தாரமே-23❤️❤️
கீர்த்தி ஆதர்ஷிடம் " எனக்கு என்னமோ இதுல ஒரு குழப்பம் இருக்க மாதிரி இருக்கு...எவளோ ஒருத்தி வந்து என்னோட அக்கா மாமாவ பிரிக்க முடிஞ்சுருமா??..நாளைல இருந்து நம்ம இன்வெஸ்டிகேஸன ஸ்டார்ட் பண்றோம் ரெடியா இரு..!!" என்க்ஷு என்று கூறிக்கொண்டிருக்கும் போதே அனிதா உள்ளே நுழையவும் பேச்சை மாற்றும் விதமாக " ஓகே டி பாய்..குட் நைட் ..டேக் கேர்..!!" என்று கூறிவிட்டு மொபைலை வைத்தாள்.. மறுமுனையில் ஆதர்ஷ் 'இவளுக்கு என்ன பைத்தியமா?? நடு ராத்திரியில கால் பண்ணி லூசு மாதிரி பேசுறா!!' என்று நினைத்துக் கொண்டே தன் தூக்கத்தை தொடர்ந்தான்..
அனைவரும் குடும்பமாக அமர்ந்து சாப்பிட்டு முடித்தனர்.. அப்போது அனிதாவின் அம்மா அனியிடம்" ஆனந்த ராஜன் சார் வீடு எங்கம்மா ??.. அவருக்கு கண்டிப்பா நம்ம நன்றி சொல்லியே ஆகனும் ..." என்று கூறிக் கொண்டு இருந்தபோது உள்ளே நுழைந்தனர் ஆனந்த ராஜனின் குடும்பத்தினர்... அவர்கள் உள்ளே நுழைவதை பார்த்ததும் அனைவரும் எழுந்தனர்..ஆனந்த ராஜனை உற்று நோக்கிய அனிதாவின் அப்பா " டேய் ஆனந்தூ..என்று கூறிக்கொண்டே அவரை கட்டி கொண்டார்..ஆம் இருவரும் பால்ய நண்பர்கள்..ராஜனை அடையாளம் கண்டவுடன் இருவரும் நலம் விசாரித்தனர்.." ஆனந்த் ரொம்ப தேங்க்ஸ் டா..நாங்க பக்கத்தில இல்லாதப்போ எங்க நல்லா பாத்துக்கிட்டதுக்கு..என்று உணர்ச்சிமிக்க நன்றி கூறினார்..அவரை தட்டி கொடுத்தவர்.." டேய் ராஜா ..அனிதா நம்ம பொண்ணுடா..என்று உண்மையான பாசத்துடன் கூறினார்..பின் அவர்களை தங்கள் வீட்டிற்குள் அழைத்து அமர செய்தனர்.. அப்போது தான் அங்கே அனிஷ் இருப்பதை கவனித்த ஆனந்த ராஜன் " மிஸ்டர்.அனிஷ் நீங்க எப்படி இங்க???" என்று புரியாமல் கேட்டார்.." உனக்கு தெரியாதாடா?? அனிஷ் தான்டா எங்க மாப்பிள்ளை..அனிதாவோட ஹஸ்பன்ட்.." அதை கேட்டதும் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்தனர் தந்தையும் மகனும்..அனிதாவை வேதனை தரும் விழிகளில் நோக்கிய ராகுலை பார்த்து அவளுக்கு என்ன கூறுவது என்று தெரியாமல் விழித்தாள்..இதை அனைத்தையும் கண்களில் கோபத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தான் அனிஷ்...
ஆனந்த ராஜனும் ராஜனும் அனிஷூம் உலக நடப்புகளை பற்றி பேச..ஆனந்த ராஜனின் மனைவியும் அனிதாவின் அம்மாவும் தங்கள் குழந்தைகளை பற்றி பேச..ராகுலும் அனிதாவும் தனிந்து விடப்பட்டனர்..ராகுலிடம் தயங்கி தயங்கி அனிதா" ராகுல் என்னோட அம்மா எப்பவுமே சொல்லுவாங்க..காதலை விட நட்பு தான் லைஃப் லாங் இருக்கும்...எனக்கு உன்னோட ஃபீலிங்க்ஸ்ஸ புரியாம இல்லை..எனக்கு ஒரு நல்ல ஃப்ரண்ட் இல்லனு எப்பவுமே ஃபீல் பண்ணிருக்கே..என்னோட ஃலைப் லாங்க் பெஸ்ட் பிரண்ட்டா நீ இருப்பியா ராகுல் ??" என்று கண்களில் உண்மையான நட்புடன் ராகுலை நோக்கினாள்..ராகுலும் சிறிது நேரம் யோசித்தவன் அவள் நீட்டிய கையை குழுக்கினான்... அன்றிரவு அங்கே ஒரு புது உண்மையான நட்பு மலர்ந்தது...
அங்கே உள்ளே கீர்த்தி ஆழ்ந்த யோசனையில் அமர்ந்து இருந்தாள்..அந்த மர்ம பெண் யார்?? அவள் ஏன் தன் அக்காவையும் மாமாவையும் பிரிக்க வேண்டும்??அவள் மட்டும் தனியாக செய்தாளா?? அல்லது அவளுக்கு பின் ஒரு கும்பல் இருக்கிறதா?? இப்படி பல கேள்விகள் அவள் மூலையை போட்டு குடைந்தது...இவை அனைத்திற்கான பதிலை தான்தான் கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தவள் உறங்க ஆரம்பித்தாள்...
வெளியே ஸ்ருதி உறக்கம் வருகிறது என்று அழ ஆரம்பித்தவுடன் அவளை தூக்கிக்கொண்டு தங்கள் ரூமிற்குள் நுழைந்தாள் அனிதா..ஆனந்த ராஜன் குடும்பத்தினரும் நேரம் ஆகிவிட்டதால் கிளம்பினர்...ராஜனும் அவர் மனைவியும் கீர்த்தி படுத்திருந்த அறைக்குள் நுழைய..அனிஷ் தயக்கத்துடன் அனிதாவின் ரூமிற்குள் நுழைந்தான்..அங்கே ஸ்ருதியை தட்டிக் கொடுத்து உறங்க வைத்துக் கொண்டு இருந்தாள் அனிதா..அனிஷ் உள்ளே வருவதை பார்த்ததும் அனிதா " நீங்களும் ஸ்ருதாயும் மேல படுத்துக் கோங்க என்று கூறிக்கொண்டு இருக்கும் போதே தூக்கத்திலும் ஸ்ருதி " நான் அம்மாக்கும் அப்பாக்கும் நடுவுல படுக்கனும் !!" என்றாள்.. தூங்கிட்டு தான இருந்தா என்னும் ரீதியில் இருவரும் திரும்பி நோக்கினர்...ஸ்ருதியும் தூங்குவது போல் நடிக்க ஆரம்பித்தாள்.. அவளிடம் தான் அவள் சித்தி கூறியிருக்காறாளே..அப்பா அம்மாவை சேர்க்கும் பொறுப்பு தன்னுடையது என்று..அதனால் தான் இந்த வாண்டு இப்படி ஐடியா செய்கிறது 😂😂
ஸ்ருதி கேட்டது போலயே இருவரும் அவளருகில் படுத்தனர்..இரண்டு வருடங்கள் கழித்து ஒன்றாக ஒரே கட்டிலில் படுக்கும் போது இருவருக்கும் சிவராத்திரி தான்.. சிறிது நேரம் கழித்து இருவரும் கண் அயர்ந்தனர்..காலையில் அனிதா விழித்த போது அவள் அனிஷின் கை வலைவுக்குள் இருந்தாள்..ஸ்ருதி எங்கடா என்று பார்த்தாள்..அனிதாவை இவ்விடம் தள்ளிவிட்டு அவள் பக்கத்தில் படுத்து இருந்தாள்..' அட பாவி வாண்டு..!!!' என்று மனதில் செல்லமாக தன் மகளை திட்டிக் கொண்டே மெல்ல மெல்ல அனிஷை தொந்தரவு செய்யாமல் எழுந்தாள்..ஆனால் அவள் அசைவினை உணர்ந்து எழுந்து கொண்ட அனிஷ்..துயில் கொண்டு எழுந்தாலும் தன் மனைவி அழகுதான் என்று நினைத்தவன்..அனிதாவின் நெற்றியில் தன் இதழ் முத்திரையை பதித்து ' குட் மார்னிங்' என்று மெல்லிய குரலில் கூறினான்..💞
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro