தாரமே - 29
கீர்த்தி அபியை அடிக்க ஆரம்பித்தாள்.. ஆனால் அபியோ அவளை தடுப்பதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை..
பின் என்ன நினைத்தாளோ அடிப்பதை நிறுத்தி விட்டு அவனை இறுக கட்டிக் கொண்டாள்..
அவர்கள் இருவர் முகத்திலும் புன்னகை இருந்ததது..ஆனால் இரண்டும் வித்தியாசமான புன்னகையாக இருந்தது..
கீர்த்தியின் புன்னகை காதல் நிறைந்து இருந்தது..
அபியின் புன்னகையோ தொலைந்து போன பறவை வீடு வந்து சேர்ந்தது போல் இருந்தது..
பின் கீர்த்தி அபியின் விழிகளை நேராக பார்த்து " எப்படி நீ நான் உன்ன விட்டு போவேனு நினைச்ச என்ன நடந்தாலும் உன்ன விட்டு எங்கயும் போக மாட்டேன் அபி.. நீ தான் என்னோட கோபம் சந்தோஷம் காதல் நட்பு எல்லாமே.. நீ எப்படி.. "
என்று அவள் முடிப்பதற்குள் அபி அவளின் இடுப்பை தன்னருகில் இழுத்து அவளின் இதழ்களை சிறை படுத்திக் கொண்டான்..
முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீ தானே❤
ஒரு நொடியோ அல்ல ஒரு நிமிடமோ அறியவில்லை அவர்களுக்கு..
அவர்கள் இருவருக்கும் தங்கள் காதலை முன்னமே சொல்லி இருக்கலாம் என தோன்றியது
அவர்கள் உதடுகள் சொல்ல துடித்த காதலை அவர்களின் வீன் பிடிவாதத்தினால் சொல்லாமல் மற்றவர் சொல்வதற்காக காத்திருந்தனர்.. என்ன ஒரு மடத்தனம்
எப்படியோ கடைசியில் சேர்ந்தாகி விட்டார்கள்..
( Author's note : எந்த ஜோடி உங்களுக்கு பிடித்து இருந்தது? அபிகீர்த்தி/ அனிஷ்அனிதா கமன்ட்ஸ்ல சொல்லுங்க )
கேரளாவில்..
அனிஷின் அமைதியற்ற நிலையை பார்த்து கவலையுடன் அனிதா " அனிஷ் என்ன ஆயிற்று? "
அனிதாவை பார்த்ததும் அனிஷ் அவளை அருகில் இழுத்து அணைத்து கொண்டான் அவளின் கழுத்து வளைவில் தன் முகத்தை பதித்து கொண்டான்..
பின் மெதுவாக " அனி நம்ம பிரிவுக்கு காரணம் யாராக இருந்தாலும் என்ன நடந்தாலும் என்ன விட்டு விலகி போயிடாத அனி ஓகே? "
அனி சிறிது நேரம் அமைதியாக இருந்தாள் பின் " அது நீங்களாகவே இருந்தாலும் விட்டு போக மாட்டேன் அனிஷ்.. " என்றாள்..
இதை கேட்டு அனிஷிற்கு என்ன சொல்வது என புரியவில்லை அவனின் இதயத்தை யாரோ பிழிவது போல் வலித்தது..
அவன் மெதுவாக அவன் கையில் இருந்தவளின் நெற்றியில் தன் இதழ்களை பதித்தான்
நெற்றியில் முத்தமிடுவது இதழில் முத்தமிடுவதை விட அழகானது❤
அனிஷ் கேரளாவில் இருந்து சென்னைக்கு ஃபிளைடில் வந்து சேர்ந்தான்..
இதற்கிடையில் கீர்த்தி அபியிடம் அனிஷ் கூறியவற்றை கூறினாள்
இந்த விஷயத்தில் அவனின் தந்தைக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறினாள்..
அவர்கள் மூவரும் அபி கூறிய இடத்திற்கு காரில் சென்றனர்..
மூவரும் அனிஷின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்..
அவர்கள் உள்ளே நுழைந்த போது அனிஷ் அங்கே இருந்த ஷோபாவில் கண்கள் மூடி அமர்ந்து இருந்தான்
அவன் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தது போல் இருந்தது..
அவர்கள் வந்து அடைந்ததை உணர்ந்தவன் மெதுவாக தன் கண்களை திறந்தனர்..
அவன் பார்த்தது மூன்று இளைஞர்கள்.. தன் ஆழ் மனதில் புதைத்து வைத்து இருந்த அந்த உண்மையை தோன்டி எடுக்க போகிறவர்கள்.. அவர்களின் முயற்சியை பார்த்து அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது..
அவர்களுக்கு தனிமையை கொடுக்க அஜய் நினைத்து கீர்த்தியிடம் தான் கிளம்புவதாக கூறினான்..
இதை கேட்ட அனிஷ் அஜையிடம் " இருக்கட்டும் ஸார் நீங்க இருவருக்கும் உதவி செய்து இருக்கீங்க உங்களுக்கும் உண்மை தெரிந்தே ஆக வேண்டும்.. சோ இங்க இருங்க.. " என்றான்..
அனிஷ் கூறியதால் அஜையும் அங்கேயே தங்கி விட்டான்..
பின் அனிஷ் தன் தம்பியை நோக்கி திருப்பினான்
அவனின் அழுது வீங்கி இருக்கும் கண்களை பார்த்து அவனுக்கு பாவமாக இருந்ததது...
அவன் என்ன தான் மாடு மாதிரி வளர்ந்து இருந்தாலும் அபி அனிஷிற்கு இன்னும் அவனின் குட்டி தம்பிதான்..
அவன் அருகில் வந்த அனிஷ் அவனை அணைத்து கொண்டு அவனின் தலையை தட்டி கொடுத்தவன் அவனின் கண்களை பார்த்து " அந்த விபத்துக்கு காரணம் சித்தப்பா இல்லை அப்பா "
அனைவரும் அதை கேட்டு அதிர்ந்து போய் இருந்தனர்
நிஜமாகவே அனிஷின் தந்தை தான் அவனின் விபத்துக்கு காரணமா ?
எதற்காக அவர் அப்படி செய்ய வேண்டும்?
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro