
அனிச்சம் பூ 15
ஜெயராம் , " செந்தூரனோடு போய்ட்டு என்ன வேனுமோ பர்சேஸ் பண்ணீட்டு வாடா " என்றார் ஜீவியிடம்.
------------
அந்திச் சந்திரனுக்காய் காத்திருந்த கதிரவன் கரையத்தொடங்கி இருந்த மாலை நேரத்தின் நகரத்தில் சாலையில் பயணித்தது செந்தூரனின் கார் ,
" ஜீவிகா உனக்கும் தேவி அத்தைக்கும் ஒரு வாரத்திற்குத் தேவையான ட்ரெஸ் அன்ட் தின்ஸ் பர்சேஸ் பண்ணிக்கோ என்றான் செந்தூரன் "
" ஒருவாரத்திற்கா ஏன் ? "
"ஆமா , நீங்க ரெண்டு பேரும் ஒரு வரத்திற்கு இங்கதான் இருக்கப் போறீங்க" ,
" இல்ல நாளைக்கு நாங்க கிளம்பிடுவோம் , அப்பா சொன்னாங்க "
" நாளைக்கு மாமா மட்டும்தான் கிளம்புறாங்க... உனக்கு காலேஜ் ஒன் வீக் லீவ்தானா ? அதான் அம்மா , உன்னையும் அத்தையும் இங்கேயே இருக்கனும்னு சொல்லிட்டாங்க "
ஜீவிகா யோசைனையாய் தலையசைத்தாள்
' ஒன் வீக்கா ? கடவுளே ! இபப்பவே நான் இவன ஏதோ உலக அதிசியத்தைப் பார்க்கிறது போல் அசந்து போய் பார்த்துட்டு இருக்கேன் , இனியும் இந்த நிலைம நீடிச்சா , நான் மென்டலாத்தான் இங்க இருந்து போகனும் , கடவுளே காப்பாத்து 'மனதுக்குள் புலம்பித் தீர்த்தாள் ,
செந்தூரன் மனதுக்குள் சிரித்தான் , ' உங்க செந்தில் அங்கிள்டயும் , கணேஷ் அங்கிள்டயும் , என்ன சொன்ன? இந்த நிமிஷமே இங்க இருந்து போய்டுவோம் னா ? பார்கலாம்... நீ எப்படிப் போறன்னு ... '
அந்த ஷாப்பிங் மாலின் பார்கிங் ஏரியாவிற்கு வந்தது கூட அறியாமல் ஜீவி சிந்தனையின் வசம் இருந்தாள்...
ஜீவிகா ...செந்தூரனின் அழைப்பில் சுதாரித்தாள் ,
அதிக நேரம் எடுத்துக்கொள்ளமால் ஆடைகளை விரைவாக தேர்ந்தெடுத்தாள் , அவள் எடுத்த விதத்திலேயே தெரிந்தது , அவளின் ரசனைக்கான ஆடைகள் இங்கே இல்லை என்று , இருந்ததில் சிறந்தது என்ற முறையில் தேர்வு செய்தாள் , காஸ்மெடிக்ஸ் , ஈவினிங் ஸநாக்ஸ் , விதுரனுக்கு டாய்ஸ் , சாக்லேட் , எற்று ஒரு வழியாக ஷாப்பிங்கை நிறைவு செய்தனா் .
இருட்டும் மாலை பொழுதின் , இரவல் மின் வெளிச்சத்தில் , இவனோடு பயனத் தொலைவின் தூரம் நீளாதோ ? என்றிருந்தது அவளுக்கு ...
ஜீவி , செந்தூரனிடம் நீங்க எடுத்த ஃபோட்டோஸ் எல்லாம் எனக்கு சென் பண்றீங்களா ? என்றாள்
ம்.. சென் பண்றேன் அதுக்கு முன்னாடி நீ என்னை எப்படி கூப்டறதுன்னு முடிவு பண்ணீட்டியா ? என்றான் .
ம்.. இன்னும் இல்ல ..
ஹம்... சரி உன் இஷ்டம் போல் மாமா ன்னே கூப்பிடு ...
நிஜமா வா ?...மாமான்னே கூப்பிடவா ?
ஆமா அப்டியே கூப்பிடு...
ஹம் சரி ஃபோட்டோஸ் சென் பண்ணுங்க..
பண்றேன் , அதுக்கு உன்னோட நம்பர் வேனும் ....
ஓ சாரி ... என்று நம்பர் ஷேர் செய்தாள் .
அதற்குள்ளாக வீடு வந்திருந்தது ....
இன்னும் அந்த ஹாலில் யாரும் இருந்த இடத்தை விட்டு நகரவில்லை பழைய நினைவுகளை பகிர்ந்தபடியே இருந்தனர்.
ஓடி வந்த விதுரனை செந்தூரன் தூக்கிக் கொஞ்சியபடி அவனுக்கான டாய்சை எடுத்து அவன் கையில் கொடுத்துவிட்டு அவன் ரூமிற்குச் சென்று விட்டான் ,
ஜீவிகாவிற்கு ஏதோ அவன் அவளைவிட்டு வெகு தூரம் சென்றது போலிருந்தது ,
ஜீவி பாலாவின் அருகில் வந்து அமர்நதாள் ,
பாலா என்னடா ? ஷாப்பிங் முடிஞ்சதா ? என்றான் .
ம் முடிஞ்சது...டாடி நாம் எப்ப கிளம்பனும் ?
நாளைக்கு செந்தூரி ஹஸ்பன்ட் வந்தவுடன் பார்த்துட்டு டாடி கிளம்பிருவேன் டா , நீயும் மம்மியும் ஒன் வீக் இங்க இருந்துட்டு வாங்க ,
உனக்கு ஏதாவது புக்ஸ் ,லேப்டாப் வேற எது வேணும்னாலூம் சொல்லு நான் எடுத்துட்டு வந்து தாரேன் ,
இல்ல டாடி , நானும் உங்க கூட வாறேன்..
ப்ளீஸ் டா நீ இருந்துட்டு வா , அத்தை மாமா பாட்டி , தாத்தா , எல்லாரும் உன்னோட இருக்கனும்னு ஆசைப்படுறாங்க , ஒர் இரண்டு நாள் நீ இங்க இருந்தீனா அப்புறம் நீ நம்ம வீட்டுக்கே வரனும்னு நினைக்க மாட்ட , அவ்வளவு நல்லா பார்த்துப்பாங்க , உனக்கும் ஜாலியா இருக்கும் , அம்மாவும் பாவம் ரொம்ப வருஷமா எல்லாரையும் பிரிஞ்சு இருந்தாங்கல்ல , ஹம்... சரியா என்றான் .
சரிப்பா , என்றவள் , ' இனி அவன் இருக்கும் திசை தலை வைக்கக்கூடாது ..அவனிடம் ஏதோ வைப்ரேஷன் இருககு ஜுவி,கேர்ஃபுல்லா இருக்கனும் ' என்று மனதை மிரட்டிக் கொண்டிருந்தாள்...
மறுநாள் காலை ஜீவிகா கார்டனில் நின்று கொண்டு மாமரத்தில் ஓடித்திரியும் அணிலையும் சிலுப்பிப் பறக்கும் இரட்டைவால் குருவியையும் ரசித்துக்கொண்டும் அதைத்தன் ஃபோனில் வீடியோ எடுத்துக்கொண்டும் இருந்தாள் , ஏதோ சத்தம் கேட்டுத் திரும்பினாள்,
செந்தூரி இவளை நோக்கி வந்து கொண்டிருந்தாள்,
என்ன ஜீவிகா மாமா வீடு பிடிச்சிருக்கா ? அணில் குருவி எல்லாம் என்ன சொல்லது , என்றாள்,
"ம்.. நல்லாருக்கு அக்கா "
" அக்கா இல்லமா அண்ணி "
சரி வா சாப்பிட போலாம் , தேவி உனக்காக வெய்டிங் ,
அங்கே செந்தூரனைத் தவிர ஜெயராம் , ஜெயந்தி , பாலா , என அனைவரும் இருந்தனர் . ஜிவியின் கண்கள் அவனையே கேட்டு வம்பு பண்ணிக் கொண்டிருந்தது , நல்ல வேளையாக ஜெயந்தியே அவரது ஃபோனில் இருந்து செந்தூரனுக்கு அழைத்தவர் " சன்டே ன்னா போதும் அப்டி என்னதான் பேசுவானோ அந்த ஃபோன்ல , சாப்டக்கூட வராம என்று .. புலம்பிக்கொண்டிருந்தார்,
ஜீவிகா சாப்பிட்டு முடித்து எழுந்திருக்கவும் , செந்தூரன் வருவதற்கும் சரியாக இருந்தது , ஜீவிகா சாப்டியா ? என்றான் ,
இங்க நாங்களும் இருக்கோம் பா , இன்னும் நாங்களும் சாப்பிடல , மாமா மகள மட்டும் உபசரிப்பு பலமா இருக்கு ..என்றாள் செந்தூரி , கூடவே லீலாவதிப் பாட்டியும் சேர்ந்து கொண்டார் , அதான ? எனறு .
போச்சுடா ! ஜீவிகா நம்ம வீட்டோட புது வரவு மா , அதுவும் சும்மாவா ? தேடிக்கிடைத்த திரவியம் , அவளோட நீங்க போட்டி போட முடியுமா .. என்ன பாட்டி நான் சொல்றது ? என்றான் ,
செந்தூரி மகன் விதுவிடம் , அப்ப வா விது நம்மளும் ஒளிஞ்சுக்கலாம் ,
மாமா நம்மளத் தேடி கண்டு பிடிக்கட்டும் , அப்புறம் தேடிக்கிடைத்த திரவியம் லிஸ்ட்ல நம்மளும் சேந்திரலாம் , என்றாள்
என்ன ஒளிஞ்சுக்கிறியா ? விதுவ விட்டுட்டு ஒளிஞ்சுக்கோ! ஆனா கண்டுபிடிச்சுருவேன்னு மட்டும் கனவுலயும் நினைச்சுராத...நீ மட்டும் காணாம போய்டன்னு வச்சுக்கயே மாம்ஸ் ரொம்ப சந்தோஷப்படுவார் , என்றான்.
ஜீவிகா இர்ஃபா விற்கு கால் செய்தாள் ,
"என்ன இர்ஃபா தீப்திட்ட பேசிட்டியா? "
" அத விடு , ஃபோட்டோஸ் பார்த்தேன் ஒருவழியா உங்க கதைல க்ளைமக்ஸ் வந்திருச்சு போல எல்லாரும் சேர்நதிட்டீங்க பார்கவே ஹேப்பியா இருந்தது ஜீவி , அங்கிள் ஆண்டி முகத்தில அவ்ளோ சந்தோசம் , பெரிய ஃபேமிலி போல..
"ஆமா இர்ஃபா அப்பாவும் அம்மாவும் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க ..
"சரி ஜீவி சொல்லு யார் அது ?
" புரில "
" நடிக்காத உன்னோட மாற்றத்துக்கு காரணம் யார்னு கேட்டேன் ?... "
" ஏன் தீப்தி சொல்லலயா? "
"அப்ப யாரோ கண்டிப்பா இருக்காங்க "
" அப்டிலாம் ஒன்னும் இல்ல"
" அப்புறம் ஏன் தீப்திக்கிட்ட நான் இதத்தான் கேட்பேன்னு எப்படி யோசிச்ச ?
" ப்ளீஸ் இர்ஃபா உன்னிடம் பேசனும்னு தோனுச்சு , கால் பன்னேன் பட் இப்போ ஏன்டா பேசினோம்னு தோனுது "
" தோனும் ஜீவி ..தோனும் .. ஓகே டேக் கேர் பை " என்று கோபத்தில் ஃபோனை கட் செய்தான்.
செந்தூரி வீட்டில், இருந்த ஆல்பங்களை எடுத்து தேவியிடமும் பாலா விடமும் தந்து பழைய நினைவுகளைப் புதுப்பித்தாள் ,
ஜீவிகா , ஸ்கூல் ஃபோட்டோகள் , திருமன நிகழ்வுகள் என அனைத்திலும் தன் அம்மா , அப்பாவின் குழந்தை பருவங்களை தன் மொபைலில் சேமித்தாள் , கூடவே செந்தூரனையும்தான் .
ஆல்பத்தின் நிகழ்வுகளும் நினைவுகளுமாய் நீண்ட மாலைப்பொழுது ஜெயம் இல்லத்தின் மருமகன் செந்தூரியின் கனவனுக்காய் எதிர்பார்த்திருந்தது...
ஆறடிஉயரத்தில் ரானாவின் உருவத்தில் சிரித்த முகமாய் வந்து நின்றான் விதுவின் அப்பா ஆகாஷ் , இந்த வருகை முழுக்க முழுக்க பாலாவிற்காகவும் தேவிக்காகவே இருந்தது , தன் மனைவியின் பாசத்திற்குறிய உறவை அவளுக்காய் வந்து பார்க்க விரும்பினான் ..
உங்களை நான் எப்படி கூப்பிடறது ?..என்று பாலாவிடமே கேட்டான் , ஆகாஷ்..
லீலாவதி , சித்தப்பா சித்தின்னு கூப்டுங்கப்பா...என்றார்
ஓகே பாட்டி..என்றான்.
விது , " அப்பா இவங்கதான் புது தாத்தா ஆச்சி " என்றான் , தேவியையும் பாலாவையும் காட்டி ,
" பார்த்தா தாத்தா மாதரி தெரியலையே விது " , என்று மகனைத் தூக்கி கொஞ்சினான்..
நீ வேற ஆகாஷ் , ரெண்டு நாளா தாத்தா தாத்தான்னு மாமாவ படுத்தி எடுத்திட்டான் என்றாள்... செந்தூரி..
அது சரி , நீ இடியே விழுந்தாக்கூட அசர மாட்டியே , சித்தப்பாவ பார்த்து அழுது , ரொம்ப இமோஷ்னல் ஆகிட்டன்னு கேள்விப்ட்டேன் , நிஜமா ? அந்த கண்கொள்ளா காட்சியை மிஸ் பணணீட்டனே... சென்றா... என்றான் ஆகாஷ் .
" நீங்க வேற மாம்ஸ் என்னாலையே என் கண்ண நம்பமுடில... " என்றான் செந்தூரன்..
அனைத்தையும் மகிழ்ச்சியோடு பார்த்துக்கொண்டிருந்த பாலாவுக்கு செந்துரியின் சிறுமித் தோற்றம் மனதில் வந்தது , குழந்தையாக இருந்தவள் இப்பொழுது குழந்தைக்கு தாயாக , ஒரு குடும்பமாக நிற்கிறாள்... காலத்தை எண்ணி வியந்தான்...
சித்தப்பா , நான் வந்தவுடன நீங்க கிளம்புனா எப்படி ? நாளைக்குப் மாணிங் போலாமே ! என்றான் ஆகாஷ் , ஆமா மாமா , நாளைக்கு போலாம் என்றாள் செந்தூரி..
ஹாலில் மாலைத் தேனீர் நேரத்தில் பாலா , ஆகாஷ் , செந்தூ , கார்த்திக் என்று அவர்களின் பேச்சு ட்ரம்ப் , கிம்ஜோங் , ரொனால்டோ , சேத்ரி , எனத்தொடர்ந்து ஆஸ்ட்ரேலியக் காட்டுத்தீயில் வந்து நிறைவுற்றது ,
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro