தாரம் - 37
கார்த்திக் கல்லூரி செல்ல ஆரம்பித்த சமயம்.. அங்கே தான் அனிஷை சந்தித்தான் அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகினர்..
அனிஷ் அடிக்கடி அவன் வீட்டிற்கு வருவதுண்டு ஆனால் அவன் வருவதற்கு ஏனோ கார்த்திகின் அத்தையார் எதுவும் கூறியதில்லை
அனிஷ் அவன் வீட்டில் ஒருவனாக ஆகிவிட்டான் எனலாம்..
வாழ்க்கை மிகவும் அழகாக இருந்தது கார்த்திக்கிற்கு.. ஆனால் அதெல்லாம் அவன் தன் அன்பு தங்கையின் அறைக்குள் செல்லும் வரை தான்..
அன்று, மகதி அவளுக்கு ஸ்பெஷல் க்ளாஸ் என்பதால் பள்ளி சென்று இருந்தாள்.. வீட்டில் சும்மா இருந்த கார்த்திக் தன் அத்தைக்கு உதவலாம் என்று லான்ட்ரிக்காக அவளது அழுக்கு துணிகளையும் பெட் ஷிட்டை எடுப்பதற்காக அவளது படுக்கையை தூக்கியது அதற்கடியில் அனிஷின் புகைப்படங்களும் நிறைய சாக்லேட் கவர்களும் அவை அனைத்தும் அனிஷ் வீட்டிற்கு வரும்போது அவளுக்காக வாங்கி வந்தது அது போக அனிஷின் ஒரு டீ சர்ட்டும் இருந்தது.. இதை எல்லாம் பார்த்து கார்த்திகிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.. தன் தங்கை ஏன் அனிஷின் பொருட்களை வைத்து இருக்கிறாள் என்பது ஒன்றும் பெரிய சிதம்பர ரகசியம் இல்லையே.. அவனுக்கும் புரிந்தது ஆனால் அது போக அவனுக்கு நன்றாக தெரியும் தன் நண்பனிடம் தன் தங்கைக்கு அப்படி எந்த ஃபீலிங்க்ஸும் இல்லை என்பதும் அவனுக்கு தெரியுமே..
அப்போதைக்கு எதையும் யோசிக்காமல் அவளது பெட் ஷிட்டை மட்டும் எடுத்து விட்டு வந்தான்.. மகதி வந்தவுடன் பேசிக் கொள்ளலாம் என்று விட்டு விட்டான்..
ஆனால் அவன் நினைத்ததுக்கு மாறாக அவன் தங்கை எதுவும் நடவாதது போல் இருந்தாள்..
பொதுவாக டீன்ஏஜ் பசங்களுக்கு தன் காதலை வீட்டிற்கு தெரியாமல் வைத்துக்கொள்வது தான் மிக பெரிய நோக்கமாக இருக்கும் அதனால் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பார்கள்.. ஆனால் அவள் தங்கை அதற்கு மாறாக அவன் தான் பெட் ஷீட்டை எடுத்தது என்று தெரிந்தும் எதுவும் காட்டி கொள்ளவில்லை அவள் பாட்டிற்கு அவள் வேலைகளை பார்த்து கொண்டு இருந்தாள்..
அதுவே அவனுக்கு வேறாக தோன்றியது.. அவள் பேசுவாள் என காத்து இருந்து இருந்து காலம் தான் கடந்ததே தவிற அவன் தங்கை அவளிடம் பேசப்போவதாக அவனுக்கு தோன்ற வில்லை.. அதனால் வேறு வழியில்லாமல் அவனே மகதியை தேடி சென்றான்..
வேகமாக சென்றவன் மகதியை கடைப்பிடித்து நிறுத்தி.. " மகதி நீ ஏன் அனிஷோட படத்த உன்னோட மெத்தைக்கு அடியில வச்சிருக்க?"
புரியதவள் போல் முழித்தவளை பார்த்ததும் அவளுக்கு புரியும் விதமாக அன்று அவள் ரூமிற்கு சென்று பார்த்ததை கூறினான்..
ஆனால் அவள் அதற்கு எதுவும் அவன் எதிர் பார்ததளவு எந்த ரியாக்ஷனும் காட்டாமல் இருக்கவும் அவனுக்கு கோபம் இன்னும் அதிகரித்தது..
ஆனால் அவனை இன்னும் கோபமாக்க விரும்பாதவளாக அக்கறையற்ற குரலில் " ஆமா இதுல என்ன இருக்கு அனிஷ் எனக்கு சொந்தமானவன் ஆயிற்றே உன்கிட்ட இருக்கறது எல்லாமே எனக்கு தானே அது மாதிரி அனிஷூம் எனக்கு தான்.. "
தன் காதுகளை நம்ப மாட்டாதவனாக அவளை வெறித்து நோக்கியவனாக " என்ன உளறுகிறாய்? "
" என்னிக்கிட்ட இருந்த பொருட்கள் என்றால் பரவாயில்லை ஆனால் அனிஷ் ஒரு பர்ஸன்.. விளையாடாத மகதி " என்று எச்சரிக்கும் தொணியில் கூறினான்..
" நான் ஒன்னும் விளையாடல அண்ணா.. நிஜமா தான் சொல்றேன்.. எனக்கு அனிஷ் வேணும்.. " அவள் தொடருவதற்குள் பொறுக்க மாட்டாதவனாக அவளை அறைந்தான் கார்த்திக்..
தன்னை இதுவரை கடிந்து கூட பேசி பார்த்து இராத அவன் அண்ணன் தன்னை அறைந்ததை தாங்க மாட்டாதவளாக அழுதுக்கொண்டே தன் ரூமிற்கு ஓடினாள்..
அன்று நடந்ததில் இருந்து மகதி தன் அண்ணடிம் பேசுவதையே நிறுத்தி விட்டாள் எனலாம்..
நிறைய யோசித்து பார்த்தும் ஒன்றும் விளங்காததால் தன் ஹாஸ்டலில் இருக்கும் ஸைக்காட்ரிஸ்டிம் சென்றான்..
கார்த்திக்கிடம் இருந்து அனைத்தையும் கேட்டு கொண்டவர் ஒரு முடிவுக்கு வந்தவராக..
" கார்த்திக் உங்க தங்கச்சி சின்ன வயசுல ஏதாவது தனக்கு வேண்டும் என அடம் பிடித்தது உண்டா ?"
" எல்லாத்திற்கும் சண்டை பிடிப்பா மேம்.. அவளுக்கு கிடைக்கிற வரைக்கும் அத பத்தி மட்டும் தான் யோசிச்சுட்டே இருப்பா.. "
" ம்.. அவளுக்கு பிடிச்சு இருக்கிற பொருள் அவளுக்கு கிடச்சதுக்கு அப்றம் அத மறந்து போயிடுவாளா?"
சிறிது நேரம் யோசித்தவனாக ஆமாம் என்று தலை அசைத்தான்..
" ஐ டோன்ட் நோ இஃப் இட்ஸ் ட்ரு பட் மேபி அவளுக்கு ' இன்டன்ஸிவ் டிஸையர் டிஸ்ஸார்டர் "னு சொல்லுவாங்க அதாவது அவங்களுக்கு ஒரு பொருள் இல்ல ஒரு மனிதர பிடித்து இருந்தால் அவங்கள அடையரதுக்கு என்ன வேண்டாலும் ஆனால் அது கிடைக்கலனா அந்த பொருள் இல்ல மனிதர அவங்கள அழிக்கிறதுக்கு எந்த லெவலுக்கும் போவாங்க.. ஆனால் இதுல இன்னும் வித்யாசமான விஷயம் அவங்களுக்கு அத அழுச்சதுக்கு அப்றம் அந்த மனிதரயோ பொருளையோ சுத்தமா மறந்திடுவாங்க.. "
இதை கேட்டவுடன் அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை..
Intensive desire disorder is not a medical disorder I made it up for the story!:))
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro