Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அனிச்சம் பூ 12

செந்தூரன் " அந்தப்பெயரைப் பாலா கேட்கும் அந்த நொடி இதயம் அவன் வசம் இழந்து இரட்டிப்பு வேகத்துடன் துடித்தது , மூளை அதிர்ச்சியா மகிழ்ச்சியா என்று பரிதவித்தது .

பாலாவின் PA மீன்டும் ஒரு முறை உறுதி படுத்திக்கொள்ள " சார் வரச்சொல்லட்டுமா ? " என்றார்,

" சரி " என்பதாய் தலை அசைத்தவனுக்கு செந்தூரனின் சிறுவயது பூ முகம் மனக்கண்ணில் அனிச்சையாய் வந்து போனது , தன்னை அமைதி படுத்திக்கொள்ள அவகாசம் தேவைப்பட்டது , ஆனால் செந்தூரன் அந்த அவகாசத்தை தரவில்லை அடுத்த நிமிடமே வந்து நின்றான் .

தான் அள்ளி அனைத்துக் கொஞ்சி விளையாடிய ஆசை மருமகன் இப்பொழுது ஆறடி உயரமும் அழகிய தோற்றமுமாய் வந்து நின்றான் ,

பாலாவிற்கோ , தண்ணீரை மறைத்து  வைத்த மேகம் போல , கண்ணீரை மறைத்து வைத்த விழிகளில் , பிரிவின் வலியும் , பதுக்கி வைத்தப் பாசத்தின் மொழியும் உணர்வுகளாய் ஒளிர , விழியில் தேங்கிநின்ற கண்ணீர் அவன் உணர்வுகளைத் தாங்கி மின்னிக் கொண்டிருந்தது .

பாசம் கண்ணீர் புன்னகை என்று அனைத்தையும் நிறைத்து வைத்திருந்த பாலாவின் விழி அலைகள் செந்தூரனில் இன்ப அதிர்வுகளை ஏற்ப்படுத்தியது .

" செந்து ... " என்ற மாமனின் அழைப்பில் இருபத்தி இரண்டு வருடங்களாய் தொலைந்த வரம் வார்தையாய் மீண்டது போல் இருந்தது செந்தூரனுக்கு ..

பாலா  நீட்டிய கரத்தை அவன் தன் கரத்தால் இணைக்காமல் மாறாக மாமனைக் கட்டி அணைத்து , தனக்காக துடித்துக்கொண்டிருந்த இதயத்தின் தவிப்பைத் தானே தனித்தான் , தன் கம்பீரமான மாமனின் பூ போன்ற இதயத்துடிப்பின் நுன் அதிர்வுகள் கூட செந்தூரனின் செல்களில் எதிரொலிக்க , கண்ணீரையே கண்டிடாத செந்தூரனின் இமைகள் ஈரமானது .

பாலவின் மனம் சற்றே அமைதி கண்டது , செந்தூரனை அமரச்செய்து தானும் அமர்ந்தான் , சில நொடி மெளனத்திற்குப் பின் செந்தூரனே ஆரம்பித்தான் ,

" மாமா இது எத்தனை வருடத் தேடல் தெரியுமா , உங்களை நினைச்சு அம்மா ஃபீல் பண்ணாத நாளே இல்ல , நீங்க வீட்டை  விட்டு வந்தபிறகு லீலா பாட்டி அவங்க மகளை நீங்க பிரிச்சு கூட்டிட்டு வந்துட்டீங்கன்னு அந்த கோபத்தை அம்மா மேல காமிக்க ஆரம்பிச்சாங்க , அருணாச்சலம் தாத்தாவும் உங்களை விட்டு பிரிஞ்ச கவலைல பிஸ்னஸ கவனிக்க கஷ்டப் பட்டார் , அருணாச்சலம் தாத்தாவுக்கும் , அம்மாவுக்கும் ஆறுதலா இருக்கட்டும்னு ,ராஜங்கம் தாத்தா , எங்களை அருணாச்சலம் தாத்தா வீட்டுக்கு அனுப்பீட்டாங்க .

அப்பாதான் தாத்தா வோட பிஸ்னஸ பார்த்தாங்க , அப்புறம் புதுசா திருப்பூர்ல எக்ஸ்போட்ஸ் ஆரம்பிச்சு சக்ஸஸா நடத்தீட்டு இருந்தாங்க அப்புறம் நான் படிச்சு முடிச்சுட்டு எக்ஸ்போட்ஸ் யுனிட்ஸ் எல்லாம் நான் பார்க்க ஆரம்பிச்சுட்டேன் . மில் , நிட்டிங் , டையிங் யூனிட்ஸ்ச அப்பா பார்கிறாங்க ,

உங்க ஃப்ரன்ட் செந்தில் அங்கிள் ஊரு ஊட்டி ங்கறதால் நீங்க இங்க இருப்பீங்கன்னு அம்மாவோட நம்பிக்கை .

நீங்க வீட்ட விட்டு வந்த அடுத்த வருஷத்தில் இருந்து ஒரு நான்கைந்து வருடம் தொடர்ந்து ஊட்டிக்கு அம்மா டூர காரணம வச்சு இங்க வந்துடுவாங்க , வந்து இங்க விசாரிப்பாங்க , ஆனா நோ யூஸ் , ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு காரணமா நீண்டுச்சு , நீங்க யூஎஸ் போய்ட்டதா சொன்னாங்க , செந்தில் அங்கிளோட அம்மா அப்பா எல்லோரும் சென்னையில அவங்களுக்கு பேரன் பிறந்திருக்கான்னு போய்டாங்கன்னு சொன்னாங்க , அப்புறம் அங்கிளோட அப்பாவுக்கு ஏதோ ஆப்ரேஷன்னு போய் இருந்தாங்க , அப்புறம் அவங்க சென்னயிலேயே செட்டில் ஆகிட்டாங்க , அப்புறம் நாங்க இங்க வர்றத நிறுத்திட்டோம் .

லாஸ்ட் மந்த் கூட ஒரு கார்மன்ட் யூனிட் ஆரம்பிப்பதற்க்காக மீட்டிங்கும் , ஸடாஃப் செலக்சன் இன்டர்வூயுவும் நடத்த இங்க வந்தேன் மாமா , அதுவும் அம்மாவோட ஆசைதான் , இங்க வந்தா உங்களை பார்க்க முடியுமாங்கற ஏக்கம் ,  அதோடு கிராமப் பெண்களின் வேலைவோய்ப்பு , முன்னேற்றத்திற்கு ,
ஒரு வாய்ப்பாகவும் இருக்கும் . அப்புறம கடைசியா தன்ராஜ் அங்கிள் கால் பண்ணதால் தான் நீங்க இங்க இருக்கீங்கங்ற உண்மை தெரிஞ்சது ,

தன்ராஜ் அங்கிளும் நீங்க இத்தனை வருடம் குடும்பத்தைப் பிரிந்து இருப்பீங்கன்னு எதிர்பார்க்கலைன்னார் , அவங்க அண்ணனுக்கு தஞ்சாவூர்ல வேலை கிடைச்சதால , குடும்பத்தோட அங்க போயிட்டாங்களாம் , அப்புறம் இரண்டு பேருமே அப்ராட்ல வேலைகிடைச்சு அங்கேயே செட்டிலாகிட்டாங்களாம் , எவ்வளவு ட்ரை பண்ணியும் உங்களை ரீச் பண்ண முடியலைனார் , ஆனா இத்தனை வருசமும் ஃபேமிலிய பிரிஞ்சு இருப்பீங்கன்னு நினைச்சுக் கூட பார்கலைன்னு சொன்னார் அதோடு டெக்ஸ்டைல் படிச்சதால நீங்க டெக்ஸ்டல் ஃபீல்டுல இருப்பீங்கன்னு நினைத்து தேடியிருக்கார் ,
அப்புறம்  மாமா  நான் இப்பவும் நீங்க இங்க இருக்கற விஷயத்தை அம்மாவுக்குத் தெரியப்படுத்தல , உங்கள் மீது எந்த தவறும் இல்லை என்பது மட்டும் தான் அம்மாவுக்குத்  தெரியும் , அம்மாவுக்கு வருகிற சனிக்கிழமை பிறந்தநாள் அப்பாவுக்கும் , செந்தூரிக்கும் , அம்மாவுக்கும் பிறந்தாநாளோட ஸர்ப்ரைஸே நீங்கதான் " என்றான் .

மெளனமாக அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த பாலாவுக்குள்ளே உணர்வின் அலைகள் ஓங்கி அடித்துக்கொண்டிருந்தது , மானசிகமாக அக்காவிடமும் அப்பாவிடமும் பல முறை மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருந்தான் . பாலாவும் தன் நட்பு குடும்பம் கம்பனி என்று அனைத்தையும் சுருக்கமாக சொல்லி முடித்தான் .

" சரி செந்து வா வீட்டுக்குப் போகலாம் , தேவி பார்த்தா ரொம்ப சந்தோசப் படுவா " , என்றான் ,

" இல்ல மாமா எனக்கும் தேவிய .. சாரி மாமா தேவி அத்தையப் பார்க்கனும் , மாமா மகளைப் பார்க்கனும்னுதான் இருக்கு , பட் சாட்டர்டே தேவி அத்தைக்கும் சர்ப்ரைஸா இருக்கட்டும் நீங்களும் சொல்லாதீங்க " என்றான் .

" நீ தேவின்னுதான கூப்பிடுவ இப்ப என்ன தேவி அத்தை ... என்றான் சிரித்துக்கொண்டு ,

செந்துவும் "ஆமா மாமா நானும் செந்தூரியும் தேவின்னு தான் கூப்பிடுவோம் , ஏன் நாங்க வீட்ல ஏதாவது பழய கதை பேசும்போது கூட தேவின்னுதான் சொல்வோம் , பட் இப்போ மிஸஸ் பாலாஜி ங்கறதால தான் இந்த மரியாதை " என்றான் ,

" ஓகே உனக்கு எப்படி விருப்பமோ அப்படியே கூப்பிடு.. " செந்தூரன் விடைபெற்றுக் கிளம்பினான் .

செந்தூரனுக்கு ஏதோ தன் தாயின் பெரும் பாரத்தை இறக்கி வைத்த நிம்மதி , பாலாவிடம் கேட்க எண்ணி இருந்த கேள்வி , " ஏன் மாமா நீங்க எங்களைப் பார்க்க வரவில்லை " ? ஆனால் கடைசி வரை பாலாவிடம் அந்தக் கேள்வியைக் கேட்கவே இல்லை , தன் மாமனின் கண்களில் தெரிந்த அந்த பாசமும் ஸபரிசத்தில் கிடைத்த உணர்வும் அந்தக் கேள்வி எவ்வளவு அபத்தமானது என்று உணர்த்தியது , அந்த கேள்வியைக் கேட்டு தன் மாமனின் மனதை புன் படுத்தவும் விரும்பவில்லை அவன் .

இத்தனை வருடங்களைக் கடந்த பாலாவுக்கு சனிக்கிழமை வரை கடக்கும் நான்கு நாட்களும் நான்கு யுகங்களாய் கழிந்தது , தன் அக்கா , மாமா , செந்தூரன் , செந்தூரி என்று அனைவருக்கும் பா்த்து பார்த்து கிஃப்ட் வாங்கினான் , கணேஷ் , செந்தில் , மீனாட்சியம்மா , ரகுநாதன் , என சந்தோஷத்தை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டான் , அவர்களும் பாலாவின் இந்த முடிவில் நிம்மதி அடைந்தனர் .

.............................

ஜீவி நீ நாளைக்கு ஃப்ரீயா ? என ஜீவியிடம் கேட்டுக்கொண்டிருந்தான் இர்ஃபான்

ஜீவி  "இல்ல இர்ஃபா " எனக்கூற ,

இர்ஃபா "ஏன் நாளைக்ககு சாட்டர்டே தான ? ஒ அனிமேசன் க்ளாஸ் இருக்கா? " எனக்கேட்டான் ,

ஜீவி "ஆமா இருக்கு , பட் அப்பா ஏதோ பர்த்டேபார்டடி ன்னு வெளில போலாம்னு சொன்னாங்க
இர்ஃபா " என்றாள் .

"ஓகே , உன்னோட ஃப்ரன்ட் தீப்தியோட ஃபோன் நம்பர் கொடு ஜீவி " என இர்ஃபா கேட்க ,

ஜீவி "சரி வாட்ஸ்அப் பண்றேன் , ஆமா ஏன் திடீர்னு தீப்தி நம்பர் கேட்கிற ..." என பதில் கேள்வி கேட்க ,

"சித்தி பொண்ணு ஃபேஷன் டிசைனிங் படிக்கனும்னு சொன்னா அதுதான் கோர்ஸ் டீட்டைல்ஸ் கேக்கத்தான்..." என்றான்

ஜீவியோ ' கண்டிப்பா இது காரணம் இல்ல , என்னை பத்தி ஏதோ தீப்தியிடம் கேட்கப் போகிறான் , நீ எது வேண்டுமானாலும் கேட்டுக்கொள் , அந்த லூசுக்கு எதுவும் தெரியாது ' என்று எண்ணி மனதிற்குள் சிரித்துக்கொண்டு , " ஓகே இர்ஃபா , நான் நம்பர் சென் பண்றேன் " என்றாள் .

" ஏய் ஜீவி அப்டியே எனக்கும் சென் பண்ணு " என்று நித்தின் கேட்க ,

" ஏய் உனக்கெதுக்கு தீப்தி நம்பர் " என ஸ்வேதா ஆரம்பிக்க ..

" ஏய் தீப்தி உன்னவிட 2 இயர் சீனியர் உனக்கு தீப்தி அக்கா  " என மான்ஷா தொடர ...

" ஆமா தீப்தி எனக்கு பெரியம்மா பொண்ணு பாரு , போடி... என்று  நீ வாய மூடு " என கடுப்பான நித்தின்
இர்ஃபானின் போனை எடுத்து தீப்தியின் நம்பரை எடுக்கப்போக , இர்ஃபானின் போனோ லாக் செய்யப் பட்டிருக்க ,

" டேய் என்ன லாக் பண்ணிருக்க , நீதான சொன்ன நம்ம டீம்ல யாரோட போனும் லாக் போடக் கூடாதுன்னு இப்ப நீயே லாக் பண்ணி வச்சுருக்க ? " என நித்தின் ஆதங்கப்பட ,

இர்ஃபா " ஆமா கரெக்ட்தான் தீப்திட்ட பேசிட்டு நம்பர் டெலிட் பண்ணீட்டு நான் லாக் எடுத்துக்கிறேன் " எனக்கூற .

நித்தின் " ஜீவி அப்ப நீயும் லாக் பண்ணிருக்கியா ? " என சந்தேகமாய் அவளைப் பார்க்க ,

" ஆமா இப்பத்தான் பண்ணேன், நாங்க இல்லதா நேரத்தில நம்பர் எடுத்துட்டீனா என்ன பண்றது
அதான் " என்ற ஜீவியும் , ஸ்வேதாவும் மான்ஷாவும் ஹை பைவ் போட்டுக்கொண்டு நித்தினை வெறுப்பேற்றினர் ,

  டர் வெளிச்சம் இடரின்றி குறையும் மாலைநேரத்தில் ஜீவி யும் பாலாவும் தேவியுடன் எப்பொழுதும் போல் வம்பிழுத்துக் கொண்டு சிற்றுண்டியை ருசித்துக் கொண்டிருந்தனர்,

பாலா " ஜீவி மா டாடி உன்னோடு கொஞ்ச நேரம் பேசனுமே கார்டனுக்குப் போலாமா என்றான் " ,

ஜீவிக்கோ , இர்ஃபாவிடம் பாலா " ஜீவிக்கு எதுவும் ப்ராப்ளமா " என்று கேட்டதாகச் சொன்னது ஞாபகம் வந்தது , ' போச்சு டாடி என்ன கேட்கப் போறங்கன்னு தெரியலையே ,  என்ன சொல்லி சமாளிப்பது கடவுளே ' , என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டிருந்தாள்,

மீண்டும் பாலா ஜீவிமா என்று கூப்பிடவும் தன்னிலைக்கு வந்தவளாய் ஓகே டாடி என்றாள் ,

கார்டனில் உள்ள பெஞ்சில் அமரவைத்து மகளின் கரங்களை தன்கரங்களுங்குள் வைத்து ,

"ஜீவிமா நாளைக்கு நாம் எங்க போகிறோம்னு தெரியுமா? நீ அடிக்கடி கேட்பியே " அப்பா , அம்மா உங்க பேரன்ஸ் யாரு அவங்க எங்க இருக்காங்கன்னு , நாளைக்கு அவங்களைத்தான் பார்க்கப் போகிறோம் , தாத்தா பாட்டி அத்தை மாமா எல்லோரையும் " என்றான் ,

நிஜமாவாப்பா என்று அவள்  விழிவிரிக்க , ஆச்சர்யங்களும் அசந்துவிடும் அழகுடன் சுடரென மின்னியது அவள் விழிகள் , இது
" அம்மாவுக்கு தெரியுமா டாடி " என அடுத்த கேள்வியைக் கேட்க ,

" இல்லடா அம்மாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கனும்னு செந்தூரன் சொல்ல வேனாம்னு சொல்லிட்டான்மா ",

" யாரு டாடி செந்தூரன் ? "

" அப்பாவோட அக்கா மகன் ,
உனக்கு அத்தை மகன் "

" அப்போ நீங்க அவங்களை மீட் பண்ணீங்களா ? "

" ஆமாடா மன்டே மீட் பண்ணோம் "

" சூப்பர் டாடி , அவங்களோட ஒரு செல்பி எடுத்திருக்கலாம்ல , நான் பார்த்திருப்பேன்ல " என ஜீவி  குறும் ஏமாற்றத்தை முகத்தில் ஏந்தி நிற்க ..

பாலா " நாளைக்குத்தான் நேர்லயே பார்க்கப் போறியே " ஓகே டா நாளைக்கு காலைல எட்டுமணிக்கு அங்கே இருக்கனும் அதனால நாளைக்கு மார்னிங் நீ சீக்கிரமா கிளம்பனும் ஓகேயா? " எனக்கூற ..

" சரி டாடி " என்றாள் ஜீவி .

செநதூரன் அதிகாலை 3 மனி முதலே வீட்டினை அழகு படுத்த ஆயத்தமானான் , அவன் நியமித்த குழு சரியான நேரத்திற்கு வந்தது , பாரம்பரிய முறையில் மாவிலையாலும் தாழம்பூவாலும் தோரணங்களும் , ரோஜா செவ்வந்தி மரிக்கொழுந்து போன்ற வண்ணமும் வாசமும் நிறைந்த மலர்களால் சுவர் அலங்காரங்களும் , பூக்களோடு சேர்ந்த கொடிகளால் தூண் அலங்காரங்களும், மற்றும் கொய்யா மலர் போன்ற நவின உலர்மலர்களில் பூச்சென்டுகளை பரிசளிப்புக்காகவும் , தாமரை மலர்கள் அக்க்ஷய பாத்திரத்திலும் ,

என அவனின் திட்டமிட்ட படி , மாமனின் வருகைக்காக வீடு புதுக் கோலம் கொண்டு . ஒரு பிருந்தாவனம் போல் காட்சி யளித்தது .

பசும்பாலும் தூயக்கருப்பட்டியும் கலந்த பால்கோவா , கேக்கிற்கு பதிலாக ஆர்டர் செய்திருந்தான் , மதிய விருந்திற்கு சைவஉணவும் பாயாசமும் , இளநீர் , கரும்புச்சாறு பானங்களாகவும் , இருக்குமாறு திட்டமிட்டிருந்தான் ,

தாத்தா பாட்டி , ராஜாங்கம் லீலாவதி (தேவி அம்மா அப்பா ) மற்றும் சித்தப்பா கார்ததிக் குடும்பம் , தாத்தா அருணாச்சலம் (பாலாவின் அப்பா ) என்று வீடு சொந்தங்களால் நிறைந்திருந்தது , பாலாவுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக பாலாவிடம் சொல்லாமல் , கணேஷ் மற்றும் செந்தில் , அண்ணன் சிவா , ரகுநாதன் , மீனாட்சி அம்மா என அனைவரையும் அழைத்திருந்தான் ,

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro