தாரமே - 26
சிலர் நம் வாழ்வில் நம்மால் மன்னிக்க முடியாத தவறு செய்திருந்தாலும்... அவர்கள் நம் ரத்த உறவுகளாக இருந்தால்.. ஆயினும் அவர்கள் மேல் நமக்கு கோபம் இருந்தாலும் மற்றவர்கள் நம்மால் அவர்களை தண்டிக்க நினைக்கும் போது அவர்களை காப்பாற்றவே மனம் சொல்லும்..
அனிஷ் அபிக்கு கால் செய்தான்..
மறுமுனையில் எடுத்தவுடன் " அபி லிசன்.. கீர்த்திய எப்படியாவது இந்த விஷயத்துல இருந்து டிஷ்ட்ராக்ட் பண்ணு.. இந்த விஷயத்துல அவ எவ்வளவு இன்வால்வ் ஆகிறாளோ அவ்வளவு ஆபத்து அவளுக்கு.. ப்ளீஸ் நான் சொல்றத கேளு... "
மறுமுனையில் இருந்த அபிக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.. அனிஷ் ஏன் விசாரணையை தடுக்கனும் ? அவருக்காக தான நம்ம கஷ்டபடுறோம்? கோபமான அபி
" அண்ணா உங்களுக்காக தான் நாங்க இங்க கஷ்டபடுறோம்.. உங்களுக்கு பயமா இருந்தால் அமைதியாக இருங்க.. கீர்த்திய பத்தி நீங்க கவலைபடாதீங்க நான் பாத்துகிறேன்..
என்று கூறிவிட்டு காலை கட் செய்தான்...
மறுமுனையில் அனிஷ் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றான்..
அபியின் அமைதியை கவனித்த கீர்த்தி என்னவென்று கேட்டாள்.. ஆனால் அவன் எதுவும் கூறாமல் அவளை நோக்கி புன்னகையுடன் ஒன்றும் இல்லை என்று தலை அசைத்தான்..
ஆயினும் அபி ஒன்றும் இல்லை என்றாலும்அவன் ஏதோ மறுக்கிறான் என்பதை உணர்ந்த கீர்த்தி என்னவென்று கேட்க மறுபடியும் அவனை கூப்பிடலாம் என பார்த்தால் அதற்குள் அவர்கள் கார் ஒரு வீட்டிற்கு முன் வந்து நின்றது..
மூவரும் அந்த வீட்டின் வெளியே நின்றனர்.. அழைப்பு மணியை அழுத்தினாள் கீர்த்தி..
ஆனால் கால் மணி நேரம் ஆகியும் எந்த பதிலும் இல்லை.. கடுப்பான அபி அழைப்பு மணியை அழுத்திக் கொண்டே இருந்தான்..
சத்தம் பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு பாட்டி வெளியே வந்தார்.. அபியை பார்த்து முறைத்த அந்த பாட்டி.. " அந்த வீட்டில் இருக்கவங்க இன்னைக்கு காலைல கிளம்பி வெகேஷன் போயிட்டாங்க.. அதனால நீங்க எல்லாரும் கொஞ்சம் இடத்தை காலி பண்ணுங்க.. முக்கியமாக நீ.. " என்று அபியை நோக்கி கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்...
இதை கேட்ட அபியும் கீர்த்தியும் ஷாக் ஆகிறார்கள்...
ஆனால் அஜய் மட்டும் இதை எதிர் பார்த்தவன் போல் தலை அசைத்தான்..
அந்த விபத்து ஏன் ரிஜிஸ்டர் ஆகவில்லை?
இந்த எஸ்.ஐ ஏன் அவர்கள் வரும் நேரம் பார்த்து வெகேஷன் என கிளம்ப வேண்டும்?
இந்த எஸ்.ஐ அவர்கள் வருகிறார்கள் என்று அறிந்து சென்றாரா?
இனி எப்படி விசாரணையை தொடர்வது?
அப்போது திடிரென அஜையின் மொபைலில் யாரோ அழைத்தார்கள்.. அவன் அட்டன்ட் செய்தான்..
மறுமுனையில் என்ன கூறினார்கள் என தெரியவில்லை.. ஆனால் அஜய் " ஓகே.. நாங்க வரோம் " என கூறிவிட்டு காலை கட் செய்தான்..
பின் இருவரையும் பார்த்து அவனை தொடருமாரு சைகை செய்துவிட்டு வேகமாக காரை நோக்கி விரைந்தான்..
என்ன நடக்கிறது என்று தெரியவில்லை என்றாலும்அவன் கூறியதை போல் இருவரும் காரை நோக்கி விரைந்தார்கள்..
சிறிது நேரத்தில் கார் ஒரு பெரிய ஹோட்டல் முன் வந்து நின்றது.. அந்த ஹோட்டல் ஏர்ப்போட் பக்கத்தில் இருந்தது.. ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்த கீர்த்தி சுற்றிமுற்றி பார்த்தாள்..
அனைவரும் உள்ளே நுழைந்தனர்..
ரிஷப்ஷனிஸ்டிடம் சென்ற அஜய் " ரூம் நம்பர் 303 எங்க இருக்கு ?" என்று கேட்டான்..
அவன் போலிஸ் யூனிபார்ம் அணியாததால் அந்த ரிஷப்ஷனிஸ்ட் காமிக்க மறுத்தார்..
அஜய் பின் தன் ஐடியை எடுத்துக் காண்பித்தான்..
பயந்து போனவர் " ஸாரி ஸார்! " என்று கூறிவிட்டு அவர்களை வழி நடத்தி சென்றார்..
அபியை நோக்கி கீர்த்தி " இதுக்கு தான் அவர் உதவி வேண்டுமென்று சொன்னேன் !!" என்றாள்
கீர்த்தி பார்த்து தன் நாக்கை துருத்தி விளையாட்டு காமித்தான் அபி..
அவர்கள் 303 ரூம் எண் முன் வந்து நின்றவுடன் அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு அந்த ரிஷப்ஷனிஸ்ட் சென்றார்..
அந்த ரூமின் அழைப்பு மணியை அழுத்தினான் அஜய்..
ஒரு இளைஞர் வந்து கதவை திறந்தான்.. அஜயை பார்த்தவுடன் அவன் ஹைஃபை கொடுத்து " வாட்ஸ்ஸப் ப்ரோ!!! " என்றான்..
உள்ளே..
கான்ஸ்டபிள் முருகானந்தமும் பக்கத்தில் ஓர் நடுத்தர வயதில் இருந்த மனிதரும் நாற்காலியில் கட்டி வைக்க பட்டிருந்தனர்..
இதை கண்ட அபியும் கீர்த்தியும் அஜையிடம் என்ன என்பது போல் முழித்தனர்..
அவர்களை பார்த்து சிரித்துக் கொண்ட அஜய் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை விவரித்தான்..
அஜய் அந்த ஸ்டேஷனுக்கு வருவதற்கு முன் அங்கே இருப்பவர்களை பற்றி விசாரித்தான்..
அந்த கான்ஸ்டபிள் முருகானந்தமிற்கும் எஸ்.ஐ ரிச்சர்டிற்கும் ஆகாது.. ஆனால் அவர் மாற்றலாகி போகும் முன் அந்த 2 வருடம் இருவரும் நெருங்கி இருந்தனர்..
அனிஷின் விபத்து நடந்தது அந்த சமயத்தில் தான்..
கண்டிப்பாக இதில் இவருக்கு தொடர்பு இருக்கும் என்பதை ஊகித்து இருந்தான்..
அதனால் அவர்கள் கிளம்பும் முன் தன் நன்பர்களுக்கு கால் செய்து முருகானந்தமை தொடருமாரு கூறி இருந்தான்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro