Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Charles L. carolus

"கொள்ளைகாரர்களின் சின்னம் பொறிக்கப்பட்ட Flag ஏற்றப்பட்டது. பூனையுடன் நெருங்கி பழகும் shisako தலைவரின் வாலிப வயது புதல்வனுக்கு பூனைகளின் மாற்றமான நடத்தைகளால் ஏதோ தப்பாக நடக்க போவதாக விளங்கியது.

தனது தந்தையிடம் இதை பற்றி உரையாடிக் கொண்டிருக்கும் போது ஒருவன் வந்து; விருந்தினராக வந்தவர்கள் இரும்பு இரும்பாக எதனையோ கப்பலில் இருந்து இறக்குவதாக கூறினான்.

சூழ்ச்சி செய்கிறார்கள் என்று இவர்களுக்கு புலப்பட 4 தங்க பொருட்களையும் தலைவரிடம் காணப்பட்ட விலை மதிக்க முடியாத ஒரு பொருளையும் கொடுத்து அதனை பத்திரமாக ஒளித்து வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

தனது 3 நண்பர்களையும் கூட்டிக் கொண்டு தாம் சிறு வயதில் விளையாடிய நான்கு கைவிடப்பட்ட கட்டிடங்களில் 4 பொருட்களையும் ஒளித்து அதனை கெட்டவர்கள் நெருங்காத வண்ணம் பல traps யும் செய்து வைத்திருந்தனர்.

இறுதியாக தலைவர் தந்த பொருளை கொண்டு போய் ஓர் பாதுகாப்பான இடத்தில் ஒளித்தனர். அவ்விடமானது இவ் நால்வரும் மற்றவர்களால் கண்டுபிடிக்க முடியாத வண்ணம் தங்களின் இரசியங்களை பாதுகாத்து வைத்து கொள்ள பயன்படுத்திய இடமாகும்.

இது பாறைகற்களால் ஆன மலை குடையப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு சுரங்கம். ஆனால் வெளியால் பார்க்கும் போது வெறும் கல் மலை தான்!

இதனை வைத்து விட்டு தங்களின் இருப்பிடத்திற்கு வர அங்கு பெரிய பெரிய பீரங்கிகள் மூலமும் துப்பாக்கிகள் மூலமும் மாலுமிகள் மக்களை அழித்து கொண்டிருந்தனர். இப்படி ஒரு attack கு முன்னரே ஆயத்தப்படுத்தி வைக்காமல் இருந்ததால் பலர் உயிர் இழந்தனர்.

தலைவர் தன் மகனை அழைத்து தங்களால் மாலுமிகளை வெற்றி கொள்ள முடியாது எனவும் பெண்களையும் பிள்ளைகளையும் படகு மூலம் வெளியேற உதவுமாறு கூற அவனும் நண்பர்களும் உடனடியாக செயல்பட்டு பலரை வெளியேற்றினர்.

மீண்டும் மகன் தந்தையிடம் வரவும் துப்பாக்கித் தோட்டா ஒன்று தலைவரின் இதயத்தை துளைக்கவும் நேரம் சரியாக இருந்தது.

இதற்கிடையில் புதல்வனின் முன்னால் பாரிய வெடிப்பு ஒன்று நிகழ அதிலிருந்து வெளியேறிய வெளிச்சத்தால் புதல்வனின் கண்கள் இரண்டும் குருடானது.

நண்பர்கள் இவனை அழைத்து கொண்டு தீவை விட்டு வெளியேற முயன்றனர்.

ஒரு சிறுவன், வெளியே என்ன நடக்கிறது என்று தெரியாமல் தனது பொம்மையுடன் ஏக்க பார்வையுடன் தங்களை பார்த்து கொண்டிருப்பதை கண்டனர்." என serious ஆக வாசித்து கொண்டிருக்கும் போது வெறும் juice packet ஐ உறிஞ்சும் சத்தம் இவர்களின் கவனத்தை குழப்பியது.

திரும்பி பார்க்க danish 4 juice packet ஐ குடித்து முடித்து ஐந்தாவதை வாயில் வைத்து உறிஞ்சி கொண்டிருந்தான். அருகில் நால்வரினதும் backpack திறந்து இருந்தது.

என்ன என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்டான். "உன்ன..." என நால்வரும் அடிக்க வர "ரொம்ப கோவப்படாதீங்க சிலவேளை brain 32 தடவைக்கு மேல் vibrate ஆகிச்சு என்றால் mental hospital அ தான் இருக்க வரும்! " என danish cool ஆக கூறினான்.

"What? " என robin வினவ "ஆமா அவன் சொல்றது சரி தான்! ""மனிதன் புனிதமாக"" என்ற புத்தகத்தில சொல்லிருக்கிற மாதிரி normal ஆ இருக்கிற மனிதன்ட brain 13 தடவை தான் vibrate ஆகும்! கத்தி பேசும் போது அது 16 ஆக அதிகரிக்கும். வாய் சண்டை, விவாதத்தின் போது 20 ஆக மாறும். இவ்வாறு tension ஆகும் போது அசைவு, விசை காரணமாக maximum 32 வரை செல்லும். 32 ஐ தாண்டினால் மனிதன் பைத்தியமா மாறுவான்." என loral பதிலளித்தாள்.

"கோபம் என்பது கொஞ்ச நேரப் பைத்தியம் என்று சும்மாவா சொன்னாங்க! Ok நாம இதை படிச்சு முடிப்போம்" என gwen கூறி வாசிக்க ஆரம்பித்தாள்.

"அச்சிறுவனையும் கூட்டி கொண்டு mexico ற்கு பயணமானர்கள்.

மாலுமிகள் என்று கூறிய கொள்ளைகாரர்கள் சிலரை கடலில் மூழ்கடித்து கொன்றனர். ஒரு சிலர் இரகசியமான இடங்களில் ஒளிந்து கொண்டனர்.

அநியாயமாக கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் நல்ல ஆத்மாக்கள் தலைவரினால் பாதுகாப்பாக வைக்க கூறிய பொருளில் சரணடைந்து அதனை பாதுகாப்பாதாக நம்பப்படுகிறது.

Mexico விற்கு சென்று பல வருடங்களுக்கு பின் அச்சிறுவனிடம் அனைத்து சரித்திரத்தையும் இரகசியங்களையும் நால்வரும் கூறினர். அவன் The history of the cat island என்ற புத்தகத்தை braille லிலும் English லிலும் எழுதி குருடனான shisako ன் புதல்வனுக்காக சமர்பித்தான். அந்த சிறுவனே நான்! Charles L. Carolus - the author of the book" என வாசித்து புத்தகத்தை மூடினாள் gwen.

"இது தானா history of this island!? ஒளிர்ந்து இருந்த சிலரின் பரம்பரையினர் தான் இப்ப இங்கு இருக்கிற "" Archaíoi ánthropoi"" எனபடுற ஆதிவாசிகள்! இந்த Book Mr Jay ட கைக்கு போய் இருக்கு என்றா; அவரு இதை திருடி இருப்பாரா? அப்போ ஏன் Mr Volter இந்த Book ஐ பல வருடங்களுக்கு முன் எரித்ததாக சொன்னாரு? " என தன் மனதில் உள்ள கேள்விகளை கொட்டினாள் loral.

"Guys see this!" என robin Book ன் பின் பக்கத்தை காட்ட அதில் இவர்களிடமிருந்த maps குறிக்கப்பட்டிருந்தது. அதோடு robin 2nd clue எடுக்க சென்ற குகையில் பொறிக்கப்பட்ட கற்செதுக்கமும் அவ்வாறே இருந்தது. "இது நான் உங்க கிட்ட சொன்ன கற்செதுக்கம்! இது அப்போ Book ல எழுதப்பட்டிருந்த சரித்திரத்தை குறிப்பிடுது!" என robin கூற Henry தனது phone ல் அதனை photos பிடித்து கொண்டான்.

" ok guys! ரொம்ப late ஆகிறிச்சு! காலைல பேசலாம். இப்போ கூடாரத்திற்கு போங்க! இல்லை Mr Benjamin கு சந்தேகம் வரும்! " என gwen boys மூவரையும் அவரவரின் கூடாரத்திற்கு அனுப்பினாள்.

காலையில் ஐவரும் சீக்கிரம் எழுந்தனர். Danish உடன் சேர்ந்து Henry யும் Book ஐ அதே இடத்தில் வைக்க சென்றனர்.

Mr Jay ன் கூடாரத்தின் அண்மையில் செல்ல "ladies first! " என்றான் danish. "இங்கு எந்த ladies உம் இல்லை. உனக்கு பயம் என்று சொல்லு!" என Henry கூற பல்லை இளித்து கொண்டிருந்தான் danish.

"நீ இங்கயே இரு! நான் போய் வெச்சுட்டு வாறேன்!" என Henry கூடாரத்தினுள் சென்று சுற்றும் முற்றும் பார்த்தான். யாருமில்லை என்றறிந்தவுடன் உடனே மேசையில் வைத்து விட்டு danish இருக்கும் இடத்திற்கு வந்தான்.

ஆனால் அங்கு danish இருக்கவில்லை. "Danish! Daaannnish! எங்க இருக்க! இது விளையாடுற time இல்லை! Come on! Danish!" என கத்தி கொண்டே 5 நிமிடமாக தொடர்ந்து அவனை தேடியும் கிடைக்கவில்லை.

"ஒருவேளை என்னை விட்டுட்டு போய்டானோ!" என நினைத்து நண்பர்களிடம் ஓடினான். "Danish! Danish! எங்கடா? வெளிய வா! Hide & seek விளையாடுற time இல்ல. Danish! Daaannnish! " என கத்த மற்ற மூவரும் Mr Benjamin உம் Henry ன் அருகில் ஓடி வந்து ஏன் என்று கேட்டனர்.

Mr Benjamin டம் book திருடியதை பற்றி சொன்னால் திட்டுவார் என நினைத்து " நானும் danish உம் jogging போனோம். நான் முன்னால போனேன். அவன் பின்னால வந்தான்.கொஞ்ச தூரம் போய் திரும்பி பார்க்கறப்ப அவன் இருக்கல்ல! அதுதான் அவன் இங்க வந்திருப்பானோ தெரியாது என்று வந்தேன்! " என Henry கூற " ஒருவேளை கடத்தல்காரர்களா இருக்குமோ?!" என gwen கேட்க மற்றவர்களும் அதனை ஆமோதித்தனர்.

தொடர்ச்சியாக தேடுதல் பணி நடைபெற அங்கு danish ஐ Mr Paul ன் ஆட்கள் கடத்தி கொண்டு போய் ஓர் இடத்தில் வைத்தனர். அங்கு அவர்களின் கூடாரமும் இருந்தது.

Danish ற்கு முதலில் பயமாக இருந்தாலும் அவனது மனம் " கடத்திட்டு போற மாதிரி எத்தனை Cartoons பார்த்து இருப்பாய். இது எல்லாம் டம்மி matter!" என்றது.

தைரியம் வரவழைத்து கொண்ட danish சற்று சத்தமாக "Hey kidnappers, நான் ஒன்னும் உங்களுக்கு பயம் இல்லை! எப்படி கடத்தல்காரர்களோட deal பண்ணனும்டு Home alone 1, Home alone 2, Home alone 3, Baby day out cartoons ல காட்டி இருக்காங்க!
நீங்க என்னை கொல்ல idea பண்ணா; Jack & Jill cartoon ல வார witch jack அ எப்படி கொல்லுறத்துக்கு முன்னாடி நல்லா சாப்பிட கொடுத்தாங்கலோ! அது போல எனக்கும் வயிறு மூட்ட சாப்பிட தாங்க!
கப்பம் கேட்க நினைச்சுங்க என்றால் 1000 பொற்காசுகள் கேளுங்க! அது தான் என்னுடைய பெறுமதி!
இதுக்கு தான் நான் Harshini ட அப்பவே சொன்னேன் எனக்கு big hero 6 ல வார robot beymex மாதிரி ஒன்னு எனக்கும் தர சொல்லி! கேட்டாளா? எல்லாம் கால கொடுமை!!!!

என Danish பேசி கொண்டு பேசி கொண்டு போக பொறுமையை இழந்த இருவர் தனது கூடாரத்திற்குள் நுழைந்தனர்.

கோபமடைந்த மற்றவனோ danish ன் காலையும் கையையும் கட்ட தடித்த கயிறை கொண்டு வந்தான்.

Thanks for the votes & comments.
Keep supporting.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro