Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அனிச்சம் பூ 17

" ஆகாஷ் நீ நிஜமாவா சொல்ற என்றாள் ஆச்சர்யப்புன்னகையுடன் "

ஆமாம் என்று தலையசைத்து ஆகாஷ் ஜீவியைப் பார்த்தான் , அவள் செந்தூ மொபைலில் கூறியதை நினைவு கூர்ந்து கொண்டு இருந்தாள் , பென்ட்ரைவ் ... மூவீஸ் ..லேப்டாப் .. ட்ராயிங்.. அத்தை என்று ஏதோ காதில் விழுந்த வார்தைகளைக் கொண்டு யூகித்துக் கொண்டிருந்தாள் ,

ஏதோ சொல்ல வாயெடுத்த ஆகாஷ் , சற்று தள்ளி நின்று கொண்டிருந்த ஜெயந்தியும் தேவியும் , ஜீவியின் அருகில் வருவதைப் பார்த்துச் சொல்ல வந்ததை சொல்லாமல் பின்தலையைக் கோதியவாறு திரும்பிவிட்டான் .

ஜெயந்தி ஜீவியிடம் , " ஜீவி உனக்கு போர் அடிக்கும்னு செந்தூரன் , லேப்டாப் , ட்ராயிங் மெட்டீரியல்ஸ் , கொடுத்துட்டு போயிருக்கான் , என்னோட ரூம்ல இருக்கு உனக்கு அப்புறம் எடுத்துத்தாரறேன் , என்றார் , ஆகாஷும் செந்தூரியும் அனைவரிடமும் விடைப்பெற்றுக் கிளம்பினர் ,

செந்தூரி ஆகாஷிடம் " ஆகாஷ் நீ சொன்னது மட்டும் உண்மையா இருந்தா எவ்ளவு சந்தோஷமா இருக்கும் தெரியுமா ? என்றாள் ,

நானும் அதேதான் நினைத்தேன் சென்றா என்றான் ஆகாஷ் ,

பாலா வீட்டை அடைந்ததும் , செந்திலுக்குக் கால் செய்தான்,
" செந்தில் இந்த மந்த்ல நீ எப்ப ப்ரீன்னு யோசிச்சு சொல்லுடா , நான் ஏற்கனவை சொன்ன மாதிரி நம்ம வீட்டுக்கு அக்கா வீட்ல எல்லாரையும் வரசொல்லலாம் , "

" ஓகே டா நான் பார்த்துட்டு சொல்றேன் , கணேஷ் எப்போ ஃப்ரீன்னு கேட்டியா ? , "

" ம் டென் டேஸ் ஆகும்னு சொன்னான் ,

" ம் சரி அப்போ நெக்ஸ்ட் வீக்ல அரேன்ஜ் பண்ணலாம் , "

" ம் ஓகே செந்தில் , அப்புறம் நான் சொன்னது உனக்கு ஞாபகம் இருக்கா ? ஜீவிகாட்ட பேசச் சொன்னே்ல , எப்போ பேசற ? "

" நேர்ல தான் பேசனும் பாலா , நான் அங்க வரும் போழுது பேசறேன் ,

ஜெயம் இல்லத்தில் ஜிவிகா தன் மொபைலையே பார்த்துக்கொண்டிருந்தாள் , செந்தூரனுக்கு கால் பண்ணலாமா வேண்டாமா ? பிசியா இருப்பாங்களோ ? கோயம்பத்தூர் ஹெட்ஆபீஸ் போறேன்னு சொன்னாங்க , ஆமா இவங்களுக்கு என்ன பிஸ்னஸா இருக்கும் ? இப்படிப் பலவாறு யோசித்துக் கொண்டிருக்கும் போதே , ஜெயந்தியின் குரல் அவள் நினைவைக் கலைத்தது , செந்தூரன் ஜீவிக்குக் கொடுத்த பொருட்களை ஜீவியிடம் கொடுத்தார்.

" தேங்ஸ் அத்தை " என்றாள் ஜிவி ,

" எனக்கு எதுக்கு ஜீவிமா தேங்ஸ் ? செந்தூவுக்கு தேங்ஸ் சொல்லு அவன் தான் உனக்கு இதெல்லெலாம் கொடுத்தான் , காலையில் நீ தூங்கிட்டு இருப்பன்னு என்கிட்ட கொடுத்தான் " என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவருக்கு ஏதோ ஃபோன் கால் வர அவர் அங்கிருந்து நகர்ந்தார் .

ம்... ஓகே தேங்ஸ் சொல்லலாம் என்று நினைத்தவள் செந்துவிற்கு போன் செய்தாள் , ஆனால் அவன் ஃபோனை அட்டன் பண்ணவில்லை , சிறிது ஏமாற்றமாகத்தான் இருந்தது அவளுக்கு ,

ஆனால் அவளுக்கு ட்ராயிங்காவது அனிமேஷன் மூவியாவது , நொடிகள் நிமிடங்கள் , மணிகள் என அவளது நேரங்களில் எல்லாம் அவனது நினைவே நிறைந்திருந்தது , மனதை அவன் நினைவிலிருந்து மீட்க எண்ணி மான்ஷா விடமும் , ஸவேதா விடமும் பேசினாள் , ஆனால் அவளுடைய வார்த்தைகள் அனைத்தும் செந்தூரனின் மணம் பரப்பியே வந்துகொண்டிருந்தது ,

மான்ஷா , " என்ன ஜீவி உங்க செந்து மாமா புராணமாகவே இருக்கு , ம்.. நடத்து நடத்து .... என்றாள் ,

" ஏய் அப்டிலாம் ஒன்னும் இல்ல ... நீயா எதாவது கற்பனை பண்ணாத "

ஆமா இல்லாட்டியும நீயும் அப்டியே பரப்போஸ் பண்ணி லவ் பண்ணிடுவ பாரு... உன்னப்பத்தி கற்பனைல கூட அப்டி நினைக்கமாட்டேன் , விடு விடு...,பதறாத என்றாள் .

ஜீவிகா மீண்டும் செந்தூரன் மொபைலுக்கு ட்ரைப் பண்ணினாள் , இப்பொழுது அட்டன் பண்ணினான் , ம் .. சொல்லு ஜீவிகா என்றான் ,
என்ன சொல்வது சொல்ல வந்த வார்த்தைகள் மறந்தது சில நொடிகளை மெளனம் நிறைத்தது , மீன்டும் செந்தூரனே ஆரம்பித்தான் சாப்டியா ஜீவிகா ?

ம் சாப்டேன் ...

" சாரி ஜீவிகா கொஞ்சம் பிசியா இருந்ததால உன் கால் அட்டன் பண்ண முடியல , இப்ப சொல்லு என்ன விஷயம் என்றான் "

" தேங்ஸ் சொல்லத்தான் கால் பண்ணினேன் ",

" தேங்கஸா எதுக்கு? "

" ட்ராயிங் மெட்டீரியல்ஸ் , அப்புறம் மூவியெல்லாம் டவுன்லோட் பண்ணி தந்ததுக்கு ,

" பார்டா , இதுக்கெல்லாம் தேங்ஸா ? ஓகே , வேற எதாவது வேணும்னா சொல்லு ஜீவிகா "

" இல்ல வேற எதுவும் வேணாம் "

" அப்படி எதுவும் தேவைனா உங்க ஜெயராம் மாமாட்ட கேளு , சரி டா எனக்கு அர்ஜன்ட் வொர்க் இருக்கு அப்புறம் கால் பன்றேன் , " என்று தனது வேலைகளில் மூழ்கினான் ,

ஜீவிகாவின் அறைக்கதவு அவ்வப்பொழுது அழைப்புகளில் தாளமிட்டது , ஜெயந்தி அத்தை , லீலாவதி பாட்டி , மாமா ஜெயராம் , தாத்தாக்கள் என அனைவருக்குமான பார்வைகளின் தேடல் அவளாகிப்போனாள் , அவர்களின் அன்பில் கரைந்தாள் , பாசத்தில் பரவசம் கண்டாள் .

ஜெயந்தியுடன் ஷாப்பிங் ,

ஜெயராமுடன் டெக்ஸ்டைலும் தேயிலையும் கலந்த பிஸ்னஸ் அரட்டை , லீலாவதிப் பாட்டியுடன் கோவில் , ராஜங்கம் , அருணாச்சலம் தாத்தாக்களுடன் ரம்மியும் , கம்யூனிசமும் , என அவர்களின் பொழுதில் அவள் கலந்தாள் .

பாட்டி , தாத்தாக்களின் சுகர் இல்லா தேனீரில் கருப்பட்டியின் சுவை கூட்டினாள் , மாத்திரைக்குபின் வெற்றிலையும் தந்தாள் , இட்லி தோசையை இடைமறித்து கேப்பை ரொட்டியும் , சாமை பொங்களும் , சமைக்கச் செய்தாள் , சிற்றுண்டியில் , சிறுதானியங்களைச் செலுத்தினாள் , இல்லத்தின் முற்றத்தில் எறும்புக்கும் ஈ க்கும் பச்சரிசி ரங்கோலி இட்டாள் ,

அனைவர்கும் அனைத்தும் அவளாகிப்போனாள் ,
இருபது வருடத்திற்கு மேலான இடைவெளியை யெல்லாம் ,
இரண்டு மூன்று நாட்களில்
இனிதாய் அடைத்தாள் ,
இத்தனைநாள் பிரிவின் வலிக்கு
இரு விழிப்பார்வையின் பாசத்தில் ,
அரும்பும் சிரிப்பில் மருந்திட்டாள் .
செல்லச் சினுங்களில் , கொஞ்சும் குறும்பில் , ஜெயம் இல்லத்தின்
உள்ளங்களில் இளவரசியானாள்.

நேரத்தை எப்படிக்
கழிக்கப் போகிறோம் ,
என்று நினைத்தவளுக்கு
நேசத்தில் திளைக்கவே
நேரம் போதவில்லை என்றானது , செந்தூரன் வேலையில் பிசி என்று சொன்னதால் அவனுக்கு அழைபேசி அழைப்பு விடுக்காமல் , அவனின் அழைப்புக்காய் காத்திருந்தாள் , காத்திருப்பு வீண்போகவில்லை , செந்தூரன் அழைத்தான் , அவனின் குரலில் உட்சாகம் இரண்டு மடங்காய் இருந்தது ,

" ஜீவிகா எப்படிடா இருக்க ? "

" ஹம் நல்லா இருக்கேன் நீங்க ? "

" ம் எனக்கென்ன சூப்பரா இருக்கேன் , வீட்ல யாருக்கு ஃபோன் பண்ணினாலும் ஒரே ஜீவிகா புராணமா இருக்கு , அதனால்தான் நேரா ஜீவாகாவிற்கே பண்ணிடலாம்னு ...

" என்ன காலாய்கறீங்களா ? என்றாள் "

" அப்டில்லாம் இல்லடா , நிஜமாத்தான் நீ வீட்டுக்கு வந்த முதல் நாள் எல்லாரையும் பார்த்து சின்ன குழந்தை மாதிரி மிரண்டு தனியா இருந்த , அப்புறம் செந்தில் , கணேஷ் அங்கிள்ட இப்பவே வீட்ட விட்டு போகலாம்னு சொன்ன , இதெல்லாம் வச்சு நீ எங்க எல்லாரிடமும் இருந்து விலகியே இருப்பியோன்னு நினைச்சேன் , அதானால்தான் நீ இங்கயே கொஞ்சநாள் இருந்தா எல்லோரிடமும் பழக ஏதுவா இருக்கும்னு ஒரு வாரம் நீ இருக்கனும்னு மாமாட்ட கேட்டேன் , அதேபோல் அப்பாவும் அம்மாவும் பாலா மாமாட்ட உன்ன அனுப்ப முடியாதுன்னு உறுதியா சொல்லீட்டாங்க , நீ யும் இப்போ எல்லாரிடமும் நெருக்கமாகிட்ட ரொம்ப சந்தோஷம் ஜீவிகா , " என்றான் .

" நான்தான் சந்தோஷப்படனும் , சின்ன வயசுல இருந்தே நான் தனியாதான் இருந்திருக்கேன் , அதனால்தான் அப்பா ஸ்கூல் லீவ் டைம்ல ட்ராயிங் , ம்யூசிக்னு , ஏதாவது சம்மர் க்ளாஸ்ல சேர்த்து விடுவாங்க , எனக்கும் இதிலெல்லாம் ரொம்ப இன்ட்ரஸ்ட் இருந்ததால் எப்டியோ டைம் பாஸ் ஆகும் , ஆனா நீங்கெல்லாம் ரொம்ப லக்கி , உங்களுக்கு தாத்தா , பாட்டி , சித்தப்பா , சித்தி என எல்லாரும் பக்கத்திலே இருப்பாங்க என்ன ? என்றவள் நீங்க ஏதும் வேலையா இருக்கீங்களா ? நான் உங்களை பேசி , போரடிக்கிறேனா ? என்றாள் ,

" அப்டீலாம் இல்லடா நைட்ல எனக்கென்ன வேலை , நீ பேசு , என்றவன் ஏன் மீனாட்சி பாட்டி வீட்டுக்கு போகமாட்டீங்களா ? என்றான் .

ம் போவோம் ஆனா லீவ்ல போக மாட்டோம் ஏதாவது விஷேசம்னா போவோம் , அப்பா தான் லீவ்க்கெல்லாம் போய் அவங்களுக்கு தொல்லை கொடுக்கக் கூடாதுன்னு அப்பா கூட்டிட்டு போகமாட்டாங்க , ஆனா மீனாட்சி பாட்டியும் தாத்தாவும் எங்களை பார்க்க வருவாங்க ஒரு ஒன் வீக் இருந்துட்டு கிளம்பிடுவாங்க , அதோட அத்தை பர்த்டே அப்ப நான் கணேஷ் மாமாவிடமும் செந்தில் மாமாவிடமும் இங்க இருந்து இப்பவே போலாம்னு சொன்னதுக்கு காரணம் இங்க இருக்கப்பிடிக்காம இல்ல , எல்லாரும் சேர்நதுட்டாங்க இவங்களை டிஸ்ட்ரப் பண்ண வேணாம்னு எங்கள விட்டு மாமா இரண்டுபேரும் ஒதுங்கிருவாங்களோன்னு பயத்தில்தான் தான் எனக்கு அழுகை வந்திருச்சு , அதானால்தான் கோபத்தில் அப்படி சொன்னேன் , என்றாள் ,

" பாலா மாமா அந்த அளவுக்கு விட்றமாட்டாங்க டா , உனக்குத் தெரியாதா ? ஆனா நீ அன்றைக்கு அழுததும் , எங்களையெல்லாம் உனக்கு பிடிக்கலையோ ? ன்னு நினைச்சேன் . என்றான்

"அப்டிலாம் இல்ல மாமா , இங்க இருக்க எல்லோரையும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு , ஆனா இப்ப இருக்கிற அப்பாவோட பிஸ்னஸ் , ஸ்டேட்டஸ் எல்லாத்துக்கும் அடிப்படைல உதவினது ரகு தாத்தாவும் , செந்தில் மாமாவும் தான் ,

அதோடு நான் இப்போ உயிரோட இருக்கன்னா அதுக்கு காரணம் கணேஷ் மாமாதான் , நான் சின்னப்பொண்ணா இருக்கும் போது எனக்கு ஆக்சிடன்ட் ஆகிடுச்சு , அப்பா பிஸ்னஸ் விஷயமா வெளியூர் போயிருந்தாங்க , காணேஷ் மாமாதான் அம்மா கூட இருந்து என்ன கவனுச்சுக்கிட்டாங்க , ஆப்ரேஷனுக்கு ப்ளட் கொடுத்தாங்க , அதோட நான் க்ரிட்டிக்கல் பொசிஷன்ல இருந்ததால , பக்கத்தில இருந்தவங்க யாரோ , " சபரிமலைக்கு மாலை போட்டு நடந்து வாரேன்னு வேண்டிக்கிட்டா குணமாகிடுமனு " சொன்னதால , கடவுள் நம்பிக்கையே இல்லாத கணேஷ் மாமா எனக்காக வேண்டிக்கிட்டு மாலை போட்டு சபரி மலைக்கு போனாங்க , இந்த வருஷம் வரைக்கும் போய்டுத்தான் இருக்காங்க ,

நீங்களே சொல்லுங்க , இவங்கள பிரிஞ்சு எங்களால எப்படி இருக்க முடியும் ? என்று நீண்ட உரையாடலை கேள்வியோடு முடித்தாள் .

அதேநேரம் , முற்றத்தில் அமர்ந்து தன் மனைவி லிலாவதியோடு மகள் தேவிகாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த ராஜங்கம் தாத்தாவிற்கு , தன் மாப்பிள்ளை பாலா தனது சொத்துகளை யெல்லாம் விட்டு தன் மகள் தேவியின் மானத்திற்காக குடும்பத்தைப் பிரிந்து , பிறர் உதவியில் படித்து , கடுமையாய் உழைத்து , தனிமையில் கஷ்டப்பட்டிருக்கிறார் , அதோடு தன் நண்பனான , பாலாவின் அப்பா அருணாச்சலம் தன் மகனைப் பிரிந்து வாடிய துன்பம் அனைத்திற்கும் மூல காரணம் , தான் தீர விசாரிக்காமல் செல்வத்தின் மீது பழி போட்டதே , தான் செய்த தவறு எவ்ளவு தூரம் பாதித்திருக்கிறது , என்று மேலும் வருந்தினார் , தன் மாப்பிள்ளை பாலா இதைப் பற்றியெல்லாம் ஒரு வார்த்தைகூட பேசவில்லை , மாறாக தன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி , தன் உடல் நிலை பற்றி விசாரித்து அன்பும் அக்கறையுடன் நடந்து கொண்டதை நினைத்து அவருக்கு பாலாவின் மீதான பாசமும் தன் மீதான குற்ற உணர்ச்சியும் மேலும் அதிகரித்தது .

அலைபேசியில் ஜீவிகாவோடு பேசிமுடித்த செந்தூரன் ஜீவி பேசிய அனைத்தையும் மனதில் அசைபோட்டபடி இனி பாலா மாமாவிற்கோ , தேவி அத்தைக்கோ , ஜீவிகாவிற்கோ , எந்த ஒரு பிரிவின் வலியையும் தரக்கூடாது , ஜீவிகாவின் கண்ணில் கண்ணீர் வரவிடக்கூடாது என்று நினைத்தான் , ஆனால் அப்படி நினைத்தவனுக்குத் தெரியவில்லை இனி அவர்களின் துன்பத்திற்கும் ஜீவிகாவின் கண்ணீருக்கும் இவனே காரணமாக இருக்கப் போகிறானென்று ....


Bạn đang đọc truyện trên: Truyen247.Pro