
அனிச்சம் பூ 45
அவன் கண்களை அவளில் இருந்து விலக்கும் எண்ணம் இல்லாமலே அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் ,
ஜீவி தான் பேசுவதற்கு எந்த பதிலும் இல்லாமல் தன்னையே பார்ப்பதைக் கண்டவள் , நாம் கூறுவதில் நம்பிக்கை இல்லையோ என்று நினைத்து மீண்டும் ப்ளீஸ் மாமா என்று ஆரம்பித்தாள் , செந்து கையை உயர்த்தி அவளை நிறுத்துமாறு கூறிவிட்டு , அந்த விஷயத்தை பற்றி இனிப் பேசவேண்டாமே , என்றவன் தொடர்ந்தான் ,
" ரஷ்மி மாதிரி ஒரு பொண்ணை அவளது இயலாமையைக் காரணம் காட்டி அவளின் சம்மதத்தோடு அவளுக்குத் துரோகம் செய்துவிட்ட தவிப்புதான் எனைக் கொல்லுது , ஜீவிமா .. நம்ம மேரேஜ் எதிர்பாரம நடந்த விஷயம் , உன்னுடைய மனநிலைமையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது , நாம் இரண்டு பேருக்கும் திருமணம் ஆனதால் எதுவும் மாறிவிடாது , நீ எப்பொழுதும் போல் நம் வீட்டில் நிம்மதியாக இருக்கலாம் , உனக்கு எந்தப் பயமும் தயக்கமும் வேண்டாம் , நீ என்னை கணவனாகப் பார்க்கனும்னு நான் எப்பொழுதும் எதிர்பார்க்க மாட்டேன் , அதேபோல் நானும் உன்னிடம் மனைவி என்கிற உரிமை எடுத்துக்கொள்ள மாட்டேன் , நீ என்னை முழுமையா நம்பலாம் , இதற்கும் மேல் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசவேண்டாம் " ,
அதைக்கேட்ட ஜீவியின மனம் வலிக்கவே செய்தது , வீட்டில் சூழ்நிலையின் தீவிரத்தால் வேறு வழி தெரியாமல் திருமணத்திற்குச் சம்மதித்திருந்தாலும் , ரஷ்மியை நினைத்துக்கொண்டிருக்கும் செந்தூரனிடம் நமக்கான காதல் இல்லை என்று தெரிந்நதே திருமணம் செய்திருந்தாலும் ,
செந்தூரனை க்கணவனாக்கிக் கொள்ளும் , எண்ணத்தில் திருமாங்கல்யம் ஏற்க்க வில்லை என்றிடினும் , கணவன் மனைவி உறவில் எந்த உரிமையும் இல்லை என்று அவன் கூறியது , ஏனோ ஜீவியின் இதையத்தை அதிரவே செய்தது ,
ப்ரியா அத்தை , செந்தில் மாமா , கணேஷ் மாமா அனைவரும் கூறியது போல் ரஷ்மி அக்காவை மறந்து தன்னை அவர் மனைவியாக ஏற்றுக் கொள்வதென்பது , நடக்காத விஷயம் , இனி செந்து மாமாவை விட்டு விலகி இருப்பதே ஆகச் சிறந்தது என எண்ணியவள் , ஒன்றை மட்டும் யோசிக்க தவறி விட்டாள் ,
ரஷ்மியையே நினைத்துக் கொண்டிருப்பதாக இவள் நினைக்கும் செந்துதான் , ஜீவியைப் பார்த்த முதல் நாள் முதல் இதோ இந்த நிமிடம் வரை அவளைத் தேடி அவளருகில் வருகிறான் என்பதையும் , அவன் இவளைப் பார்க்க வழியில்லை என்றிடினும் அலைபேசியலாவது அவளிடம் நெருங்குகிறான் என்பதையும் ,
அதோடு , செந்தூரனைப் பார்த்த முதல் நாளில் இருந்து அவன் மீது பைத்தியாமாகிப்போன ஜீவி ஒரு முறை கூட அவனைத் தேடி அவனிடம் சென்றதில்லை என்பதையும் , யோசிக்காத அவள் அவனிடம் இருந்து விலகவேண்டுமாய் நினைக்கிறாள் ,
பள்ளம் நோக்கிப் பாயும்
வெள்ளம் போல் , அவன்
உள்ளத்தின் காதலெல்லாம்
இவளை நோக்கியே பாய்கிறது ,
இவளை நோக்கிப் பாயும்
அவனது காதல் வெள்ளத்தை
இவளது இதயச் சுழல்
ஈர்த்து உட்கிரகிக்கிறது
அதை அவனும் அறியவில்லை , இவளும் உணரவில்லை ,
ஜீவி அவன் பேசிய வார்த்தைகளின் சிந்தனையின் வசம் இருந்தாள் , இருவருக்கும் இடையில் சில நிமிடங்களை மெளனம் நிறைத்தது , செந்துவே மெளனத்தை உடைத்தான் ,
" சரி ஜீவிமா வா கீழே போலாம் "
" இல்ல மாமா நீங்க கீழ போங்க நான் கொஞ்ச நேரம் இங்கேயே இருந்துவிட்டு வருகிறேன் " , எனக்கூற ...
அவன் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான் , மாலை நேரம் முற்றிலும் முடிந்து , இருளை நிறைத்த இரவு நகர்நது கொண்டிருக்க ...
இரவு உணவிற்காய் டைனிங் ஹாலில் பாலா,தேவி,ஜெயராம் , செந்து நால்வரும் இருக்க ஜெயந்தி தேவியிடம் " ஜீவி எங்கே ? அறையில் காணோம் " எனக் கேடக , " நான் பார்க்கவில்லை அண்ணி , அப்போ ஜீவி இன்னும் சாப்பிடவில்லையா " , என ஜெயந்தியைத் திரும்பக் கேட்க...
சாப்பிட உட்கார்ந்த பாலாவோ " நான் போய் பார்த்து கூட்டிக்கொண்டு வருகிறேன் " , என எழுந்திரிக்க ..
செந்து குறுக்கிட்டு மாமா " நீங்க சாப்பிடுங்க நான் போய் கூட்டிக்கொண்டு வருகிறேன் " , என்று எழுத்தவன் நேராக மாடிக்குச்செல்ல ,
பாலாவும் , தேவியும் ஜீவிக்காக காத்திருக்க , ஜெயராமோ " நீங்க இரண்டுபேரும் ஏன் சாப்பிடாமல் உட்கார்ந்திருக்கீங்க , ஜீவி வரட்டும் நீங்க இரண்டுபேரும் சாப்பிடுங்க " என்றவர் , " ஜெயந்தி நீ சாப்பிட்டியா ? " எனக் கேட்க ,
ஜெயந்தி " இல்லை " என்று கூறவும் ஜெயராம் நீயும் சாப்பிடு எனக் கூற ..
ஜெயந்தி " இல்லங்க ஜீவியும் செந்துவும் வந்துவிடட்டும் " பிறகு நான் சாப்பிட்டுக் கொள்கிறேன் எனக்கூற ...
ஜெயராமோ " வீடடில் எல்லாரும் சாப்பிட்டாங்கல்ல " எனக் கேட்க ,
ஜெயந்தி " சாப்பிட்டாங்க " எனக்கூற ..
ஜெயராம் , " செந்துவும் ஜீவியும் வந்து சாப்பிடுவாங்க , நீங்க எல்லாரும் சாப்பிடுங்க " என்றவரிடம் ... மறுப்பாக ஏதோ சொல்ல வந்த ஜெயந்தி ஜெயராமின் குறிப்பறிந்து அமைதியாகி சாப்பிட அமர ...
பாலாவும் தேவியும் ' மணி 10 ஆகிவிட்டது இன்னும் ஏன் ஜீவி சாப்பிடவில்லை , ஜீவி எங்கே' என யோசித்தவாறு சாப்பிடாமல் சந்தகையை கிளறியவாறு யோசனையில் மூழ்க , அதைப் பார்த்த ஜெயராம் " நீங்க மூனு பேரும் சாப்பிட்டு போய் ரெஸ்ட் எடுங்க , அவங்க இரண்டு பேரும் வந்து சாப்பிடுவாங்க " எனக்கூற ... அனைவரும் சாப்பிட்டு அறைக்குச் சென்றனர் ,
அங்கே ஜீவி மாடியில் இரவுநேரத் தென்றலில்... பதுமைபோல் அமர்ந்திருக்க அவளைப் பார்த்த செந்துவோ , சற்றே அதிர்நது , " என்ன ஜீவிமா நீ இவ்வளவு நேரம் இங்கேயேவா இருந்த ? இன்னும் ரூமுக்கு போகாம, சாப்பிடாம , இங்க என்ன பன்னிட்டு இருக்க ? எனக் கேட்டவனுக்கு " ஒன்றும் இல்லை மாமா சும்மாதான் இங்க உக்கார்ந்திருக்கேன் " எனக்கூற ..
செந்தூ , " ஏன் ஜீவிமா உன் முகம் வாடி இருக்கு ? " எனக்கேட்க , இல்ல மாமா என்று அவள் ஏதோ சொல்ல வாயெடுப்பதற்குள் ,
செந்து , " தெரியும் எனக்கு அப்பவே தெரியும் இந்த மாதிரியெல்லாம் நடக்கும்னு ... உன்னை யாரு இந்த மேரேஜ்கு சம்மதிக்கச் சொன்னா ? நீ மட்டும் அன்றைக்கு சம்மதிக்காம இருந்திருந்தா தாத்தா என்னையும் கட்டாயப்படுத்தி இருக்க மாட்டாரு , இந்தக் மேரேஜிம் நடந்திருக்காது , இப்பப் பாரு உனக்குத்தான் கஷ்டம் " என்றவனிடம்,
ஜீவி " மாமா நீங்களா ஏதாவது கற்பனை செய்யாதீங்க , உங்களோட சம்மதம் இல்லாம உங்க வாழ்கையில் நுழைந்து உங்களை கஷ்டப் படுத்துறமோன்னுதான் எனக்கு கவலை , வேறு ஒன்றும் இல்லை மாமா , நீங்க சந்தோஷமா இருந்தா நானும் நிம்மதியா இருப்பேன் , நம்ம திருமணம் முடிஞ்சு போன விஷயம் , அதைப் இப்போ பேசி என்ன ஆகப் போகுது " எனக்கூற ...
சிறிது நேரம் அமைதி காத்த செந்து ," வா ஜீவிமா சாப்பிடலாம் " எனக் கூற... சம்மதமாய் தலையசைத்தவள் அனோடு கீழே டைனிங் ஹாலுக்குச் சென்றாள் ,
ஜீவி தயங்கித் தயங்கி " மாமா எனக்கு பசி இல்லை நீங்க மட்டும் சாப்பிடுங்க மாமா " என்று கூறி அவனுக்கு உணவு பரிமாறப் போக ,
செந்து அவளை அமர்த்தி நீ முதலில் உட்கார் எனக்கூறி , அவளுக்கு தட்டில் சந்தகையும் இட்லியையும் வைக்க அவளோ தட்டையும் அவனையும் மாறி மாறி பார்த்துவிட்டுத் தட்டில் கோலம் போட ஆரபிக்க , அதைப் பார்த்த செந்துவோ ,
" ஏன் ஜீவிமா இந்த வீட்ல எல்லோரையும் போல் நீயும் என்னை நோகடிச்சு வேடிக்கை பார்கனும்னு முடிவு பண்ணீட்டியா ? "
எனக் கேட்க....
துணுக்குற்ற ஜீவியோ " என்ன மாமா இப்படி கேட்கறீங்க , உங்களை நோகடிக்கனும்னு நான் எதுவுமே பண்ணல , இப்போ என்ன ? நான் சாப்பிடனும் அவ்வளவு தான ? நான் சாப்பிடுகிறேன் , ஆனா நீங்க ஏன் சாப்பிடவில்லை ஆனா அதற்கும் முன்பு நீங்களும் சாப்பிடனும் " என்று கூற
அவள் கையில் பிட்டுவைத்திருந்த இட்லியை அவள் கையைப் பிடித்திழுத்து அவன்வாயில் வைத்து சுவைத்தவாறே அவள் கண்ணில் தெரிந்த பதட்டத்தையும் அன்பையும் தன்கண்களால் சுகித்தவன் ,சிறு மென் புன்னகையுன் மற்றொரு தட்டில் எடுத்து வைத்து சாப்பிட்டுக் கொண்டே ஜீவி சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தான் ,
அவள் சாப்பிட்டு முடித்தவுடன் " என்ன ஜீவிமா பசி இல்லைன்னு சொன்ன இப்போ எப்படி இந்த இட்லி சந்தகை எல்லாம் உள்ளே இறங்குச்சு ? எனக்கேட்க அவளோ " அய்யோ மாமா நீங்க வேற நான் நிஜமா பசிக்கு சாப்பிடலை ருசிக்குத்தான் சாப்பிட்டேன் செம்ம டேஸ்ட் மாமா " எனக்கூற ,
செந்து " அது சரி ருசிக்கு சாப்பிடறதுதான் உன்னோட அழகின் ரகசியமா ? பார்த்துக்க ஜீவிமா இப்படியே போச்சுன்னா அப்புறம் தேவிக்கு நீ அக்கா மாதிரி ஆகிடுவ .. எனக்கூற ....
செந்துவை முறைத்தவள் " போங்க மாமா இதுக்குத்தான் நான் பசிக்கலைன்னு சொன்னேன் நீங்கதான் கட்டாயப்படுத்தி சாப்பிட வச்சீங்க, மதியம் வேற ஹெவி நான்வெஜ் , அப்புறம் மாமாகூட ரெஸ்ட்டாரென்ட் போனபொழுது மில்க்ஷேக் , அப்புறம் ரேவதி அத்தை வேற ஈவ்னிங் அவங்க செஞ்ச சாக்லெட் கேக் கொடுத்தாங்க அதுவும் நல்லா டேஸ்டா இருந்ததுன்னு சாப்பிட்டேன், அதுதான் எனக்குப் பசிக்கலை , பசிக்கலைன்னு சொன்னேன் நீங்கதான் நம்ப மாட்டேன்னு சொல்லிட்டீங்க " என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கூற ...
அவள் முகபாவங்களை ரசித்தவாறே , பசிக்கலைன்னு சொன்ன சரி , ஆனா இப்படி பாரபட்சம் பார்காம மாமா கொடுத்தாங்க அத்தை கொடுத்தாங்கன்னு அடுச்சு ஏத்தினதால் தான் பசிக்கலைங்கற உண்மையைச் சொல்லலையே ஜீவிமா ... " என கேலியாய் கேட்க ...
ஜீவி , " என்ன மாமா நீங்க ..." என்று சிணுங்க என , இருவரும் ஹாலுக்கு வர ,
பாலாவின் அறையிலோ அவனுக்கும் தேவிக்கும் உறக்கம் வர மறுத்தது , ஜீவி ஏன் மாடியில் அவ்வளவு நேரம் இருக்க வேண்டும், செந்து கூப்பிடவுடன் வந்து சாப்பிட்டாளா ? இல்லை இருவருக்குள்ளும் ஏதும் பிரச்சனையா இருவரின் மனமும் தவிக்க ... பாலாவும் தேவியும் ரூமை விட்டு வெளியே வந்து மாடியிலிருந்து கீழே ஹாலைப் பார்க்கவும் , அங்கே செந்து ஜீவியை கேலிசெய்து சிரிப்பதையும் அவள் பாவமாய் முகத்தை வைத்திருப்பதையும் பார்த்த தேவிக்கும் பாலாவுக்கும் சற்றே நிம்மதி பிறந்தது ..
செந்துவிடம் ஜீவி " மாமா நான் ரொம்ப வெயிட் போட்டிருக்கேனா ? எனக்கேட்க ,
செந்து அவளை மேலும் கிழுமாக ஒரு பார்வை பார்த்து விட்டு ரொம்ப வெயிட் போடல ... ஆன கொஞ்சம் ஃபேட் டாதான் இருக்க எனக்கூறி அவளைச் சீண்டி வேடிக்கை பார்த்துவிட்டு , " " ஹம் சரிடா உனக்குத் தூக்கம் வரலயா ? " எனக்கேட்க ,
" இல்ல மாமா .. உங்களுக்கு ?என்றவளிடம் ,
"எனக்கும் தூக்கம் வரல " எனக்கூற
ஜீவி , " மாமா வெளில போய் கொஞ்ச நேரம் நடந்துட்டு வரலாமா ? எனக்கேட்க ...
" ஹம் .. சரி டா வா போலாம் " என்று இருவரும் வர முன் ஹாலில் ஊஞ்சல் செந்துவின் கண்ணில் படவும் அவனுக்கு அருணாச்சலம் தாத்தா வீட்டில் திருமணத்தன்று ஜீவி ஊஞ்சலில் தூங்கியது நினைவுவர , அவன் ஜீவியிடம் ,
" ஏன் ஜிவிமா நீ அன்றைக்கு தாத்தா வீட்டு ஊஞ்சல்ல படுத்து தூங்கினாயே திரும்பிப் படுக்கலாம்னு திரும்பும்போது நீ விழுந்திற மாட்டியா ? " எனக் கேட்க ,
" ஆமா மாமா , நான் சின்ன வயசுல சோபால படுத்தாலே உருண்டு கிழே விழுந்துருவனாம் , அதனால் அப்பா நான் தூங்கின உடனே தூக்கி பெட்ல போட்ருவாங்கலாம் , இப்பவும் நான் சோபால படுத்தா அம்மா திட்டுவாங்க , அன்றைக்கு ஊஞ்சல்ல உட்கார்ந்து சும்மா அஸ்வதியோட ஃபோன் பார்திட்டு இருந்தேன் , தூக்கம் வந்தது தூங்கீட்டேன் , நல்ல வேளை நைட்டு விழிச்சுப் பார்க்கும் போது கீழ படுந்திருந்தேன் அப்பா தான் என்னை தூக்கி கீழ படுக்க வச்சாங்க " என்றாள் , செந்து ஒன்றும் தெரியாதது போல் ஹம்ம் ...என்று மெளனமாய்ப் புன்னகைத்தவன் ,
" ஏன் ஜீவிமா எழுப்பினா எழுந்திருக்க மாட்டியா எனக்கேட்க ,
அவளோ , " இல்ல மாமா நான் எழுப்பின உடனே எந்திருச்சுருவேன் " எனக்கூற ,
செந்துவோ " ஒ ... நல்ல பழக்கம் " என அவன் கேலியாய் சொல்கிறான் என்பது புரியாத ஜீவியோ , ஆனா அப்பா தான் என்னை எழுப்பாம தூக்கி பெட்ல போட்ருவாங்க , என்கூற ..
செந்துவோ ' அடிக் கும்பகரணி , அத்தனை முறை எழுப்பியும் அசராம தூங்கினதால்தான் நானே தூக்கி கீழ படுக்க வைச்சேன் இதில் வேறே மேடம் எழுப்பினவுடனே எந்திருச்சிருவாங்களாமே ! இதில் வேறு இவங்க அப்பா இவளைத் தூக்கி கீழ படுக்கவச்சங்களாம் ' என்று நினைத்துச் சிரித்துக் கொண்டான் .
இருவரும் கேட்டைத் திறந்து நீண்ட சிமெண்ட் ரோட்டில் நடக்க , வாரிசைகட்டிய குட்டி நிலவென தெருவிளக்குகள் ஒளிர , மதில் சுவர்களில் இருந்து எட்டிப் பார்க்கும் இட்டிலிப்பூக்கள் , காற்றோடு அசையும் காகிதப்பூக்கள் , என அவற்றைத் தொட்டுப் பார்த்து அகம் களித்து , கட்டிக் கிடக்கும் குட்டி நாய்களின் குரைப்பிற்குக் கூட அஞ்சி அவனில் அண்டி , கைகள் அசைத்துச் சிறுகதைகள் பேசி , நதியென நடந்து கவியென கடந்தாள் அவனோடான இரவின் தொலைவுகளை ...
குட்டிநிலவுகளென
வரிசை கட்டிய
வீதி விளக்குகள்
அவர்களை
குனிந்து பார்க்க ,
சிறு மதில் சுவர்களைத்
தாண்டி இட்டிலிப்பூக்கள் ,
அவர்களை எட்டிப் பார்க்க ,
காற்றோடு சேர்ந்தாடும்
காகிதப்பூக்கள் , அவர்களைத்
தொட்டுப் பார்க்க ,
அனைத்தையும் சுகித்து
அகமது களித்து
காற்றில் கலையும்
கற்றைக் குழல் ஒதுக்கி ,
கட்டிக் கிடக்கும்
குட்டி நாய்களின்
குரைப்பில் அஞ்சி
அவனில் அண்டி ,
அவன் கரங்கள் பற்றி ,
சிறுமி போல்
கைகள் அசைத்துச்
சிறுகதைகள் பேசி ,
அவன் தோள் உரசி
நதியென நடந்து
கவியெனக் கடந்தாள்
அவனோடான
இரவின் வீதிகளை ..
செந்துவுக்கு ஜீவியோடு நடைபோடும் இரவின் தொலைவுகள் இனிமையாக இருந்தது , மனதின் பாரங்கள் வெகுவாய் குறைந்தது , அவளின் சிறிய பார்வைகள் கூட அறிய கதைகள் கதைகள் சொன்னது , காற்றிலாடும் அவளது துகில் கூட இவனை கொஞ்சிக் குழவியது .
உன் குறும்பார்வைகளில்
அரும் கதைகள் கண்டேன்
காற்றில் அலையும் முகிலென
உன் தோள் கொண்ட துகில்
என்னோடு குழையக் கண்டேன்
ஈரமான தென்றல்
இதமென சுகிப்பேன்
பாரமான மனதின்
சோகத்தைக் கரைப்பேன்
தூரமான தொலைவுகள்
சுகமாய் கடப்பேன்
என் கண்கள் பார்த்து
நீ காதல் சொன்னால்
என் கைகள் கோர்த்து
நீ என்னோடு நடந்தால்
இருவரும் பேசியவாறு பிரதான சாலையை அடைய , அங்கே அந்தப் பெரிய நூட்பாலையும் அதைச் சேர்ந்த கேன்டீனும் பேக்கெரியும் இருக்க ,
" ஜீவிமா ஏதாவது சாப்பிடு டா " எனக்கூற ...
அவளோ " என்ன மாமா என்னைப்பார்த்தா எப்படித் தெரியுது " எனக்கேட்க ,
வழக்கம் போல் இதழ் மூடி குறும் புன்னகை புரிந்தவன் ...
" இல்லடா இங்கே பாதாம் பால் நன்றாக இருக்கும் சூடா காய்ச்சிக் கொடுப்பாங்க "என்று கூற ,
அந்த பேக்கரியில் இருந்தவர் , இவர்களைச் சிறு தயக்கமும் ஆச்சர்யமுமாய் பார்த்துவிட்டு , அவர்களிடம் புன்னகையுடன் பேச , செந்துவோ இரண்டு பாதாம் பால் மட்டும் என்று இன்முகமாய்க் கூறிவிட்டு பாலை கேன்டீனுக்கு கொண்டுவருமாறு கூறிவிட்டு , கேன்டீனுக்குச் செல்ல ..
அங்கே தாயும் மகனுமாக வயாதான பெண்மணியும் அவரது நடுத்தர வயது மகனும் இருக்க அவர் செந்துவைப் பார்த்தும் ஆச்சர்யமாய் கண்விரித்து
" வாங்க தம்பி உட்காருங்க " என்று உபசரிக்க ஆரம்பிக்க ,
செந்துவோ " இல்லண்ணா எதுவும் வேண்டாம் , அங்க பாதம்பால் சொல்லிருக்கேன் அதை மட்டும் வாங்கிட்டு வந்திருங்க " என்று கூறிவிட்டு ,
" ஜீவிமா உன்னோட புண்ணியத்தில் ரொம்ப வருடம் கழித்து இங்க வந்திருக்கேன் .. " எனக்கூற
ஜீவி விழிசுருக்கி கேள்வியாய்ப் பார்க்க ..
அவன் தொடர்ந்தான் , " எங்களோட ஸ்கூல்டேஸ்ல அங்க ஒரு கேட் தெரியுது பாரு அந்த க்ரவுன்ட்ல தான் ஃபுட் பால் விளையாடுவோம் , லெவென்த் , ட்வெல்த் படிக்கும் போதெல்லாம் அந்த க்ரவுன்டில் ஃபுட் பால் விளையாண்டு விட்டு இந்தக் கடையில் பரோட்டாவும் ஆஃப் பாயிலும் சாப்பிடுவோம் , நம்ம வினய் பரோட்டா சூரிக்கே டஃப் கொடுப்பான் , பரோட்டா மாஸ்டரே திணறிடுவார்னா பார்த்துக்கோ " என்று கூறி "என்ன அண்ணா ? 'அன்று அந்த கடைக்காரரிடம் கேட்க அவரும் புன்னகையுடன் அமோதிக்க , செந்து மீண்டும் ஆரம்பித்தான் ,
" அப்புறம் , நான் சின்னப் பையனா இருக்கும் போது அப்பா இந்த க்ரவுன்டுக்குத்தான் கூட்டிட்டுவருவார் , அப்பா , சக்திவேல் பெரியப்பா , நிர்மல் அப்பா , எல்லோரும் இங்கதான் ஃபுட்பால் விளையாடுவாங்க .. அப்புறம் அவங்க பிசி ஆனதால அவங்க காலப்போக்கில் இங்கே வருவது குறைஞ்சிடுச்சு ... அப்புறம் நாங்க வரஆரம்பிச்சோம் " என்றுகூறி மேலும் தொடர்ந்தான் ,
" அப்புறம் இதே க்ரவுன்ட்லயே நிர்மலுக்கு ஒரு பப்பி லவ் கூட இருந்தது .. அந்தப் பொண்ணு டென்னிஸ் ப்ரேக்டிஸ்கு இங்கதான் வரும் " என்று செந்து நினைவுகள் மின்ன பேசிக்கொண்டிருக்க ..
ஜீவியோ ...." அந்த க்ரவுன்டையும் இந்த கடையையும் ஏதோ வறலாற்றுச் சிறப்புமிக்க புராதன இடத்தைப் பார்ப்பது போல் பார்த்து , அங்கு இருப்பதில் மெய்சிலிர்த்து லயித்திருந்தாள் , அவள் உயிரானவனின் நினைவுகள் பொதிந்த சுவடுகள் அல்லவா ?
ஜீவி கையில் இருந்த சூடான பாதம் பாலைப் பருகியவள் , " ஏன் மாமா இப்போ இங்க பரோட்டா போட மாட்டாங்களா ? எனக் கேட்க ,
செந்துவோ புன்னகையோடு , " என்ன ஜீவிமா வினய்கே டஃப் குடுக்கலாம்னு பார்கிறாயா? " எனக் கேட்க ,
" போங்க மாமா " என்று அவன் தோள்களில் செல்லக் கோபத்தில் குத்தியவள் , " நான் சாப்பிடறதுக்காக கேட்கல , உங்களை சாப்பிடச் சொல்லிப் பார்க்கனும்னுதான் ஆசைப்பட்டேன் " எனக்கூற ..
" எனக்கும் சாப்பிடனும்தான் ஆசை ஆனா என்ன பண்ண இப்போ இங்க பரோட்டா போட்றது இல்லை , எல்லாம் உங்க ஜெயராம் மாமா செய்த வேலைதான் , இங்க நம்ம யூனிட்ல வேலை பார்க்கிற ஒர்கர்ஸ் சாப்பிடத்தான் இந்த கேன்டீன் , இந்த யூனிட் நம்ம அருணாச்சலம் தாத்தாவோடது , மைதா , ஆயில் இதெல்லாம் ஒர்கர்ஸோட ஆரோக்கியத்தைப் பாதிக்கும்னு
அப்பா பரோட்டா வுக்கு தடை பண்ணீட்டாங்க " எனக்கூற ..
ஜீவியும் " ஆமம் மாமா எப்பொழுதாவது சாப்பிடலாம் ஆனா தினமும் சாப்பிடக்கூடாது " என்று கூற ,
அதற்கு ஆமாம் , என்றவன் , எழுந்து விடைபெற ஆயத்தமானான் , அந்த வயதான பெண்மணி கொஞ்சம் சீக்கிரமா வீட்டுக்கு கூட்டிட்டு போ கண்ணு இந்த நேரத்தில புதுசா கல்யாணம் ஆனவங்க வெளில வரக்கூடாது , எனக் கூற ..
செந்து அவரிடம் சரி என்பதாய் தலையசைத்து விடைபெற ,
ஜீவி " ஏன் மாமா புதுசா மேரேஜ் ஆனா நைட்டு வெளில வரக்கூடாதா ? " எனக் கேட்க ,
" புதுசா கலயாணம் ஆனவங்க வரலாமா ? கூடாதா ? ன்னு தெரியாது .. ஆனா நம்ம இரண்டு பேரும் தாராளமா வரலாம் " எனக் கூறவும் ..
" சரி மாமா " என்று புரியாமலே தலயசைத்தவளைப் புன்னகையோடு பார்த்தான் ..
இருவரும் பேசிக் கொண்டே வீட்டை அடைய .. அங்கே ஹாலில் ஜெயராம் அமர்ந்திருக்க அவரைப்பார்த்தும் முகத்தில் இறுக்கதை சுமந்து அவன் அறைக்குச் செல்ல , ஜீவியோ தயங்கி , ஜெயராமிடம் சென்று மாமா என்று நிட்க அவரோ " ஜீவிமா வெளில போனா 12 மணிக்குள்ள வரனும்டா " எனக் கூற , சரி மாமா என்று தலையசைத்தவள் , " ஏன் மாமா நீங்க இன்னும் தூங்கலையா ? என்கேட்க
அவரோ , " சரிமா நாளைக்கு நீங்க ரெண்டுபேரும் வெளியில் போய்விட்டு வருவதற்க்குள் மாமா தூங்கிடுறேன் " என்று கூறி செந்துவின் அக்மார்க் புன்னகையை தாங்கி சிரிக்க ..
ஜீவி நாக்கை கடித்து செல்லமாய் தன்னையே கடிந்து கொண்டு , " அய்யோ மாமா நான் அப்படிக் கேட்கல " எனக் கூற ...
அவர் சிரித்துவிட்டு " சரிடா நீ போய் தூங்கு .. " எனக்கூற ..
அவளறைக்குச் சென்றவள் , திரும்பி அறையில் இருந்து தலைய வெளியில் நீட்டி குட்நைட் மாமா " எனக்கூறிவிட்டு செல்ல ...
பதிலுக்கு ஜெயராமும் " குட் நைட் " சொல்லிச் சென்று விட ...
அங்கே , செந்துவோ , மாமன் மருமகள் உரையாடலைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தவன் புன்சிரிப்போடு அறைக்குள் சென்று , உறங்க ஆயத்தமாகிப் படுத்தவன் , ஃபோனைப் பார்க்க , ஏனோ எப்பொழுதும் ஃபோன் எடுத்தாலும் அவனது கைகள் வாட்சப்பில் ரஷ்மியின் ப்ரொஃபைலுக்கே செல்கிறது , அவன் கண்கள் அவளது குறுஞ்செய்தி காணவே ஏங்கி நின்றது , தனிமை அவனை ரஷ்மியின் நினைவுகளால் தாக்குகிறது , அறைக்குள் வந்தவுடன் அவனை ரஷ்மியின் நினவுகள் சூழ்ந்து கொள்கிறது , பெட்டில் ஃபோனை வீசியவனுக்கு தூக்கம் தூரம் போனது ,
தன் இரு கைகளாலும் தலையின் இருபுறமும் அழுந்தப் பிடித்துத் தலை கவிழ்ந்து செய்வதறியாது அமர்நதிருந்தான் , அடுத்த நொடி என்ன நடக்கும் எனத்தெரியாத வாழ்க்கை அதை இப்போது உணர்ந்தான் .
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro