தாரமே-33
அனிதா தனக்கு கால்கள் செய்து அனிஷை விட்டு பிரிந்து போக சொன்னது எல்லாம் அனிஷின் தந்தை தான் என்பது அவளுக்கு தெரியும் என அனிதா கூறியதை கேட்டு அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது..
அது எப்படி முடியும்?
அனைவருக்கும் ' எப்படி ' என்று கத்த வேண்டும் போல் இருந்தது.. எங்கோ ஆரம்பித்தது எங்கோ வந்து முடிகிறது? அதுவும் முடிகிற மாதிரி தெரியவில்லை
அனிஷின் ஆச்சரியத்திற்கு அளவே இல்லை அப்போ இவன் இவ்வளவு நாட்கள் கஷ்டப்பட்டது எல்லாம் வீணா?
" எப்படி ? எப்போ? " என அனிஷ் கத்தினான் என்றே கூறலாம்
" உங்களுக்கு ஆக்ஸிடன்ட் ஆறதுக்கு முன்னாடி "
" என்ன ? நீ என்க்கிட்ட சொல்லவே இல்லையே"
" அனிஷ் என்னால இத ஃபோன்ல சொல்ல முடியாது! நீங்க நேர்ல வரும் போது சொல்றேன்! " என்று கூறிவிட்டு காலை கட் செய்து விட்டாள்..
அவள் வைத்து போது அவர்கள் அனைவருக்கும் ஸ்ருதி " அப்பா " என்று கத்தி அழுவது கேட்டது..
மறுபடியும் அனிதாவிற்கு கால் செய்து ஸ்ருதியிடம் மொபைலை கொடுக்க சொன்னான்
மறுமுனையில் ஸ்ருதியின் குரல் பக்கத்தில் கேட்டதும் அனிஷிற்கு மொபைல் அவள் கையில் இருப்பது தெரிந்தது
அவன் என்ன கூறினான் என்று அனிக்கு தெரியவில்லை ஆனால் இரண்டு நிமிடங்களுக்குள் அவள் அழுகையை நிறுத்தி விட்டாள்..
பின் அனிதாவிடம் சொல்லி கொல்லாமல் கூட காலை கட் செய்து விட்டான் அனிஷ்
அனிதா " அப்பா என்ன சொன்னாரு?" என்று கேட்டதற்கு வாயை கூட திறக்காமல் ஸ்ருதி இருந்தாள்..
" திமிர பாரு! அப்படியே அவ அப்பாவ உருச்சு வச்சுருக்கா " என்று கூறிவிட்டு அங்கிருந்து தன் வேலையை பார்க்க சென்று விட்டாள்
சென்னையில்
ஸ்ருதியிடம் தான் இரவு வருவதாக கூறிவிட்டு அங்கிருந்த மூவரிடம் திரும்பிய அனிஷ் " இந்த விஷயத்த இங்கேயே விட்ருங்க இனிமே இந்த விஷயத்துல எந்த விசாரணையும் வேண்டாம்.. இப்போதைக்கு எங்க இரண்டு பேருக்கும் உள்ள மிஸ் அண்டர்ஸ்டான்டிங்க் எல்லாம் ஸால்வ் ஆயிடுச்சு அது போதும் எனக்கு இப்போ.. நானும் அனிதாவும் அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும் " என்றான்..
அந்த மூவருக்கும் அவனின் வலி புரிந்தது.. பாவம் இரண்டு வருடங்கள் தன் குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து இருக்கிறான்.. அதுவும் முக்கியமாக அபிக்கு அவனின் வலி நன்றாக புரிந்தது அனிஷ் தினமும் இரவு தூங்குவதற்கு எவ்வளவு கஷ்டப்படுவான் என்று அவனுக்கு தெரியாதா? இரவு சில சமயம் அவன் மாடிக்கு சென்று பார்த்தால் அங்கு அனிஷ் வானத்தை பார்த்து கொண்டு நிற்பான்.. அவனின் தனிமையான நிழலை பார்க்கும் போது அவனுக்கு மனம் வலிக்கும்
அதே சமயம் கீர்த்திக்கு நிறைய சந்தேகங்கள் இருந்த போதும் அனிஷ் இப்படி கூறிவிட்டதால் அவனிடம் எதுவும் கூறாமல் தனியாக ஸால்வ் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தாள்..
முதலில் அவளுக்கு இருந்த மிகப் பெரிய கேள்வி அன்று அனிதாவிற்கு கால் செய்தது யார் ? எதற்காக?
அவர்கள் மூவரும் அனிஷிடம் விடை பெற்றுக் கொண்ட பின் காரை நோக்கி சென்றனர்
அங்கு வந்தவுடன் கீர்த்தி அஜயிடம் திரும்பி " எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா அஜய்? "
கேரளாவில்
இரவு 8 மணியளவில் நுழைந்த அனிஷ் வீட்டிற்குள் நுழைந்த அனிஷ் வீடு அமைதியாக இருப்பதை பார்த்து பயந்து போனான்.. அவனின் மனம் ஏதோ ஏதோ நினைத்து துடித்தது ஆனால் அவன் உள்ளே நுழைந்த போது அவனின் மனைவியும் மகளும் வேறு வேறு திசையில் திரும்பி முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்து இருந்தனர்..
என்ன தான் இங்கே நடந்தது?
அனிதா ஸ்ருதியை திரும்பி பார்க்காமல் கடினமான குரலில் " சாப்பாட்டுக்கு என்ன சமைக்கட்டும் ?"
" எனக்கு எதுவும் வேண்டாம். அப்பா வந்ததுக்கு அப்புறம் சாப்பிடலாம் "
" என்ன அப்பா வீட்டுக்கு வராரா?? என்க்கிட்ட சொல்லவே இல்லை. " என்று அனி கத்தினாள் என்றே கூறலாம்
தன்னை அம்மாவிடம் சொல்லக் கூடாது என்று அப்பா சொன்னதை தெரியாமல் உளரிவிட்டோமே என்று நாக்கை கடித்து கொண்ட ஸ்ருதி " ஆமா அப்பா வராரு அதுக்கு என்ன இப்போ ?"
ஏற்கனவே கடுப்பில் இருந்த அனிதா அவளின் பேச்சை கேட்டு இன்னும் கடுப்பானாள் " என்கிட்ட ஏண்டி சொல்லல நீ ?"
இப்படி இவர்கள் சண்டை பிடித்துக் கொண்டு இருக்கும் போது உள்ளே நுழைந்த அனிஷ் மெதுவாக தன் தொண்டையை செருமினான்..
அவன் உள்ளே வந்ததை அவர்கள் இருவரும் கவனிக்காததால் அவனின் குரலை கேட்டு பயந்து போயினர்.
அவர்கள் இருவரையும் சமாளிப்பதற்குள் அவனுக்கு உயிரே போய் விட்டது எனலாம்
தன் மகளுக்காக வாதாடியதால் அனி தான் சமைக்க போவதில்லை என்று விட்டாள்..
அதனால் பீட்ஸா ஆர்டர் செய்து இருவரையும் சாப்பிட வைத்தான்
ஸ்ருதியுடன் சிறிது நேரம் சாப்பிட்டு விட்டு விளையாடிய பின் அவளை படுக்க வைத்தான் அனிஷ்
இப்படி இவர்கள் மூவரும் தனியாக இருந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. பல நாட்கள் கழித்து அவர்கள் தனியாக இருப்பது அவனின் மனதிற்கு ஒரு வகையான நிம்மதி அளித்தது.
அனிஷ் அனிதாவை தேடி சென்ற போது அவள் கிச்சனில் கழுவிய பாத்திரங்களை அடுக்கி வைத்துக் கொண்டு இருந்தாள்
அவளை பின்னால் சென்று அணைத்து கொண்ட அனிஷ் அவளின் கழுத்து வளைவில் தன் உதட்டை பதித்தான்
அந்த முத்தம் ஆயிரம் உணர்வுகளை உணர்த்தியது. பிரிவு, சோகம், கோபம் ,காதல், காமம்.. என நிறைய.
பல வருடங்கள் கழித்து கிடைத்த முத்தத்தில் அனிதாவின் உடல் ஏதேதோ செய்தது.
அவளின் இதயம் பல முறை துடித்தது, அவளின் உடல் முழுவதும் நாணத்தால் சிவந்தது எனலாம், அவளின் இமைகள் விடாமல் துடித்ததன..
அனியின் கழுத்து வளைவில் இருந்து அவளின் காதுக்கு சென்ற அனிஷ் தன் முத்தத்தை பதித்து கரகரப்பான குரலில் " ஐ லவ் யூ " என்றான்
அதை கேட்டு அனியின் முகம் முழுவதும் நாணத்தால் சிவந்தது.. அவளும் திரும்ப கூற வேண்டும் என நினைத்தாள் ஆனால் அவளின் உதடுகள் நாணத்தால் திறக்க மறுத்தது
அனியின் கள்வன் மெதுவாக அவளின் உடலை தன் புறம் திருப்பினான்.. பின் அவளை மெல்ல தூக்கியவன் கிச்சன் ஸ்லாப்பில் அவளை அமர செய்தான்.. இப்போது அவர்கள் இருவரின் முகங்களும் நேருக்க நேர் இருந்தது
அவர்கள் இருவரும் இருவரின் கண்களையும் ஆழ நோக்கினர்.. அவர்களின் கண்களில் இருக்கும் உணர்வுகள் இருவரையும் எதுவும் பேசாமல் கட்டி போட்டது..
அவர்கள் உதடுகள் ஏதேதோ கூற துடித்தது ஆனால் அவர்களின் சிந்தனைகளை உணர்வுகள் ஆட் கொண்டது.
அனிஷ் தன் உதடுகளை அனியின் சிவந்த உதடுகளில் பதித்தான்
ஒருவேளை அவர்கள் முத்தங்களை பகிர ஆரம்பித்த போது நேரம் உறைந்து விட்டது போல..
அனிஷ் தன் கையை அனியின் இடையை சுற்றி வளைத்து அவளை இன்னும் பக்கத்தில் இழுத்து கொண்டான்..
அவன் அவளை அவனுக்குள் ஒழித்துக் கொள்ள வேண்டும் போல் மனம் துடித்தது..
அவர்கள் இருவரின் இதயத் துடிப்பு அதிகரித்ததை இருவராலும் உணர முடிந்தது..
தன் மறு கையினால் அனியின் சிவந்த முகத்தை வருடினான் பின் மெல்ல அவளின் கண்களில் முத்தமிட்டான்.. பின் மெல்ல அவள் நெற்றியில் பின் அவள் மாதுளை போன்ற கன்னங்களில் பின் அவள் கூரிய மூக்கில் பின் அவள் ரோஜா இதழ்களில்..
அந்த இரவில் அவர்கள் உடல் இரண்டாக இருந்தாலும் அவர்கள் உயிர் ஒன்றாகியது..
காதல் என்பது ஒருவருக்காக இன்னொருவர் தன் வாழ்க்கையை வர்த்தகம் செய்வது போல்..
அனிஷும் அனிதாவும் மற்றவருக்காக தன் வாழ்க்கையை எதற்காகவும் வர்த்தகம் செய்ய தயாராக இருந்தனர் அது சாவாக இருந்தாலும் சரி!
சென்னையில்..
கீர்த்தியும் அவளின் இரு பாடிகார்டுகளும் ( அபி , அஜய் ) அனிஷை அட்மிட் செய்து இருந்த மருத்துவமனைக்கு சென்றனர்..
அங்கு இருந்த ரிஷப்ஷனிஸ்டிடம் கேட்டுக் கொண்டு இருந்த போது கீர்த்தி பார்க்க கூடாத ஒருவரை பார்த்தாள்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro