மலர் அறிமுகம்
ஒரு கண்ணில் நீர் கசிய உதட்டு வழி உசிர் கசிய
ஒன்னால சில முறை இறக்கவும் சில முறை பிறக்கவும் ஆனதே..
என ஸ்லோவ் மோசனில் சோக கீதம் வாசிக்க அவளின் கண்ணீர் கோடுகள் காயும் முன்பே அவளின் முன்னால் நின்றுருந்தான்...
அனிச்ச மலரழகே அச்சு அச்சுவெல்லப் பேச்சழகே
என் கண்ணுக்குள்ள கூடு கட்டி காதுக்குள்ள கூவும் குயிலே..
என்ற பாட்டை கேட்டதும் சட்டென்று பின்னால் திரும்பி பார்க்க கண்ணை பறிக்கும் சிரிப்புடன் அவளவன் தான் நின்றுகொண்டு இருந்தான்...
எவ்ளோ முடியுமோ அவ்வளவு முறைத்தவள் அங்கிருந்து நகர
"ஏய்.. விழி.. இப்படி பண்ணாத டி.. ப்ளீஸ் புரிஞ்சுக்க.."
"இதோ பாருங்க மிஸ்டர்... நீங்க யாரு. நான் ஏன் உங்ககிட்ட பேசணும்.. வாழ்க்கைக்கு பயந்துட்டு இருக்கறவன் கிட்ட என்னால வாழ முடியாது.. எதிர்த்து நிக்க முடியாம ஒவ்வொரு விஷயத்துக்கு பயந்து பயந்து இருக்கறவன் கூட எப்பிடி வாழ முடியும்.." என்றவளின் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தது அந்த காரின் சத்தம்..
படையப்பா நீலாம்பரி ஸ்டைலில் வந்து இறங்கியவள் "நீ இங்க என்ன பண்ற மாமா...ஒவ்வொரு முறையும் லோ கிளாஸ் கிட்ட சேர்ந்து சேர்ந்தே நம்ம குடும்ப மானத்தை வாங்கற நீ..." என்றவளை பொருட்படுத்தாமல்
"வா விழி போலாம்..." என்றவன் முன்னால் நடக்க
"போ மாமா. என்னை தவற யாரையும் உன்னால கல்யாணம் பண்ண முடியாது.." என கூறியபடியே திரும்பி சென்றாள்..
"இதோ பாரு.. என் பின்னாடியே சுத்தற வேலை வெச்சுக்காத... மூஞ்சில ரசத்தை கொட்டிருவேன்..." என்றபடி அவனை தாண்டி செல்ல.. சிரிப்புடன் "நீ வெக்கற ரசம் ஆசிட்ன்னு சொல்லாம சொல்றா.. அடியே நில்லு டி..'என்றப்படியே அவளின் பின்னால் சென்றான் அகதீரன்..
*********
"இதோ பாரு கருவாயா..எங்கிட்டயே வராத.. என் பக்கம் வந்த என் சாவுக்கு காரணம் கிருஷ்ணகிரி காலெக்ட்ர் தான்னு எழுதி வைச்சுட்டு செத்துருவ..."என கை நீட்டி மிரட்டியவளிடம்
"அடி பாவி...நான் என்ன டி பண்ண..."
"இப்போ என்ன சொல்லி என்னை கூப்பிட்ட..."
"ஆண்டாள்ன்னு சொல்லி..."
"கொய்யால மறுபடியும் அதே சொல்ற.. இனிமே உனக்கு எனக்கும் செட் ஆகாது... நான் சின்னவயசுல இருந்தே லவ் பண்ணவன காணோம் கடவுளே.. என் நீவின் மாமா.. ஓடி வா.. " என கத்தி பாடியவளின் வாயை அடைத்தவன்
"சரி சரி இனிமே நறுமுகையாண்டாள்னு சொல்ல மாட்டேன்.. நீ நறுமுகையாண்டாள்னு யார் சொன்னாலும் திட்டற சரியா.." என்றவனை முறைப்புடன் பார்த்தவாறே தலையை அசைத்தாள்..
&************
என் முதல் கதையான புயலே சுவாசமாயும், என் இரண்டாவது கதையான மாயவனோ தூயவனோவும் சேர்ந்த இரண்டு ஜோடிகளை அனிச்ச மலரழகே கதையில பாக்க போறீங்க.. கவலை வேண்டாம் நம்ம மகேஷ் இலை இல்லாமலும் இருக்காது என் முதல் கதை நாயகர்களும் இல்லாமல் இருக்க மாட்டாங்க..😍😍😍😍😍 யாராவது என் முதல் கதையோ இல்லை இரண்டாவது கதையோ படிக்கல அப்படினா ஓடி போய் படிச்சுட்டு வந்துருங்க...😂😂😂😂
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro