Dangerous cave
Danish ன் காலை கயிற்றால் கட்ட ஒருவன் முன்னோக்கி வந்தான்.
இரு கால்களையும் அருகில் வைத்து கட்ட danish ஓ " Excuse me mister! இப்படி இரண்டையும் சேர்த்து கட்டினால் நான் எப்படியும் கழற்றிட்டு போயிருவேன். இங்க பாருங்க! " என கூறிக் கொண்டே இரு கால்களையும் அசைக்க அது தானாக கழன்றது.
"கண்டீங்க தானே! இதுக்கு தான் ஒவ்வொரு காலையும் தனிதனியாக சுற்றி கட்டிட்டு பின் இரண்டையும் சேர்த்து கட்டனும்! வேணும்னா நான் கட்டி காட்டடுமா?" என கூறி அவன் கையிலுள்ள கயிற்றை எடுத்து கடத்தல்காரனின் தனி தனியாக கால்களை கட்டிய பின் இரண்டையும் சேர்த்து கட்டினான்.
"இப்போ அசைந்து பாருங்க!" என சொல்ல அவனும் அசைந்து பார்க்க அவனால் ஒரு அடியேனும் நகர முடியவில்லை.
"Next உங்க கடத்தல் ஆளை இன்னும் அசையாமல் வைக்கணும் என்றால்!" என danish சுற்று முற்றும் பார்த்து அருகில் இருந்த கைவிலங்கை எடுத்து வந்து அவனை குனிய செய்து ஒன்றை அவனின் கையிலும் மற்றையதை காலில் கட்டப்பட்ட கயிற்றிலும் மாட்டி விட்டான்.
இப்போது அவனால் அசைவதையிட்டு அசைவதை நினைத்தும் பார்க்க முடியவில்லை.
"Very good boy! இப்போ நான் உன்னை கட்டி விடுறேன். முதல்ல கூடாரத்தில் போய் கைவிலங்கை திறக்க key ஐ எடுத்துட்டு வா!" என கூற danish ok என்று தலை அசைத்து கொண்டு கூடாத்தினுள் சென்றான்.
அந்த கூடாரமோ எல்லா பொருட்களை ஆங்காங்கே வீசிய வண்ணம் metal hospital போல காட்சியளித்தது. " பைத்தியகாரனின் தலையை போல இருக்குதே! இந்த குப்பையில எங்க போய் key ஐ தேடுவேன்!" முணுமுணுத்து கொண்டே தேட தொடங்கினான்.
இருந்ததை இரண்டாக்கும் வண்ணம் danish தேடி கொண்டிருக்க, அவனின் கை பட்டு ஏதோ bucket ஒன்று கீழே விழுந்து அதிலிருந்து திரவம் சிந்த தொடங்கியது.
கடத்தி வந்தவன் கூடாரத்தில் சுகந்திரமாக திரிபவனை கண்ட இரண்டாவது கடத்தல்காரன் பதறி போய் அவனை பிடிக்க சென்றான். சிறிது தூரம் நகர்ந்த பின் தன்னால் மேலதிக அடிகளை எடுத்து வைக்க முடியாமல் போனது. எவ்வளவு தடுமாறியும் நகர முடியவில்லை.
கீழே குனிந்து பார்க்க அவன் danish கொட்டிய Super duper glue ல் கால் வைத்திருக்க, அது காலில் நன்கு ஒட்டிக் கொண்டது. Danish ஓ பின்னால் என்ன நடக்கிறது என்று தெரியாமல் key ஐ தேடிக் கொண்டிருந்தான்.
அருகில் ஒரு பெரிய backpack இருக்க அதைத் திறந்து அதில் சரி இருக்குமா என்று பார்த்தான். அதில் உள்ள பொருட்கள் ஒவ்வொன்றையும் கையில் எடுத்து பார்த்து விட்டு பின்னால் திரும்பாமல் வீசினான்.
Danish ன் கையில் சுத்தியல் அகப்பட "இந்த backpack ல hammer கூட இருக்குது!" என தூக்கி ஓரே வீசு வீச; அது காலை shoe ல் இருந்து கழற்றி கொண்டிருந்த கடத்தல்காரனின் தலையில் ஓங்கி பட அவன் மயங்கி அவ்விடத்திலே விழுந்தான்.
சத்தம் கேட்டு danish பின்னால் திரும்பி பார்க்க "oops! I'm really sorry!" என கூறிக் கொண்டே அவன் அருகில் சென்றான்.
மயங்கிய நிலையில் இருந்தவனையும் danish ஐ அவன் அருகில் இருப்பதை கண்டு கோபமடைந்த மூன்றாம் ஆள் danish பிடிக்க ஓடி வந்தான்.
அவனின் வருகையை கண்டு danish அவனிடம் sorry சொல்ல முன்னோக்கி நகர்ந்தான். Danish அடுத்த அடி கீழே உள்ள பலகையில் அறியாமல் எடுத்து வைக்க பலகையின் மற்ற பகுதி கடத்தல்காரனின் இரு கால்களுக்குமிடையில் இருந்தது.
கல்லினால் சமநிலையில் இருந்த பலகை danish ன் காலடி ஒரு பக்கத்தில் வைப்பட்டதால் மற்ற பக்கம் விரைவாக உயர அது மூன்றாவது ஆளின் படக்கூடாத பகுதியில் பட்டுவிட்டது. வலியால் அப்படியே சுருண்டு விழுந்துவிட்டான்.
"Oouch! " என danish தனது கண்களை மூடி சலித்து கொண்டான். மூவரும் தன்னை கடத்தி கொண்டு வந்தவர்கள் என்பது அப்போது தான் அவனுக்கு ஞாபகம் வந்தது. " ஒரு மாதிரியாக நானும் ஒரு hero ஆகிட்டேன்! " என கூறிக் கொண்டே மேசை மீது இருந்த snacks packets கொண்ட bag ஐ எடுத்து கொண்டு ஓட்டம் பிடித்தான்.
அங்கு ஐவரும் danish தேடிக் கொண்டிருந்தனர். Henry சற்று இளைபாறுவதற்காக அருகில் உள்ள மரத்தில் சாய்ந்தான். மற்றவர்கள் தண்ணீர் குடித்து கொண்டிருந்தனர்.
Henry ன் முதுகில் ஏதோ சிலந்தி ஓடுவது போன்றிருக்க குடித்து கொண்டிருந்த water bottle ஐயும் வீசி விட்டு கத்தி ஊரையே கூட்டினான்.
அப்போதே மரத்தின் பின்னால் ஒளிந்திருந்த danish வயிற்றை பிடித்து சிரித்து கொண்டு வெளியே வந்தான்.
அனைவருக்கும் அவன் செய்தது கோபத்தை ஊட்டினனாலும் எவ்வித பாதிப்பும் இன்றி danish திரும்பி வந்தது சந்தோசமாக இருந்தது. நால்வரும் அவனை கட்டியணைத்தனர்.
" எவ்வளவு பயந்துட்டோம் தெரியுமா? எங்க போயிருந்த?" என robin வினவ "ரொம்ப பசி எடுத்துச்சா! அது தான் snacks வாங்க போனேன்! " என bag ஐ தூக்கி காட்டினான்.
"மொக்க joke அடிக்காமல் உண்மைய சொல் டா!" என gwen கேட்க " இந்த snacks எங்க இருந்து?" என கேட்டாள் loral.
"முதல்ல பச்ச புள்ளைக்கு தண்ணீர் கொடுங்க! ரொம்ப பயந்துட்டான்!" என Henry ஐ காட்டி danish கூற " என்னை விட develop ஆகிட்ட" என கூறி தண்ணீரை குடித்தான்.
4 வது clue ஐ தேடி நடக்கும் போது danish நடந்ததை கூற அனைவரும் danish பார்த்து விளித்தனர். என்ன என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்க "இவ்வளவு பண்ணிருக்க! உனக்கு சும்மா சரி பயம் வரவில்லையா?" என கேட்டான் robin.
"Nop nop nop! நான் இப்போ பெரிய பையன்! நான் cartoon புத்தி எல்லாம் காட்டி தப்பிச்சு வந்துட்டேன். அவங்க நாம போகிற direction அ easy ஆ இதை வெச்சு தான் கண்டுபிடிச்சு இருக்காங்க!" என தனது pocket கை போட்டு கடத்தல்காரகளின் கூடாரத்தில் இருந்த Henry ன் batch எடுத்து காட்டினான்.
"இது அவங்கிட்ட எப்படி போச்சு?" என loral வினவ "ஒருவேளை நீங்க என்கிட்ட மரத்தடில வைத்து குடுத்தப்ப விழுந்து இருக்கும்!" என Henry batch ஐ கையில் எடுத்து backpack ல் போட்டு கொண்டான்.
ஒருவாறு 2 மணித்தியால பயணத்தின் பின் 4 வது கட்டிடத்தையும் கண்டுபிடித்தனர்.
"Children! ரொம்ப கவனம்! இங்கும் நிறைய traps இருக்கலாம். எல்லாரும் ஒன்றாக கூடவே இருங்க! தனிதனியாக போக வேண்டாம் " என அறிவுரை கூறினார் Mr Benjamin.
ஆறு பேரும் உள் நோக்கி நடக்க அது ஒரு இடிந்த கட்டடம் போல காட்சியளித்தாலும் உள்நோக்கி செல்ல அது நீண்ட குகை போல இருந்தது.
குகையின் ஆரம்ப பகுதி வெளிச்சமாக இருக்க அனைவரும் தைரியத்துடன் நடக்க ஆரம்பித்தனர்.
Gwen ன் கால் அருகில் தேள் ஒன்று நகர்ந்து செல்ல அதனை கண்ட loral " gwen! Watch out! காலுக்கு கீழே தேள்!" என்றாள். Gwen ன் வழி விட்டு தேளை மிதிக்காமல் நகர்ந்தாள்.
Loral பேசிய வார்த்தைகள் சற்று நேரத்தின் பின் மீண்டும் கேட்டது. "யாரு சரி உள்ள இருங்குறாங்க போல !" என Henry கூற " No Henry! அதுக்கு நாம எதிரொலி என்போம்" என்றார் Mr Benjamin.
" ஆமா இது போன்ற குகைகள், பொருட்கள் இல்லாத வீடுகள், கட்டடங்கள் போன்ற இடங்களில் நாம ஒரு சத்தமிட்டோம் என்றால் அது தூரத்தில் உள்ள சுவர்ல பட்டு திரும்பி எங்கட காதுக்கு வந்தடையும். இது எதிரொலி என்போம். இதை தான் வௌவால்கள் இடப்பெயர்ச்சிக்காகவும், dolphins களும், மாலுமிகள்ட கப்பல்களில் காணப்படுற sonar உபகரணங்களும் மீன் கூட்டங்கள் இருக்குற இடத்தை கண்டுபிடிக்க உதவும்..." என loral விளக்கமளித்தாள்.
இதனை விளையாட்டாக எடுத்த danish, Henry & robin பெயர்களை கூறி சத்தமிட்டனர். அது எதிர் ஒலிக்கப்பட்டு வர மீண்டும் ஒவ்வொரு விதமாக சத்தமிட்டு கொண்டே முன்னோக்கி நகர்ந்தனர்.
"இந்த கொடுமையை எங்க போய் சொல்றது! " என தலையில் அடித்து கொண்டு gwen உம் loral உம் மூவரின் பின்னால் நடந்து கொண்டு சென்றனர்.
விளையாட்டு வினையில் முடியும் என்பதை போல இவர்களின் விளையாட்டால் முன்னால் என்ன இருக்கிறது என்பதை பார்க்க மறந்து போனர்.
சிறுது தூரம் செல்ல அனைவரினதும் கால்கள் புதைவதை அவதானித்தனர். கீழே பார்க்க அவர்கள் நின்று கொண்டு இருப்பது புதைகுழியில் என்று அப்போதே உணர்ந்தனர்.
ஆறு பேரினதும் இடுப்பு வரை புதைகுழி கீழே இழுத்து கொண்டிருந்தது .
Thanks for the votes & comments.
Keep supporting.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro