In the forest
புதர்களில் உள்ள இலைசருகுகள் அசைய ஐவரும் அதனையே பார்த்து கொண்டிருந்தனர். வர வர அசையும் வேகம் அதிகரித்து கொண்டு வந்து திடீரென ஏதோ ஒன்று இவர்களை நோக்கி பாய்ந்தது.
Danish கண்ணை மூடிக் கொண்டு கத்தினான். பாய்ந்தது முயலாக இருக்க, அனைவரும் பெருமூச்சு ஒன்றை விட்டனர்.
முயலை காணாது danish கத்தி கொண்டே இருக்க அவனருகில் இருந்த robin " danish that's just a rabbit! Not a lion " என்றான்.
தன் மானத்தை காப்பாற்ற danish " I know that...சும்மா தான் கத்தி பார்த்தேன். குரல்வளையில இருக்கிற 3 குரல்நாண்களும் work பண்ணுதா என்று test பண்ணினேன்" என சமாளிக்க "உன் புத்தி எங்களுக்கு தெரியாதா!" என gwen கூறி danish ன் தலையில் குட்டு ஒன்று போட்டு பயணத்தை தொடர்ந்தனர் .
முன்னோக்கி நகர நகர காட்டின் அடர்த்தி கூடிக்கொண்டே சென்றது. நடைபாதை ஒற்றையடிப் பாதையாக இருந்தது. 5m வரை உயரமாக வளர்ந்திருக்கும் மரங்கள் உட்பட புற்புதர்கள் வரை மரம் செடி கொடிகள் அடர்ந்த ஒரு சிறிய rain forest போன்று காட்சியளித்தது.
மரங்களின் அடர்த்தியால் குளிர்ச்சியான சூழலை தந்ததுடன் சூரிய வெளிச்சம் மரங்களுக்கு இடையால் எட்டிப் பார்த்தது. முயல்களும் மான்களும் துள்ளி ஓட வண்ணத்துப்பூச்சிகளும் பல சிறிய பூச்சிகளும் வனத்தை அழகூட்டிக் கொண்டிருந்தது. பறவைகள் கூட்டம் கூட்டமாக உணவு தேடிச் செல்ல அவற்றின் குஞ்சுகளுக்கள் கூட்டில் இருந்து சத்தமிட்டு கொண்டிருந்தன.
இவ்வாறு இயற்கையின் அழகை ரசித்த வண்ணம் சற்று தூரம் சென்று கொண்டிருந்தனர். தூரத்தில் ஒரு பச்சை பாம்பு ஒன்று தன் இரையை மிகவும் துள்ளியமாக வேட்டையாடி கொண்டிருந்தது.
"Guys அதுட பெயர் தான் mamba. மிகவும் விரைவாக இடம்பெயரக்கூடிய பாம்பு இனம்." என பாம்பை பற்றி Mr Volter கூற robin " do you know guys! காட்டில் உள்ள cobra இனம் தான் வேறு இடங்கள்ல உள்ள cobra வ விட நீளத்துல கூடியது " என கூறினான்.
" king snake என்று சில snakes இனத்துக்கு ஏன் சொல்லுறாங்க என்று தெரியுமா? அது மற்ற இன பாம்புகளையும் சாப்பிடும் ஒரு இனம். அந்த பாம்புகள் நச்சு தன்மை என்றாலும் அவற்றை சாப்பிடும்... எனக்கு daddy சொல்லி தந்தாரு" என danish உம் அவன் தெரிந்ததை நண்பர்களுக்கு கூறினான்.
"ஆமா அந்த milk snake எனப்படுற பாம்பும் king snake வகையை சேர்ந்தது தான். But அது பெரியளவில் poisonous இல்லை. ஆனால் சில பேர் அவ் வகை பாம்பு மாட்டின் பாலை குடிப்பதாலே அதுக்கு பெயர் வர காரணம் என்று சொல்றாங்க! " தான் Internet ல் பார்த்ததை கூற பின்னால் இருந்து "Just stop it!" என gwen கத்தினாள்.
"யேன் டி ?" என loral வினவ " நான் snake என்றா பயம்! அதுல வேற நாம இப்ப காட்டுல இருக்கிறோம்...so எல்லாரும் வாய மூடிட்டு வாங்க! " என gwen கோபத்தில் கூறினாள்.
Danish உம் robin உம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நக்கல் சிரிப்பு சிரித்தனர். இதனை கண்ட gwen என்ன என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்டாள். "இல்ல உன்னை blackmail பண்ண ஒரு விஷயம் கிடைச்சிருக்கு " என இருவரும் Hi 5 போட்டு கொண்டனர். "நானும் பாக்குறேனே! இவனுங்க பெரிய heroes! எனக்கு முதல்ல பாம்ப கண்டா ஓடுற முதல் ஆளா நீங்க இரண்டு பேர் ஆ தான் இருப்பீங்க! " என gwen இருவருடனும் சண்டை பிடித்த படியே நடந்தாள்.
" Hey guys! பின்னால ஏதோ சத்தம். " என loral கூற " அதுவும் rabbit ஆ தான் இருக்கும்! நீயும் gwen போல பயந்தாங்கோளியா?" என danish gwen ஐ வம்பிழுத்தான். "டேய் உன்ன...." என இருவரும் 3 ம் உலக மகா யுத்தத்தை ஆரம்பிக்க Mr Volter " loral சொன்னது உண்மை! அது மிருகங்கள்ட கால் சத்தம் இல்லை. யாரோ நம்மல follow பண்ணுறாங்க! " என கூறினார்.
"நாம ஒரு trap ஒன்னு use பண்ணி அவன பிடிப்போம்" என்று danish plan ஐ கூற அனைவரும் அதன் படி செயல்பட்டனர். Robin கொண்டு வந்த கயிற்றின் ஒரு ஓரத்தில் node ஒன்று இட்டு அதனை நிலத்தில் வைத்து அதன் மேல் இலைசருகுகளை இட்டனர். மற்ற ஓரத்தை மரத்தின் கிளை ஒன்றின் மேலாக எடுத்து அதனை பிடித்து கொண்டனர்.
" ok guys! நான் சொன்னதும் கயிற பலமாக இழுங்க!" என நேரம் வரும் வரை காத்திருந்தனர்.
Mr Volter கூறி படி அது ஒரு மனிதனே இவர்களை follow பண்ணி வந்தான். வந்தவன் இவர்களை தேடியவாறு முன்னோக்கி நகர danish "guys pull! " என்று கத்தினான். அனைவரும் முழு பலத்தை கொடுத்து இழுக்க அவனின் இரு காலும் node ல் மாட்டி தலை கீழாக தொங்கினான். அவனோ "help me! Help me" என கத்த Mr Volter இழுத்து இருந்த கயிற்றை அருகில் உள்ள மரத்தண்டில் கட்டி விட்டார்.
அனைவரும் அது யார் என்று பார்க்க சென்றனர். ஒருவேளை கடத்தல்காரர் ஒருவனாக இருக்க வேண்டும் என்று எண்ணி தடிகளையும் எடுத்து கொண்டு சென்றனர்.
அவனின் பின்பக்கமே விளங்க அவனை தன் பக்கம் சுழல செய்தான் robin. அவனை கண்டதும் நால்வரும் "Henry!" என திகைத்து நின்றனர். மூவரும் gwen இடம் Henry ஐ பற்றியும் அவன் பாடசாலையில் செய்யும் pranks ஐ பற்றி, அவனின் photo ஐ காட்டி இருப்பதாலும் அவளுக்கு Henry ஐ தெரிந்திருந்தது.
"நீ எங்க இங்க?" "யாரோட வந்த?" " இங்கிருந்து தப்பிக்க help பண்ணுவியா?" "அந்த கடத்தல்காரர்கள கண்டயா?" "இங்கயும் உன் விளையாட்டு தனத்தை காட்டவா வந்த?" என ஒருவர் மாறி ஒருவர் கேள்விகளை அடுக்கி செல்ல " stop it! முதல்ல இதிலிருந்து என்னை விடுவிங்க. அதுக்கு அப்பறம் சொல்றேன்!" என மூளை கலங்கியவன் போல கூறினான் Henry.
Mr Volter கயிற்றை கத்தியால் வெட்ட அவன் தொப் என்று விழுந்தான். " இப்போ சொல்லு!" என robin கூற அங்கு danish Henry கட்டப்பட்டு தொங்கிக் கொண்டு இருந்ததிலிருந்து கீழே விழுந்தது வரை video பண்ணிக்கொண்டிருந்தான்.
" stop it danish vanish! " என Henry உரும "Hey Henry, இது ஒன்னும் school ஓ உன்னோட இடமோ இல்லை எங்கள பயம் காட்ட! மரியாதையா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு!" என gwen கோபத்துடன் கூறினாள்.
"Guys சண்டைய நிறுத்துங்க...நாம quick ஆ safe ஆன இடத்துக்கு போகனும். இருட்டாகும் போது வேட்டையாடுற மிருகங்கள் நடமாட ஆரம்பிக்கும்...come on guys...let's move...தம்பி நீ உன் அப்பா அம்மா ஓட வந்தால் இப்போதே அவங்களோட போய் சேரு! இல்லை நம்மலோட வா! " என Mr Volter கூற " what Henry is coming with us! No no no" என நால்வரும் கூச்சலிட்டனர்.
"எனக்கு உங்கள போல ஆள்களோட வந்தா என் தகுதிக்கு என்ன நடக்கும்? என் அப்பாவ கேள்வி பட்டு இருப்பீங்களே! He is the owner of Cinomen company! அவருக்கு ஒரு call கொடுத்தால் போதும் helicopter ஒன்றே அனுப்புவாறு! நான் தப்பிச்சுருவேன்... நீங்க எல்லாரும் தப்பிக்க வழி இல்லாமல் இங்கயே இருங்க! Bye bye நான் போறேன்" என இவர்கள் செல்லும் திசைக்கு எதிர் திசையில் சிறிது தூரம் சென்று phone ஐ பார்க்க அதில் coverage இருக்கவில்லை. அதோட காட்டுக்குள்ளே பலவிதமான சத்தங்கள் வர மீண்டும் அவர்களுடனேயே சேர்ந்து கொண்டான்.
"பெரிய வார்த்தைகள் எல்லாம் விட்டுட்டு பிறகு நம்மலோடயே வாராங்க! " என danish கிண்டலடிக்க " No danish! That's wrong! அப்படி எல்லாம் பேச கூடாது. நம்மல்ட யாராவது உதவி கேட்டு வந்தால் அவங்கள அனுசரிக்கனும் கிண்டலடிக்க கூடாது" என Mr Volter அறிவுரை கூற அனைவரும் கேட்டுக் கொண்டனர்.
"நாம முதல்ல சாப்பிட fruits பறிப்போம்...but காட்டுக்குள்ள poisonous ஆன fruits உம் இருக்குது! " என எச்சரித்தார் Mr Volter.
ஆனால் நால்வருக்கும் Henry எப்படி island கு தனியாக வந்தான் என்பது மட்டுமே மனதில் ஓடிக் கொண்டிருந்தது.
Thanks for the votes & comments...
Keep supporting...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro