
அனிச்சம் பூ 18
வியாழக் கிழமை ,
கொல்கட்டா ,
ஹோட்டல் ஒபராய் க்ரேன்ட் ,
காலை மணி 9 ,
செந்தூரன் எதிர்பார்பாய் காத்திருந்தான் அவளுக்காக ,
ஆம் , அவளுக்காக ...
காதலால் நெய்த
இதயம் கொண்டு
கருணையால் செய்த
கண்கள் இரண்டால்
இவனைக்காண வருபவள் ,
அவள் வருவதற்குள் , அலைபேசியில் அவளை நிமிடத்திற்கொரு முறை அழைத்துவிட்டான் , அவள் ஃபோன் சுவிட்ச் ஆஃப் , மனம் தவிக்க ஆரம்பித்தது , ஏன் தாமதம்... ?
அவள் வரவேண்டிய திசை பார்த்துக் காத்துக் கொண்டிருந்த செந்தூரனின்
விழிகள் மோட்சம் பெற்றது ...
இதோ , அவள் வந்துவிட்டாள் ,
நொடிகள் ஓடியது ,
பார்வைகளோ ஸ்தம்பித்தது..
அவளே மெளனம் உடைத்தாள்..
" சாரி செந்து .. உன்னைக் காத்திருக்க வச்சுட்டேன் ... சாரி... "
அவன் பதிலேதும் மொழியவில்லை
அவளின் சாரியில் சமாதானம் ஆகாமல் அவளின் கண்களை தீர்க்கமாய் நோக்கினான் ,
" அப்படிப் பார்க்காத .. நான்தான் சாரி சொல்றேன்ல ... ப்ளீஸ் சற்றே கெஞ்சினாள்... "
மீண்டும் பார்வையை நீட்டித்தான்...
" என்ன செந்து நீ ... , புரிஞ்சுக்கோ ... கிளம்பும் போது ஃபேக்ட்ரி மேனேஜர் கால் பண்ணீட்டார் ப்ரொடக்சன் ப்ராப்ளம்னு , அதான் லேட் , திரும்ப கால் பண்ணிடுவாங்கன்னு , ஃபோனையும் சுவிட்ச் ஆஃப் பண்ணீட்டேன் , ப்ளீஸ் சாரி மா.. என்றாள் "
செந்து இப்பொழுதும் ஏதும் பேசவில்லை ,
அவள் கண்கள் அன்பில் கலங்கி மின்னினாலும் , உதடுகள் உரிமைக் கோபம் உதிர்த்தது ,
" என்னடா ரொம்ப பண்ற ஹா , நான் தான் சாரி சொல்றன்ல பின்ன என்னவா ? அப்புறம் இப்டியே திரும்பி போயிருவேன்...
அப்டி.... வா வழிக்கு , ... இதுதான் என்னொட ரஷ்மி ... நீ கெஞ்சவெல்லாம் வேண்டாம் இப்படிப் பேசினால்தான் கெத்தா இருக்கு...
என்றான்.. புன் சிரிப்பில்..
ரியலி , சாரி மா என்றாள் மீன்டும் .
" ஓகே , விடுடா , ஒரு மாதம் காத்திருந்தவன் ஒரு மணி நேரம் காத்திருக்க மாட்டேனா ?
நேத்து நைட் கால் பண்ணும் போதும் நீ , பேச டைம் இல்ல பிசியா இருக்கேன் , மார்னிங் 8.30 க்கு வரேன்னு சொல்லி கால கட் பண்ணீட்ட , மார்னிங் கால் பண்ணும் போது ஸவிட்ச் ஆஃப்னு வரவும் எனக்கு கொஞ்சம் டென்சனாகிடுச்சு , ஈவ்னிங் கிளம்பனும் டா , அதுதான் .
வழக்கம் போல சென்னை போறேன்னு சொல்லீட்டுத்தான் இங்க வந்திருக்கேன் , 2 நாள் பையர்ஸ் மீட்டீங்க 3 நாள்னு பொய் சொல்லிட்டு உன்னைப் பார்க்க வந்தா நீ என்னடான்னா இப்டி லேட் பண்ற " என்றான் .
காலை உணவை முடித்து இருவரும் ஒபராய் ஹோட்டலின் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலேயே உள்ள விக்டோரியா ஹாலுக்குச் செல்வது வாடிக்கையான விஷயம் , இருவருக்குமே விக்டோரியா ஹாலின் அந்த அமைதி மிகவும் பிடித்தமானது , அதுவும் ரஷ்மிக்கு , செந்துவோடு கைகோர்த்து நடந்தபடியை கதைகள் பேசிக் கொண்டு தொலைவுகள் கடப்பதை சுகமானதாக உணர்வாள் .
" செந்து நம்ம மேரேஜ் எப்போ ? "
" கண்டிப்பா , கூடிய சீக்கிரம் வீட்ல சொல்லி முடிவு பண்றேன் டா , அப்பாவுக்கு நம்ம விஷயம் எப்படியும் தெரிஞ்சிருக்கும் ஆனா என்னிடம் இன்னும் கேட்கல , என்றான்
" ஏன் பா உன்ன அங்கிள் வாட்ச் பண்றாங்களா ? " என்றாள் ரஷ்மி
" இருக்கலாம் , அவரு கம்பனிக்கு இப்போ அடிக்கடி வருவதில்லை என்றாலும் , ப்ரொடக்சன் விஷயம் , மெர்ச்சன்ஸ் , பையர்ஸ் மீட்டிங்னு எல்லாம் அப்டேட்டா வச்சிருப்பாரு , அவருக்குத் தெரியும் இன்றைக்கு எனக்கு மீட்டிங் இல்லனு .. அதோடு அவருக்கு எல்லாப் பக்கமும் கண் இருக்கும் ... பார்க்கலாம் அவருக்குத் தெரிவதும் நல்லதுதான் , என்றைக்கா இருந்தாலும் தெரிய வேண்டிய விஷயம்தானே என்றவன் ,
" சரி பசுப்பிக் லெதர்சோட எம் டி இப்படிக் கல்யாணம் பண்ணி என்னோடு செட்டில் ஆனா , அவ்ளோ பெரியகம்பனியோட நிலைமை என்னாவது? " என்றான் .
" ஹம்... என்னமோ ஆகட்டும் எனக்கென்னவாம் ? என்றவள் , அதெல்லாம் மாமா ... அதான் எங்க அக்கா ஹஸ்பனட் பார்த்துக்குவார் " என்றாள் .
"ஆறு மாதத்துக்கு முன்னாடி யாரோ சொன்னாங்க இந்த கம்பனிதான் என்னுடைய அடையாளம் , இதோட வளர்ச்சி தான் என்னுடைய வளர்ச்சின்னு , இப்ப என்னடான்னா என்னை மேரேஜ் பண்ணி கூட்டீட்டு போய்டுங்கன்னு சொல்றாங்க ...ம், .. என்று புன்முறுவளுடன் கேள்வியாய் புருவம் தூக்கினான் "
அதற்கு அவள் வடிவேலு ஸ்டெய்லில் " அது போன மாசம் இது இந்த மாசம் " என்று மழலையாய் சிரித்து விட்டு பின் கூறினாள் ,
" நீ சொன்ன மாதிரி கம்பனிதான் என்னோட லட்சியம்னு இருந்தேன் , என்றைக்கு உன்னோடு பழக ஆரம்பிச்சனோ அதோட எல்லாத்தையும் மறக்கடுச்சுட்ட , இப்ப உன்னைக் கல்யாணம் பண்றதே என் லட்சியமாகிடுச்சு , என்றாள் .
இவர்கள் இருவரும் சந்தித்து ஆறு மாதங்கள்தான் ஆகிறது , இவர்களின் முதல் சந்திப்பு மும்பை நகரில் ஒரு அவார்ட் ஃபங்சனில் அரங்கேறியது . பெஸ்ட் ப்ரேன்ட் விருது , ஜீனியஸ் எக்ஸ்போர்ட்ஸிற்காகா செந்து விற்கும் , சிறந்த காலணி வடிவமைப்பிறற்கான விருது ரஷ்மி க்கும் , மற்றும் லேபர் வெல் ஃபேர் விருது இருவருக்குமே என்று இருவருமே இரண்டு விருதுகளைப் பெற்றனர் .
இதில் லேபர் வெல் ஃபேர் விருது தொழிற்கூடங்களில் வேலைபார்க்கும் தொழிலாளிகளின் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் விருது , இந்த விருது வழங்கும் விழவில் ரஷ்மி கொடுத்த ஸபீச் தான் " இந்த கம்பனிதான் என் அடையாளம் , இதன் வளர்ச்சிதான் என்னுடைய வளர்ச்சி " என்று...
லேபர் வெல் ஃபேர் விருது வாங்கிய இருவரும் தன்னைப் போலவே மற்றவரும் நிர்வகித்திருக்கிறார் , என்று அவர்களுக்கு தங்கள் இருவரின் எண்ண ஓட்டங்கள் , ஒரே மாதிரியானதோ என்று எண்ண வைத்தது , இருவரும் விருதுக்கான வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர் ,
செந்து சிறுவயதில் தன் தந்தையுடன் டையிங் யூனிட்டிற்கு எப்பொழுதாவது செல்லும் பொழுதெல்லாம் அங்கே வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கு அந்த வேலையில் ரசாயனங்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து எவ்வாறு பாதுகாப்பு கொடுப்பது என்பதிலேயே அவன் கவனம் இருக்கும் .
பின்னாளில் அவர்களுக்கான பாதுகாப்பு ஆடைகள் , இலவச மருத்துவ உதவி மற்றும் , வேலையில் உடல் உழைப்பிற்கும் , ஆபத்தான வேலைகளுக்கு ஏற்ப அவர்களுக்குச் சம்பளம் உயர்வு என்று தன் தந்தையிடம் கூறி அவர்களின் நல்வாழ்விற்கான முயற்சிகளை எடுத்தான் .
அதே போல் ரஷ்மி , தோல் பதனிடுதலில் உள்ள தொழிலார்களின் பாதுகாப்பு , மருத்துவ உதவி , ஊதிய உயர்வு என்று அவர்களின் நலனில் அக்கறைகொண்ட இருவரின் எண்ணங்களும் மனிதநேயம் என்ற ஒற்றைப்புள்ளியில் சந்தித்து .
அவர்கள் முதல் சந்திப்பிலிருந்து ,
அடுத்த ஒருமாதத்தில் தோழியின் திருமணத்திற்காக சென்னை வருவதாகச் சொல்லியிருந்த ரஷ்மியை பார்க்கப் போகலாமா வேண்டாமா என யோசித்தது செந்தூரனின் மனது , நட்பின் நிமித்தம் பார்த்து வரலாம் , என சென்று பார்த்து வந்தப்பின் இவர்களின் நட்பு சற்றே நெருக்கமானது , அதன் பின் ரஷ்மியின் பசுப்பிக் லெதர்ஸின் புது ஷோரூம் திறப்புவிழாவிற்கென இவன் கொல்கட்டா செல்ல , இவ்வாறு ஏதோ ஒரு காரணம் கிடைத்தது இருவரும் சந்திக்க ...பின் சந்திப்பு வழக்கமாக மாறிவிட்டது ,
அவளின் அமைதியான ஆளுமை , அலட்டல் இல்லாத சாதனை , கண்ணில் மின்னும் கண்ணியம் என அவளைப் பார்க்கும் போது செந்தூரனுக்குப் பெண்களின் மீதான மரியாதையை அதிரிக்கச் செய்தது , முதலில் நட்பெனப்பட்டது , பின்பு காதலென கண்டுணர்ந்தான் .
அனைவரிடமும் அளந்து பேசி அழுத்தமாய் இருக்கும் அவள் , இவனிடம் இலகுவாய் பழகும் போதும் , அவள் கட்டளையிட்டால் கேட்க ஆட்கள் இருந்தாலும் , செந்தூரனிடம் உரிமையாய் ஊதவி கேட்கும் போதும் , பாராட்டோ புகழோ எதையும் எதிர்பாராமல் கடமையை மட்டும் செய்பவள் , செந்துவின் சிறிய பாராட்டுக்காய் , எல்கேஜி குழந்தையாய் அவனை பார்க்கும் போதும் , அவள் அவனிடம் எதிர்பார்பது அன்பல்ல பேரன்பு என்பதை உணர்ந்தான் , அவளின் கள்ளமில்லா மனம் , கபடமில்லா குணம் , அவ்ப்போது எட்டிப்பார்க்கும் வெகுளித்தனம் , பேரழகைச் சுமக்கும் அவளின் பூ முகம் என , செந்துவின் மனதில் ஆணிவேரென ஊன்றி ஆலமரமாய் தலைத்தது , அவள் மீதான அவனின் காதல்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro