Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

light & the Stone horses

"Hey guys!" என robin முன்னால் காட்ட முன்னாலிருந்த சுவரில் சூரியன் வடிவில் செதுக்கப்பட்ட சிறிய நாணயம் ஒன்று பொறிக்கப்பட்டு இருந்தது.

"சூரியனோட symbol இருக்கு என்றால்???" என யோசித்து கொண்டே நாலாபுறமும் நோட்டமிட்டனாள் gwen.

"Guys அங்கு பாருங்க!" என நாணயத்திற்கு 45 பாகையில் இருக்கும் சுவரின் மீதுள்ள துளையை காட்டி "சூரிய வெளிச்சம் அங்கிருந்து நாணயத்துல பட வைக்கனும் போல!" என gwen தன் கூற்றை கூறினாள்.

"இது சூரிய ஒளியை தெறிப்படைய செய்யுற தெறியி ( reflector) தானே!" என danish ஒரு reflector ஐ காட்டி கூற அதன் அருகில் இருந்த 3 reflectors உடைந்திருந்தன. "Reflectors 4 தேவைப்படும் என்று நினைக்கிறேன்! " என்றார் Mr Benjamin.

"இப்போ போதியளவு சூரிய வெளிச்சம் உள்ள இல்லையே! " என Henry கூற robin தனது backpack ஐ திறந்து அதில் ஒளிராத torch ஐ எடுத்தான். பின் அதில் இருந்த battery ஐ கழற்றி நன்கு தேய்க்க அது ஒருவாறு சற்று பிரகாசத்துடன் ஒளிர்ந்தது  " I have an idea! நான் சொல்லுற படி செய்யுங்க! Henry நீ இந்த torch அ கொண்டு போய் துளைக்கு முன்னால் நேராக பிடி! அந்த Light ஐ Mr Benjamin உடையாத reflector முலம் பெற்று gwen கு கொடுங்க! அதுக்கு பிறகு நான் சொல்ற படி செய்யுங்க! " என idea ஐ கூறினான்.

அதன் படியே செய்ய "gwen உன் முகம் பார்க்குற கண்ணாடியால் loral ன் கண்ணாடிக்கு reflect பண்ணு!" என robin கூறியதும் அவ்வாறே செய்ய முக்கால்வாசி தூரத்தை ஒளி கதிர்கள் பூர்த்தி செய்து நாணயத்தை நெருங்கியது. ஆனால் இன்னும் ஒரு reflector தேவைப்பட்டது.

Robin யோசித்து கொண்டிருக்க ஏதோ நினைவுக்கு வந்து "danish நீ வரும் போது கொண்டு வந்த அந்த cartoon cd ஐ தாவேன்!" என கேட்க danish கோ தலைகால் புரியவில்லை.

ஆனாலும் backpack ஐ திறந்து cd ஐ எடுத்தான். " robin, finding the dory cd தான் என்கிட்ட இருக்கு. அது சின்ன புள்ள Cartoon. உனக்கு வேணும்னா incredible மாதிரி Cartoon cd தாறேன் டா!" என எதுக்கு robin கேட்டான் என்று தெரியாமல் பேசிக் கொண்டே போனான்.

"டேய் எந்த Cartoon என்றாலும் பரவாயில்லை முதல்ல cd ஐ தா டா!" என danish ன் பதிலையும் எதிர்பார்க்காது அதனை பறித்து loral reflect பண்ணிய ஒளியை cd ல் பெற்று cd மூலம் மீண்டும் அதனை Reflect பண்ணி நாணயத்தில் விழ செய்தான்.

போதுமான ஒளி கிடைக்க சுவர் அசைந்து வழி காட்டியது. "Superb guys! Smart ஆன பசங்க!" என Mr Benjamin புகழ்ந்து உள்ளே அழைத்துச் சென்றார்.

போகும் வழி தெளிவாக தென்படுமாறு இரு பக்கங்களிலும் தீ பந்தங்கள் ஒளிர்ந்தன. Danish இடம் robin cd கொடுக்க அதனை பார்த்த danish ன் முகம் வாடியது.

"என்னடா ஆச்சு உனக்கு? கவலையில இருக்க! நாம தான் தப்பிச்சு வந்துட்டோமே. அப்புறம் என்ன? " என robin வினவ " பாருடா இதை!" என cd ஐ காட்டினான் danish.

தெறிபடைத்து ஒருங்கிய ஒளிகதிர்கள் பட cd ன் மேற்பரப்பு கிழிப்பட்டு ஓட்டை ஓட்டையாக விளங்கியது. "இது தானா reason? ரொம்ப feel பண்ணாத உனக்கு நான் வாங்கி தாறேன்." என்றாள் gwen.

"Wooow நிஜமாவா? அப்படி என்றால் ஓரே தடவையில் 3 cd. Let me tell. Finding the dory, Brave & monster's island 3 cds உம் வேணும்!" என gwen ஏன்டா இவன பாவம் பார்த்தோம் என்ற வகையில் Cartoon புராணம் பாடிக் கொண்டே danish நடந்தான்.

இவர்கள் போகும் போது முன்னால் சென்ற danish, loral மற்றும் Mr Benjamin ஐ திடீரென ஒரு இரும்புக்கூடு வந்து மூடிக் கொண்டது. பின் அக்கூடுகள் பறந்து சென்றது. மற்ற மூவரும் Henry, robin மற்றும் gwen நின்றிருந்த இடம் மைதானம் ஒன்றாக மாறியது.

கூட்டில் இருந்த மூவரும் கூட்டிற்குள்ளே வைக்கப்பட்ட வண்ணமே மைதானத்தின் ஓரத்தில் இருந்தனர். இவை அனைத்தும் ஒரு நொடி பொழுதில் நடந்து முடிந்தது. ஆகவே என்ன நடக்கிறது என்ன செய்ய வேண்டும் என ஊகிக்க முடியவில்லை.

"Robin! Henry! Gwen!" என கூட்டில் உள்ளவர் கத்த சத்தம் வந்த திசையை நோக்கி பார்த்தனர் மூவரும். அவர்களை நோக்கி ஓட நிலம் அதிர்வடைய ஆரம்பித்தது.

இம் மூவரும் இருக்கும் நிலம் வெடித்து அதிலிருந்து கல்லால் ஆக்கப்பட்ட குதிரைகள் உருவாகின. அவை மண்ணிலிருந்து வெளியே வரும் போது மூவரும் அதன் மீது அமர செய்யப்பட்டனர்.

செய்வது அறியாமல் திகைக்க அவ்விடம் அதிரும் வண்ணம் announcing சத்தம் கேட்டது.

"உங்களுக்கு இதிலிருந்து தப்பிக்க வேண்டும் எனின் குதிரையின் மீது அமர்ந்திருக்கும் மூவரும் இன்னும் மூன்று குதிரை வீரர்களுடன் சண்டையிட வேண்டும். ஒருவர் ஒரு வீரருடன் மாத்திரம் சண்டையிட வேண்டும். நிலத்தில் யார் விழுகிறாரோ! அவர் போட்டியிலிருந்து நீக்கப்பட்டு குகையில் வாழும் முதலைகளுக்கு சாப்பாடாக போடப்படுவார். ஒருவேளை robin, Henry & gwen ல் ஒருவர் வீரன் ஒருவனை வீழ்த்தினால் அவர் the Golden cat ஐ எடுக்க முன்னேறி செல்வார். அத்துடன் கூட்டில் அடைக்கப்பட்ட ஒருவர் விடுவிக்கப்படுவார்!the game starts right now!" என announcing முடிக்கப்பட்டது.

மூவருக்கும் முன்னால் இரும்பாலான வாள்கள் தோன்றின. அத்துடன் முன்னால் ஒரு கதவு திறப்பட்டு மூன்று கற்களால் ஆன வீரர்கள் கற் குதிரைகளின் மேலேறி மூவரை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தனர்.

Pony riding சிறிதளவு தெரிந்ததால் மூவரும் ஒருவாறு horse ride பண்ண சமாளித்தனர்.

உடனே முன்னோக்கி நகர்ந்து இரும்பு வாள்களை பெற்று கொண்டனர். " Come on robin! Come on gwen! Come on Henry! " என cheer up பண்ணி கொண்டிருந்தான் danish.

Loral உம் Mr Benjamin உம் சும்மா இருப்பதை கண்டு "Hey guys! அவங்கள உற்சாகமூட்டுங்க! சும்மா இருக்கிறீங்க! அதோட இப்படி ஒரு game அ கண்ணுமுன்னாடி பார்க்க chance வேற கிடைச்சிருக்கு! அதை Miss use பண்ண வேணாம்! " என அந்நேரத்தையும் enjoy பண்ணி கொண்டிருந்தான் danish.

அங்கு சண்டை தீவிரமாக போய் கொண்டிருந்தது. Henry ன் வீரன் அதிகம் வாள் தாக்குதலையே வீசிக் கொண்டிருந்தான். சற்று யோசித்த Hentry கு idea கிடைத்தது. சற்று பின்னோக்கி குதிரையை நகர்த்தி பின் வேகமாக வீரனை நோக்கி குதிரையை செலுத்தினான்.

Henry ன் இதயத்தை குறிபார்த்து கொண்டிருந்த வீரனின் வாளின் திசையிலே பயணித்து; அதன் அருகில் வர திடீரென குதிரையை உயர்த்தினான். ஆகவே குதிரையின் கழுத்தை துளைத்தது Henry ன் இதயத்தை துளைக்க இருந்த வாள். சந்தர்ப்பம் பார்த்து எதிரியின் கையில் ஆயுதம் இல்லாமல் இருக்க தன்னிடமுள்ள வாளால் எதிரியை வீழ்த்தினான் Henry.

பின் இரு கற் குதிரைகளும் வீரனும் அவ்விடத்தை விட்டு மறைந்தனர். எதிரியை வீழ்த்தியதற்காக Henry அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றபட்டான். முன்னால் இருந்த பாரவையாளர் கூடாரத்திற்கு அழைத்து செல்லப்பட்டான். வாக்குப்படி Loral உம் கூட்டிலிருந்து விடுவிக்கப்பட்டாள்.

அங்கு களத்தில் Gwen ன் எதிரி அதிகமாக அவளை திரட்டி கொண்டே இருந்தான். Gwen உம் ஓடி பிடித்து விளையாடல் போல குதிரையை ஓட விட்டுக் கொண்டே இருந்தாள்.

இவ்வாறு ஓடிக் கொண்டிருக்க gwen ன் கை வியர்க்க ஆரம்பித்தது. குதிரையை வளைவு (curve) ஒன்றில் செலுத்தும் போது வாள் வியர்த்திருந்த கையிலிருந்து நழுவிச் சென்றது. இதனை கனவிலும் எதிர்பார்க்காத gwen ஒரு நிமிடம்  உறைந்து போனாள்.

தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு இது தான் முடிவு என்றால் என்ன செய்ய? என நினைத்து மைதானத்தின் சுவரின் முன்னால் குதிரையுடன் நின்று கொண்டிருந்தாள்.

இதனை வாய்ப்பாக கொண்ட எதிரி அவளை தாக்க பல மீற்றர் தூரத்திலிருந்து குதிரையின் அதிவேகத்துடன் அவளை நோக்கி வந்து கொண்டிந்தான்.

இதனை பார்த்து கொண்டிருந்த மற்றவர்கள் கூச்சலிட்டனர். " Gwen ஏதாவது பண்ணு! உன்னால முடியும்! இது முடிவு அல்ல! " என மற்ற நால்வரும் நண்பிக்கு உதவ முடியாத இக்கட்டான நிலையில் கத்த தொடங்கினர்.

வேகமாக வந்த எதிரி gwen ஐ மிக அண்மித்தான். கண்களை மூடி திறந்த gwen இரண்டடி குதிரையை இடது பக்கமாக நகர்த்தினாள்.  இதனை சற்றும் எதிர்பார்க்காத கல்லால் ஆன எதிரி எதிரில் இருந்த சுவரில் மோதி சின்னாபின்னமானான்.

இந்த முறை அனைவரும் சந்தோசத்தில் கூச்சலிட்டனர். வெற்றி வாகையுடன் Gwen உம் பார்வையாளர் கூடத்திற்கு நகர்த்தப்பட danish கூட்டிலிருந்து விடுவிக்கப்பட்டான்.

அடுத்து robin தன் எதிரியுடன் தீவிரமாக சண்டையிட்டு கொண்டிருந்தான். எதிரியின் திடீர் வாள் வீச்சு robin ஐ தாண்டி குதிரையின் காலில் பட குதிரை சரிந்தது. Robin சமநிலையின்றி நிலத்தை நோக்கி இழுப்பட்டு செல்ல நண்பர்களின் முகம் இருண்டு போனது...

Thanks for the votes & comments.
Keep supporting.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro