Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தாரம்-9❤

"நா மிடில் க்ளாஸ் பொண்ணுதா..." என்று அவள் கூறியவுடன் அவன் கோபத்தின் உச்சத்திற்கு சென்று விட்டான் ..."ஒண்ணு நல்லா புருஞ்சுக்கோ அனி நா நீ மிடில் க்ளாஸ் பொண்ணா இல்ல ஹை  க்ளாஸ் பொண்ணாணு பாத்து லவ் பண்ணல எனக்கு உன்ன புடிச்சிருக்கு அவ்ளோதா...ஆனா நீ இப்டி நம்மலுக்கு நடுவுல ஸ்டேட்ஸ் ப்ராப்ளம் கொண்டு வருவனு சத்தியமா நா எதிர்பார்க்கவே இல்லடி..சீ.. நீக்கூட எல்லார் மாதிரி தானடி???"என்று கண்களில் வலியுடன் அவன் கேட்ட பொழுது தான் கூறியது தவறு என்று உணர்ந்தாள்.. ஆனால் அவள் உணர்ந்த பொழுது காலம் கடந்து விட்டது அனிஷ் கோபத்துடன் அங்கிருந்து விலகி சென்று விட்டான்

அவளுக்கு யாரிடம் என்ன கூறுவது என்று தெரியவில்லை.. அவளுக்கு அவன் எங்கிருக்கிறான் என்றே தெரியாமல் தவித்தாள்..அவன் தன் நண்பர்களிடம் தங்களின் காதலை கூறியிருப்பானா என்று தெரியவில்லை..அவன் யார்??அவன் குடும்பம் எதுவுமே அவள் அறியவில்லை...அவள் தன் தைரியத்தை எல்லாம் திரட்டி கொண்டு அனிஷின் நண்பன் கார்த்திக்கிடம் சென்றாள்.." எஸ்க்யூஸ் மீ அண்ணா!!!" என்று அவள் அழைத்தவுடன் திரும்பியவர்" சொல்லுமா அனிதா !!" என்று அவன் கூலாக தன் பெயரை கேட்டவுடன் ' இந்த சப்ப மூஞ்சிக்கு எப்டி நம்ம பேரு தெரியும்??? சரி அவன்கிட்டயே கேட்போம்...' " உங்களுக்கு எப்டி என்னைய தெரியும்???" என்று கேள்வியாய் அவனை நோக்கினாள்
" அதுவாமா..உன்ன ஃபர்ஸ்ட் நாள் பாத்தப்பவே அனிஷ் எங்க எல்லார்கிட்டயும் அனிதா உங்க எல்லாருக்கும் தங்கச்சின்னு சொல்லிட்டான்மா.." என்று புன்னகையுடன் கூறினான்.." அப்போ அண்ணா உங்களுக்கு எங்களுக்குள்ள நடந்தது தெரியுமா???" என்று தயக்கத்துடன் கேட்டவளை பார்த்து " அனிஷ் எப்பவும் அவனோட சந்தோஷத்த மட்டுந்தா ஷேர் பண்ணுவாம்மா அவனோட வலிய அவன் யார்க்கிட்டையும் சொல்ல மாட்டாம்மா..அவன் அப்டி யார்க்கிட்டயாச்சும் சொல்லாறான்னா அவங்கள அவன் அவங்க
அம்மாவ மாதிரி நேசிக்குறான்னு அர்த்தம்மா!!!" என்று அவன் கூறியதும் " போதும் னா நா அப்றம் வரேன்" என்று‌ கூறி  அங்கிருந்து கண்களில் வலியோடு அங்கிருந்து நகர்ந்தாள்..

இரண்டு நாட்கள் எப்படி கழிந்தது என்று அவளுக்கு தெரியவில்லை...அவளும் அவன் வருவானென்ற எதிர்பார்ப்புடன் தினமும் ஹாஸ்பிடல் சென்று விடுவாள்..ஆனால்  அவளின் எதிர்பார்ப்பு பாவம் பொய்யாகி விடும்😕😕😕

இந்த நிலையில் ஒரு நாள் அவளை டீன்ஸ் ஆஃபிஸில் அழைத்தார்கள் என்று வேகமாக சென்றாள்.. அங்கே ஒரு சொட்ட மண்டை ( அதாங்க எங்க டீன்..😂😂) " நீதா அனிதாவாமா உன்ன Chairman கூப்டாருமா உள்ள போ.." என்று பெரிய அறையை நோக்கி கை காண்பித்தார்..
' ஐயோ..என்னடா நம்ம எதுவும் தப்பு பண்ணிட்டோமா.." என்று பயத்துடன் உள்ளே நுழைந்தாள்..அங்கே ஒரு நடுத்தர வயதில் ஒருவர் அமர்ந்திருந்தார்.."எஸ்க்யூஸ் மீ சார்.." என்று அவள் அழைத்ததும் " யெஸ் கம் இன்" என்று தலை நிமிராமலே கூறினார்.."ஸார் நீங்க என்ன கூப்பிட்டீங்களாமே??" என்று கூறிவிட்டு அவரை நிமிர்ந்து பார்த்தவள் அதிர்ந்து போனாள்..

ஏனென்றால் அங்கே இருந்தவர் அப்படியே அனிஷை உறித்து வைத்தது போல் இருந்தார்..ஆம் அவர்தான் அனிஷின் தந்தை ராகவன் அவர்கள் படிக்கும் கல்லூரியின் CEO ,ராகவ் க்ரூஸ் ஆஃப் ஹாஸ்பிடலின் CEO.. இந்தியாவின் டாப் மோஸ்ட் நியூராலஜிட்... இன்னும் எண்ணில் அடங்காதது!!!!..

" ஓ ...வாமா நீதான் அனிதாவாமா பாக்க மகாலட்சுமி மாதிரி இருக்கமா!!!" என்று அவர் பாரட்டியவுடன் அவள் என்ன கூறுவது என்று தெரியாமல் விழித்தாள்...பின் அவரே தொடர்ந்தார் " என்னோட மனைவி இறந்தப்போ அனிஷ்க்கு 3 வயசு..அம்மாவோட அன்பும் பாசமும் கெடைக்க வேண்டிய வயசுமா அது ஆனா அவன் சந்தோஷமா இருக்கனும்னு ஓடி ஓடி உழச்ச எனக்கு நா அவன்கூட  இருந்தருக்கனும்றது எனக்கு லேட்டா தான்மா புருஞ்சதது ... அவன் கஷ்டத்தையும் வலியையும் யார்க்கிட்டயும் சொல்ல மாட்டான்மா..என்னோட பையனுக்கு என்ன தேவன்றது தெரியாம அவனுக்கோ தேவையில்லாத பணம், சொகுசான வாழ்க்கை எல்லாமே குடுத்தும் அவன் எதையுமே அளவுக்கு மீறி யூஸ் பண்ண மாட்டான்மா..... அவனுக்கு தேவ அன்பு மட்டுந்தாமா...
உன்னால அவனுக்கு அத குடுக்க முடியுமாமா???"என்று கண்களை துடைத்துக் கொண்டு கேட்டவரை பார்த்து அவளால் மறுக்க முடியவில்லை..."கண்டிப்பா அங்கிள் ,‌என்னால முடிஞ்ச வரைக்கும் என்னோட முழு அன்ப அவனுக்கு குடுக்குறே... உங்களுக்கு வாக்கு குடுக்குறே..."என்று அந்த பெரியவருக்கு வாக்கு கொடுத்தாள்....அவள் அறியவில்லை அது அவள் வாழ்வில் புது பிரச்சினையை உருவாக்கும் என்று...😕😕😕

" இப்போ தாமா எனக்கு நிம்மதியா இருக்கு..." " அங்கிள் அனிஷ் ரொம்ப நாள் வரவே இல்லயே எங்க இருக்காங்க???" என்று அவள் கேட்டவுடன் " அததாமா சொல்ல கூப்புட்டே...உங்க 2 பேர்க்குள்ள ஏதாச்சும் சண்டையாமா???அவன் 2 நாளா டே அண்ட் நைட் ட்யூடி பாத்து ஹை ஃபீவர் வந்து வீட்ல ரெஸ்ட் எடுக்குறாமா!!" என்று‌ சோகத்துடன் கூறினார்.." அங்கிள் இஃப் யூ டோண்ட் மைன்ட் நா அவங்கள பாக்க போலாமா???" என்று அவள் கேட்ட கேள்விக்கு புன்னகையுடன் " போயிட்டு வாமா நா நம்ம கார அனுப்பி வைக்குறே.." என்று கூறி அவளை அனுப்பி வைத்தார்...அவள் கதவை திறக்க போகும் போது " மா அனிதா !!!"என்று அவளை அழைத்தார் " ஏன்மா அங்கிள்னு கூப்பிடுற வாய் நிறைய மாமானு கூப்டுமா" என்று பாசத்துடன் கூறினார்... அவளும் புன்னகையுடன் " சரிங்க மாமா" என்று கூறி சென்றாள்...

தன்னவனிடம் சென்றாள் அனிஷின் அனிதா 💞💞💞💞
Sry for the late upd guys..2 days rmba busypa..Viva aprm clgla program irundhadhu Soo adha poda mudilla sry 😕😕😕  daily poda kandippa try panre guys byeee.
.
.
.
.
.
.
.
.

Gud night 😴💤😴💤😴💤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro