The pendrive
Mr Volter robin னிடமிருந்து கத்தியை வாங்கி அதை ஒரு தடியில் கட்டி இனம் தெரிந்த பழங்களை பறித்தார்.
நால்வரும் பழங்களை சேகரித்து கொண்டு இருக்க Henry மட்டும் கை கட்டிக் கொண்டு இருந்தான்.
"Excuse me mister! உனக்கு தேவையானத நீ தான் எடுத்து கொள்ளனும். உங்க வீட்டுல இருக்கிற மாதிரி சொகுசா இந்த காட்டுல இருக்க முடியாது! " என loral கூற " That's not your business! உன் வேலைய மட்டும் நீ பாரு! " என Henry கோபத்துடன் கத்தினான்.
" Hey boy pick some fruits, இல்லாவிட்டால் பசியில் இருக்க வேண்டி வரும்! " என்றார் Mr Volter. அவனோ தன் தகுதியை நினைத்து பேசாமல் இருந்தான்.
அங்கு மூவரும் loral ஐ அழைத்து " loral ஒன்னும் சொல்ல போகாதே! அவன் நல்லது சொன்னாலும் கேட்க மாட்டான்..." என தேற்றிக் கொண்டிருந்தனர்.
பழங்களை எடுத்து கொண்டு பாதுகாப்பான இடத்தை நோக்கி சென்றனர். நேரம் செல்ல செல்ல இருட்டிக்கொண்டே வந்தது. " நிலத்தில இருந்து கொஞ்சம் உயர்வான இடமொன்றாக பார்க்கனும்! " என Mr Volter கூற " uncle, அந்த கற்பாறைகளுக்கு இடையில ஒரு குகை இருக்கிற மாதிரி இருக்குது! கொஞ்சம் உயர்வான இடமும் தான்! " என சில அடிகளுக்கு முன்னால் உள்ள கற்பாறைகளை robin காட்டி கூறினான்.
"ஒருவேளை அங்கு சிங்கம், புலி இருந்தா என்ன பண்ணுறது? " என gwen வினவ "உன்னை கண்டா சிங்கமும் ஓடி போகும்! அந்தளவு பயங்கரமான make up போட்டு இருக்க! " என robin கூறி கிண்டலடித்தான். ஐவரும் சிரிக்க Henry ஓ "பெரிய joke சொல்லிடாரு சிரிக்கிறாங்க!" என முணுமுணுத்து கொண்டே சென்றான்.
குகையினுள் முதலில் Mr Volter சென்று பார்த்து விட்டு வந்து " guys இதுக்குள்ள வேட்டையாடிய மிருங்கள சாப்பிட்டதாக எந்த தடயமும் இல்லை. So சிங்கம் புலி ட குகை ஆக இருக்க முடியாது. " என ஐவரையும் அழைத்து கொண்டு உள்ளே சென்றார்.
பின்னர் robin உம் danish உம் Mr Volter உடன் இணைந்து சில காய்ந்த விறகுகளை கொண்டு வந்தனர். மிருகங்கள் குகையினுள் வராமல் மரப்பட்டை ஒன்றையும் கொண்டு வந்தனர்.
இருட்ட ஆரம்பிக்க குளிர் காற்றும் சேர்ந்து வீசியது. ஆறு பேரும் கீழே அமர்ந்து கொண்டு தீ பற்ற வைத்தனர். "இதுக்கு தான் lighter கொண்டு வந்தேன்!" என்றான் danish ஐ பார்த்து robin. " நீ எங்கோ போக வேண்டிய ஆளு! Cartoon ல வார மாதிரி wizard ஆ மாறி இருக்க!" என கின்டலடித்தான் danish.
தீ பற்றியதும் தங்கள் கொண்டு வந்த உணவுகளை உட்கொண்டனர். Henry கோ பசி வயிற்றைக் கிள்ளியது. அவனின் நிலையை கண்ட gwen தன்னிடமிருந்த மேலதிகமான பழங்களை Mr Volter கு கொடுத்து " uncle நாங்க கொடுத்தா எடுக்க மாட்டான். So நீங்க கொடுங்க! " என்றாள்.
அவளின் உதவி மனப்பான்மையை கண்டு மனம் நெகிழ்ந்தார் Mr Volter. Henry இடம் பழங்களை கொடுக்க, இருந்த பசியில் Mr Volter ன் கையில் இருந்து பழங்களை பறித்து சாப்பிட்டான்.
உண்டு முடிந்ததும் loral " uncle, வீட்டுல இருந்து call பண்ணா என்ன பண்ணுறது? Phone work பண்ணுது இல்லை என்று பதட்டப்படுவாங்களே! " என வினவ " No worry loral! நாம போற தீவிலும் coverage இல்லை என்று சொன்னேன். அதோட நாம 3 days ல யே திரும்பி வருவோம் என்றும் சொல்ல இல்லை. Sometimes 4 or 5 days ஆகும் என்று சொன்னேன்...so guys don't worry. நாம 5 days குள்ள இங்கிருந்து போய்ருவோம்! எனக்கு நம்பிக்கை இருக்கு! " என பிள்ளைகளை தேற்றிக் கொண்டிருந்தார்.
" நாம இங்க வந்ததுக்கு the Golden cat அ பற்றி exploring பண்ணா என்ன?" என robin idea ஐ கூற மற்ற மூவரும் ஆரவாரமிட்டனர். " Oh my God! இந்த குரங்கு கூட்டத்தோட இருக்க வேண்டியதா போச்சே" என தலையில் அடித்து கொண்டான் Henry.
"No no no...I can't...ஏதாவது பிரச்சனை வந்தா என்ன பண்ணுறது! உங்கள வீணா பிரச்சினையில மாட்டி விட ஏலாது! " என Mr Volter robin ன் idea வை மறுத்தார். " Oh Please please...say ok please..." என மூவரும் பூனையை போன்று கண்களை பாவமாக வைத்து கொண்டு கெஞ்சினர்.
" ok ok fine...but நா சொல்லுற படி தான் நடக்கனும்! " என rule ஐயும் போட்டார் Mr Volter. மீண்டும் கூச்சலிட்ட " குரங்கு கூட்டம் தோற்றுடும்!" என நினைத்து கொண்டே Henry படுக்க சென்றான்.
தீ பந்தலை சுற்றி backpack ஐ தலையணையாக பாவித்து ஐவரும் உறங்க செல்ல loral ன் ipad ல் தன்னிடம் the cat island ஐ பற்றி இருந்த pendrive ஐ அதில் செருகி தனது note book ல் map ஐ தனக்கு விளங்குமாறு வரைந்து கொண்டார்.
Mr Volter உம் tired ஆல் நின்ற நிலையிலே தூக்கம் சென்றது. காலையில் ஏதோ ஆட்களின் சத்தம் கேட்க திடீரென கண் விளித்தார் Mr Volter.
என்ன ஏது என்று பார்க்க செல்ல விரைவாக தன் அமர்விடத்தை விட்டு எழுந்தார். ஏதோ தன் மடியில் இருந்து விழுந்ததை போன்று உணர சற்று கீழே குனிந்து பார்த்தார். ஆயினும் ஒன்றும் தன் கண்களுக்கு படவில்லை. அதனை ஆராயும் நிலையிலும் அவர் இருக்கவில்லை.
உடனடியாக குகையை விட்டு வெளியே சத்தம் வரும் திசையை நோக்கி நடந்தார். robin ன் கண்களை சூரிய ஒளி தீண்டியதால் அவனும் விழித்து கொண்டான். Mr Volter இல்லாததை கண்டு சற்று பதற்றத்துடன் loral ஐ எழுப்பிக் கொண்டு வெளியே சென்றான்.
சில அடிகள் தாண்டி Mr Volter நடப்பதை கண்டு இவர்களும் அவரின் பின்னால் ஓடினர்.
" uncle uncle Mr Volter !" சற்று சத்தமாக கூப்பிட அவரோ விரலை உதட்டின் மேல் வைத்து சத்தமிட வேண்டாம் என்றார். சிறிது நேரத்தில் சிலரின் பேச்சு சத்தம் கேட்க அருகில் உள்ள கல்லின் பின்னால் ஒழிந்தவாறு யார் என்று அவதானித்தனர்.
Mr Volter ன் அனுமானம் சரியாகவே அமைந்தது. அது அந்த கடத்தல்காரர்கள் தான். அவர்கள் பேசுபவை ஓரளவு கேட்க கூடியதாக இருந்தது. அதில் Mr Paul "நாம இந்த காட்டை பீறிட்டு சரி Volter அ கண்டுபிடிக்கனும்! அவன்கிட்ட தான் எனக்கு தேவையான ஒரு பொருள் இருக்கு! அந்த pendrive! அந்த pendrive மட்டும் கைல கிடைச்சது என்றால் நான் கோடீஸ்வரன் தான்! " என உறுமிக் கொண்டிருக்க " Excuse me! " என பெண் குரல் ஒன்று பின்னால் கேட்டது.
" Oh! My sweety! நான் கோடீஸ்வரன் ஆகினா உன்ன இராணி மாதிரி உன்ன பாத்துக்குப்பேன்! " என Mrs Paul ஐ Mr Paul சமாளித்தார்.
"Sir நாம அவனுங்க மயங்கினப்போ bags check பண்ணோம் but அதுல pendrive இருக்கலயே! " என்றான் ஒருவன். " loosu பயலுகளா! அவ்வளவு பெறுமதியான ஒரு பொருள் அ careless ஆ வைப்பாங்க! முதல்ல அவன் அ பிடிச்சு மிரட்டனும் அதுக்கு பிறகு தானா pendrive கைல கிடக்கும்!" என்றார் ஆவேசமாக Mr Paul.
" நாம எத வைச்சு மிரட்ட போறோம்?" என இன்னுமொருவன் வினவ " அதுக்கு தானே கடவுள் தந்த வரம் போல சின்ன பசங்க இருக்குறாங்க! அவனுங்க யாராவது ஒருத்தர பிடிச்சா போதும்... so நாம பிரிச்சு போகனும்! " என தனது plan ஐ இரகசியமாக கூறிக் கொண்டிருந்தான்.
robin அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்க முன்னோக்கி ஒரு அடி எடுத்து வைத்தான். தற்செயலாக அவன் வைத்தது ஒரு உலர்ந்த கம்பின் மேல். ஆகவே கம்பு முறியும் சத்தம் கேட்க யாரோ இருப்பதாக கடத்தல்காரர்கள் அறிந்து கொண்டனர். Mr Paul கண்ணால் போய் பார்க்க சொல்ல ஒருவன் இவர்கள் இருக்கும் இடத்தை மெதுமெதுவாக வந்தடைந்தனர்.
ஆனால் அங்கு எவரும் இருக்கவில்லை மாறாக Mr Volter ன் map குறிக்கப்பட்ட note book விழுந்திருக்க அதனை கையில் எடுத்தான் கடத்தல்காரர்களில் ஒருவன்.......
.
.
.
அங்கோ pendrive தீயில் கருகி கொண்டிருந்தது....
Thanks for the votes & comments.
Keep supporting.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro