தாரமே - 28
அனிஷ் ரிச்சர்டை அழைத்தது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது
அபிக்கு இன்னும் குற்ற உணர்வு அதிகரித்தது.. அவன் தீர விசாரிக்காமல் தன் தந்தை தான் அனைத்திற்கும் காரணம் என முடிவு செய்து விட்டான்..
அவன் மனதில் ஓடியது எல்லாம் அவனால் எப்படி கீர்த்தியை எதிர் கொள்ள முடியும்?
அண்ணி.. தன் மேல் எவ்வளவு பாசம் கொண்டு இருந்தார்கள் இனி தன்னை மறுபடியும் தன் சொந்த தம்பி போல் நடத்து வார்களா? மாட்டார்களே...
ஸ்ருதி.. தன் சித்தப்பா மீது எவ்வளவு உயிராக இருந்தாள்.. இனி தன்னிடம் மறுபடியும் சித்தப்பா என்று வருவாளா?
இவை எல்லாம் யோசித்து யோசித்து அவனால் அங்கு நிற்க முடியவில்லை அனிஷ் காலை அட்டன்ட் செய்வதற்கு முன் அங்கிருந்து வெளியேறி விட்டான்..
அவன் நினைத்தது எல்லாம் எப்படியாவது அந்த கொடூரமான கனவில் இருந்து வெளியேறுவது தான்..
அவன் மனம் இது கனவாக இருக்காதா என ஏங்கியது..
ஆனால் அவனுக்கு நன்றாக தெரியுமே இது கனவாக இருக்க வாய்ப்பில்லை என்று..
அபி வெளியேறுவதை பார்த்த கீர்த்தி தானும் வெளியே செல்ல நினைத்தாள்..
ஆனால் அவளை தடுத்து நிறுத்திய அஜய் " அவன் சிறிது நேரம் தனியாக இருக்கட்டும் " என்றான்..
அஜய்க்கு அபியின் தந்தை தான் ராஜேஷ் என தெரியவில்லை என்றாலும் அபியின் செயல்பாடுகளை உணர்ந்து கண்டிப்பாக அவனுக்கு வேண்டியவராக தான் இருக்க வேண்டும் என நினைத்தான்.. அதனால் தான் அவன் தனியாக இருக்கட்டும் என கீர்த்தியிடம் கூறினான்..
பின் அஜய் ரிச்சர்டை பார்த்து காலை அட்டன்ட் செய்யுமாறு செய்கை காட்டினான்..
அந்த கால் ஸ்பீக்கரில் போட்டு இருந்தது..
மறுமுனையில்
" ஹலோ ரிச்சர்ட் ஃபிளைட் ஏறிட்டிங்களா? தயவு செய்து இந்தியாவிற்கு கொஞ்ச நாட்கள் வராதீர்கள்.. யாருக்கும் அந்த விபத்தை பற்றி தெரியக்கூடாது.. "
மறுமுனையில் எந்த பதிலும் இல்லாதது உணர்ந்து " ரிச்சர்ட் நீங்க இருக்கிறீர்களா? "
ரிச்சர்ட் சிறிது நேரம் தயங்கியவர் மெதுவாக " அவர்களுக்கு ராஜேஷ் பற்றி தெரிந்து விட்டது "
இதை கேட்டு அனிஷ் சிறிது நேரம் பதில் அளிக்காமல் இருந்தான்..
பின் மெதுவாக
" அபிக்கு இதை பற்றி தெரியுமா? "
ஆம் என்றார் ரிச்சர்ட்
" அபி பக்கத்தில் இருக்கிறானா? "
" இல்லை ஸார் அபி இங்க இருந்து வெளியே போயிட்டாங்க.. "
இதை கேட்டு வருத்தத்தோடு பெரு மூச்சு விட்டவன்..
" கீர்த்தி அங்க இருக்கியாமா? "
தன்னை அனிஷ் அழைப்பதை உணர்ந்து " ம்ம்.. சொல்லுங்க மாமா " என்றாள்..
" ஓகே லிஸன் கீர்த்தி.. சித்தப்பாக்கும் இந்த விபத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. அன்றைக்கு நான் தான் அவர் கிட்ட இந்த விபத்த பற்றின தகவல்களை அழிக்க சொன்னேன்.. ப்ளீஸ் எனக்கு தெரியும் உனக்கு என்க்கிட்ட கேட்க நிறைய கேள்விகள் இருக்கும்.. நான் நாளைக்கு நேர்ல வந்து எல்லா வற்றையும் விவரமாக சொல்றேன்.. இப்போது எப்படியாவது அபிய சமாதானம் செய்மா.. அவன உன்னால மட்டும் தான் சமாதனம் படுத்த முடியும்.. " என்றான
இதை கேட்டு கீர்த்தி க்கும் இப்போது முக்கியமாக செய்ய வேண்டியது அபியை சமாதானம் செய்வது தான் என தோன்றியது..
அதனால் அனிஷிடம் சரி என்று கூறிவிட்டு அபி சென்ற திசை நோக்கி விரைந்தாள்..
கீர்த்தி அபி போன பக்கம் ஓடுவதை பார்த்து அவளின் பின்னால் அவளுக்கு உதவலாம் என ஓடினான்..
அவர்கள் இருவரும் காரை அடைந்தார்கள்.. அஜய் கார் சாவியை எடுத்து காரை ஸ்டார்ட் செய்தான்.. கீர்த்தியும் காரின் உள் ஏறி அமர்ந்தாள்..
கீர்த்தியின் பயம் காதல் கோபம் நிறைந்த கண்களை பார்த்ததும் அஜய்க்கு கீர்த்தி அபியை எவ்வளவு காதலிக்கிறாள் என புரிந்தது..
அஜய் எங்க செல்லட்டும் என கேட்பதற்குள் கீர்த்தி வேகமாக " பக்கத்தில் இருக்கும் பீச்க்கு போறீங்களா? கண்டிப்பாக அபி அங்க தான் இருப்பான்.. அவனோட சந்தோஷம் சோகம் எல்லாம் கடற்கரை தான்.. "
அஜய் வேகமாக காரை பெஸன்ட் நகர் பீச் நோக்கி திருப்பினான்..
அவர்கள் இருவரும் பீச் வந்து அடைந்தனர்..
கீர்த்தி காரை விட்டு இறங்கி கடற்கரை நோக்கி விரைந்தாள்..
அவர்கள் இருவருக்கும் தனிமையை கொடுக்க அஜய் காரிலேயே அமர்ந்து காத்திருந்தான்..
கீர்த்தி எதிர்பார்த்தது போலவே அபியின் உருவம் தெரிந்தது..
ஏனோ அவளுக்கு அவனின் உருவம் தனிமையை நாடுவது போல் இருந்தது..
அவள் அபியின் அருகில் செல்ல செல்ல அவளின் இதயத் துடிப்பு அதிகரித்தது.. அவனை தன் கை வளைவுக்குள் வைத்துக் கொண்டு யாரையும் அருகில் நெருங்க விடக்கூடாது என மனம் துடித்தது..
தான் இது நாள் வரை நட்பு என நினைத்தது காதல் என புரிந்தது..
இது தான் அந்த உணர்வு..
அவள் மனதில் பதிந்து இருந்த காதல் இது தான்
அங்கே தனிமையில் இருப்பவன் தான் அதற்கு உரியவன்..
அவள் அபி அருகில் செல்ல செல்ல அவளின் கண்களில் கண்ணீர் வடிந்தது..
தன் பக்கத்தில் யாரோ இருப்பதை உணர்ந்து திரும்பினான் அபி..
அவன் திரும்பியவுடன் அவனிடம் எதுவும் கூறாமல் அவனை இறுக கட்டிக் கொண்டாள் கீர்த்தி..
அந்த அணைப்பு அவனுக்கு ஆயிரம் சமாதானம் கூறியது..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro