தாரமே-38
கார்த்திகிற்கு என்ன கேட்பது என்று கூட தெரியவில்லை.. எல்லா மனிதரைப்போல் அவனுக்கு தன் தமக்கைதான் முக்கியம் என்பதால் " சரி படித்திறலாம்ல டாக்டர்? " என்று வினாவினான்
சிறிது நேரம் யோசனை யில் இருந்த டாக்டர்.. " இந்த டிஸ்ஸார்டர்க்கு ஸ்பெஸிஃபிக்கா எந்த ட்ரீட்மண்டும் இல்ல.. ஏனா ஒருசில டிஸ்ஸார்டர் உள்ள பேஷன்ட்க்கு நமக்கு ஏதோ தப்புனு தெரியும் ஆனால் சில டிஸ்ஸார்டர் இருக்க பேஷன்ட்க்கு அது புரியாது.. நமக்கு எல்லாம் கரக்டாதா இருக்கு மத்தவங்ககளுக்கு தான் பிரச்சனைனு நினைப்பாங்க.. உன் ஸிஸ்டருக்கு இருக்க நோயும் அதுதான் ஸோ அவங்களுக்கு டெரக்டா ட்ரிட்மென்ட் தறது கஷ்டம் ஸோ முடிஞ்ச வரைக்கும் அந்த பையன பாக்கமா இருந்தா மேபி சரியாகலாம் .. " என்றார்
சிறிது நேரம் யோசித்தபின் கார்த்திக் ஹோச்பிடலை விட்டு வீட்டுக்கு புறப்பட்டான்.. வாழ்வில் அவனுக்கு மட்டும் ஏன் கடவுள் நிம்மதியாக இருக்க விட மாட்டுகிறாரோ ? பொதுவாக அவன் வாழ்வில் ஏதேனும் பிரச்சனை என்றால் அனிஷ் இடம்தான் ஓடுவான் ஆனால் அனிஷ் தான் பிரச்சனை என்கையில் யாரிடம் செல்வது ?
அவனுக்கு என்று இருக்கும் ஒரே ஒருவர் அவனது அத்தை தான் ஆனால் ஏற்கனவே தன் தங்கையை வெறுப்பவரிடம் எப்படி கூறுவது என்று தெரியாமல் தயங்கினான் ஆனால் இப்போது வேறு வழி இல்லையே அதனால் தன் அத்தைமாரை தேடி சென்றான்
ஆனால் அவன் நினைத்ததுக்கு மாறாக அவனது அத்தை அவன் கூறவறுவதை புரிந்து கொன்டார். அது போக அவனுக்கு ஒரு வழியும் கூறினார்
அதாவது அவரும் அவரது ஆஃபிஸில் வேலை செய்யும் ஒரு மனிதரும் காதலிக்கிறார்களாம் இன்னும் 2 மாதங்களில் இருவருக்கும் யூஎஸ் செல்லும் வாய்ப்பு கிட்டியுள்ளது அவரே இவனிடம் எப்படி கூறுவது என்று யோசித்து கொண்டு இருந்தார் இப்போது அவனுக்கும் அவனது பிரச்சனைக்கு தீர்வு கிட்டிவிட்டதே அவரது அத்தை யூஎஸ் செல்லும் பொழுது அவனது தங்கையையும் கூடே அழைத்து சென்றால் அவருக்கும் கொஞ்சம் உதவியாக இருக்கும் அவனுக்கும் தங்கை அனிஷை காணாமல் இருக்க முடியும் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் ஆயிற்றே
இதேது அவளது தங்கைக்கு மட்டும் இப்படி ஒரு டிசார்டர் இல்லாமல் இருந்து இருந்தால் அவன் கண்டிப்பாக தன் அத்தையுடன் மகதியை அனுப்பி இருக்க மாட்டான் ஆனால் இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் அவனது அத்தை கூறுவது போல் நடப்பதுதான் சாமர்த்தியம் என்பதால் அவனும் ஓகே என்று விட்டான்
அவனுக்கும் இனி அவனது அத்தையை சான்றி இருக்கும் அவசியமும் இல்லையே அவனது தாய் தந்தை இறப்பதற்கு முன் அவர்களது அக்கோவுன்டில் அவன் படிப்பு செலவிற்கும் அவனது தங்கையின் படிப்பு செலவிற்கும் கணிசமான தொகையை வைத்து விட்டே சென்றனர் அதனால் காசு பற்றிய கவலை அவனுக்கு இல்லை
கார்த்திக்கிற்கு அவள் யூஎஸ் கிளம்பும் வரையில் மனம் நிம்மதியாகவே இல்லாமல் இருந்தது
நல்ல வேலையாக அவர்களும் சீக்கிரம் கிளம்பி விட்டனர்
அவன் மகதியிடம் அவள் அவர்கள் அத்தையுடன் யூஎஸ் செல்ல வேண்டும் என்று கூறியபோது அவள் எதுவும் மறுக்காமல் ஓகே என்று விட்டது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது ஏதோ அவள் சேரி என்று விட்டாள் அதுவே தேவலை என்று சந்தோச பட்டுக்கொண்டான்
மகதியும் அவளது அத்தையும் கிளம்பி 4 மாதங்கள் ஆகிவிட்டது
அவனும் மனதை குழப்பி கொள்ளாமல் பிஜிக்கு படிக்க ஆரம்பித்தான்
ஆனால் அவன் நிம்மதியெல்லாம் அனிஷ் பிஜி படிப்பதற்கு யூஎஸ் செல்லும் வரையில் தான்
ஒரு நாள் அனிஷ் கால் செய்து இருந்தான் கார்த்திக்கும் தன் நண்பன் பல நாட்கள் கழித்து கால் செய்கிறான் என்ற சந்தோஷத்தில் அட்டென்ட் செய்து " சொல்டா மச்சான் என்ன திடிர்னு வெளிநாடு போனானே என்னலாம் மறந்துட்டால ?"
மறுமுனையில்
" அடேய்ய் நீ அத்தையும் மகதியும் இங்க இருக்கிறதா சொல்லவே இல்லையே டா.. நா இங்க மகதிய மால் ல மீட் பண்ணே டா இந்தா பேசு "
" ஹலோ அண்ணா என்ன அண்ணா என்கிட்ட சொல்லவே இல்ல அனிஷ் இங்க இருக்காருனு போங்க ணா நீங்க ரொம்ப மோசம் " என்று கூறிவிட்டு மெதுவான அவனுக்கு மட்டும் கேட்க்கும் குரலில் " நா சொன்னேன்ல ணா நா என்ன நடந்தாலும் என்னோட பொருள என்கிட்ட இருந்து யாராலயும் பிரிக்க முடியாது " என்று கூறிவிட்டு காலை கட் செய்தாள்
கார்த்திக்கிற்கு அனைத்தும் கனவு போல் இருந்தது என்ன செய்வது என்று புரியாமல் குழம்பி போனான் இதற்கு மேல் அவனது அத்தையையும் உதவிக்கு கேட்க முடியாது
ஆனால் அவன் அத்தையிடம் மகதியை கொஞ்சம் கவனமாக பாத்துக்கொள்ள மட்டும் தான் கூற முடிந்தது
ஏனென்றால் அனிஷ் பிஜி முடிப்பதற்கு இன்னும் 3 மாதங்கள் தான் உள்ளது ஆனால் மகதியை இங்கே அழைத்து வந்தால் அனிஷும் 3 மாதம் கழித்து வந்தவுடன் இன்னும் பிரச்சனை ஆகி விடும் அதனால் இப்போதைக்கு அவளை அனிஷை பாக்க விடாமல் பாத்து கொண்டால் எல்லாம் சரி ஆகிவிடும் கார்த்திக்கும் USMLE எழுதி அங்கே சென்று விட்டால் எல்லாம் முடிந்து விடும்
அவன் நினைத்தது போலவே அனிஷும் இந்தியா திரும்பி விட்டான் அதே போல் வந்த கையோடு அனிதாவையும் மணந்து கொண்டான்
அப்போதே அவனுக்கு எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விட்டதாக தோன்றியது..
அப்படியே நாட்களும் வேகமாக நகர்ந்தது
2 வருடங்கள் ஆகி விட்டது அனிஷிற்கும் இப்போது குழந்தையும் பிறந்து விட்டது இனி எந்த பிரச்னையும் இருக்காது என்று தோன்றியது அவனுக்கு
ஆனால் நாம் ஒன்று நினைத்தால் கடவுள் ஒன்று நினைப்பார்
அவரது அத்தைக்கு லேட் pregnancy என்பதால் குழந்தை பிறப்பதற்கு நிறைய காம்ப்ளிகேஷன்ஸ் இருப்பதால் அவர் குடும்பம் இந்தியா திருப்பியது அதனால் மகதியும் இந்தியா திரும்பி விட்டாள்
ஏனோ அவள் வெளிநாட்டில் இருந்து வந்தததில் இருந்து அவனுக்கு அவள் ஏதோ புதிய பெண்ணாக தோன்றினாள்
இப்போது மகதி பெரிய பெண்ணாக ஆகி விட்டாள் அவன் சின்ன வயதில் பார்த்தது போல் இல்லை அந்த பால் முகம் மாறி அழகிய நிலா போன்ற முகம் ஆகிவிட்டது
தன் தங்கையை பல நாட்கள் கழித்து பார்த்தது நாலயோ என்னவோ அவளுக்கு என்னலாம் வேண்டும் என்று கேட்டாளோ அனைத்தையும் வாங்கி தந்தான் அவள் இஷ்டம் போல் ஊர் சுற்றுவதற்கும் பணம் கொடுத்தான்
ஆனால் அதுவே அவனுக்கு வினையாக வந்து முடிந்தது
ஒரு நாள் மகதி வீட்டில் இருக்கும் பொருட்களை எல்லாம் போட்டு உடைக்க ஆரம்பித்தாள் ...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro