The last clue
கழுத்து வரை நீர் உயர்ந்து கொண்டே செல்ல; என்ன செய்வது என்று தெரியாமல் பயந்து போய் இருந்தனர்.
Robin " Hey Henry & Danish, can u two lift me?" என வினவ "எதற்கு? என்ன செய்ய போறோம்? " என கேட்டான் Henry. "No more time! Trust me!" என கூற இருவரும் இணைந்து அவனை தூக்கினர்.
இருவரினதும் கழுத்தை தாண்டி நீர் உயர அதனையும் பொருட்படுத்தாமல் robin ஐ தூக்கி பிடித்து கொண்டிருந்தனர். Robin தனது backpack ஐ திறந்து தனது Grand ma தந்ததாக gwen ன் அம்மா கையளித்த instrument பெட்டியில் இருந்த உரசினால் தீ பற்றும் கற்களை கொண்டு தீ பொறிகளை உருவாக்கினான்.
தற்போது நீரின் மட்டம் robin ஐ தவிர மற்றவர்களின் வாயையும் தாண்டியது. தீ பொறிகள் வெடிபொருட்களில் பட அது தீ பற்ற ஆரம்பித்தது. உயரே வைக்கப்பட்ட வெடிபொருட்களும் நீரில் நனைய அந்தா இந்தாவாக இருந்தது.
Robin உம் கீழே இறங்க அனைவரினதும் மூக்கு நுனி வரை நீர் மட்டம் உயர்ந்தது. அனைவரும் கண்களை மூடி பிராத்திக்க பாரிய வெடிப்பு சத்தம் கேட்டது. கண்களை திறக்க அக் கதவு திறப்பட்டு நீர் அவ்வாயிலாக வெளியேறிக் கொண்டிருந்தது.
ஒருவாறு ஆறு பேரும் உயிர் தப்பினர். "நாம இன்னும் கொஞ்ச நேரம் அங்க இருந்து இருந்தா அவ்வளவு தான்! " என முட்டுகாலை ஊன்றியவாறு மூச்சு விட்ட படி கூறினாள் loral.
"என் jungle hair style எல்லாம் போச்சே!" என்றாள் gwen. "இந்த நேரத்துல style ஒன்னு தான் ரொம்ப முக்கியம்! " என்றான் robin.
Danish ஓ "நீ ஏன்டா backpack ல வெடிபொருள் எல்லாம் வைச்சிருக்க? " என Henry யிடம் வினவ அவனோ " gwen ட வீட்டுல நீங்க தூங்குறப்ப யன்னல் அருகில போட தான் plan பண்ணேன்! என்ன செய்ய இதற்கு use ஆகிறிச்சு! " என சலித்து கொண்டான்.
" Guys! We found the fourth clue! " என்றார் Mr Benjamin. ஐவரும் அவரை நோக்க Mr Benjamin கு சற்று முன்னால் கற்படிக்கல் ஒன்றின் மீது தங்கத்தால் வடிவமைக்கப்பட்ட brush ஒன்று இருந்தது.
" இது தலை வார use ஆகுற comb ஆ?" என Henry வினவ "நீயும் danish ஓட சேர்ந்து loosu தனமாக கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்ட" என gwen கூறினாள்.
"இதை இப்படி எடுத்தாச்சு! போட்டாச்சு!" என யாரும் எதையும் கூற முன்னர் அந்த Golden brush ஐ எடுத்து தன் backpack ல் போட்டான். " டேய்...." என ஐவரும் danish அருகில் வர முன்னரே பெரிய அலை ஒன்று வந்து இவர்களை அடித்து கொண்டு சென்றது.
அனைவரும் வெளி வாயிலாக தூக்கி எறியப்பட்டனர். "ஒருவழியாக வெளிய வந்துட்டோம்!" என robin கூற "சீச்சீ..." என்றான் danish. "யேன்டா danish" என loral வினவ " இரண்டு முறை குளிச்சாச்சு...but backpack ல இருந்த soap அ எடுத்து பூச மறந்துட்டேன்!" என்றான் danish.
"போடா நீ எல்லாம்!" என Henry கூற வர "அடுத்தது நாம என்ன செய்ய போறோம்! " என robin Mr Benjamin னிடம் கேட்டான்.
"The golden cat உள்ள இடத்துக்கு போக முன்னாடி Mr Paul எடுத்த first clue அ நாம எடுக்கனும். But அது எப்படி என்று தான் தெரியல்ல!" என்றார் Mr Benjamin.
"நாம முதல்ல rest எடுப்போமே!" என loral கூற "ok நாம கொஞ்சம் தூரம் நடப்போம். இளைபாற safe ஆன இடம் கிடைக்கிற வர!" என Mr Benjamin கூற அனைவரும் நடையை கட்டினர்.
சிறிது தூரம் நடக்க இவர்களின் அருகாமையால் பச்சை கிளி ஒன்று பறந்தது. " Hey robin, இது Mr Jay ட pet, greeny போல இருக்கு!" என loral கூற மற்ற நால்வரும் அது போல தான் என்றனர்.
Mr Benjamin கோ இவர்கள் பேசுவது காதில் விழவில்லை. ஆறு பேரும் அரட்டைகளுடன் செல்ல; திடீரென இவர்களை ஒரு இரும்பாலான பெட்டி மேலிருந்து விழுந்து இவர்களை அடைத்து கொண்டது.
" Oh no!!!" என ஐவரும் கத்த "guys, பயப்படாம இருங்க! ஒன்னா இருங்க! யாரோ நம்மல follow பண்ணி இருக்காங்க! இங்க வாரது அவனுங்களுக்கு தெரிஞ்சு இருக்கு! தப்பிக்க வழி எப்படி சரி கிடைக்கும்! " என தைரியமூட்டினார் Mr Benjamin.
"எங்கயும் தப்பிக்க முடியாது! " என்றவாறே Mr Paul & Mrs Paul முன்னால் வந்து நின்றனர். அவர்களின் பின்னால் இரு அடியாட்களும் வந்து நின்றனர்.
"நான் நினைச்சேன்! " என robin கூற ஆறு பேரையும் கூட்டுக்குள் இருந்து வெளியே எடுத்து கைகளை கயிற்றினால் கட்டி அவர்களின் கூடாரத்திற்கு அழைத்து சென்றனர்.
நண்பர்கள் ஐவரையும் ஒரு கூடாரத்தில் தூண் ஒன்றில் சுற்றி வர கட்டினர். பின்னால் இரு கைகளையும் முன்னால் இரு கால்களையும் கட்டி அமர வைத்தனர்.
"Welldone boys & girls! நமக்கு வேண்டியதை நம்ம காலடிக்கே கொண்டு வந்து தந்து விட்டீங்க! நாங்களா clue அ தேடி கட்டிடங்களுக்கு போயிருந்தாலும் சிலவேளை உயிரோட திரும்பி வந்திருக்க மாட்டோம். நீங்க ஆறு பேரும் புத்திசாதூர்யமா செயல்பட்டு இருக்கீங்க! Good job. இப்போது மீதி வேலையை நாம பாக்குறோம்! நாம பணக்காரர்கள் ஆகுறதற்கு ரொம்ப காலம் ஆகாது! ஆஹ் ஆஹ் ஆஹா!" என Mr Paul வெறித்தனமாக சிரித்தார். இடையில் அவரின் தொண்டை புறகேறியது.
இதனை கண்ட danish இழிக்க என்னடா என ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்டான் Mr Paul. இல்லை என danish தலையை ஆட்டி சிரிப்பை அடக்கிக் கொண்டான்.
"நல்லா சிரிங்க! இப்போதே சிரிச்சிருங்க! இன்று இரவு இங்கு வேட்டையில அலையுற ஓநாய்களுக்கு சாப்பாடு நீங்கள் தான்!" என Mrs Paul கூறி அவரும் வெறித்தனமாக சிரித்தாள்.
"ஆமா உங்களோட வந்த கிழவன் எங்க? அவரு வேற ஆதிவாசிகள் கிட்ட மாட்டி கொண்டாரே! இப்போது உங்க காப்பாற்றவும் நாங்க புதையல கொள்ளையடிக்கிறத தடுக்கவும் யாரும் வரமாட்டாங்க!" என Mr Paul அதிரடியாக கூற அனைவரும் இவர்களுக்கு எப்படி தெரியும் என திகைத்தனர்.
" இந்த கிழவனை எமது கூடாரத்திற்கு கூட்டி போய் மேலதிக தகவல்களை கேட்டு கொள்ளுவோம்...சொல்லா விட்டா முதுகுல இரண்டு போடு போடா சரி. டேய் பசங்களா இவனை இழுத்துட்டு வாங்க! " என Mrs Paul கூறி விட்டு அடுத்த கூடாரத்திற்கு சென்றாள்.
Mr Benjamin ஐ அடுத்த கூடாரத்திற்கு இரு அடியாட்களும் இழுத்து கொண்டு செல்ல " பயப்படாதீங்க Children!!! நாம தப்பிச்சு போவோம். நம்பிக்கையை இழக்க வேண்டாம். என்னை பற்றி கவலைபட வேண்டாம்." என தைரியமூட்டி விட்டு இழுபடும் திசையில் சென்றார்.
Mr Paul 3 clues ஐ வைத்திருந்த robin ன் backpack ஐ எடுத்து கொண்டு வெற்றி நடையுடன் நமட்டு புன்னகையிட்டு விட்டு சென்றான் .
இரு அடியாட்களும் நண்பர்கள் ஐவரும் தப்பித்து போகாது இருக்க கூடாரத்திற்கு வெளியே தென்படும் வண்ணம் இருந்தனர்.
"இப்போ எப்படி டா தப்பிக்கிறது?" என robin னிடம் Henry வினவ "கட்டி இருக்கிற கயிற்றை கழற்ற ஏதாவது வழி இருக்கா?" என மற்றவர்களிடம் robin வினவினான்.
"நீ mango வெட்ட கொண்டு வந்த கத்தி எங்க?" என gwen வினவ " அது backpack ல இருந்துச்சு. Backpack அ அவனுங்க எடுத்துட்டு போய்டாங்களே!" என கூறிக் கொண்டிருக்க ஏதோ நினைவுக்கு வந்தது.
Loral ன் காதருகில் வந்து ஏதோ கூற அவளும் தலையசைத்தாள். சில வினாடிகளில் loral "Help me! Please someone help me! எனக்கு ஏதோ நடக்குற மாதிரி இருக்கு! எல்லாம் இரண்டாக விளங்குது! give me water! Please!" என கதறினாள்.
Robin ன் plan ஆக இருக்க வேண்டும் என எண்ணிய மற்றவர்களும் இரு அடியாட்களை நோக்கி "please bring some water! அதோ table ல உள்ள water glass அ சரி தாங்க!" என robin கூற "ஆமா! உடம்பு ல 70% water காணப்படுற Healthy ஆக இருக்குறவங்கள தான் ஓநாய்கள் சாப்பிடும்.normal healthy person ட உடம்புல இருக்கும் water contain 70%. So please bring some water! " என்றான் danish.
"இது எல்லாம் ஏன்டா அவன்களுக்கு சொல்லற?" என காதருகில் Henry danish னிடம் வினவ அவன் " கூடுதலாக பேசினால் தான் சீக்கிரமா reaction அ காட்டுவாங்க!" என்றான். "நீ வேற level டா!" என்றான் Henry மெதுவாக!
"Please இவளுக்கு மூச்சு திணறுது!" என gwen பதற்றத்துடன் கூறினாள். வேறு வழியில்லாமல் ஒரு அடியான் மற்றவனுக்கு கண் காட்ட அவன் water glass ஐ எடுத்து கொண்டு வந்தான்.
Loral மூச்சு திணறியவாறு act பண்ண அவள் அருகே அடியாள் வந்து glass ஐ நீட்டினான். அருகில் வந்த அடியாளை தனது காலால் உதைக்க அவன் கொண்டு வந்த glass கீழே விழுந்து சிதறியது.
"Oscar விருது எடுக்குற மாதிரி act பண்ணா இப்படி தான் நடக்கும்! " என்றான் Henry. அடியாளோ loral ஐ கொலை வெறியில் பார்த்தான்...
Thanks for the votes & comments.
Keep supporting.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro