18
ராம் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த விஷ்ணுவும் ஜீவாவும் அவன் அகன்றவுடன் ஒருவரை ஒருவர் பொருள் பொதிந்த பார்வையை பரிமாறிக்கொண்டனர் .
சாப்பிட்டு முடித்தவுடன் விஷ்ணு அவனது அறைக்குள் சென்றான் . விடையூருக்கு வந்த நாள் முதல் அவனது மனத்தினில் சஞ்சலங்களும் குழப்பங்களும் மட்டுமே வியாபித்திருந்த நிலையில் அந்த மோதிரம் ராமினுடையது என்று தெரிய வந்த வேளையில் இருந்து ஏதோ இனம் புரியாத வேதனை மனதை காயப்படுத்திக்கொண்டிருந்தது .
எள்ளளவும் ராமினை சந்தேகப்பட விஷ்ணுவின் மனமும் சரி அறிவும் சரி தடை சட்டத்தை அமல்படுத்திக்கொண்டிருந்தன.
அப்போது விஷ்ணுவின் அறைக்குள் அவனைப் பார்க்க ஜீவா வந்தான். இவ்வளவு பெரிய சம்பவங்கள் விஷ்ணுவைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கும்போது விஷ்ணுவைத் தனியாக விடுவது உசிதமானது அல்ல என்று எண்ணினான் ஜீவா.
“ என்ன விஷ்ணு என்ற பண்ற என்ன யோசிச்சிட்டிருக்க ????" என்ற ஜீவாவின் கேள்வியில் சிந்தனை கலைந்து திரும்பிப்பார்த்தான் விஷ்ணு . அங்கே அறை வாயிலில் இவனையே பார்த்தபடி நின்றுகொண்டிருந்தான் ஜீவா.
“ வேற என்ன ஜீவா யோசிக்க இருக்கு ? அதே கதை அதே பல்லவி …. அந்த மோதிரம் எப்படிடா ராமோடதா இருக்க முடியும் ? அவன் ஏன் மரகதலிங்கத்தை திருடனும் ? சீரியஸ்லி ….. ஐ ஆம் கெட்டிங் டயர்ட்….ஐயம் டன் வித் திஸ் மேட்டர்டா “ விஷ்ணுவின் குரலின் தொனியே அவனுடைய வேதனையை பட்டவர்த்தனமாக ஒலிபரப்பியது .
“ விஷ்ணு …. கவலைப்படாதடா…. எல்லா பிரச்சனைக்கும் கண்டிப்பா ஒரு சொல்யூஷன் இருக்கும் .சொல்யூஷன் இல்லாத பிரச்சனை இந்த உலகத்துலயே எதுவும் இல்லை . பூட்டை உருவாக்கியவன் அதுக்கான சாவியை செய்யாமலா போய்டுவான் .என்ன ஒன்னு அந்த சாவிக்கான தேடுதல் வேட்டைல இப்ப நாம இருக்கோம். சாவி கிடைச்ச உடனே பூட்டைத் திறந்திடலாம்" என்றவன் மேலும் " இந்த ப்ராப்ளம் சீக்கிரமே சரியாகிடும் பாரு… அதையே நினைச்சு விட்டத்தைப் பார்த்திட்டிருந்தா எப்படி விஷ்ணு… நானும் உனக்கு ஹெல்ப் பண்றேன்னு சொல்லிருக்கேன்ல… டோன்ட் வொர்ரி மச்சி “ என்று கூறி ஆறுதலாக விஷ்ணுவின் தோளில் கைவைத்தான் ஜீவா.
ஜீவாவின் இந்த ஆறுதல் விஷ்ணுவிற்க்கு கட்டாயம் தேவைப்பட்டது . இதுநாள் வரையில் யாருக்கும் தெரியாமல் தன் மனத்திற்க்குள்ளேயே போட்டு உழன்றுகொண்டிருந்தவனுக்கு இந்த தேற்றுதல் பசியில் இருந்த குழந்தைக்கு வயிறு நிறைய ஆகாரம் கிடைத்த திருப்தியை உண்டுபண்ணியிருந்தது .
“ ரொம்ப தேங்க்ஸ் ஜீவா … இப்போ கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்குடா …. “ என்றவன் சட்டென்று ஏதோ நினைவு வந்தவனாக “ஜீவா …. இப்போ ராம் வெளியதானே போய்ருக்கான். வா அவன் ரூம்ல ஏதாவது கிடைக்குதான்னு பார்ப்போம். ஐ ஆம் நாட் ஷ்யூர் அங்க எதுவும் கிடைக்கலாம் மே பீ கிடைக்காமலும் போகலாம் . ஆனா ஏன் சான்ஸ மிஸ் பண்ணணும் . ட்ரை பண்ணி பார்க்கலாமே !” விஷ்ணுவிடம் ஒரு விதமான பரபரப்பு தொற்றிக்கொண்டது .
"ஹே… ஆமாண்டா … நீ சொல்றது சரிதான்… இது ஏன் ஃபர்ஸ்டே நமக்கு தோணாம போய்டுச்சு… வா வா சீக்கிரம் போகலாம். அவன் வறர்துக்குள்ள ஏதாவது மாட்டுதான்னு பார்க்கலாம்" என்றவனுக்கு விஷ்ணுவின் பரபரப்பு இடம்மாறியது.
இருவரும் விஷ்ணுவின் அறையிலிருந்து வெளிவந்தனர் . விஷ்ணுவின் அறை மாடியில் இருப்பதால் அவன் அறை வாசலிலிருந்து பார்த்தால் கூடத்தில் நடப்பவை அனைத்தும் தெரியும் . இருவரும் அப்போது சரியாக கூடத்தைத்தான் பார்த்தனர் . அங்கே ஒருவரும் கண்களுக்கு அகப்படவில்லை . ராம் இன்னும் வரவில்லை என்பது அவனது கார் வீட்டின் முகப்பில் இல்லாததில் இருந்து ஊர்ஜிதமானது.
ராமின் அறையை அடைந்தவுடன் முதல் வேளையாக கதவை தாழிட்டனர் இருவரும் . ஆளாளுக்கு ஒவ்வொரு இடத்தில் ஆராய ஆரம்பித்தனர் . டேபிள் ட்ராயர் , அலமாரி, ஏன் டஸ்ட்பின் முதற்கொண்டு தேடிக்கொண்டிருந்தனர் . இன்ன பொருளைத்தான் தேடுகிறோம் என்று நினைத்து தேடினாலே அப்பொருள் சற்று நீண்ட இடைவெளிக்கு பிறகுதான் கைக்கு வரும் . இவர்கள் என்ன தேடுகிறார்கள் என்று இவர்களுக்கே தெரியாத பட்ஷத்தில் இவர்களின் தேடுதலின் ஆயுட்காலமும் நீண்டு கொண்டே சென்றது
.
க்றீச்ச்ச்ச்…. கதவு திறக்கப்படும் ஒலி திடீரென்று வர இருவரும் திடுக்கிட்டு சட்டென்று திரும்பி பார்த்தனர் . கண்களில் பல வினாக்களோடு நின்றிருந்தான் இவர்களின் நண்பன் ராம் . அவனைப் பார்த்ததும் நண்பர்கள் இருவரின் முகமும் அஷ்டகோணல் ஆகியது. ஆனால் அதை ராம் கவனியா வண்ணம் நொடியில் இருவரும் மறைத்துக் கொண்டனர்.
“ என்னடா நடக்குது இங்க ? ரெண்டு பேரும் என் ரும்ல என்ன பண்ணிட்டு இருக்கீங்க ? உங்களைப் பார்த்தா ஏதோ தேடிட்டு இருக்க மாதிரி இருக்கு?அப்படி என்ன தேடிட்டு இருக்கீங்க? “ ஆச்சரிய கேள்விக்குரல் வந்தது ராமிடம் இருந்து .
“ இவன் ஒருத்தன் எப்ப பாரு நடுவுல வந்து என்ன பண்றீங்க ? வெண்ண பன்றீங்கனு கேட்டுட்டு … கொஞ்சம் லேட்டா வந்துருக்க கூடாது … பக்கி" என்று ஜீவாவின் மனம் ராமை அர்ச்சித்துக்கொண்டிருந்தது .
“ என்னடா வாய்ல கொழுக்கட்டை வச்சிருக்கீங்கலா ? என்ன தேடிட்டு இருந்திங்க ?" மறுபடியும் கேள்வியின் நாயகனான் ராம் .
சட்டென்று சுதாரித்த விஷ்ணு “ அது …. உங்க ஃபேமிலி ஆல்பம் தான்டா தேடிகிட்டு இருக்கோம் . நீ ஒருநாள் ஜீவாவுக்கு காட்டிட்டு இருந்தியாம். என்கிட்ட இப்பதான் சொன்னான் . எனக்கும் பார்க்கனும் போல இருக்குனு சொன்னேன் . உன் ரூம்லதான் அந்த ஆல்பம் இருக்குன்னு சொன்னான் . உன்கிட்ட தான் கேக்கலாம்னே இருந்தோம் நீதான் வெளிய போய்ட்டியே … அதான் நாங்கலே தேட ஆரம்பிச்சிட்டோம். அந்த ஆல்பம் இருக்குல்ல அதைதான் தேடிக்கிட்டு இருக்கோம் . “ புதிதாக தயாரித்த உடனடி பதிலை அழகாக அளித்தான் விஷ்ணு .
அவனின் பதிலில் தெளிவடைந்த ராம் புன்னகையினூடே “ ஆல்பமா ???? நான் அதை அம்மாகிட்ட எப்பவோ கொடுத்துட்டேன்டா . அப்புறம் அவங்ககிட்ட இருந்து வாங்கிட்டு வரேன் . இப்ப ரொம்ப பிஸிடா… இல்லன்னா நீங்களா அம்மா கிட்ட கேளுங்க … அவங்க அந்த ஆல்பம்ஸை எடுத்து தருவாங்க… நாளைல இருந்து இன்னும் மூனு நாள்ல நம்ம ஊர் திருவிழா ஸ்டார்ட் ஆகிடும் . தொடர்ந்து ஃபைவ் டேஸ் ரொம்ப க்ராண்டா செலிப்ரேட் பண்ணுவாங்க . அதுக்கெல்லாம் நிறைய வேலை இருக்குடா . அப்பா வேற எல்லா மேனேஜ்மென்ட்டும் என்னையே பார்த்துக்க சொல்றாருடா .
நாளைக்கு குலதெய்வ கோவிலுக்கு வேற போகனும்னு அம்மா சொல்லிட்டு இருந்தாங்க … அதுக்கும் போகனும் … பயங்கர பிஸி ஷெட்யூல் மச்சி …. “ என மூச்சு விடாமல் கூறினான் ராம் .
“ என்னடா பண்றது …. பெரிய பொருப்பு வந்துட்டா அதுக்கேத்த மாதிரி வேலையும் செய்யனும் இல்ல … நோகமா நோன்பு கும்பிட முடியுமான்னு சாதரணமாவா சொல்லிருக்காங்க பெரியவங்க…. “ என ராமிற்கு கூறியபடி மனதிற்குள் தனக்கும் சேர்த்தே கூறிக்கொண்டான் விஷ்ணு . “ அப்ப்பா…. விஷ்ணு போதும்…. சாக்ரடீஸ் போல பேச ஸ்டார்ட் பண்ணிடாத வாங்க சும்மா தானே இருக்கீங்க என் கூட வந்து திருவிழாக்கான வேளைகளையாச்சும் உருப்படியா பார்த்துட்டு வரலாம் அப்படியே நம்ம எல்லாரும் வெளியே போன மாதிரியும் ஆச்சு" எனக் கூறி நண்பர்கள் அனைவரையும் வெளியே அழைத்துச் சென்றான் ராம் .
அன்று முழுவதும் அனைவரும் திருவிழாக்கான மின்விளக்குகள் , பூ மாலைகள் , கரகாட்டம், ஒயிலாட்டம், என அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தேவையான எல்லா ஏற்பாட்டையும் செய்துவிட்டு வீட்டிற்க்கு வந்தனர் . இரவுப் பொழுதும் யாருக்கும் காத்திராமல் தன் வேலையைப்பார்க்க சந்திரனுடனும் நட்சத்திரங்களுடனும் வந்துவிட்டது .
அன்று முழுவதும் ராமுடனே இருந்தும் அவனது நடவடிக்கையில் சந்தேகப்படும்படி எதையுமே விஷ்ணுவால் கண்டறிய முடியவில்லை. . அவனுக்கு உண்மையிலேயே எதுவும் தெரியாதா இல்லை அவனின் தேர்ந்த நடிப்பா என்பதும் தெரியவில்லை . இப்படி பல இல்லைகள் விஷ்ணுவின் மூளையை களைப்படையச்செய்து அவனை நித்திராதேவியின் பிடியில் சிக்கவைத்தன.
மறுநாள் பொழுது ….. வழக்கம்போல் ஆதித்யன் தன் ஆயிரக்கணக்கான கரங்களால் பூமாதேவியை ஆரத்தழுவ ஆயத்தமாகிய தருணத்தில் ஆதித்யனின் ஒரு சில கரங்கள் சாளரத்தின் வாயிலாக விஷ்ணுவின் அறைக்குள்ளும் பரவி அவனைத் தழுவி விஷ்ணுவை விழிப்படையச் செய்தது .
குளித்து முடித்து தயாராகி அறையிலிருந்து கூடத்திற்கு இறங்கி வந்தான் விஷ்ணு. அங்கே அனைவரும் ஒருவித பரபரப்புடன் வேலை செய்து கொண்டிருந்தனர் . அங்கே வந்த வேலையாளிடம் “ என்ன அண்ணா இன்னைக்கு ஏதாவது விஷேஷமா ? ஒரே பரபரப்பா இருக்கு வீடெல்லாம் . “ என விசாரித்தான் விஷ்ணு .
“ ஆமா தம்பி … இன்னைக்கு அய்யாவோட குலதெய்வம் கோவிலுக்கு எல்லாரும் கிளம்பறாங்க… அங்க பொங்கல் வச்சு பூஜைக்கு எல்லாம் ஏற்பாடாகியிருக்கு … அதான் தம்பி எல்லாரும் அரக்கப்பரக்க வேலை செஞ்சிட்டு இருக்காங்க" என அந்த வேலையாள் கூறினான் .
"ஓ … அப்படியா ...திருவிழா நடக்குதே அந்த கோவிலுக்குத் தானே எல்லாரும் புறப்பட்றாங்க ?" என விஷ்ணு கேட்டான் .
“ இல்ல தம்பி இது அய்யாவோட குலதெய்வ கோவில் பக்கத்துலதான் இருக்கு அந்த கோவிலும் அதுக்குதான் இப்போ எல்லாரும் கிளம்பிட்டு இருக்காங்க “ என்று கூறிவிட்டு அங்கிருந்து அகன்றான் அவ்வேலையாள்.
அவ்வேலையாள் அங்கிருந்து செல்வதற்கும் வேதா அந்கு வருவதற்கும் சரியாக இருந்தது.கோவிலுக்கு புறப்படுவதால் அன்று புடவை கட்டி இருந்தாள்.
அழகான கரும்பச்சை நிறத்தில் தங்க சரிகையில் நெய்த வனசிருங்கார பார்டருடன் கூடிய புடவையும் அதற்கு தோதாக அழகான கல் வைத்த அட்டிகை, கல் வைத்த பதக்கத்துடன் கூடிய கழுத்துச் சங்கிலி, கல் வைத்த ஜிமிக்கி , தளர பின்னிய கூந்தலில் சரமாய்த் தொடுத்த மல்லிகைப் பூ என கை வளையல்களும் அதற்கு போட்டியாக கால் கொலுசுகளும் சப்திக்க விஷ்ணுவின் அருகில் வந்து நின்றாள்.
விஷ்ணு சாதாரண மனநிலையில் இருந்திருந்தால் இந்நேரம் வேதாவின் அழகில் சற்றுக் கிறங்கி காதல் வசனம் பேசியிருந்திருப்பான் போல … ஆனால் இப்பொழுதுள்ள மனநிலையானது அவளின் சிருங்காரம் எதையும் இவன் கருத்தினிலும் மனத்திலும் பதிய தடைப் பிறப்பித்துக் கொண்டிருந்தது.
"ஹாய் விஷ்ணு சார்… குட் மார்னிங்… என்றபடி அவனை மேலும் கீழும் பார்த்தவள், "என்ன விஷ்ணு இது… இப்படித்தான் கோவிலுக்கு வருவாங்களா… எங்கேயோ கோவாவுக்கு டூர் போற மாதிரி இருக்கு உங்க ட்ரெஸ்… நானே புடவை கட்டி இருக்கேன்… நீங்க வேஷ்டி சட்டை போட்டாதுனே நல்லா இருக்கும் … ராம் உங்களுக்கும் சேர்த்துதான் வேஷ்டி சட்டை வாங்கிருக்கான். நீங்க கீழ வந்ததும் உங்களை அவன் ரூம்க்கு வர சொன்னான்".என்று கூறியவள் தான் புடவை கட்டி இருப்பதை அழுத்தப்படுத்திக் கூறினாள்.
ஆனால் அதை கவனியாதவன் "ஹ்ம்ம் ஓகே வேதா… நான் போய் ராமை பாக்குறேன்" என்றபடி ராமின் அறையை நோக்கிச் சென்றான் விஷ்ணு.
அவன் செல்வதையே கோபக் கண்களுடன் பார்தவள் "அட இடிச்ச புளியே… உனக்காக தானே நான் ஃபர்ஸ்ட் டைம் புடவை எல்லாம் கட்டி இவ்ளோ நகை எல்லாம் போட்டு வந்து நிக்குறேன்… ஒரு வார்த்தை என்னைப் பார்த்து நீ அழகா இருக்க வேதான்னு சொன்னா குறைஞ்சா போய்டுவ… தடிமாட்டுப் பயலே… இரு கோவிலுக்குப் போய்ட்டு வந்த பிறகு உன்னை கவனிச்சிக்கிறேன்" என மனதிற்குள்ளேயே அவனுக்கு சஹஸ்ரநாம அர்ச்சனையை செய்துகொண்டிருந்தாள் வேதா.
விஷ்ணுவும் யோசனையுடனே தான் ராமின் அறைக்குச் சென்றான் . அங்கே ராம் கோவிலுக்கு புறப்படுவதற்காக வேட்டி சட்டையுடன் தயாராகிக்கொண்டிருந்தான் .
“ஹாய் விஷ்ணு குட் மார்னிங் …...கிளம்பி ரெடியாதான் இருக்கியா ? நல்லதாபோச்சு “ என்றவாறே தன் வாட்ரோபிலிருந்து விஷ்ணுவிற்காக வாங்கிய புது வேட்டி சட்டையை எடுத்துக்கொடுத்தான்.
"இந்தா விஷ்ணு … இந்த வேஷ்டி சட்டையை கோவிலுக்கு கட்டிக்கிட்டு வா.. ஜீவாவுக்கும் பாலாவுக்கும் கூட இன்னைக்கு வேஷ்டி சட்டைதான்... இப்பதான் அவங்களுக்கும் கொடுத்தனுப்பினேன்"என்றபடியே பீரோவின் லாக்கரைத் திறந்து
ஒரு சிறிய நகைப் பெட்டியை எடுத்தான் .
“ விஷ்ணு … உனக்கு ரொம்ப நாளா காட்டனும் காட்டனும்னு நினச்சிக்கிட்டு இருந்தேன் . இருக்க வேலைல எல்லாம் மறந்துட்டேன் . இந்தா பிடி இந்த பாக்ஸ கொஞ்சம் திறந்து பாறேன் “ என்றவாறு அந்த பெட்டியை விஷ்ணுவின் கைகளில் திணித்தான் ராம் .
“ அப்படி என்னடா இருக்கு” என்றபடியே யோசனையுடன் அழ்பெட்டியைத் திறந்தான் விஷ்ணு . அதைத் திறந்தவனோ
அதிர்ச்சியில் சிலையாகிப்போனான். பின்னே பாவம் அவன் என்ன செய்வான் தான் நிலவறையில் கண்டெடுத்த ராமின் மோதிரம் தான் அப்பெட்டியில் இருந்தது. இந்த மோதிரம் தன்னிடம் உள்ளபோது எப்படி அது ராமிடம் மீண்டும் வந்திருக்க முடியும் ".என்ற சிந்தனையில் அமிழ்ந்தான் விஷ்ணு .
“ என்னடா ? அப்படி ஒரு ஆச்சரிய பார்வை பாக்குற … இந்த டிஸைன்ல உள்ள மோதிரத்தைதான் எங்க குடும்பத்துல இருக்க எல்லா ஆண்பிள்ளைகளும் போடுவோம் . இது எங்க கொள்ளுதாத்தா காலத்துல இருந்து வந்த பழக்கமாம் . ஏன்னா இந்த டிஸைன்ல மோதிரம் போட்டா அதுவும் ஆண்பிள்ளைங்க போட்டா அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டுன்னு கொட்டுமாம் எவனோ ஒரு ஜோஸிியக்காரன் சொல்லிருக்கான் .அதுல இருந்து ஃபாலோவ் பண்ணிட்டு வராங்க … எனக்கும் இந்த டிஸைன் ரொம்ப பிடிச்சிருந்தது….அதான் நான் எப்பவாவது விஷேஷம்னா போட்டுக்குவேன். அந்த பாம்போட கண்ணைப் பாறேன்…காஸ்ட்லி வைரமாம் எப்படி ஜொலிக்குதுல்ல” என சொல்லிக்கொண்டே அதை எடுத்துக் கையில் அணிந்து கொண்டான் ராம் .
அவன் சொல்வதைக் கேட்க கேட்க ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினான் விஷ்ணு. “ விஷ்ணு …. ஹே விஷ்ணு …. என்னடா அடிக்கடி அமைதி ஆகிட்ற …. உன்னோட எல்லா ஆக்டிவிட்டீஸ்சும் ரொம்ப வியர்டா இருக்குடா…எப்பதான் நீ பழையபடி மாறப்போறியோ?" என சலித்தபடி கூறினான் ராம் .
“ ச்ச ச்ச …அதெல்லாம் எதுவும் இல்லடா…இந்த மோதிரத்தோட டிஸைனதான் பார்த்துக்கிட்டு இருக்கேன்… அது சரி ராம்... உங்க குடும்பத்துல இருக்க எல்லாரும் இந்த மோதிரம் போடுவாங்கன்னா உன்கிட்ட ஒன்னு இருக்கு … வேற யார் யார்கிட்ட எல்லாம் இந்த மோதிரம் இருக்கு ?" என தன் அதி முக்கியமான் கேள்வியில் நிறுத்தினான் விஷ்ணு .
“அதான் ஆண்பிள்ளைகள் மட்டும்தான் போடுவாங்கன்னு சொல்லிட்டேன் இல்லையா …. என்கிட்ட ஒன்னு இருக்கு அப்புறம் என் அப்பா கிட்ட ஒன்னு இருக்கு. “
“ ஹ்ம்ம் அப்போ உன் தாத்தா கொள்ளு தாத்தா யூஸ் பண்ண மோதிரம் எல்லாம் எங்க இருக்கு . “
“ எங்க கொள்ளு தாத்தா யூஸ் பண்ண மோதிரத்தை தான் எங்க அப்பா போட்டுருக்காரு . எங்க தாத்தா யூஸ் பண்ணது என்னோடது . அதாவது இப்போ உன்கையில இருக்குறது என் தாத்தாவோடது “ .
சிந்தனையில் ஆழ்ந்த நம்மவனுக்கு சிறிது சிறிதாக பொறிதட்ட ஆரம்பித்தது .
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro