The Book
Mr Benjamin உள்ளே இருக்க கட்டிட வாயில் மூடிப்பட்டது. ஒருவர் மாறி ஒருவர் Mr Benjamin ஐ அழைத்தும் உள்ளிருந்து சத்தம் வெளியே வரவில்லை.
"Waste of time! கட்டிடம் இடிச்சு விழுந்ததால வேறு வழிகள் உருவாகி இருக்கலாம். Come on guys! Let's find! " என Peter அனைவரையும் அழைத்து கொண்டு கட்டிடத்தை சுற்றி வர ஆராய்ந்தனர்.
கட்டிடத்தின் ஒரு பகுதியில் பள்ளம் போன்ற ஒன்று இருக்க அதிலிருந்து யாரோ வெளியே வர முயற்சிப்பது போன்று சத்தம் கேட்டது.
" Mr Benjamin, is that you?" என robin வினவ " ஆமா நானே தான். Can you help me? " என Mr Benjamin ன் சத்தம் கேட்டது.
Peter ன் backpack ல் இருந்த கயிற்றை கொண்டு Mr Benjamin ஐ வெளியே எடுத்தனர்.
"எப்படி தப்பினீங்க?" என loral வினவ " உங்க பின்னாலயே ஓடி வரும் போது நீங்க கடந்த வாயிலுக்கு வர எனக்கு நேரம் போதாது என்று உணர்ந்தேன். Exploring ல பல experience இருக்குறதால இடிகின்ற கட்டிடங்கள் சிலவேளை வெளியேற வழிகளை உருவாக்கும் என்று தெரியும். இங்கும் அதே தான் நடந்துச்சு. வெளிச்சத்தை கண்டு அதை நோக்கி வந்தேன். நீங்களும் என்னை கண்டுபிடிச்சிடீங்க! Robin, Mr Volter அ காப்பாற்ற தேவையானது!" என தண்ணீரை குடித்து கொண்டு தங்க நூல் பந்தை robin ன் கையில் கொடுத்தார்.
"Thank you so much Benjamin uncle! நீங்க, Peter bro, miss Rosy இல்லாமல் இருந்து இருந்தா நாம இதை சென்சுறுக்க மாட்டோம்!" என robin மூவரிடமும் நன்றி கூறினான்.
"Oouch! ஆஆஆய்!" என பின்னால் சத்தம் வர அனைவரும் திரும்பி பார்த்தனர். Miss Rosy கு தலைசுற்றல் வந்ததை போல சரிந்தார். Peter அவரை பிடித்து உட்கார வைத்தார். "Ma'am are you all right! கண்ணை திறந்து பாருங்க!" என Peter Miss Rosy ன் கன்னத்தை தட்டி கேட்டாலும் எந்தவொரு பதிலும் வரவில்லை.
"Guys, Ma'am ட கால் Blue colour ஆ ஆகிட்டு வருகிறது! " என gwen கூற Mr Benjamin " இது ஏதோ விஷ பூச்சி கடித்திருக்கு! இது பாம்பாக இருக்க முடியாது because கடித்த அச்சு இரண்டாக இருந்தால் தான் அது பாம்பு கடித்ததற்கு அடையாளம்!" என பாதத்தின் அடியில் இருந்த Mark ஐ வைத்து ஊகித்தார்.
"முதல்ல first aid பண்ணுவோம்!" என Peter கூற gwen தனது first aid box ஐ வெளியில் எடுத்தாள். Loral mineral water bottle லுள்ள சுத்தமான நீர் மூலம் Miss Rosy ன் பாதத்தை சவர்காரமிட்டு கழுவினாள்.
ஒரு துணியை எடுத்து விஷம் உடலெங்கும் பரவாமல் இருக்க முழங்காலுக்கு சற்று கீழே இறுக்கமாக கட்டிவிட்டார் Mr Benjamin.
" மேலதிக treatment கு hospital கு கூட்டி போகனும்!" என Mr Benjamin கூற " இங்க எங்க hospital இருக்குது! திரும்பி mexico கு போற என்றாலும் நேரம் போதாதே!" என Peter பதறி போய் கூறினார்.
"இவரு over ஆ Miss Rosy ய care பண்ணுறாறே! Miss Rosy ய பற்றி தெரியாது அவருக்கு! ஏதாவது தப்பு சென்ஞா நம்மல குதிகால் அ நிற்க வைப்பா! Peter Bro பெரிய ஆள் என்றதால தலை கீழா தான் தொங்க விடுவா! போய் சொல்லிட்டு வாறேன்!" என கூறிக் கொண்டே Peter இடம் danish செல்ல பார்க்க " உனக்கு serious ஆகவே இருக்க தெரியாதாடா!" என gwen பொறிந்தாள்.
Danish ஏதோ சொல்ல வர " guys! அங்க பாருங்க! அவங்க ஆதிவாசிகள் தானே! நாம அவங்க கிட்ட Help கேட்போமா?" என Henry இரண்டு ஆதிவாசிகளை காட்டி கூறினான்.
Robin, Henry மற்றும் Mr Benjamin அவர்களிடம் சென்று translating machine ஐ பயன்படுத்தி அவர்களிடம் தங்களது நிலைமைகளை கூறினர். அவர்களும் உதவுவதாக முன்வந்தனர்.
"நமக்கிட்ட இப்போது மருந்து ஒன்றும் கையில் இல்லை. நமது கூடாரம் இங்கு பக்கத்துல தான் இருக்கு! அங்க கூட்டி வாங்க!" என்றான் ஒருவன்.
" ஆனால் இப்படி திருடவந்தவங்களுக்கு உதவி செய்யுறது தெரிந்தால் தலைவர் எங்க தலையை எடுப்பாரு. நீங்க நல்லவங்களா கெட்டவங்களா என்று எங்களுக்கு தெரியாது! ஆனால் உயிருக்கு போராடுரவங்கள அப்படியே விட்டுட்டு போற அளவு கொடுமையானவங்க நாங்க இல்லை. எல்லாரும் வந்தால் தலைவருக்கு சந்தேகம் வரும் அதனால இவவோட கூட ஒருத்தர் மட்டும் வாங்க! மத்தவங்க உங்களோட task அ முடிக்க பாருங்க!" என்றான் இன்னுமொருவன்.
"ரொம்ப thanks! வாழ்க்கைல இந்த உதவிய நான் மறக்கமாட்டேன். நான் Miss Rosy கூட வாறேன். " என கூறி Peter ஆதிவாசிகளின் கூடாரத்திற்கு Miss Rosy ஐ தூக்கிக் கொண்டு சென்றார்.
மீதி இருந்த நண்பர்கள் ஐவரும் Mr Benjamin உம் பயணத்தை தொடர்ந்தனர். இருட்டிக் கொண்டு வர பாதுகாப்பான இடமொன்றில் கூடாரம் அடித்தனர்.
Mr Benjamin கு கூடாரம் அடிக்க loral உம் Gwen உம் உதவ நம்ம ஆண் சிங்கங்கள் ஆன robin, danish மற்றும் Henry விறகுகளை கொண்டு வர சென்றனர்.
"டேய் Henry, நம்ம Peter Bro கு Miss Rosy மீது ரொம்ப தான் அக்கறை டா!" என danish கடுப்பேத்த Henry ஒரு முறை முறைத்தான். அவனை வம்பிழுக்க நினைத்த robin " ஆமா எனக்கு என்னமோ Peter நம்ம Ma'am கு விருப்பம் போல விளங்குது! எனக்கு என்றால் double ok! Sweet couple! Henry உனக்கு? " என கண்ணடித்து கேட்டான்.
"என்னை வம்பிழுக்க பார்க்குறீங்க என்று விளங்குது! But நான் அந்த mood ல இல்லை! அதோட my favourite Ma'am தான் அவங்க வேற ஒன்னும் இல்ல! ஆனால் Peter கு இருக்கு!" என தன்பாட்டுக்கு திட்டிக்கொண்டே சென்றான் Henry.
விறகுகளை எடுக்க சென்ற danish ன் முன்னால் யாரோ ஒருவரின் கூடாரம் கண்ணில் பட்டது. ஆனால் அந்த கூடாரத்தில் மனித நடமாட்டம் இருக்கவில்லை.
அங்கிருந்து ஏதோ ஒன்று பளிச்சிட்டது. திடீரென மறைந்தது. மீண்டும் பளிச்சிட்டது. Danish ன் உள்மனமோ "போய் பார்! போய் பார்! " என சொல்லி கொண்டிருந்தது.
அவனால் அந்த கூடாரத்தினுள் போகாமல் இருக்க முடியவில்லை. ஆகவே மெது மெதுவாக நடந்தான். சற்று பயமாகவும் தான் இருந்தது. ஆனால் danish ன் உள்ளே செல்ல இருந்த ஆர்வம் பயத்தை வென்று விட்டது.
ஒருவாறு உள்ளே நுழைந்த danish கு ஏமாற்றமே மிஞ்சியது. அது வெறும் கண்ணாடியே! ஒளி பட்டு தெறிப்படைந்தே அது பளிச்சிட்டது. " அய்யோ! இதை பார்க்கவா இவ்வளவு தூரம் energy ய Waste பண்ணி வந்தேன்.!" என திருப்பி போக பார்க்க அவனின் கை பட்டு ஏதோ ஒன்று கீழே விழுந்தது.
அதனை குனிந்து எடுத்து என்ன என்று பார்க்கும் போது அது ஒரு புத்தகமாக இருந்தது. என்ன புத்தகம் என்று திருப்பி பார்க்கும் போது யாரோ கூடாரத்திற்கு வருவது போன்ற காலடி சத்தம் கேட்டது.
உடனே புத்தகத்தை எடுத்து கொண்டு ஓட்டம் பிடித்தான். மின்னல் வேகத்தில் நண்பர்களிடம் வந்தடைந்து வேகமாக மூச்சு விட்டான் danish.
" என்னடா husain bolt ஓட race ஓடின மாதிரி மூச்சுவிடுற?" என gwen கேட்க " அவனுக்கு முதல்ல குடிக்க தண்ணீர் குடுங்க!" என்றான் robin.
"என்னடா சிங்கம், புலியாவது உன்னை துரத்துச்சா?விறகு எடுக்க போனவன் புத்தகத்தோட வந்திருக்க!" என loral கேட்க "என்னடா வாயில பிட்டா? எங்க போன நாங்க எவ்வளவு நேரம் தேடுறது?" என Henry கேட்டான்.
"Stop it guys! கொஞ்சம் மூச்சுவிட கூட விடுறீங்க இல்லை! Lectures நடத்துற மாதிரி நீங்களே கேள்வி கேட்டுட்டு போறீங்க! நான் இந்த Book அ எடுக்க தான் போனேன்! " என புத்தகத்தை loral கு நீட்டினான். "இது எங்கிருந்து கிடைச்சது? இதை ஏன் எடுத்துட்டு வந்த?" என robin வினவ danish முழு கதையையும் கூறி முடித்தான் தலை கீழாக! ஏமாந்த விடயத்தை கூறாமல் தான் புத்தகத்தை கண்டு தான் அதை எடுக்க போனதாக கூறினான்.
"இது என்ன Book. Title dots ல இருக்கு! "என Henry கேட்க புத்தகத்தை மற்றவர்கள் பார்க்க அது Mr Jay ன் வீட்டில் கண்ட புத்தகம் என்று உணர்ந்தனர்.
"நல்ல வேலை செய்தாய் danish! இதுல island அ பத்தின details இருக்கும். Guys நாம கூடாரத்திற்கு போய் இதை படிப்போம். திருடிட்டு வந்தோம் என்று Mr Benjamin கு கேள்வி பட்டால் அவ்வளவு தான்!" என robin கூற புத்தகத்தை ஒளித்து கொண்டு அனைவரும் கூடாரத்திற்கு சென்றனர்.
அங்கு Mr Jay அவரின் புத்தகத்தை தேடி கூடாரத்தையே இரண்டாக்கினார்....
Thanks for the votes & comments.
Keep supporting.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro