Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அனிச்சம் பூ 26

காலைச் சூரியனின்
மஞ்சள் ஒளி உடுருவிய 
மரக்கிளைக் கூட்டினைப் போல,

மாலையில் கூடு
வந்தடையும் பறவைகளின்
கூச்சல் போல ...

வீடு நிறைந்த உறவுகளால்
மாளிகை அழகிய கூடானது
பாசப்பறவைகளின் வருகையால்..

புலர்ந்த பொழுதினில் ,
மலர்ந்த உறவுகள் நிறைந்தது
பாலாவின் இல்லத்தில் மட்டுமல்ல
ஜீவியின் உள்ளத்திலும்தான் .

அருணாச்சலம் , ராஜாங்கம் , லீலாவதி , ஜெயராம் குடும்பம் , கார்த்தி குடும்பம் , கணேஷ் குடும்பம் , இா்ஃபா , ஸ்வேதா , மான்ஷா , நித்தின் என அனைவரும் நிறைந்திருக்க , செந்திலின் குடும்பத்தை எதிர்பார்த்திருத்தனர் , சிறிது நேரத்திற்க்கெல்லாம் செந்திலும் தன் குடும்பத்தோடு வந்துவிட ,

ஜீவிகா " ஹேப்பி பர்த்டே ரதி செல்லம் " என ரதியை அணைத்து வாழ்த்துக் கூற , அவளைத்தொடரந்து கணேஷ் , ப்ரியசகி , தேவி , பாலா , என அனைவரின் வாழ்த்தும் தொடர்ந்தது ...
 
செந்தில் சுரபி தம்பதியின் மகள் ஸ்வீட் 16 அடி எடுத்துவைக்கும் ரதி , பளிங்கு முகமும் , பால் சிரிப்பும் , பவளக் கண்மணிகளும் , எனக் குழந்தை முகம் மாறாத  இவளுக்கு ,  தாத்தா ரகுநாதபூபதி யின் முதல் எழுத்து ' ர ' வையும் , கடைசி எழுத்து  ' தி ' யையும் சேர்த்து  பாலா வைத்த பெயர்தான் ரதி ... இவளுக்கு அடுத்து 13 வயதில் தம்பி ரமீ , அதேபோல் , தாத்தா பாட்டியின் முதல் எழுத்துக்களைச் சேர்த்து ரமீ என்று பெயர்சூட்டினான் .

கணேஷிம் பாலாவும் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர் , பிறந்தநாள் கொண்டாட்டம் காலை உணவு , என பரபரப்புக்கள் அடங்கி ஆங்காங்கே பேச்சுச் சத்தங்கள் மட்டும் கேட்ட வன்னம் இருந்தது , இர்ஃபா நட்புகள் ஒருபுறமும் , தங்களுக்குள் அறிமுகமாகிக் கொண்ட ரதி , அனன்யா , அஸ்வதி என இவர்கள் ஒருபுறமும் .. மகளிர்  ஒருபுறமும்  பாலா நட்புகள்  ஒருபுறமும் என வீடு மனங்களின் மணம் வீசும் மலர்ச் சோலையானது .

                 ப்ரியசகி   கணேஷ்

பாலா கணேஷிடம் , " என்னடா ஏதோ டீப் திங்கிங்ல இருக்கமாதிரி இருக்கு , எனக்கேட்க , கணேஷ் ,
" அதெல்லாம் ஒன்னும் இல்லடா ,  எல்லாம் உன்னோட பாசமலராலதான் இந்த திங்கிங் " என்றான் .

அதைக்கேட்டு சிரித்த பாலா  " ப்ரியா மேல எந்த தப்பும் இருக்காது , நீதான் ஏதோ பண்ணீருக்க சொல்லு , என்ன பன்ன ? ... என்றான் .

" அது தெரிஞ்சா , கைல கால்ல விழுந்தாவது பாவ மன்னிப்பு வாங்கிரமாட்டனா ? ஏன் கோபமா இருக்கான்னு எனக்கே தெரிலடா , வாய் விட்டு சண்டை போட்டாக்கூடப் பரவாயில்லை , மெளனமா இருந்தே இம்சபன்றாடா .. நான் என்ன பண்ணேன்னு எனக்கேத்  தெரியல , காலைல கார்ல வரும்போது கூட  ஒரு வார்த்தை பேசலை, எனக்கு அவ பேசலைனா மனசு ஏதோ அமைதி இல்லாம இருக்குடா " என்று புலம்பித்தள்ளிக்கொண்டிருந்தான் .

பாலா " ஹம்... நீ நல்லா யோசிச்சு பாருடா , ஒரு வேளை நீ ஏதாவது செய்றேன்னு சொல்லி , செய்ய மறந்துட்டியா ? என யோசனையாய்க் கேட்க ,

" அப்டிலாம் இல்லடா " என்று குழம்ப ,

" ம் ப்ரியா வோட பர்த்டே , அப்புறம் உங்க வெட்டிங்டே ... இந்த மாதிரி எதுவும் மிஸ் பண்ணீட்டியா?.... " என பாலா குறிப்பிட ,

" ம்ஹூம் ....  என்று புருவம் சுருக்கியவன் ,  ஏதோ ஞாபகம் வந்தவனாய் " டேய்  ! இன்றைக்கு என்ன தேதி ? என்றான் சற்றே வேகமாய் ,

பாலா தேதியை சொல்லவும் , ஓ ... மறந்துட்டேன் என்று , தலையைப்  பிடித்தான் கணேஷ் ,

என்னடா ? என பாலா கேட்க ..

" டேய்  இன்றைக்கு  எங்களோட 1st மீட் அனிவர்சரி டா " நாங்க வெட்டிங் டே  , பர்த்டே  கூட பெரிசா செலிப்ரேட் பண்ண மாட்டோம் பட் 1st மீட் அனிவர்சரியத்தான் செலிப்ரேட் பண்ணுவோம் என்றான் ,

ஓ, நீயும் ப்ரியாவும் காலேஜ் பஃங்சன்ல மீட் பண்ண வீடியோ கூட வச்சிருப்பியே ! அதுவா ?
ஹம் ... சூப்பர்டா,  ஓகே விடு , இதை நீ முன்பே ஞாபகம் வைத்து சொல்லி இருந்தா , ரதி பரத்டே அன்னைக்கு கெட்டுகதர்னு ப்ளான் பண்ண மாதிரி , இந்த அனிவர்சரியும் ப்ளான் பண்ணிருக்கலாம் , ஓகே இப்பவும் ஒன்னும் டைம் ஆகிடல , நீ போய் ப்ரியாவைச் சமாதானப்படுத்து , மத்ததை நான் பார்த்துகுறேன் என்றவன் , டேய் உன்னோட மொபைல கொஞ்சம் கொடு என்று அதில் உள்ள அவர்களின் வீடியோ , ஃபோட்டோஸை ஜீவிகாவுக்கு அனுப்பினான் ,

நண்பர்கள் மூவரில்  கடைசியாக திருமணம் நடந்தது  கணேஷுக்குத்தான் , 27 ல் காதலிக்க ஆரம்பித்து 31 ன் தொடக்கத்தில் திருமணம் இரண்டு வருடம் கழித்துப் பெண்குழந்தை யதுநிதி 12 வயதாகும் பட்டாம்பூச்சி , பிறகு ஆண் குழந்தை  6 வயதாகும் பிரத்யு , என்ற அழகான வாழ்கை பயணம் இவர்களுடையது .

வழக்கம் போல ஸ்வேதாவும் மான்ஷாவும் எந்தச் சூல்நிலையிலும் தனக்கான உலகத்தை விட்டு எட்டிக்கூட அக்கம் பக்கம் பார்க்காமல் , சின்னச் சின்ன சண்டைகளில் லயித்திருந்தனர் , உலகத்தின் கடைசி சாக்லேட் இதுதான் என்பது போல் ஒரு சாக்லேட்டுக்காக சண்டைபோடுவதும் , ஜீவிகா ரெசின் ஆர்ட் மூலம் செய்த கீ ஜெயின் , ஃபோட்டா ஃப்ரேமை பார்க்க , " இருடி நான் பார்த்துட்டு தாரேன் , என்றும் , இது எனக்கு , இது உனக்கு என.. சண்டைபோட்டுக்கொண்டும் இருக்க , இடையில் நித்தின் கீ ஜெயினைப் பறிக்க , அவனை பிடிக்கும் முயற்சியில் ஸ்வேதாவும் மானுவும்   அங்கு வந்த செந்தூரனின் மீது மோதிவிட்டு , அண்ணா சாரி , சாரி , என்று மீண்டும் அவர்கள் வேலையைத் தொடரவும்... இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த இர்ஃபா
"இதுகளுக்கெல்லாம் மூனு வயசுக்கு மேல மூளை வளர்ச்சியே இல்லபோல "  என மனதுக்குள் கருவிக்கொண்டும் , கண்களால் அவர்களைக் கட்டுப்படுத்திக்கொண்டும் இருந்தான் ,

இவர்களைத் தாண்டி  மேலே பாலாவிடம்  சிரித்த முகத்தோடே சென்ற செந்தில் " நம்ம ஜீவியோட ஃப்ரன்ஸ் ஒரே அதகலம்தான் போ " என்றான் .
" ஏன்டா என்ன பண்றாங்க ? என்றான் பாலா.

" ஜீவி ஃப்ரன்ஸ்  அந்த ரெண்டு பொண்ணுங்களும் நித்தினை துரத்தீட்டு வந்து  செந்து மேல மோதிட்டாங்க , ஆனா மோதுனது கூட பரவாயில்ல , சாரி சொல்லீட்டு "  என்று முடிக்காமல் சிரித்த செந்திலிடம் ,
 

" என்னடா சாரிசொல்லீட்டு ? " என்று கேட்டான் பாலா ,

" சாரிசொல்லீட்டு திரும்பவும் செந்துவ நகர விடமா அவன சுத்தி சுத்தி ஓடுதுங்கடா , இந்த  இரண்டு பொண்ணும்  அந்தப் பையன்ட இருக்க கீ ஜெயின வாங்க , என்று கூறிச் சிரித்தான் " .

" டேய் செந்து எதுவும்
சொல்லலேயே ? " என்றான் பாலா ,

" ம்ஹீம் அதெல்லாம் ஒன்னும் சொல்லல திரு திருன்னு முழிச்சுட்டு நின்னிட்டு இருந்தான் , ஆனா " என்று நிறுத்திய செந்திலிடம் ,

" என்னடா ஆனா ? " என்றான் பாலா ,

" ஜெயந்தி அக்காவும் ஜெயராம் மாமாவும் கூட , செந்து முழிக்கிறதப் பார்த்துட்டு  சிரிச்சுட்டுத்தான் இருந்தாங்க , உங்க மாமியார்தான் மொறச்சு பார்த்திட்டு இருக்காங்க ... " என்றான் .

இதைக்கேட்ட பாலா மேலிருந்து கீழே ஹாலை எட்டிப்பார்த்தான் , நல்லவேளையாக  ஸ்வேதாவும் மானுவும் , சுற்றுவதை நிறுத்தியிருந்தனர் ,

" சரி எங்கடா கணேஷ் ? " என்றான் செந்தில் .

" .. ஹிம்.. ப்ரியாக்கிட்ட பாவ மன்னிப்பு கேட்டு போயிருக்கான்டா , இன்றைக்கு கணேஷ் ப்ரியசகியோட 1 st மீட் டே அனிவர்சரிடா அத அவன் மறந்துட்டான் " என்றான்.

" ஹேய் , ஆமாடா !  ரதி பிறந்தநாளும் அவங்க மீட்டிங் டேட்டும்  ஒரே டேட்தான் , நானும் மறந்துட்டேன் , பாவம்டா கணேஷ் , ப்ரியாவோட மெளன விரதத்துக்கு முன்னாடி காந்தியோட சத்தியாகிரகம் கூட தோத்து போயிரும்... காலேஜ்ல ரவுடி ஹீரோ மாதிரி தெனாவெட்டா சுத்தீட்டு இருந்தான் , அப்புறம் பார்த்தா போலீஸா நின்னான் , ஆனா  ப்ரியாட்டத்தான் அடங்கி ஒடுங்கி ஸ்கூல் ஸ்டூடன்ட் ஆகிட்டான் , என்று கூறிச் சிரித்தவன் , ஓகே டா அவங்க 1st மீட் அனிவர்சரிய நாம  செலிப்ரேட் பண்ணலாம் " என்றான் ,

ஆமாடா அதான் நானும் நினைச்சேன் , அவங்க 1st மீட் வீடியோ , ஃபோட்டோஸ் ,
அப்புறம் அவங்க மேரேஜ் வீடியோல முக்கியமான இடங்கள் , அப்புறம் நாம் எல்லாரும் சேரந்து இருக்கும் ஃபோட்டோஸ் எல்லாத்தையும் சேர்த்து எடிட் பண்ணி ஒரு வீடியோவா க்ரீயேட் பண்ண சொல்லலாம் , ஈவினிங்  எஸ்டேட்ல இருக்க கெஸ்ட் அவுஸ்ல  செலிப்ரேட் பண்ணலாம் , என்றான் செந்தில் .

" ஓகே டா நல்ல ஐடியா , அப்போ
நான் கேக் ஆர்டர் பண்ணீட்டு , எஸ்டேட் போய் ஆட்கள ரெடிபன்னி கெஸ்ட் அவுஸ க்ளீன் பண்ணி டெக்ரேட் பண்ணச் சொல்றேன் , என்று பேசிக் கொண்டே இரண்டு பேரும் கீழே இறங்கி் வந்தனர் , ஹாலில் ஜெயராம் , கார்த்தி , செந்து என மூவரும் பேசிக்கொண்டிருக்க அவர்களோடு பலாவும் செந்திலும் சிறிது நேரம் பேசிக்கொண்டு நின்றனர் , அங்கே பலூனை துரத்தி ஓடிவந்த கணேஷின் மகன் ப்ரத்யுவை விழாமல் பிடித்து நிறுத்திய பாலா " டேய் கண்ணா எங்க உங்க அப்பா , அம்மா கால்ல விழுந்து சாரி கேட்டானா ? என விளையாட்டாய் கேட்கவும் , ப்ரத்யுவும் , " இல்ல அப்பா அம்மாவுக்கு  என்று மழலையாய் ஆரம்பிக்க அதற்குள் பாலா சுதாரித்து ஆஹா ஏதோ ரொமேன்ஸ் நடந்திருக்கும் போல , கணேஷ் மானத்த வாங்கிடுவான் என்றெண்ணி , அவசரமாக அவன் வாயைபொத்தி அவனை தூக்கி சோபாவில் அமரவைத்து பேச்சை மாற்றவும் , செந்து உட்பட அனைவரும் பாலவைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தனர் .


செந்தூவின் கண்கள் ஜீவிகாவைத் தேடியது , இறுதியில் இர்ஃபாவின் அருகில் இருப்பது கண்டு  அங்கு சென்றான் ,

" ஜீவி வாடா அப்டியே எஸடேட்டுக்கு ஒரு ரவுன்ட் போயிட்டு வரலாம் என்றான் ..."

ஹம்.. வாங்க போலாம் , என்றவள் திரும்பி நீங்க வாரீங்களா ? என  இர்ஃபா மற்றும் நட்புகளைக் கேட்க ,

மானுவும் , ஸ்வேதாவும் நானும் வர்றேன்  என்றனர் கோரஸாக ..

இர்ஃபா என்னதான்  கண்களால் கேட் போட்டு , தடுக்க நினைத்தாலும் ஸவேதாவும் , மானுவும் , அலட்சியமாய் அதை தட்டி விட்டு ஜீவியின் பின்னே சென்றனர் , வாசலுக்குச் சென்றால்  அங்கே அஸ்வதி ,
"அண்ணா எங்க போறீங்க நாங்களும் வரோம் " எனக்கூற , இவர்கள் பின்னால் வந்த செந்தில் , " செந்து ஜீப்ல இடம் பத்தாது , நீங்க நாலு பேரும் போங்க , நான் இவங்கள கார்ல கூட்டிடுட்டு வாரேன் என்றவன் ,  ரதி , அஸ்வதி , அனன்யா , என மூவரையும்  காரில் அழைத்துச் செல்ல ஆயத்தமாக ஏதோ நினைவு வந்தவனாய் , ரதியிடம் " ஆமா யதுநிதி  எங்கடா ?  போய் யதுநிதி யையும் கூட்டிட்டு வா " எனக்கூற , ரதி கணேஷின் மகள் யதுநிதியைத் தேடி அழைத்துவந்தாள் , யதுநீதி  கூடவே நானும் வருவேன் என்று செந்திலின் மகன் ரமீயும் பின் தொடர ....  இவர்கள் அனைவரையும் அழைத்து செந்தில் தேயிலைத் தோட்டத்திற்குச்  சென்றான் .

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro