Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

The map

தனது office கு Mr Volter கூட்டிச் செல்ல பின்னால் இரண்டு நபர்கள் அவர்களை follow பண்ணிச் சென்றனர்.

Office ல் வேலை செய்பவர்களிடம் நால்வரையும் அறிமுகப்படுத்த அவர்களும் ஆரவாரமாக உபசரித்தனர். Mr Volter தனது வேலை செய்யும் அறைக்கு கூட்டிச் செல்ல அங்கு அவரின் வீட்டில் உள்ள Library ஐ விட பெரிதாக இருந்தது.

Exploring செய்த சில இடங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் details யும் நண்பர்களுக்கு காட்ட அவர்களும் ஆர்வத்துடன் பார்த்து கொண்டிருந்தனர். அப்புகைப்படத்தில் பல languages ல் எழுதப்பட்ட புத்தகங்கள் மற்றும் கல்வெட்டுகள் காணப்பட்டன. "Mr Volter, இந்த languages எல்லாம் உங்களுக்கு தெரியுமா? " என வியப்புடன் robin கேட்க " No, not all... we have an instrument; that can be translated. உலகத்துல most popular பேசப்படுற 6 500 languages அ translate பண்ணும்." என அந்த சிறிய bag ல் போடக்கூடியவாறான instrument ஐ காட்டினார் Mr Volter.

"Wooow, அப்போ oldest languages ஆன tamil, sanskit & Egyptian எல்லாம் translate பண்ணுமா?" என loral வினவ ஆம் என்று தலை அசைத்தார்.

"அப்போ top 5 languages ஆன Chinese, Spanish, English, hindi & arabic?" என gwen கேட்க அதற்கும் ஆம் என்றார்.

"அப்போ sweetest language ஆன bengali? " என danish கேட்க " ஆமா ஆமா" என்றார் Mr Volter.

"It's awesome! Mr Volter நீங்க உங்க friend தந்ததாக சொன்ன pen drive ல உள்ள details அ காட்டுறதா சொன்னீங்களே! " என robin ஆர்வத்துடன் கேட்க "Oh i forgot it! அது வீட்டுல இருக்குது போல! I will bring to ur home in the evening. " என Mr Volter கூறி office ஐ சுற்றி காட்டினார்.

நேரம் செல்ல evening உம் ஆகியது Mr Volter gwen ன் வீட்டிற்கு வந்தார். சிறிது உரையாடலின் பின் நண்பர்கள் நால்வரும் Mr Volter உம் pendrive ஐ laptop ல் போட அதில் mexico உம் அதனை சுற்றியுள்ள தீவுகளை பற்றியும் இருந்தது. அதில் archaeologists சில பேரால் கண்டுபிடிக்கப்பட்ட புராதன நகரங்கள் மற்றும் இடங்கள் இருந்தன.

அதில் வித்தியாசமான ஒரு தீவை பற்றி இருக்க "The cat island" என type பண்ணப்பட்டதை robin வாசித்தான். "What's an interesting name that is! " என gwen கேட்க மற்றவர்களும் அதனை ஆமோதித்தனர்.

" இந்த island மேலிருந்து பார்க்கும் போது cat shape ல இருக்கும். இது special ஆன island. இந்த island கு world famous areologist மட்டுமே அங்கு போய் உள்ளாங்க! அதோட அங்கு பழமை வாய்ந்த the golden cat எனப்படும் சிலை காணப்படுது." என cat island ஐ பற்றி Mr Volter விளக்க அவரை இடைமறித்து " what??? The golden cat??? அது cartoon ல வார garfield மாதிரியா? " என danish ஆர்வத்துடன் வினவினான்.

"Oh danish, I don't know about garfield... but இந்த சிலையின் பின் பெரிய ஒரு இரகசியமான கதை ஒன்று இருக்கிறது " என Mr Volter கூற அனைவரும் அதனை கேட்க ஆர்வமாக இருந்தனர்.
"I'm sorry children, I don't have enough details about that...if I found it I'll tell u all" என கவலையாக கூறி pendrive ல் இன்னும் ஏதாவது detail கிடைக்குமா என்று தேடினர்.

அதில் ஒரு புத்தகம் ஒன்று அந்த சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்தது. அதனை கண்ட robin "இதை எங்கயோ கண்ட மாதிரி தானே friends" என dots ஆல் எழுதப்பட்ட golden cover page உள்ள அப் புத்தகத்தை சுட்டிக்காட்டி கூறினான். "Yaah robin. Mr Jay ன் வீட்டுல இருந்த Book தானே! " என loral கூற மற்ற இருவரும் ஆம் என்றனர்.

"No it can't be! இது 100 வருடங்களுக்கு முன்பு the Golden cat சிலையின் பாதுகாப்புக்காக சில பேர் அதை தீ குண்டத்தில் போட்டு எரிச்சாங்க. நீங்க நால்வரும் கண்டது வேறு புத்தகமாக இருக்கனும். It can't be! " என Mr Volter உறுதியாக கூற நால்வரும் அதிர்ந்தனர். அவர்கள் கண்டது பொய்யும் அல்ல ஆனால் 100 வருடங்களுக்கு முன்பு எரிக்கப்பட்டது எப்படி Mr Jay ன் வீட்டுக்கு வந்தது என்று குழம்பி நின்றனர்.

மீண்டும் தொடர்ச்சியாக பார்த்து கொண்டிருக்க cat island ன் வரைபடம் ஒன்று இருந்தது. அது பூனை ஒன்றின் வடிவில் எல்லைப்படுத்தப்பட்டதாகவும் , அவ்வரைபடத்தில் 4 இடங்கள் அதாவது N 45* E , N 50* S , S 30* W , S 15* E என 4 இடங்கள் Red Cross செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதற்கான காரணம் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

அதே போன்ற இன்னுமொரு வரைபடம் கீழே காணப்பட அதில் சரி நடுவில் அதாவது பூனையின் கழுத்து பகுதிக்கும் வயிறு பகுதிக்கும் இடையில் பெரிய ஒரு Red Cross உம் காணப்பட்டது.

இவை அனைத்தும் பார்த்து ஐவரும் குழம்பி போனர். சற்று நேரத்தில் இவர்கள் அமர்ந்திருந்த sofa கு பின்னால் உள்ள யன்னல் அருகே யாரோ நிற்பது போல ஒரு கறுப்பு உருவம் கண்ணாடியில் reflect ஆகி gwen கு விளங்கியது. அவள் திடீரென திரும்பி பார்க்க அங்கு யாரும் இருக்கவில்லை. அவள் தன்னுடைய கற்பனையே என்று விட்டு விட்டாள்.

அதை தொடர்ந்து gwen ன் அம்மா gwen ஐ அழைப்பதற்காக அவளின் தோலை தொட அவளோ ஏற்கனவே பயந்திருந்ததால் இதுவும் அந்த உருவம் என நினைத்து கத்தினாள். Gwen ன் அம்மா பயந்து போய் "Gwen நான் தான்...உன் அம்மா...என்ன நடந்தது? " என கேட்க அவளோ "இல்லை நான் வேறு யாரோ என்று நினைச்சேன்" பெருமூச்சு ஒன்றை விட்டாள்.

"இதுக்கு தான் aunt கூடுதலா horror movie பார்க்க கூடாது என்று சொல்லுவாங்க! என்னை போல Cartoons பார்க்க சொல்லி..." என danish அவனையே புகழ்ந்து கொண்டான். அவனின் கதையில் சிரித்த gwen ன் அம்மா " Mr Volter, dinner ஐயும் சாப்பிட்டுடே போங்க! " கூற பின்னால் gwen ன் அப்பா "இங்கா எல்லோரும் இருக்கிறீங்க! அப்படியே திரும்பி photo கு pose கொடுங்க.." என கூறி Mr Volter உடன் நால்வரையும் இருக்கும் இடத்தில் வைத்தே photo எடுத்தார்.

அவர்கள் சென்ற பின்னர் மீண்டும் ஏதாவது details கிடைக்குமா என்று எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. ஆகவே அனைவரும் dinner சாப்பிட சென்றனர்.

Mr Volter போகும் போது நாளை நால்வருக்கும் ஒரு surprise இருப்பதாகவும் மேலும் இன்னும் details கிடைத்தால் கூறுவதாகவும் கூறி விடைப்பெற்று சென்றார்.

நால்வரும் களைப்பில் உறங்க சென்றனர். வழமை போல danish உம் robin உம் சண்டை பிடித்து கொண்டே உறங்கினர்.

Loral அவளின் ipad ல் cat island ஐ பற்றி search பண்ணி கொண்டிருக்க gwen அவளிடம் Mr Volter கூறியதை ஞாபகமூட்டிக் கொண்டிருந்தாள்.

Gwen ன் யன்னல் அருகே அமர்ந்திருந்த கிளி ஒன்று Mr Jay ன் வீட்டிற்கு பறந்து சென்றது. Greeny ஐ தோலுக்கு மேல் வைத்து அதன் காலில் கட்டப்பட்ட camera ஐ எடுத்தார் Mr Jay ஒரு வகை புன்னகையில்.

Thanks for the votes & comments
Keep supporting

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro