
அனிச்சம் பூ 28
செந்துவா ? என்று கணேஷ் புருவம் சுருக்க ,
அதற்குள் ஜீவி " அய்யோ ! என்ன மாமா இது , ப்ளீஸ் இந்த விஷயத்தை இப்படியே விட்ருங்க , என்றாள் .
" அதெல்லாம் அப்படி விடமுடியாது , என்ன நடந்ததுன்னு சொல்லு ஜீவி " என்றான் கணேஷ் .
இப்போது ஜீவி செந்திலைப் பார்த்தாள் " ஏன் மாமா இதுல செந்து மாமா வோட தப்பு என்ன இருக்கு ஏன் நீங்க செந்து மாமா மேல கோபப்படுறீங்க ... " என்றாள் .
செந்திலும் , கோபத்தில் தான் சொன்ன வார்த்தைகளில் நியாயம் இல்லை என்பதை உணர்ந்தான் ,
கணேஷ் , " சொல்லித்தொலடா என்னப் பிரச்சனனு " என்றான் செந்திலிடம் ,
செந்தில் நடந்ததைக் கூறினான் , இப்பொழுது கணேஷிம் செய்வதறியாது நின்றான் அதோடு " இது பாலவுக்குத் தெரியுமாடா என்றான் ? செந்திலிடம் ,
அதற்குள் ஜீவி பதறி இடைமறித்து கணேஷிடம் ,
" ப்ளீஸ் மாமா இது டாடிக்குத் தெரிய வேண்டாம் , என அழத்தொடங்கினாள் ,
"அதில்ல ஜீவி நான் உன்னோட விஷயத்தை சொல்லலடா , செந்தூவோட மேரேஜ் விஷயத்தை , என்ற அவனது குரலைத்தாண்டியும் அவள் அழுது தேம்பும் ஒலியில் இவன் சொல்வது அவள் செவியில் விழவே இல்லை , தேம்பலோடு , ப்ளீஸ் மாமா டாடிக்கிட்ட..... சொ..சொ.. ல்..ல்...ல..ல.. வேண்..டா..ம் , என்று அழுபவளை சமாளிக்க முடியாமல் ,
நண்பர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொணடனர் அவளைத் தேற்றும்வழி தெரியாது , நின்று கொண்டிருந்த கணேஷ் , அமர்ந்திருந்த அவளை தன் வயிற்றோடு அனைத்து தலை வருடி அமைதி படுத்தினான் ,
கணேஷ் " ஜீவிமா நான் டாடிட்ட எதுவும் சொல்லமாட்டேன் டா , செந்தூ வுக்கு நெக்ஸ்ட் மந்த் மேரேஜுங்குற விஷயம் டாடிக்குத் தெரியுமா ன்னு கேட்டேன் , ஏன்னா பாலாதான் செந்துவுக்கு தாய்மாமாடா , அவன முன்னிருத்தி தான் அவங்க மேரேஜ் பண்ணனும் , அதான் கேட்டேன் என்றான் .
சற்று சமாதானம் ஆனவளாய் , சிறு குழந்தையென முகம் நிமிர்ந்து கணேஷைப் பாரத்தாள் ,
கணேஷ் , " உன்னோட பர்மிஸன் இல்லாம மாமா யார்கும் எதுவும் சொல்ல மாட்டேன் போதுமா ? " என்று கூறி அவளை நிமர்த்தி உட்காரவைத்து முகத்தில் விழும் முடிக்கற்றைகளை ஒதுக்கி , " முதல்ல நீ போய் முகம் கழுவி விட்டு வா , வீட்டுக்குள் போகலாம் , என்றான் .
ஜீவி முகம் கழுவச் சென்றபின் ,
செந்தில் ,
" இப்ப என்னடா பண்றது , ஜீவி இப்படி ஃபீல் பண்றா " , என்றான் ,
"அதான்டா எனக்கும் தெரில ஜீவிய எப்படி சமாதானப்படுத்தறதுன்னு ..." என்றான் கணேஷ் .
"சின்னப்பொண்ணுதான ! கொஞசநாள் போனா மறக்க ஆரம்பிச்சுடுவா , அதுவரைக்கும் இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லைன்னு , அவளுக்குச் சொல்லி கொஞ்சம் புரியவைக்க ட்ரைப்பண்ணலாம் , என்றான் செந்தில் .
" டேய் நாம திருப்பூர்கு செந்து வீட்டுக்குப் போயிருந்தப்ப செந்து , ஜீவி ஜிவின்னு பின்னாடியே சுத்திட்டு இருந்தான் , நம்மகிட்ட கோவிச்சுக்கிட்டு ஜீவி அழுததப் பார்த்தவுடன அவன் முகம்கூட வாடிருச்சு , ஜீவி மேல ரொம்பப் பாசமா இருககான் குடும்பமும் ஒன்னு சேர்நதிருச்சு , அதோடு செந்துவை பற்றி தெரிஞ்சவரைக்கும் , அவன் நல்ல பையனாத்தான் தெரியுரான் ,
பாலாவும் ஒரே பொண்ண வெளியில மேரேஜ் பண்ணாமா , அவங்க அக்கா வீட்டுக்கே மருமகளா போய்டா , பிரிஞ்ச உறவும் , பாசமும் கிடைக்கும் , பாலாவும் ஜீவிய பத்தின கவலை இல்லாமல் இருக்கலாம்னும் ,
செந்துவுக்கு ஜீவிய மேரேஜ் பண்ணா நல்லாருக்கும்னு நினைச்சேன் , கடைசில பார்த்தா இப்படி ஆகிடுச்சு , என்றான் கணேஷ் .
" ஆமாடா , நானும் அப்டித்தான் நினைச்சேன் , என்ற செந்தில் தொடர்ந்தான் , அன்றைக்கு பாலாவுக்கு திடீர் மேரேஜ் ஆனாலும் பாலா ஆசப்பட்ட தேவியையே கல்யாணம் பண்ணினான் , ஆனா குடும்பம் பிரிஞ்சிருச்சு , இப்போ குடும்பம் ஒன்னு சேர்ந்திருக்கு , ஆனா ஜீவி ஆசப்பட்ட வாழ்கைக் கைநழுவிப்போகுது , அப்பாவுக்கும் , மகளுக்கும் ஏன்டா இப்படி நடக்குது ? என்று வினாவில் முடித்தான் .
ஜீவி அவள் அறைக்குச் சென்றாள் ,
கணேஷ் , ஜீவியை அவளின் அறையில் தனிமையில் விட மனமின்றி , ஸ்வேதாவிடம் தலைவலி மாத்திரையும் , சாதமும் ஜீவிக்கு கொண்டு போகுமாறு கூறிக்கொண்டிருக்கும் போதே இர்ஃபா இடைமறித்து , அங்கிள் நான் போய் கொடுக்கிறேன் என்று கூற , சரிமா யாரவது போய் ஜீவிகூட இருங்க .. என்றான் .
ஜீவி அறையில் , அவளது மொபைல் அழைப்பால் இசைத்துக்கொண்டிருந்தது , ஜீவி யாரிடமிருந்து என்று பார்த்தாள் , ஆகாஷ் தான் அழைத்திருத்தான், தவிற்கவும் மனமில்லாமல் , பேசவும் முடியாமல் தவித்தாள் , மீண்டும் அழைத்தான் , இப்பொழுது ஜீவிகா பேசினாள் , நலம் விசாரிப்புககள் முடிந்ததும் , ஆகாஷ் ,
செந்து தன்னிடம் கூறிய காதல் விஷயத்தையும் , நடக்கப்போகும் , கல்யாண விஷயத்தையும் கூறினான் , ஜீவியும் , " ஹம் நானும் ரஷ்மி அக்காவப் பார்த்தேன் அண்ணா , நல்லா இருக்காங்க , நல்லாப் பேசுனாங்க , செந்து மாமாவுக்குப் பொருத்தமா இருக்காங்க என்றாள் , எந்த வித உணர்வுகளையும் , வெளிக்காட்டாமல்
ஆகாஷிம் ஜீவிக்கு வெளிப்படையாக ஆறுதல் சொல்லமுடியாமலும் , மேலும் பழயதைப் பேசி அவளை சங்கடப்படுத்த விரும்பாமலும் ,பேச்சை முடித்தான் .
ஜீவியின் அறைக்கு இர்ஃபா வந்தான் ,
இர்ஃபாவை பார்த்ததும் " கடவுளே செந்து விஷயம் இவனுக்குத் தெரிந்தால் , என்ன சொல்வானோ ? " என்று நினைத்தவள் இயல்பாக இருக்க முயன்றாள் , " வா இர்ஃபா நீங்க நாலு பேரும் சாப்டீங்களா ? " என்றாள் ,
ஹம்... ஆச்சு , ஆமா உனக்குத் தலைவலின்னு கணேஷ் அங்கிள் சொன்னாங்க , என்றான் ,
ம...ஆமா இா்ஃபா கொஞ்சம் ஹெட்டேக்காத்தான் இருக்கு ..என்றாள் ..
" ஆமா ஹெட்டேக்காத்தான இருக்கும் , செந்துவுக்கு மேரேஜ் ஆகப்போகுதுல்ல அதகேட்டா தலைவலிக்கத்தான செய்யும் , என்றான் " ,
"இவனுக்கு எப்படித் தெரியும் " என்பாதாய் அவனைப்பார்த்தாள் ,
" என்ன பார்க்குற , சொல்லு ஜீவி எப்ப செந்துவோட மேரேஜ் ... " என்று அவளைப் பார்க்க ..
" ஆஹா, ஆரம்பிச்சுட்டானே " எனத் தவித்தாள் ,
இர்ஃபாவின் வார்த்தைகள் கோபம் தோய்த்து வேகமாய் வந்துகொண்டிருந்தது ,
"அதெப்படிப்பா , உங்களுக்கெல்லாம் , கண்டவுடன் காதல் வருது , அவன் கமிட்டேடா ? கல்யாணம் ஆனவனா ? இரண்டு குழந்தைக்கு அப்பவா ? நல்லவனா ? கெட்டவனா ? இதெல்லாம் தெரியாமலே அப்படியொரு காதல் !
நான் படிச்சுப் படிச்சுச் சொன்னேன் , இந்த காதல் கண்றாவியெல்லாம் வேண்டாம் , ஒழுங்காப் படிக்கிற வேலையப் பாருங்கன்னு .... ,
எங்க ! கேட்டாத்தான ,
ஆனா உனக்கு , அந்த மூனு அரவேக்காடுங்க , மான்ஷா , நித்தின் , ஸ்வேதா எவ்வளவோ மேல் !
ஆனா ஒன்னு ! இவ்வளவு , நடந்ததிலேயும் ஒரு நல்லது இருக்கு , நல்லவேளை , நீ இன்னும் இரண்டு மாதம் கழித்து , செந்துவைப் பார்க்கல , ஒரு வேளை அப்டிப்பார்திருந்தீன்னா கல்யாணமானவரைப் பார்த்துக் காதலிச்சுட்டமேன்னு அதுக்கும் சேர்த்துக் கவலைப் படவேண்டி இருக்கும் , என்றான் .
ப்ளீஸ் இர்ஃபா , ஏன் இப்படிப் பேசுற ?
இர்ஃபாவின் கோபம் குறைந்த பாடில்லை ,
பின்ன எப்படிப் பேசச்சொல்ற ? நான் இவ்வளவு சொல்லியும் என் கண்ணு முன்னாடியே போய் இப்படி நீயா உன் துன்பத்தத் தேடிக்குவ , அதப் பார்த்துட்டு அமைதியா இருக்கச் சொல்றியா ? சில பொண்ணுங்க போறபோக்குல மறந்துடுவாங்க , சில பொண்ணுங்க புத்திசாலித்தனமா , நமக்குக் கிடைக்காத விஷயத்துக்கு ஏன் நம்ம நிம்மதிய கெடுத்துக்கனும்னு போயிருவாங்க ,
ஆனா நீ எல்லாம் தெரிஞ்சும் மனசுக்குள்ள வச்சு புழுங்கீட்டு இருப்ப , இந்தக் கடைசி ஒரு 1 1/2 மந்த் உன்னோட லைஃப்ல நடத்ததெல்லாம் மறந்துட்டு , நிம்மதியா இருக்க பழகு . நெக்ஸ்ட் வீக்கோட காலேஜ் முடிஞ்சிரும் , கடைசி நேரத்தில நீயும் கஷ்டப்பட்டு , எங்களையும் கவலைப்பட வைக்காத ஜீவி ...
" எனக்காக யாரும் கவலைப்பட வேண்டாம் , இர்ஃபா ... "
பதில் வேகமாக வந்தது ஜீவியிடம் இருந்து ..
ஹம்.. இந்த கோபத்துக்கெல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்ல , சரி இந்தா டேப்லட் இங்க வச்சிருக்கேன் , சாப்டு வந்து போட்டுக்க , அங்க நீ சாப்ட வரலனு எல்லாரும் கேட்டுட்டு இருக்காங்க .. செந்தூ வேற உனக்காக வெய்டிங் ... போ போய் .. சாப்பிடு , சாப்பிட்டு வந்து தூங்கு , அதுக்குமுன்னாடி உன்னோட ஃபோனக்கொடு கணேஷ் அங்கிலோட விடியோஸ் ரெடிபண்ணனும்னு ஸ்வேட்ட சொல்லீட்டு இருந்தியாம் அந்த வேலையை நான் பாரத்துக்குறேன் , என்றான் .
இல்ல , உனக்கு எடிட்டிங் சாஃப்டவேர் யூஸ் பண்ணத் தெரியாது , நானே பாரத்துக்குறேன் , என்றாள் ,
நான் ஆப்லதான் பண்ணப்போறேன் நோ ப்ராப்ளம் , கொடு நான் பார்த்துக்கிறேன் , நீ சாப்ட்டு ரெஸ்ட் எடு என்றவன் ஃபோனை எடுத்து வேலையை ஆரம்பித்தான் .
வெயில் தன் வேலை முடிக்கும் தருணம் , மணி ஐந்தை நெருங்கிக் கொண்டிருந்தது , இர்ஃபா நித்தின் , ஸ்வேதா , மான்ஷா நால்வரும் விடைபெற ஆயத்தமாயினர் ,
ஜீவியின் அறைக்கு வந்த இர்ஃபா , ஜீவி ரெஸ்ட் எடுத்தியா? இப்போ தலைவலி பரவாயில்லையா ? என்றான் ,
ஹம் , என்றவள் " இர்ஃபா , செந்துவோட மேரேஜ் விஷயம் உனக்கு எப்படித் தெரியும் ? என்றாள் ,
மானுவும் ஸ்வேயும் சொன்னாங்க , ரோஸ் கார்டன்ல செந்து அவங்க வுட்பி கூட மேரேஜ் விஷயமா பேசும் போது பாரத்தாங்களாம் , " சரி ஜீவி நாங்க கிளம்புறோம் , வெனஸ்டே பார்க்கலாம் , எல்லாரும் எஸ்டேட் போக ரெடியாகிட்டு இருக்காங்க , நீயும் ஃப்ரஷ் ஆகிட்டு கிளம்பு , நாங்களும் வீட்டுக்கு , கிளம்புறோம் , நீ நடந்ததையே நினைச்சு ஃபீல் பண்ணாத ஜீவி " , என்றவன் , சாரிப்பா நான் உன்கிட்ட ஹார்ஸா பேசிட்டேன் சாரி என்றான் ,
விடு இர்ஃபா நன் தப்பு பண்ணினேன் , நீ திட்டின விடு , என்றவள் நட்புகளை வழி அனுப்பினாள் .
மதியம் கரையும் நேரம் ,
மதியும் காயும் வானம் ,
தென்றல் வீசும் காலம் ,
பசுந் தேயிலை படரந்த பள்ளத்தாக்குகளின் ஓரம் , அந்த வீட்டைச்சுற்றி மின்மினிகளாய் , மின்விளக்குகள் ஜொலிக்க , வீடெங்கும் மகிழ்வு களிக்க , கணேஷ் ப்ரியசகியின் ஃபஸ்ட் மீட் அனிவர்சரி இனிப்புகளோடு ஆரம்பித்தது , கணேஷ் மற்றும் பரியசகி கேக் வெட்டி , அனைவருக்கும் கொடுத்து , சிற்றுண்டிகள் முடித்து , அந்த வீட்டின் , மினித் த்யேட்டரில் , நண்பர்கள் மூவரின் சந்தோஷக் குறும்புகளின் தருணங்கள், அவர்களின் அரும்புகளின் ஆச்சர்யங்கள் , நிகழ்வுகளின் நிழற்படங்கள் , அதற்கேற்றார்போல பின்னனி பாடல்கள் என அனைத்தும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது , இறுதியில் , ப்ரியசகியும் கணேசும் மட்டும் இருக்கும் நிழற்படங்களுக்கும் பின்னனிப் பாடலாக ப்ரியசகி என்று ஆரம்பிக்கும் , மற்றும் ப்ரியா என்று வரும் பழைய பாடல்களையும் சேர்த்து அழகாக எடிட் பன்னிஇருந்தான் இர்ஃபா , அவர்கள் இருவரும் சந்தித்த முதல் சந்திப்புக் காணொளி காட்சியாகிக்கொண்டிருந்தது ,
அதில் , கோவை மாவட்டத்தின் தனியார் மகளிர் கல்லூரி ஒன்றின் ஆண்டுவிழாவிற்கான
சிறப்பு விருந்தினராக அழைக்கப்ட்டிருந்த DSP கணேஷ் மாணவிகளுக்கான பரிசுகளை வழங்கிக்கொண்டிருந்த வரிசையில் அழைக்கப்பட்டவள் , ப்ரியசகி கவிதைப் போட்டிக்கான முதல் பரிசு ,மாணவிகளின் கரகோஷத்துடன் மேடை ஏறியவள் , தனக்கானப் பரிசிற்க்காக , கணேஷிடம் கைநீட்ட , அவனோ முதல் பரிசு வாங்கிய கவிதையை சொல்லிவிட்டு பரிசைவாங்கிச் செல்லலாமே , என்றவன் , மாணவிகளையும் நோக்கி " கவிதையை மேடையில் சொன்னால்தான் பரிசு , நீங்க என்ன சொல்றீங்க என வினவ , மாணவிகளும் ஒருமித்த குரலில் ஆமோதிக்க , அவனோ குறும்பாய் ப்ரியசகியைப் பார்க்க , அவளோ இவன் கண்களைக் கண்ட கணம் எந்த கவிதைக்காக பரிசு வாங்குகிறோம் என்பதையே மறந்திருந்திருந்தாள் , இருந்தாலும் சுதாரித்து , அவன் கண்களை தீர்க்கமாகப் பார்த்துவிட்டுக் கவிதை சொல்ல ஆரம்பித்தாள்,
"உன் கண்களைப்
பார்த்தேன் ,
என் கவிதைகளை
மறந்தேன்,
நான் என் செய்ய ?
படபடக்கும்
என் இதயத்தின்
நிலவரம்
புரியாமல் ஏனோ
கலவரப்படுத்துகிறாய்?
பரிகசிக்காமல் பரிசைக்
கையில் தந்துவிடேன்
காவலனே !
என்றாள்...
அவள் கண்களின் கதிர்வீச்சை அவனால் தாங்க முடியாமல் முகம் திருப்பி ஸ்டைலாய் பின்தலை கோதியவன் , பரிசைத்தர ஆயத்தமாகி " இந்தக் கவிதைதானா ? பரிசைக் கொடுக்கலாமா ? என மாணவிகளிடம் கேட்க , கூட்டத்தின் ஒருபகுதியில் இருந்த மாணவிகளோ இந்தக் கவிதை இல்லை என்பதாய் பதில் தர ..
இவனோ , " சரி விடுங்க பாவம் விட்டா அழுதுருவாங்க போல , பரிசைக் கொடுத்திடாலாம் " எனக்கூறி அவன் கூரானப் பார்வையால் அவளின் விழிகளைக் குறிவைத்துப் பரிசைத் தர , அவளோ , அவனது விழி வீச்சை எதிர்கொள்ள முடியாமல் , வேகமாக பரிசை வாங்கி விடைபெற்றாள் ,
இவ்வாறாக கணேஷ் ப்ரியசகியின் முதல்சந்திப்புக் காணொளி நிறைவடைந்தாலும் பரியாவின் நினைவுகள் கடந்த காலத்திலேயே நிலைத்து ,
விழா முடிந்து கணேசின் கண்கள் இவளைத்தேடியதும் ,
இவளைக்காணமல் ஏமாற்றமாய் அவன் சென்றதும் ,
அவன் சென்றதை இவள் வகுப்பின் சாளரத்தில் இருந்து பார்த்ததும் ,
அவனது காக்கிச்சட்டையில் காதல் காற்று நுழைந்து கவிதை மணம் பரப்பியதும் ,
காவலும் கவிதையும் சேரந்து காதலானதும் , இளநிலை முடித்து முதுநிலை பயிலும் வரை தனக்காக அவன் காத்திருந்து காதல் செய்ததும் ,
அரசியல் செல்வாக்குள்ள தன் தந்தை மிரட்டலுக்கெல்லாம் அசராமல் , செய்யாதே ! என்றால் செய்வேன் , என்று இறுதியில் அவள் தந்தையே, தாரைவார்க்க இரு இல்லங்களின் இசைவோடும் , இவளைத் திருமணம் செய்ததும்...
இன்றுவரை இவளை இதயத்தில் சுமப்பதும் ,
தான் நேசிக்கும் வேலையிலும் , படிப்படியாக SP , IPS என பதவி உயர்வடைவதும் ,
நட்பைக் கற்பாய் காப்பாற்றுவதுமாய் , இவனைக் கண்ட அந்த , முதல்நாள் , அதுதான் அவள் வாழ்வின் ஆகச்சிறந்த திருநாள் ,
அவனை மட்டும் அவள் சந்திக்காமல் இருந்திருந்தால் ....
வாழ்கை எப்படி இருந்திருக்கும் ... நினைத்துப்பார்க்ககூட அவளுக்கு இயலவில்லை ,
சிந்தனைகளோடு தன் கணவனை கண்களிலும் , மனதிலும் நிறைத்துக்கொண்டிருந்தவளை , ஜீவிதான் நிகழ்வுலகத்திற்குக் கொண்டுவந்தாள் .
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro