Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Good bye to the island

"அதுக்கு பிறகு, குகையில் வைத்து எல்லோரும் பேசி கொண்டிருந்த போது map ஐ எடுத்து என்னுடைய note book ல் குறித்து கொண்டேன்! தற்செயலாக அந்த இடத்திலே தூக்கம் போனது.

அதற்கிடையில் robin அதனை அவன் பையில் போட்டு கொண்டான். காலையில் எழுந்து பார்க்க கையில் இருந்த note book ஐ காணாது எல்லா இடமும் தேடினேன். அப்போது எழுந்து கொண்ட robin அதனை அவன்ட backpack ல போட்டதாக கூறினான்.

அது முதல்லயே கிடைச்சு இருந்தா அதை எடுத்துட்டு என்பாட்டுல போய்ட்டே இருந்திருப்பேன்! அந்த chance உம் போச்சு! சரி என்று இவர்கள் பின்னாலே Golden cat வரை போனேன். அதை கண்டவுடன் என்னால் என்னையே கட்டுபடுத்த முடியவில்லை. அதுக்கு பிறகு தான் loral என் purse ல் உள்ள photo ஐ காட்ட என்னை பற்றி இவர்கள் அறிந்து கொண்டனர்.

இவங்க மட்டும் இல்லாவிட்டால் இந்த நேரம் பல கோடி பணம் என் கையில் இருந்திருக்கும். இதை சும்மா விடமாட்டேன்!"என தன் கதையை முடித்தார் Mr Benjamin.

ஆதிவாசிகளின் தலைவர் நண்பர்களையும் மற்றவர்களையும் அவரது கூடாரத்திற்கு அருகில் அழைத்து சென்றார். Mr Jay ற்கு கிடைத்த தகவல்படி அடுத்த நாளே Boat அங்கு வருவதாக கூறப்பட்டது.

ஆகவே ஆதிவாசிகள் இவர்களின் சாகசங்களை கௌரவிக்க அவர்களின் தனித்துவமான நடனத்தை அரங்கேறினர். அவர்களுடன் loral உம் Gwen உம் சேர்ந்து ஆட தொடங்கினர்.

Robin ன் காதருகே வந்து Henry ஏதோ கூற, அவன் சிரித்து கொண்டே danish ஐயும் அழைத்து கொண்டு ஆதிவாசி ஒருவனின் கூடாரத்திற்குள் நுழைந்தனர்.

ஆடிக் கொண்டிருந்த gwen, loral ன் பின்னால் இருந்த காட்டு பகுதியில் கரடி ஒன்றின் சத்தம் கேட்க, இருவரும் ஆடுவதை நிறுத்தி பின்னால் திரும்பினர். பின்னால் இருந்த புதர்கள் வேகமாக அசைய தொடங்க கரடியின் முகம் வெளியே தென்பட்டது. தொடர்ந்து இரண்டு கரடிகள் பின்னால் வர இருவரும் பயந்து ஒருவரை ஒருவர் பிடித்து நின்றனர்.

அக்கம் பக்கம் பார்த்த gwen ன் கண்களுக்கு ஆண் சிங்கங்கள் மூன்றையும் காணவில்லை. ஆகவே அவர்கள் தான் மாறுவேடம் அணிந்திருக்க வேண்டும் என்று எண்ணி loral ற்கு இதனை கூற, அவளோ திகைத்து நின்றாள்.

"Robin, danish & Henry!எங்கள பார்த்தா எப்படி விளங்குது? உங்களை போல பயந்தாங்கோளிகள் இல்லை! மரியாதையா வேஷத்தை கழற்றுங்க! இல்லை, ஓட விட்டு அடிப்பேன்...!" என gwen கூற கரடிகள் அவள் பேச்சை கேட்காது கத்திக் கொண்டிருந்தன.

"சும்மா scene காட்டுறாங்க!" என கீழே இருந்த கல்லை எடுத்து அதற்கு வீச அதோட குறி விலகி மரத்தண்டில் போய்பட்டது. "சே! Last chance இப்போ கரடி முகத்தை கழற்ற போறீங்களா? இல்லையா? சும்மாவே உங்க 3 பேர்ட முகத்தை பார்க்க முடியாது! அதுல வேற ஒரு வேஷம் ஒன்று தான் குறைச்சல்! Danish நீயாவது கரடி முகத்தை கழற்று!" என கூறிக் கொண்டிருக்க பின்னால் இவர்களின் சத்தம் கேட்டு வந்திருந்த robin, danish & Henry இதனை கண்டு அதிர்வடைந்த நின்றனர்.

"இவளும் பைத்தியமாச்சும் பிடிச்சிரிச்சா? போயும் போயும் நம்மல போல handsome guys அ விட்டுட்டு கரடியோட பேசுறாள்!" என danish வினவ "Hey அறிவு கொழுந்தே! Danish இங்க தானே இருக்கான்." என முடிப்பதற்குள் "நீ வாய மூடு rubber band! பேசிட்டு இருக்கேன் தானே! இடையில மூக்கை நுழைக்காத!" என கூறிக் கொண்டே பின்னால் திரும்பினாள்.

Henry, danish & robin பின்னால் இருக்க; "gwen இவனுங்க பின்னால இருக்காங்க என்றால்: இவை உண்மையான கரடிகள்! " என கூறியது தான் கடன் "அய்யோ! அம்மா! காப்பாற்றுங்க! வாழ்க வேண்டிய வயசுல சாக முடியாது! " என ஓட்டம் பிடிக்க ஆயத்தமானாள் gwen.

கரடி அவர்களின் முன்னால் வந்து நிற்க; கரடி வேஷம் அணிந்த 3 ஆதிவாசிகள் முகமூடியை கழற்ற; danish, robin & Henry வயிற்றை பிடித்து சிரிக்க ஆரம்பித்தனர்.

Gwen கும் loral கும் வந்த கோபத்தை தண்ணீராலும் அணைக்க முடியவில்லை. என்ன இது என்று loral முறைக்க " சும்மா time pass கு!!!" என்றான் danish.

"இவனுங்க தான் இப்படி லூசு தனமாக பண்ணுறாங்க என்று பார்த்தா இவங்க இப்போ கூட்டணி ஒன்றே சேர்த்து இருக்காங்க!" என loral கூற மூவரும் இளித்து கொண்டே கூடாரத்தை நோக்கி சென்றனர்.

சம்பிரதாய முறை படி பல வகையான உணவுகள் வைக்கப்பட அனைவரும் வயிறு மூட்ட உண்டு முடித்தனர். பின் Mr Benjamin, Mr Paul உட்பட கைது செய்யப்பட்ட அனைவரும் ஒரு கூடாரத்தில் வைத்து சில ஆதிவாசிகள் காவலுக்கு நின்றனர்.

பெண்களுக்கு ஒரு கூடாரமும் ஆண்களுக்கு ஒரு கூடாரமும் வழங்கப்பட்டது. அனைவரும் இவ்விரவை நிம்மதியாக கழித்தனர்.

அடுத்த நாள் சூரியன் எட்டிப் பார்க்க அனைவரும் எழுந்து கொண்டனர். விடை பெறும் போது ஆதிவாசிகள் இன்னும் ஒரு முறை நன்றி கூறி நண்பர்கள் ஐவரின் கையில் watches ஐ கட்டிவிட்டனர்.

அது GPS போன்று செயற்பட கூடியது. மற்றவர்கள் இருக்கும் இடத்தை சுலபமாக கண்டுபிடிக்க கூடியது. "பாருடா காட்டுல கூட இந்தளவு technology வளர்ந்து இருக்கு!" என Henry அதிசயமாக கூற மற்றவர்கள் ஆமாம் இட்டனர்.

Boat உம் வர காட்டை விட்டு போக மனமில்லாம் good bye சொல்லி விட்டு சென்றனர் நண்பர்கள் அனைவரும். Harbour ல் தாத்தா இருக்க; Boat ல் இருந்து இறங்கிய நால்வரும் ஒரு வாரமாக அவரை காணாமல் இருந்ததால், ஓடி போய் கட்டி அணைத்தனர்.

கைவிலங்குடன் அக்கப்பலில் இருந்து சிலர் இறங்க தாத்தாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அதனை தொடர்ந்து Peter உம் Miss Rosy உம் இறங்க இன்னும் குழம்பி போனார்.

"இவங்க எல்லாம் எப்படி??? உங்கள கூட்டி போக harbour கு வருமாறு police station லில் இருந்து தகவல் வரும் போதே நினைச்சேன் ஏதாவது ஒன்னு இருக்கு என்று! என்ன நடந்தது? " என்று தாத்தா கேட்க "இப்போ உங்களுக்கு சொன்னால் வீட்டுக்கு போய் gwen ன் parents கிட்ட திரும்ப சொல்லனும். அதன் பின்னர் எங்க parents வந்தால் மூன்றாவது முறையாக அவங்க கிட்ட சொல்லவனும். நம்ம வாய் வலிக்கும் தானே! So எல்லாருக்கும் சேர்த்து அப்புறம் சொல்றோம்..." என danish கூறி முடிக்க மற்றவர்கள் தலையில் அடித்து கொண்டனர்.

வீட்டுக்கு வந்து சேர நண்பர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர்களின் பெற்றோர்கள் gwen ன் வீட்டிற்கு வந்திருந்தனர். இரட்டிப்பு மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர் நண்பர்கள்.

அடுத்த நாள் Henry robin ன் அன்பு கட்டளைக்கு ஏற்ப அவன் தங்கிருந்த hotel லிருந்து gwen ன் வீட்டிற்கு மூட்டை கட்டி நண்பர்களுடன் தங்குவதற்காக வந்தான்.

Mr Jay, Mr Volter, Peter & Miss Rosy gwen ன் வீட்டிற்கு வர, 2 hours உட்கார்ந்து முழு கதையையும் விபரமாக கூறி முடித்தனர். பெற்றோர்கள் சற்று அதிர்ந்து நின்றாலும் தங்கள் பிள்ளைகளின் தைரியத்தையும் சாதுர்யத்தையும் எண்ணி பெருமை அடைந்தனர்.

Peter எழுந்து எல்லாரிடமும் invitation ஐ கொடுத்தான். அதனை வாசித்த நண்பர்கள் கோரசாக Henry ஐ திரும்பி பார்த்தனர். அதில் Peter கும் Miss Rosy கும் அடுத்த மூன்றாவது நாளில் wedding ceremony என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அனைவரும் wedding hall ஐ பார்வையிட சென்றனர். அவ்விடம் ஆற்றங்கரை ஓரத்தில் fresh flowers ஆல் அலங்கரிக்கப்பட ideas வழங்கப்பட்டது.

அனைவரும் இணைந்து ஆற்றங்கரைக்கு அண்மையில் photos எடுக்க ஆரம்பித்தனர். இறுதியாக group photo எடுக்க Henry அனைவரையும் இருக்க வேண்டிய இடத்தை அறிவித்தான். Peter ஐ நோக்கி "கொஞ்சம் பின்னால்! கொஞ்சம் பின்னால்! இன்னும் ஒரு அடி!" அப்படியே Henry கூறிக் கொண்டிருக்க "பொப்" என சத்தம் கேட்டது.

அனைவரும் பின்னால் திரும்பிப் பார்க்க Peter ஆற்றில் விழுந்து தத்தளித்து கொண்டிருந்தான். நண்பர்களிடம் வந்த Henry "சொன்னேன் தானே! Peter கு ஒரு வேலை பண்ணுவேன் என்று! So mission fired!" என கூறிக் கண்ணடிக்க மற்றவர்கள் சிரித்தனர்.

அங்கு ஒரு இருட்டறையில் file ஒன்று load ஆகும் computer ன் முன் அமர்ந்திருந்தார் ஒருவர். File open ஆக அதிலிருந்த photo ஐ பார்த்து மர்ம புன்னகை பூக்க; அப்புகைப்படத்தில் robin, danish, loral & gwen இருந்தனர்.....

The End

Hi guys,
Finally I finished my story.
How was the story???
எந்த characters உங்களுக்கு ரொம்ப பிடிச்சுசு???
Put it in the comment box. I'm eagerly waiting

Thanks for ur valuable votes & comments.
Silent readers ஆக நிறைய பேர் இருக்காங்க. அவங்கட ஒத்துழைப்பும் கிடைச்சு இருந்தா நல்லா இருந்திருக்கும்.

Wattpad ல இல்லாமல் whatsapp ல link அனுப்பி வாசித்த என்று நண்பர்களுக்கு ரொம்ப thanks.
Again thanks for everyone for travelling with me!!!

Next story title is "Science Rockers 🔬"
I'll put story description within 2 weeks...
Hope u all give support to this story too...

எல்லோரையும் மீண்டும் ஒரு adventure & mystery story ல் சந்திக்கும் வரை bye bye...

Have a nice day....

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro