Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தாரம்-40

கார்த்திக் எப்பொழுதும் அனிதா ஒரு சின்ன பெண் தன் தங்கை போல் இன்னும் விளையாட்டுத்தனமாக இருப்பவள் என்று நினைத்தான் ஆனால் அவன் அவன் எதிர் பார்த்ததுக்கு மாறாக அவன் அங்கு விரைந்து சென்ற போது அவள் மிகவும் தைரியகமாக இருந்தாள் ஸ்ருத்தியை கூட லட்சுமி அம்மா வீட்டில் விட்டிருந்தாள்

அவன் விரைந்து சென்ற போது அவள் அனிஷிற்கு தெரிந்த அனைவருக்கும் கால் செய்து கொண்டு இருந்தாள்

கார்த்திக் வருவதை பார்த்து அவனிடம் ஓடி வந்த அனிதா " அவரை பார்த்திங்களா ?" என்று குரலில் பயங்கரமான பயத்துடன் கேட்டாள் என்னதான் அவள் பயப்படாமல் இருப்பதற்கு நிறைய ட்ரை பண்ணாலும் அவள் கண்களில் பயம் ஆடியது

அவளை கொஞ்சம் சமாதான படுத்தியவன் ஹோச்பிடலுக்கு கால் செய்து அனைவருக்கும் கேட்க ஆரம்பித்தான் ஆனால் யாரிடமும் அவன் எதிர்பார்த்த பதில் கிடைக்க வில்லை

கொஞ்ச நேரம் கழித்து அவனுக்கு ஒரு தெரியாத நம்பரில் இருந்து கால் வந்தது மேபி அது அனிஷாக இருக்கும் என்று நினைத்து காலை அட்டென்ட் செய்தான் ஆனால் சிறிது நேரம் கழித்து அந்த காலை அட்டென்ட் செய்யாமலே இருந்து இருக்கலாம் என்று தோன்றியது ஆனால் விதியை யாராலும் மற்ற முடியாதே என்ன செய்வது

ஆனால் விதியை மற்ற கூடிய சக்தி அனைவருக்கும் இருந்து இருந்தால் உலகத்தில் யாராலும் வாழ முடியாமல் போயிருக்கும்

அவன் பயந்தது போலவே அது அவனுடைய தங்கை தான் அவன் காலை அட்டென்ட் செய்தவுடன் மறுமுனையில் " அண்ணா நா சொன்னேன்ல எனக்கு வேணும்ன்றது எனக்கு கிடைக்கலேனா அதா அழிக்காமா விடமாட்டேனு ஆனா நீ அதா பெருசா எடுக்கல இப்போ பாரு நா ஆனிஷ ஆக்சிடென்ட் பண்ணிட்டே ஆமா நாதா பண்ணே " என்று கூறிவிட்டு வில்லி போல் சத்தமாக சிரித்தாள் ஆனால் ஏனோ அந்த சிரிப்பில் சந்தோஷம் இருந்த மாதிரி தோன்ற வில்லை

சிரித்து விட்டு மறு நொடியில் அழுகும் குரலில் " எனக்கு பயமா இருக்கு அண்ணா அனிஷ் முழிக்க மாற்றாரு அவர் இறந்துடுவாரோன்னு பயமா இருக்கு வந்து காப்பாத்து அண்ணா ப்ளீஸ் ""

அவள் கூறியதை கேட்டபின் கார்த்திக்கிற்கு அவளை திட்ட கூட தோன்ற வில்லை விரைவாக அவளிடம் எங்கே இருக்கிறாள் என்று கேட்டு விட்டு அனிதா விடமும் அவன் சென்று வெளியே தேடி விட்டு வருவதாக கூறிவிட்டு வேகமாக அந்த மகதி கூறிய இடத்தை நோக்கி சென்றான்

என்னதான் அவனுக்கு பயமாக இருந்தாலும் போகிற வழியிலேயே அம்புலன்சிற்கு கால் செய்து விரைவாக அங்கே  செல்லும் படி ஏற்பாடு செய்தான்

அவன் அங்கே சென்ற போது மஹதி அனிஷை ஆம்புலன்சில் ஸ்ட்ரெச்சரில் வைத்து தூக்கி செல்வதை பேய் அறந்தவள் போல் பார்த்து கொண்டு இருந்தாள்

கார்த்திக்கிற்கு அவளை அடிக்க வேண்டும் திட்ட வேண்டும் என்று மனம் துடித்தது ஆனால் அந்த எண்ணங்களை மனதில் அடக்கி கொண்டு உயிருக்காக போராடி கொண்டு இருக்கும் தன் நண்பனிடம் ஓடி சென்றான்

ஆம்புலன்ஸில் இருப்பவர்களிடம் அவன்தான் கால் செய்ததாகவும் அடி பட்டு இருப்பவர் தன் நண்பன்தான் என்றும் அவனும் டாக்டர் தான் என்றும் கூறி அனிஷை செக் பண்ண ஆரம்பித்தான் நல்ல வேலையாக கிரிட்டிகள் நிலையில் இல்லை என்பதால் கொஞ்சம் நிம்மதி அடைந்தான்

வேகமாக அவர்கள் ஹாஸ்பிடல் வந்து அடைந்தனர்

ஹோச்பிடலில் அவனை அட்மிட் செய்து விட்டு அனிதாவுக்கு கால் செய்து ஹோச்பிடலிற்கு வர செய்தான் , ஹாஸ்பிடல் என்று கேட்டவுடன் பயந்தவளை ஒன்றும் இல்லை என்று சமாதான படுத்தினான் இருப்பினும் அவனுக்கு அனிஷின் நிலைமை கொஞ்சம் கிரிட்டிகல் ஆக தான் இருக்கு என்று தெரியும் எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அனிஷின் தந்தை சரி செய்து விடுவார் என்று தெரிந்த விஷயம் ஆயிற்றே அதனால் அவனுக்கும் கொஞ்சம் பட படப்பு இல்லாமல் இருந்தது

கார்த்திக் காலை கட் செய்தபோது அங்கே மாகதி நின்று கொண்டு இருந்தாள் அவள் தான் அனைத்துக்கும் காரணமாக இருந்தும் அவள் கண்களில் கண்ணீர் நிறைந்து இருந்தது ஆனால் ஏன் என்ற காரணம் அவளுக்கே புரியவில்லை

ஆனால் கார்திக்கிற்கோ அவள் அழுவது அருவருப்பாக இருந்தது அவளை இழுத்து கொண்டு ஹாஸ்பிடலுக்கு வெளியே சென்றான் அவர்கள் வெளியே சென்றவுடன் மகதியின் கன்னத்தில் பலமாக அறைந்தான்

இதேது இந்நேரம் மகதியின் மேல் எந்த தவறும் இல்லாமல் இருந்தால் அவன் அரைந்ததற்க்கு உலகத்தையே புரட்டி போட்டு இருப்பாள் ஆனால் இன்று அவளுக்கு எதுவும் பண்ண தோன்றவில்லை அவள் மேல் தான் தவறு என்று தோன்றியது அதனால் அமைதியாக வலியாலோ அல்ல வேதனையாலோ வந்த கண்ணீரை பல்லை கடித்து அடக்கி கொண்டாள்

கார்த்திக்கிற்கு அவளை திட்ட வேண்டும் போல் தோன்ற வில்லை இவளை திட்டி என்ன ஆக போகிறது அவனுடைய நண்பன் ஓன்றும் மறுபடியும் எந்த காயமும் இல்லாமல் வர போவது இல்லையே

அனிஷின் காயங்களுக்கு அவனுடைய தங்கைதான் காரணம் என்ற நினைப்பே அவனுக்கு கஷ்டமாக இருந்தது எல்லாம் அவனுடைய தவறுதான் அவன்தான் அவனுடைய தங்கையை ஒழுங்காக வளர்க்கவில்லை

அங்கே இருந்து எங்காவது ஓடி சென்று ஒளிந்து கொள்ள வேண்டும் போல் இருந்ததது உறவுகள் பொறுப்புகள் அனைத்தையும் விட்டு எங்காவது கண்காணாத இடத்துக்கு ஓடி செல்ல வேண்டும் போல் இருந்தது ஆனால் அனைவருக்கும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்து இருந்தால் உலகம் பிரச்னைகளால் நிரம்பி இருக்கும் கார்த்திக் கண்களை மூடியபோது அதற்காகவே காத்து கொண்டு இருந்தது போல் கண்ணீர் அவன் கண்களை நிரப்பியது. ஊமை கண்ணீர் அவன் கன்னங்கள் வழி வடிந்தது

அவன் கண்களை திறந்தபோது அவன் கண்முன் இருந்தது அவனது அன்பு தங்கை , இப்போது அவனது வாழ்வில் அவன் சந்திக்கும் அணைத்து பிரச்சனைகளுக்கும் காரணமானவள் சாதாரணமாக மனிதர்கள் இந்த மாதிரி நேரங்களில் கோபம் கொள்வார்கள் ஆனால் ஏனோ அவனுக்கு கோபம் அவன் மேல்தான் இருந்தது அவனது தாய்தந்தை இறந்தபோது அவர்களுக்கு அவன் கொடுத்த ஒரே வாக்கு அவனது தங்கையை ஒழுங்காக நல்ல முறையில் வளர்த்து அவளை வாழ்வு முழுவதும் காக்க வேண்டும் என்பது தான் ஆனால் அதை அவனால் ஒழுங்காக நிறைவேற்ற  முடியவில்லை
அவனால் அவனது தங்கையை ஒழுங்காக வளர்க்க முடியவில்லை ஒரு அண்ணனாகவும் ஒரு நண்பனாகவும் அவன் தோற்து விட்டான்!!

மகதி அவள் அண்ணன் கண்களை திறந்தவுடன் அவள் எதிர்பார்த்தது கோபம் ஆனால் அதற்கு மாறாக அவள் பார்த்தது ஒரு அம்மா தன் குழந்தையை காப்பாற்ற தவறிய சோகம் தான் அவளுக்கு தெரிந்தது அவள்தான் அந்த குழந்தை அவன்தான் அந்த தாய்
ஆம் அவளுக்கு அவளுடைய தாயின் முகம்கூட ஞாபகம் இல்லை ஆனால் அவளது அண்ணன்தான் அவளுக்கு தாயாகவும் தந்தையாகவும் இருந்தான் அவன்தான் அவளுக்கு நண்பனாகவும் அண்ணனாகவும் வாழ்வில் அவனுக்கு எல்லாமாகவும் இருந்தான்

வாழ்வில் முதல் முறையாக மகதிக்கு தான் செய்தது தவறு என்று மனம் உறுத்தியது. அவளது அண்ணனை அவள் காயப்படுத்தி இருக்க கூடாது அவளது அண்ணனின் நண்பனின் மேல் ஆசை வளர்த்து இருக்க கூடாது ஏன்? அவனை ஒன்றும் அவள் காதலிக்க வில்லையே கார்த்திக் அவளிடம் அனிஷ்  அவளுக்கு இல்லை என்று கூறியதற்காகவா ? தான் தவறு செய்து விட்டது மகதிக்கு அப்போதுதான் புரிந்தது

புரிந்த மறு நொடி அந்த மொத்த ஹோச்பிடலும் அவள்மேல் விழுவது போல் இருந்தது மூச்சு முட்டியது எதை பற்றியும் மனம் யோசிக்க தோன்ற வில்லை அங்கிருந்து அவள் வேகமாக வெளியே ஓட்டம் பிடித்தாள் எங்கே என்பது கடவுளுக்குதான் வெளிச்சம்

தன் தங்கை ஓடிய திசையை நோக்கி அவனுக்கும் ஓட மனம் துடித்தது ஆனால் அவன் ஓடவில்லலை அவள் ஓடிய திசையை வெறித்து நோக்கியவனாக இருந்தான்

திரும்பிய போது அஞ்சலி அவனை நோக்கி நின்று கொண்டு இருந்தாள் அவள் பார்வையிலே புரிந்தது அவள் அனைத்தையும் பார்த்து விட்டாள் என்று ஆனால் அவனிடம் வந்து அவள் ஒன்றும் ' நான் அனிதாவிடம் சொல்லி விடுவேன் ' என்றெல்லாம் சொல்லி அவனை மிரட்டவில்லை மாறாக " நெவெர் மைண்ட் நா யார் கிட்டயும் சொல்ல மாட்டேன் " என்று கூறிவிட்டு அவளுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல் அங்கிருந்து சென்று விட்டாள்

அதற்க்கு பின் கார்த்திக் அனிஷ் ஸ்டேபில் கண்டிஷனுக்கு வரும்வரை ஒரு ஓரமாக அமர்ந்து இருந்தான்

அவனால் சென்று அனிதாவையோ இல்லை அனிஷிற்கு சம்பந்தமான யாரையோ பார்க்க தைரியம் இல்லை

அனிஷ் ஸ்டேபில் ஆனவுடன் அவன் வீடு திரும்பினான்

ஆனால் அவன் வீடு திரும்பிய போது எப்போதும் போல் இல்லாமல் வீடு முழுவதும் வெளிச்சமாக இருந்தது

அவன் வீடை நெருங்க நெருங்க வீட்டில் ஸ்பிக்கரில் பாடி கொண்டு இருந்த பாப் மியூசிக் காதை பிளந்தது

உள்ளெ சென்று பார்த்த போது மகதி கிட்சேனுள் ஏதோ பேக்( bake )   செய்து கொண்டு இருந்தாள் அவளை பார்த்த போது அவள் முகத்தில் ரொம்ப நேரம் அழுத தடயம் தெரிந்தது ஆனால் அவளோ சந்தோஷம் மட்டுமே நிறைந்தவள் போல் இருந்தாள் 

அவன் நிற்பதை கவனித்தவள் போல் தான் செய்து கொண்டு இருந்ததை நிறுத்தி விட்டு " அண்ணா எங்க இருந்த நீ ?அத்தை உனக்கு கால் செஞ்சிட்டே இருந்தார்களாம் நீ எடுக்கவே இல்லனு சொன்னாங்க உனக்கு விஷயம் தெரியுமா?அத்தை பிரேக்னன்ட்டா இருக்காங்க செம்ம ஹாப்பி நம்ம வீட்ல ஒரு குட்டி பாப்பா வர போதுணா  !!" என்று அகத்திலும் முகத்திலும் சந்தோசத்துடன் கூறினாள்

அவன் முன் வந்தவள் அவன் வாயில் தான் செய்து கொண்டு இருந்த பாட்டரை( batter )  வைத்து விட்டு ' எப்படி இருக்கிறது என்பது போல் விழிகளால் கேட்டாள் ஆனால் அவன் பதிலுக்கு நிக்காமல் " எனக்கு தெரியும் நல்லதா இருக்கு நா இத யூஎஸ்ல ஸ்கூல்ல கத்துக்கிட்டே அத்தை எவ்ளோ ஹாப்பி நியூஸ் சொல்லி இருக்காங்க அதா குக்கீஸ் பேக் பண்ணி குடுக்க போறே "

" சிரி ( siri ) , சேஞ் தே சாங் டு ' friends by jordy ' " என்று கூறியவுடன் பாப் ம்யூஸிக்க்கில் " you are so close .." என்றுஸ்பீக்கரில்  பாட்டு பாட ஆரம்பித்தது

" இப்போ ரீசெண்டா இந்த பாட்டுக்கு செமயா அடிக்ட் ஆகிட்டே ; செமயா இருக்குல ? " என்று அவனிடமே வினவினாள்

கார்த்திக்கிற்கு ஒரு நிமிடம்  என்ன நடக்கிறது என்பது புரியவே இல்லை

ஒரு நீண்ட மூச்சை எடுத்து விட்டு அவள் கேட்ட முதல் கேள்விக்கு " நா அனிஷ் கூட இருந்தேன் " என்றான்

அவன் எதிர்பார்த்தது போலவே அந்த பெயரை முதல் முறை கேட்பது போல் நோக்கியவள் " யாரு அண்ணா அனிஷ் உங்க புது பிரின்ட் போல அப்புறமா எப்போவாச்சும் வீட்டுக்கு கூட்டிட்டு வாங்க அண்ணா " என்றாள் கைகளில் இருந்த தட்டை ஓவெனில் வைத்தபடி

அவள் கூறியதற்கு தலையை மட்டும் ஆட்டிவிட்டு அவனது ரூமை நோக்கி சென்றான்

அவன் போகும் வழியில் அந்த ஸைக்காட்ரிஸ்ட்  கூறியது காதில் ஒலித்தது " தனக்கு கிடைக்காததை அழித்தவுடன் ஒரு traumatical breakdown  அப்புறம் அந்த மனிதரையோ அல்ல அந்த பொருளை பற்றிய ஞாபகங்களை அவர்களே அழித்து விடுவார் "...

அப்படியே அந்த முழு ஞாபகங்களையும் தங்கையுடதையும் சேர்த்து அவனே ஞாபகம் வைத்து கொண்டான்

அவன் பேசி முடித்தபோது அந்த ரூமில் இருந்த அனைவருக்கும் கண்களில் கண்ணீர் நிரம்பி இருந்தது அந்த தன் தங்கையை காக்க போராடிய  அண்ணனுக்காகவா இல்லை தான் என்ன செய்கிறோம் என்பதையே அறியாத தங்கைக்காகவா என்று அவர்களுக்கு தெரியவில்லை

ஒரு நீண்ட அமைதிக்கு பின் அனிஷிடம் திரும்பிய கார்த்திக் " ஐம் சாரி அனிஷ் எல்லாம் என்னோட தப்பு தான் நாதா என்னோட தங்கச்சியையும் என்னோட பிரண்டயும் காப்பாத்த தவறிட்டே ! இந்த இடத்தில இருந்தும் உன்னோட வாழ்க்கையில இருந்தும் நா விலகி போறதுதா நல்லது அனிஷ் ! பாய் "

என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு கிளம்பி சென்றான் கார்த்திக்

அனிஷ் பின் வந்து தன்னை தடுப்பான் என்று கார்த்திக்கோ அல்ல கார்த்திக்கை தடுப்பதற்க்கு அனிஷா யோசிக்கவில்லை

இதுதான் அனைவருக்கும் நல்லது என்று தோன்றியது

அந்த நிமிடத்தில் தான் ஒரு நல்ல உறவு முடிந்தது ஆனால் அவர்களின் நட்பு அல்ல  ♡

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro