவர்களைப் பார்த்துச் சிரித்த லலீலாவதிப் பாட்டியோ " யாரு குறும்பு பண்ணாம அமைதியா இருக்கீங்களோ அவங்க மடியிலதான் குட்டிப் பாப்பாவை வைப்பேன் " என்றதும் , இருவரும் பரம சாதுவாக நடிக்கப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்க ,

அங்கே வந்த செந்திலோ , " என்னடா கண்ணா இரண்டுபேரும் ஏதோ பரோட்டாக்கு ஆர்டர் பண்ணீட்டு வெயிட் பண்ற மாதிரி ஜீவி ரூம்கு வெளில வெயிட் பண்றீங்க எனக்கேட்க ,

அங்கே நின்றிருந்த வினயின் அம்மா ராஜாத்தி , "அட நீங்க வேற தம்பி , அவனுக இரண்டுபேரும் பரோட்டாவுக்கு ஆர்டர் கொடுக்கல , பொண்ணுக்கு ஆர்டர் குடுத்துட்டு உட்காந்திருக்கானுக " எனக் கூற ..

செந்தில் , " என்ன பொண்ணுக்கு ஆர்டர் கொடுத்துட்டா ? " எனக்கேட்க

செந்துவோட மகளை யார் மடியில வச்சுக்கறதுன்னு போட்டி , என்று கூறிச் சிரிக்க ...

செந்திலோ சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு , இருவரிடமும் பஞ்சாயத்தை ஆரம்பித்தான் ,

" விது நீ என்ன படிக்கிற "

" நான் ஃபர்ஸட் ஸ்டேண்டேட் "

" ப்ரத்யு நீ என்ன படிக்கிற "

" நான்செக்கேன்ட் ஸ்டேண்டேட் "

எனவும் செந்தில் , அப்போ ப்ரத்யு தான் சீனியர் .... ம்... என்று தீர்ப்பு சொல்ல ஆரம்பிக்கவும் , தன்தோளில் யாரோ கைவைப்பது போலிருக்க திரும்பிப் பார்க்க , அங்கே பாலாவும் கணேஷிம் நின்று கொண்டு என்னடா பண்ற என்பதாய் முறைக்க ..

செந்திலோ , சின்னபசங்க , பொண்ணு மேட்ரு , அதான் பஞ்சாயத்து என்று சிரித்த தருணம் ,

பாட்டி " ஜெயா ... பூஜைக்கு எல்லாம் ரெடி பண்ணீட்டியாமா ? நல்ல நேரம் ஆரம்பிக்கப் போகுது ... நல்ல நேரத்தில பாப்பாவ தொட்டிலில் போட்டு பேர் வைக்கனும் எனக்கூற ...

ஜெயந்தி , " எல்லாம் ரெடியா இருக்கு அத்த " எனக்கூறி விட்டு மற்ற வேலைகளைப் பார்க்க ..

ஆரஞ்சு வண்ணப் பட்டுப்புடவையில் ஜீவியும் , வெள்ளை வேட்டிசட்டையில் , செந்துவும் இருக்க , பிறந்து பதினாறு நாட்கள் ஆன பால்மணம் வீசும் பஞ்சுமிட்டாயென அவர்களின் குழந்தை செந்துவின் தாமரைக்கரங்களில் ரோஜா செண்டென நிறைந்து கண்களைச்சிமிட்டி , கைகால்களை அசைத்துக் கொண்டிருந்தது .

ஆகாஷ் , செந்தூரன் பெயரின் பிற்பகுதியையும் , ஜிவிகா பெயரின் பிற்பகுதியும் சேர்த்துத் தூரிகா என்ற பெயரைத் தேர்வு செய்ய , அந்தப் பெயரே ஒருமனதாய் அனைவரும் ஏற்றுக்கொண்ட பின்பு குழந்தையைத் தொட்டிலில் இட்டுப் பெயர்வைக்கும் நிகழ்வு நிறைவடைய ...

வினய் , நிர்மல் , அகாஷ் , செந்தூரி அனன்யா என ஐவரின் அரட்டையில் ,

நிர்மல் , " தூரிகா பெயர் ரொம்ப அழகா இருக்கு மாம்ஸ் " என ஆகஷிடம் கூற ..

அனன்யா செந்தூரியிடம் " அக்கா ஆனாலும் இந்த ராணா ரொம்ப பண்றாரு கா " எனக்கூற ..

செந்துரி ஆகாஷிடம் திரும்பி " ராணா நீ என்னடா பண்ண ? " எனக் கேட்க அதற்கும் அனனியே பதில் கூறினாள் ,

" ஹிம்... தூரிகா பாப்பாவுக்கு உங்க பேரோட கடைசி இரண்டு எழுத்து தூரி யையும் , ராணா வோட பெயர்ல ஆகாஷ்கு நடுவுல வர்ற கா வையும் எடுத்து தூரிகா ன்னு பேர்வச்சுட்டு , கேட்டா செந்து பெயரும் , ஜீவி பெயரும் சேர்த்து வச்சேன்னு கதை விடுறாரு .. சரியான போங்கு .. " எனக் கூற ..

சிரித்த செந்தூரி " விடு அனி , ஏன் குழந்தைக்கு அத்தை மாமா பெயரைச் சேர்த்து வச்சா என்னதப்பு .." எனக் கேட்க ..

ஆகாஷிம் சிரித்துக் கொண்டு , " கோவிச்சுகாத அனி , எங்களோட அடுத்த புரொடக்சனுக்கு நீயே நல்ல பெயரா வச்சிரு ஒகேயா " எனக் கூற ..

வினய் , "அதுசரி ... மாம்ஸ் ... இதுவேரையா ?... நடத்துங்க நடத்துங்க ... எனச் சிரிக்க ..

நேரம் மாலையை நோக்கி நகர ...
மாலை இரவாக , இரவு பகலாக ...
நிலை மாறிக் கொண்டிருக்கும் பொழுதுகளில் ,
தினம் மாறிக் கொண்டிருக்கும் நிகழ்வுகளில் ,
தூரிகாவும் மென்மையாய்ச் சிரித்து , மெல்லொலி எழுப்பி ,
தவழ்ந்து , தாத்தா பாட்டியிடம் தாவி , அமர்நது அழகாய் விளையாடி ,
மழலை மொழியில் ஜதி பேசி ,
பிஞ்சுப் பாதம் பதித்து ,
தத்தியே நடந்து ....

என ஒரு வருடத்ததை நிறைத்திருந்தாள் ,

ஜெயம் இல்லத்தின் காலைபொழுதில் கந்தகுருகவசம் காற்றோடு ஒலித்துக்கொண்டிருக்க ... வாசலில் உதிரும் பவளல்லி பூக்களை செந்து பூஜைக்காக சேகரிக்க , அவனோடு தூரிகாவும் தத்தி தத்தி நடந்து , தன் பிஞ்சு விரல்களால் ஒவ்வொரு பூவாக எடுக்க , செந்து தன் மகளுக்கு பூக்கூடையை நீட்டி உதவிசெய்து , அவள் பூக்கள் சேகரிக்கும் அழகை ரசித்துக் கொண்டிருக்க ...

மாடியிலிருந்து இதைப்பார்த்த பாலாவுக்கும் தேவிக்கும் , பவளமல்லிச் செடியில் தந்தையும் மகளுமாக பூ சேகரிக்கும் அந்தத் தருணம் அழகான காட்சியக அவர்கள் மனதில் நிறைந்தது ,

அங்கு வந்த ஜீவியோ .. தேவியையும் பாலாவையும் பின்னாலிருந்து குட்மாணிங் சொல்லி அணைத்துவிட்டு தந்தையின் தோளில் சலுகையாக சாயந்து கொண்டு தன் மகளை பார்த்துக் கொண்டுடிருக்க ,

தேவி , " ஜீவிமா போடா , பாட்டி பூஜை ஆரம்பிச்சுருவாங்க பூவை வாங்கி பாட்டியிடம் கொடு " என்று அனுப்பிவிட ,

கீழே சென்ற ஜீவி , செம்பருத்தி பூக்களைப் பரிக்கப் போக , செந்துவோ அவளருகே வந்து ஜீவிமா நான் பரித்துத் தாறேன் என்று வேண்டுமென்றே அவளைநெருங்கி நிற்க ,

ஜீவி " மாமா தள்ளி நில்லுங்க மாமா , மாடில அம்மாவும் அப்பாவும் நிற்குறாங்க .. "

" அப்போ உனக்கு அவங்க அங்க நிற்கிறதுதான் பிரச்சனை ", என அவளைப் பார்த்துக் கேட்க ,

அவள் சின்னப் புன்னகையில் " அப்டிலாம் ஒன்னும் இல்ல , விடுங்க மாமா " என விலக எத்தனிக்க ..

அவளைத் தடுத்தவன் " நீ கீழ இறங்கி வரும்போதே தேவி அத்த உள்ள போயிட்டாங்க , இப்பப்பாரு பாலா மாமா வந்து ஒருகையில அந்த பூக்கூடையும் , இன்னொரு கையில ஸ்டெயிலா பாப்வாவையும் எடுத்துக்குட்டு , என்னோட .. வெல்லக்கட்டி , செல்லகுட்டி ன்னு பாப்பாவை கொஞ்சிக்கிட்டே .. போயிருவாரு , அப்புறம் பாலா மாமாட்ட இருந்து உங்க பெரிய மாமா இல்ல , சின்ன மாமா , யாரவது வந்து பாப்பாவை வாங்கிக்குவாங்க , அப்புறம் நாம் இரண்டுபேரும் உள்ள போகிற வரைக்கும் யாரும் இங்க வரமாட்டாங்க " , எனக் கூறிக் கொண்டிருக்கும் போதே ,

செந்து கூறியது போல் , சிறிதும் பிசிறில்லாமல் பாலா வந்து பூக்கூடையை ஒரு கையிலும் தூரிகா பாப்பாவை ஒரு கையிலுமாக தூக்கியவாறு , " என்னோட செல்லக்குட்டியா நீங்க ... வெல்லகட்டியா நீங்க .. அப்பாகூட பூ பறிச்சிட்டு இருந்தீங்களா... , சரி பாட்டிக் கிட்டபோய் பூ கொடுக்கலாமா ?... என தன் செல்ல தேவதை பெற்ற குட்டிச் செல்லத்திடம் பேசிக் கொண்டே வீட்டிற்குள் செல்ல ...

செந்து கூறியது போல எதிரே ஜெயராம் வந்து பாப்பாவை வாங்கிக்கொள்ள... அதைப் பார்த்த ஜீவி , செந்துவைப் பார்த்து சிரிக்க ..

செந்து , " ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் நான் தான் பார்க்கிறனே , என்றவன் , வழக்கம்போல அவள் முகத்தில் படர்ந்த கற்றைக் குழல் ஒதுக்கி , அவள் விழிகளைப் பார்க்க , அந்த நேரத்தில் காற்றில் ஆடும் சறுக்கில் செம்பருத்தி பூ ஒன்று அவளின் கன்னம் உரச , இப்பொழுது அந்த செம்பருத்தியின் வேலையை இவன் ஆரம்பிக்க ...

" அச்சோ ... மாமா விடுங்க , எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு என நகர..

செந்து சட்டென வந்த சினத்தில் கண்களை மூடி பின்தலையைக் கோதியவன் , "என்ன ஜிவிமா நான்கு நாள் கழித்து சென்னையில் இருந்து காலையில் தான் வர்றேன் ... கண்டுக்கவே மாட்டேன்ற ..
இனி பாப்பா பின்னாடியே ஓடிட்டு இருப்ப .. அப்புறம் லேப்டாப்ல குனிஞ்ச தலை நிமிராம எதவாது க்ராஃபிக் வொர்க் பார்த்துட்டு இருப்ப .. அப்புறம் நாளைக்கு ஆஃபீஸ் போனா வர நைட் ஆகும் , அப்புறம் அடுத்த சன்டே ... என செந்து ஒரு ஆதாங்கமும் அத்தோடு பாவமாய் பார்வையும் சேர்த்து ஒரு குறுஞ்சினப்பார்வையில் அவளைக் குறிவைக்க ...

அவன் குறுங்கோபம் கண்டவள் , அவனை சமாதானப்படடுத்துவதற்காக திரும்பி அவனருகில் வர, அமைதியாய் அருகில் வந்த ஜீவியை பார்த்ததும் ஏனோ அவனுக்கு சிரிப்பு வர .. அவளைத் தன்னோடு சேர்த்துக்கொண்டு , அவள் விழிகளைப் பார்த்தவன் ,
அவள் மூக்கை கிள்ளியவாறு நல்ல பளபளன்னு பால்கோவால செஞ்ச மூக்குத்தி ஸ்டேன்டு மாதிரி இருக்கு ஜீவிமா உன் மூக்கு என்றவனை , ஜீவி செல்லமாய் முறைக்க ..

செந்து தன் மூக்கோடு அவள் மூக்கை உரச .. அந்த குட்டி பனிமலைப் பிரமீடும் , பால்கோவா மூக்குத்தி ஸ்டேன்டும் ஒன்றை ஒன்று உரசிக் கொள்ள ...

இப்பொழுது காற்றில் ஒலித்த கந்தகுரு கவசம் , நிறைவு பெற்றிருந்தது ...

அஸ்வதி அனன்யாவின் அறையில் இருந்து ஏ ஆர் ரகுமானின் இசையிலும் மனதை மயக்கும் குரலிலும் நீல மலைச் சாரல் ... பாடல் ஒலிக்க ஆரம்பித்திருந்தது ...


🎶 நீல ... மலைச்சாரல்
தென்றல் நெசவு நடத்தும் இடம்

வானம் குனிவதிலும்
மண்ணைத் தொடுவதிலும்
காதல் அறிந்திருந்தேன் .. 🎶

காலைத் தென்றல் இருவரையும் பார்த்து விட்டு , அவர்களுக்குப் வேர்த்து விடாமல் இருக்க சாமரம் வீசிக்கொண்டிருந்தது ,

🎶 கானம் உரைந்துபடும்
மௌன பெருவெளியில்
ஒரு ஞானம் வளர்த்திருந்தேன் .. 🎶

வழக்கம் போல அணிலும் சிட்டுக் குருவியும் அழகாய் இவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது .....

🎶இதயம் விரித்திருந்தேன்
நான் இயற்கையில் திளைத்திருந்தேன் ..🎶

மனதில் உள்ள காதலால் இயற்கையை நாம் ரசிக்கலாம் , ஆனால் இயற்கையே ரசிக்கும் நன்மண(ன)ம் கொண்ட காதல் அல்லவா ? இவர்களுடையது ......

🎶 சிட்டு குருவி ஒன்று
ஸ்நேக பார்வை கொண்டு
வட்ட பாறையின் மேல்
என்னை வா வா என்றது

கீச்சு கீச் என்றது
கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி
பிரியமா என்றது

கீச்சு கீச் என்றது
கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி
பிரியமா என்றது

ஒற்றை சிறு குருவி நடத்தும்
ஒரங்க நாடகத்தில்
சற்றே திளைத்திருந்தேன் 🎶

- அவளும் அவனும் வாழ்கையில் காதலின் ஓரங்கக் ஊடலில் கூடலில் சற்று நேரமல்ல , ஆயுள் வரைத் திளைத்திருந்தனர் .

கார் , கோடை , குளிரென காலங்கள்
மாறிக்கொண்டிருந்தது , ஆனால்
அவர்கள் காதல் மாறவில்லை , மாறவே இல்லை !!!

நிறைவு ...

- வாணிகா நவின்...

வாட்பேட் வாசிகளுக்கு ...

எனக்கு இந்த கதை எழுதும் அனுபவம் மனதிற்கு இதமானதாகவும் , மகிழ்ச்சியாகவும் இருந்தது அதற்கு முழு முதற்காரணம் நீங்கள் தான் , உங்கள் அன்பும் ஆதரவுமே இந்தக் கதையை 60 அப்டேட் வரைக்கும் அழைத்து வந்தது ,

என்னுடைய எழுத்துப்பிழைகளைப் பொறுத்துக் கொண்டு , கால தாமதத்தைப் பொறுத்துக் கொண்டு , வோட் செய்து கமென்ட் செய்து , இது இரண்டையும் தவிர்த்தவர்கள் வாசித்து , என நீங்கள் தந்த ஆதரவிற்கு மிக்க்க்க்க நன்ன்ன்ன்றி....

@ShainiSiya, @Priyanka8220 , உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன் , உங்க கமென்ட்ஸ் தான் கதையை மேற்கொண்டு எழுத ஊக்கம் தந்தது ,
@Nuha_Zulfikar தேங்ஸ் டா குட்டி நீ இந்த ஸ்டோரிக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணிருக்க , @moorthikannan நீங்க ஒரு நாள் கூட வோட் கமென்ட் மிஸ் பண்ணது இல்ல ... தேங்ஸ் அண்ணா ...

பரிட்சையில் பள்ளி மாணவர்கள் 15 மதிப்பெண் வினாவிற்கு இரண்டே வரிகளில் விடை எழுதுவது போல ,
கடைசி நான்கு அப்டேட் களையும் ஒரே அப்டேட்டில் சுருக்கமாக எழுதி இருந்த என்னை விரிவாக எழுதச்சொல்லி , எனக்குள் இருந்த எழுத்துக்களை வெளிகொணர்ந்த உடன்பிறப்பே 🤗 @Maayanila .... நன்றி...

என்னையும் ஒரு எழுத்தாளர்னு நம்பி... என்னோட கதைக்கு விமர்சனம் எழுதுற வரைக்கும் போன அடுத்த உடன்பிறப்பு தம்பி ... தங்கக் கம்பி ...@ashikmo 😊

இரு உடன்பிறப்புக்களின் ஆதரவால் இறுதி அத்தியாயங்களை இயன்றவரை எழுதி உள்ளேன் ...

அனிச்சம் பூவே ...
அழகிய தீவே ...

மோப்பக் குழையும் அனிச்சம் ...

முகர்ந்து பார்த்தாலே வாடிவிடும் அனிச்சம் மலர் , இதில் ஜீவிகா மட்டுமே அனிச்சம் மலரல்ல , பிறர் துன்பம் பார்த்து வாடும் அனைவருமே அனிச்சம் மலர் போன்றவர்களே !
பாலாவின் நிலை உணர்ந்து கனிவு கொண்ட மீனாட்சி அம்மாவில் ஆரம்பித்து , ரஷ்மியின் மீது அக்கறை காட்டும் ஆகாஷ் வரை ...

நமக்கு வரும் துன்பங்கள் தான் நாம் யார் என்பதை நமக்கு உணர்த்தும் , பாலாவும் ரஷ்மியும் எதிர்கொண்ட இன்னல்கள் அவர்களை தனித்து ஒரு தீவாக செயல்படும் மனவலிமையை அவர்களுக்கு அளித்தது ,

பெண்களைச் சுற்றிய ஆண்களின் உலகம் இவ்வாறு இருந்தால் நன்றாக இருக்கும் என்ற கற்பனையின் விளைவே இந்த ,

அனிச்சம் பூவே !
அழகிய தீவே !

அன்பின் நிலையில் பெண்களோ ஆண்களோ அனிச்சம் மலரென மென்மையானவர்களே !

அன்போ அறமோ இல்லாதபோது அவர்கள் தனிச்சையாக எழும்பும்
திண்மையானவர்களும் கூட !

நன்றிகளுடன் ....

- வாணிகா நவின்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro