தாரமே - 27
கீர்த்திக்கு மிகவும் எரிச்சலாகி விட்டது..
அவள் அஜயிடம் திரும்பி ஏன் தங்களிடம் கூறவில்லை என கேட்கலாம் என நினைத்தபோது அஜய் அதை உணர்ந்தவன் போல் இருவரையும் நோக்கி " ஸாரி காயிஸ்.. நா உங்க கிட்ட சொல்லிருக்கலாம் தான் ஆனால் ஒரு வேளை என்னோட யூகம் தப்பாக இருந்திருந்தால் என்ன செய்வது என நினைத்து தான் உங்களிடம் கூறவில்லை " என்றான்..
அபி புரிந்தது போல் தலை அசைத்தான்..
" இட்ஸ் ஓகே அஜய்.. முதலில் இவங்க 2 பேரையும் விசாரிக்கலாம் " என்றான்..
அபிக்கு இன்னும் புரியவில்லை ..
எதற்காக அனிஷ் இந்த விசாரணையை தடுக்க வேண்டும்?
ஒருவேளை அவனுக்கு யார் இதற்கு பின்னால் இருக்கிறார்கள் என தெரியுமா?
ஒருவேளை அவர்களை காப்பாற்ற நினைக்கிறானா?
அப்போது அனிஷிற்கு வேண்டியவர் என்றால் தனக்கு தெரிந்தவராக இருந்தால்?
அவர்கள் மூவரும் 2 பேரையும் விசாரிக்க ஆரம்பித்தனர்
விசாரணையை தொடங்கும் முன் அஜய் தன் நண்பர்கள் இருவரையும் அனுப்பி வைத்தான்..
முருகானந்தமை அஜய் விசாரிக்க ஆரம்பித்தான்..
1. இன்றைக்கு ஏன் நீங்கள் ரிச்சர்டை காண சென்றீர்கள்?
" நான் அவர் வேகஷன்க்கு போறேனு சொன்னதுனால சென்ட் ஆஃப் பண்ண வந்தேன்.."
2. " ஓகே அப்போ இன்னைக்கு மதியம் லீவ் எடுக்கிறேனு என்க்கிட்ட பெர்மிஷன் கேட்டீர்களா?"
இதற்கு இல்லை என்பது போல் தலை அசைத்தார்..
" சோ உங்களுக்கு அவங்க வெகேஷன் போறது இப்போ தான் தெரிய வந்தது?"
ஆம் என்பது போல் தலை அசைத்தார்
3 . " நான் கேள்விப்பட்டது என்னவென்றால் நீங்க ரிச்சர்ட் கூட க்ளோஸ் ஆனது 2 வருஷத்துக்கு முன்னாடி அதுக்கு முன்னாடி வரைக்கும் உங்க 2 பேருக்கும் ஆகாது.. அதாவது அனிஷ் விபத்து நடந்த சமயத்துல நீங்க 2 பேரும்
க்ளோஸ் ஆறதுக்கு என்ன காரணம் ? "
" அது உங்களுக்கு தேவை இல்லாத விஷயம் "
" ஓ அப்டி வரீங்களா? நீங்க சொல்லலனா உங்கள சொல்ல வைக்கிறதுக்கு ஆயிரம் வழி இருக்கு " என்று கூறிக்கொண்டே தன் மொபைலை எடுத்து யாருக்கோ கால் செய்தான்
மறுமுனையில் எடுத்தவுடன் " ம்.. சந்தோஷ் எனக்கு ஒரு உதவி செய்யனும்.. நான் சொல்ற ஒருவரோட பேங்க் ட்ரான்ஸாக்ஷன்ஸ் டீடைல்ஸ் வேண்டும்... " என்று கூறிக்கொண்டு இருக்கும் போதே அவர் தான் கூறிவிடுவதாக ஒப்புக் கொண்டார்..
மூவரும் அவர் என்ன கூற போகிறார் என உற்று நோக்கினர்..
" நாங்க 2 பேரும் லஞ்சம் வாங்கியத ஷேர் பண்ணிட்டோம்.. அந்த பணம் விபத்த ரிஜிஸ்டர் பண்ண வேண்டாம்னு யாரோ கொடுத்தது"
" யார் அந்த பணம் கொடுத்தது?"
முருகானந்தம் ரிச்சர்டை நோக்கி விட்டு " எனக்கு தெரியாது " என்றார்
பின் எல்லாரும் ரிச்சர்டை நோக்கினர்
அனைவரின் கேள்வி கொண்ட விழிகளை உணர்ந்தவர்
மெதுவாக தலையை குனிந்தவாறு " யாரோ ராஜேஷ்னு ஒருத்தர் கால் செய்து அந்த விபத்து நடந்த டீடைல்ஸ்ஸ அழித்தால் 10 லட்சம் கொடுப்பதாக கூறானார்.. " என்றார்
அந்த பெயரை கேட்டதும் அபிக்கு தன் தலையின் மேல் இடி விழுந்தது போல் இருந்தது..
கீர்த்திக்கும் மிகவும் அதிர்ச்சிகரமான விஷயமாக இருந்தது..
கீர்த்தி அபியின் பக்கம் திரும்பி பார்த்தாள்.. அவள் எதிர்பார்த்தது போல் அபி அதிர்ந்து போய் நின்றிருந்தான்.. அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது..
அபி இப்படி அதிர்ந்து போய் இருப்பதற்கு காரணம் அந்த ராஜேஷ் என்பவர் அபியின் தந்தை அதாவது அனிஷின் சித்தப்பா
அபியின் அனைத்து கேள்விகளுக்கும் மிக தெளிவாக விடை கிடைத்து விட்டதே..
அனிஷிற்கு இந்த விபத்துக்கு காரணம் அவன் தந்தை என்று தெரியும் அதனால் தான் இந்த விசாரணையை தடுக்க நினைத்தான்..
அனிஷ் அவனின் சித்தப்பாவை காப்பாற்ற வேண்டும் என்று விசாரணையை தடுக்க நினைத்திருக்கிறான்..
அனிஷ் கூறியதின் அர்த்தம் இப்பொழுது அவனுக்கு புரிகிறது..
கீர்த்திக்கு ஆபத்து என்று கூறியது ஏனென்றால் அவளால் எப்படி தாங்கி கொள்ள முடியும்?
அவளின் அக்காவின் வாழ்க்கை அழிந்து போவதற்கு காரணம் தன் தந்தை ஆயிற்றே..
இனி அவனால் எப்படி அவளை எதிர் கொள்ள முடியும்?
இப்படி இவனாக தன் மனதில் நினைத்துக் கொண்டு மனதை கொழப்பி கொண்டான்..
அப்போது ரிச்சர்டின் மொபைல் போன் அழைத்தது..
காலர் ஐடி " மிஸ்டர் அனிஷ் " என இருந்தது..
இதை பார்த்ததும் மூவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro