Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

The Plan no 1

கடத்தல்காரன் ஒருவன் வருவதை கண்டு தாம் ஒளிந்திருந்த கல்லை விட்டு பின்னால் இருந்து கல்லின் பின்னே ஒளிந்து கொண்டனர்.

அக் கடத்தல்காரன் note book ஐ கையில் எடுத்தவுடனே Mr Volter கு அதை தான் இரவு வரைபடத்தை வரைந்து விட்டு pocket ல் போட்டதாக நினைவுக்கு வந்தது.

Mr Volter robin ஐயும் loral ஐயும் கூட்டிக் கொண்டு செல்ல ஆயத்தமாக " uncle நாம இன்னும் என்ன சரி information கிடைக்குதா என்று பார்த்துட்டே போவோம். " என்றான் robin. " No robin, we need to leave from here " என Mr Volter கூட்டிச் சென்றார்.

Mr Volter ன் note book ஐ Mr Paul ன் கையில் கடத்தல்காரன் கொடுக்க அவரும் அதனை திறந்து பார்த்தார். "I have a good news & a bad news" என Mr Paul கூற " say the good news first!" என்றாள் Mrs Paul.

"Good news is that we found the map....Mr Volter ட note book நம்ம கையில கிடச்சுறிச்சி. நினைத்ததை விட வேலை இலகுவாகிறிச்சு..." என Mr Paul கூற " யேன் நாம இன்னும் Wait பண்ணனும் இப்பதே நாம வேலைக்கு இறங்குவோம்!" என Mrs Paul விரைவுபடுத்தினார்.

" bad news அ நான் இன்னும் சொல்ல இல்லையே! Volter ட note book கீழே விழுந்து இருக்கு என்றா அதுட அர்த்தம் அவர் இங்கு இருந்து நாம் சொல்லுறது எல்லாம் கேட்டிருக்கனும்! Mini town cause லயும் Gold Smith அ jail கு அனுப்பின மாதிரி நம்மலயும் jail கு அனுப்பினாலும் அனுப்புவாறு! Volter தான் செய்யுற வேலைய புனிதமாக நினைக்கிற! பண ஆசை இல்ல! அதனால பல Treasure hunters police ல மாட்டி இருக்காங்க! " என Mr Paul கூற " அப்போ நாம என்ன பண்ண போறோம்?" என ஒருவன் கேட்க " Volter ஓட கதைய முடிச்சுருவோம். சின்ன பசங்க இடையில வந்தா அங்களோட கதையையும் முடிச்சிருவோம்...ஒருத்தன போட்டு தள்ளினாலே போதும் மத்தவங்க பயந்துருவாங்க! So guys let's divide into two..." என கடத்தல்காரர் மூவரை Volter யும் பிள்ளைகளையும் தேட அனுப்பி Mr & Mrs Paul உம் மற்ற இருவரும் Treasure ஐ தேடி கிளம்பினர்.

அங்கு குகையில் கண்விழித்த gwen loral, robin & Mr Volter காணமல் பதறிப்போய் danish ஐ எழுப்பாட்டினாள். தூக்கத்தில் இருந்த danish " Hey moana, stone அ கண்டுபிடிக்கிற வேலைய விட்டுட்டு ஏன் இங்க வந்து என்னை எழுப்பாட்டுற?" என வினவ " Moana வா? டேய் danish என்னடா அன்று Elsa என்று சொன்ன இப்ப moana என்று சொல்லுற! அடுத்தது யாருடா sleeping beauty ஆ?" என அவனை அதட்டி கேட்டாள்.

"இல்லை aladin ல வார jasmine அ! Gwen என்னை இன்னும் கொஞ்ச நேரம் தூங்க விடேன்! Adventure scene ல last part ல இருக்கிறேன். " என அடுத்த பக்கம் திரும்பி தூங்கினான் danish.

"இவன்ட மாதிரி தெரிஞ்சு இவன போய் எழுப்பினேன் பாரு! என்னட தலைய போய் சுவர்ல அடிக்கனும் போல இருக்ககே!" என கூறிக் கொண்டே வெளியே சென்றார்.

Gwen சென்றதோ மற்ற மூவரும் சென்ற திசைக்கு எதிர் திசையில். சற்று தூரம் செல்ல செல்ல முன்னால் யாரோ நடமாடுவது போல் தோன்றியது. ஆகவே மேலும் அருகே ஒளிந்து ஒளிந்து சென்றாள். அவளுக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது.

Mr Jay ஏதோ ஒன்றை ஆராய்ந்து கொண்டிருப்பதை அவதானித்தாள். பின்னர் Greeny அவரின் shoulder கு பறந்து வந்து நின்றது. " they are close! They are close " என greeny கத்த " அப்போ greeny கு தெளிவாக பேச இயலுமா?" என அதிர்ச்சியில் இருந்தாள்.

யாரோ அவள் அருகே வந்து நின்று gwen ன் தோளில் கையை வைக்க அவள் அந்த பகுதியே அதிரும் வகையில் கத்தினாள்.

Robin அவளின் வாயை மூடி கத்துவதை நிறுத்தினான். "யேன்டி இவ்வளவு கத்துற காதுல உள்ள செவிகளை மென்சவ்வும் கிழிச்சுறிச்சோ தெரியாது..." என வாயை மூடிய கைகளை எடுத்து தனது காதை மூடிக்கொண்டான்.

"Loosu loosu loosu இப்படி பயங்காடுவியாடா? உசுரு போய்டு வந்தது டா..." என திட்டி கொண்டே போனாள் gwen. "அது சரி நீ என்ன இங்க பண்ணுற? " என loral gwen னிடம் வினவ " எங்க danish உம் Henry உம்???" என Mr Volter தொடர்ந்து கேட்டார்.

" நீங்க மூவரும் குகைல இல்லாத படியால் உங்கள தேடி இங்க வந்தேன். Danish உம் Henry உம் அங்க தூங்கிட்டு இருக்காங்க! நான் இப்போ Mr Jay அ இங்க கண்டேன்...அதோ அந்த இடத்துல! " என gwen காட்ட அங்கு Mr Jay இருக்கவில்லை. "But நான் சொல்லுறது உண்மை...அங்கு இப்போ கொஞ்சத்துக்கு முன்பு Mr Jay இருந்தாரு!" என தான் கண்டவை உண்மை என உறுதியாக கூறினாள்.

"நான் உன்னை நம்புகிறேன் gwen.but நாம இப்போ தனியாக பிரிந்து இருக்க கூடாது. அதோட நமக்கு ஒரு வேலையும் இருக்கு. இப்பவே நாம குகைக்கு கிளம்பனும்..." என Mr Volter கூறி மூவரையும் கூட்டி கொண்டு குகையை நோக்கி புறப்பட்டார்.

போகும் வழியில் loral உம் robin உம் நடந்த அனைத்தையும் கூறி முடித்தனர்.

குகையில் Henry எழுந்தும் danish எழவில்லை. "யாரையும் காணவில்லை. ஒருவேளை என்னை விட்டுட்டு போய்டாங்களோ!" என தனக்குள்ளே பேசிக் கொண்ட Henry கு danish ன் குறட்டை சத்தம் கேட்டு ஆறுதலாக இருந்தது.

தண்ணீரை ஊற்றி நெருப்பை அணைத்த Henry கு வித்தியாசமான ஒரு பொருள் கருகி இருப்பதை கண்டு அதனை மெதுவாக கையில் எடுத்தான்.

எடுக்கும் போதே உள்ளே நுழைந்தனர் Mr Volter உம் மூவரும். "Pendrive pennnndriiiive அதுவும் போச்சே! கருகி இருக்கு! அதயும் use பண்ண முடியாதே!" என Mr Volter அதிர்ச்சியில் இருந்தார்.

"Henry நீ என்ன பண்ண? நமக்கு இருந்த ஒரே வழியையும் போச்சே! " என கோபத்தில் robin கேட்க "what's the hell r u talking about? I didn't do anything. என் மேல சும்மா பலி போடாதே!" என Henry யும் கோபத்தில் உறுமினான்.

"அப்போ எப்படி உனக்கு pendrive கையில கிடச்சது?" என loral வினவ " Are u mad? நீ எப்போ கண்ட நான் அத எடுக்குறத? நெருப்ப அணைக்கும் போது இருந்தது எடுத்தேன்...keep it..." என Henry pendrive ஐ தூக்கி அவர்களுக்கு எறிய; gwen அதனை catch பிடித்தாள். " Hey Henry. நீ பண்ண இல்லை என்றா இல்லை என்று சொல்லு! அத விட்டுட்டு சண்டை பிடிச்சுட்டு இருக்க! " என gwen கூறினாள்.

" Guys stop the fight now...நான் காலையில் எழும்போது தான் அது விழுந்து இருக்கனும். That's my fault! But now we have fallen to a great trouble! நான் the cat island map அ வரைந்த note book கடத்தல்காரர்கள்ட கைக்கு போச்சு...அவனுங்க நம்ம கடத்தினதிக்கு reason ஏ அந்த map அ எடுக்க. அவனுங்க Treasure hunters...அவனுங்க Treasure அ எடுக்க முதல்ல அவங்கள போய் பிடிக்கனும்..." என Mr Volter கூற " அத எப்படி uncle? Map அவனுங்க கையில இன்னுமொரு map இருந்தா அவனுங்க முன்னாடி நாம போய் trap பண்ணி அவனுங்கள பிடிக்கலாம். அதுக்கு ஒரே வழியா pendrive இருந்துச்சு...இப்ப அதுவும் போச்சே!" என robin கேட்க எல்லோரும் அவனின் கூற்றை ஏற்று கொண்டனர்.

"Guys நான் map அ draw பண்ணனால ஒரு இடம் நினைவு இருக்கு. அது இங்கிருந்து அவ்வளவு தூரம் இல்லை. அங்கு தான் Mr Paul அவனுடைய ஆள்களும் போயிருக்கனும்! இன்னும் நேரத்தை வீணடிக்காமல் backpack அ எடுங்க! " என Mr Volter அவசரப்படுத்தினார்.

"Hi guys! Good morning. What's up? எல்லோரும் tension ல இருக்கிற மாதிரி? What happened? " என அப்போது தான் தூக்கத்தில் இருந்து எழுந்து சோம்பல் முறித்து கொண்டு கேட்டான் danish.

"Moana ஓட tour போய் முடிச்சா? நம்மலோட இப்ப சரி வாரியா?" என gwen கோபத்தில் கேட்க danish குழம்பி போனான்.

Gwen ன் compos chain ன் மூலம் பயணத்தை தொடர்ந்தனர்.

அங்கோ Mr Paul உம் அவனுடைய ஆள்களும் map ல் குறிக்கப்பட்ட முதலாவது சிவப்பு நிற அடையாளமிடப்பட்ட இடத்தை அடைந்தனர்....

Thanks for the votes & comments.
Keep supporting.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro