Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தாரமே-20

செல்வ மகள் அழுகை போல்
ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை
பொன் மகளின் புன்னகைப்போல்
யுக பூக்களுக்கு புன்னகைக்க தெரியவில்லை
என் பிள்ளை எட்டு வைத்த நடையைப்போல எந்த
இலக்கண கவிதையும் நடந்ததில்லை
முத்துக்கள் தெறிக்கின்ற மழலை போல ஒரு
உள்ளூரு மொழிகளில் வார்த்தை இல்லை

இவ்வரிகள் அனைத்தும் ஒரு பெண்ணிற்கு தன் அப்பா எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தும்...
அம்மாவை போல் அன்பைக் காட்ட யாராலும் முடியும் ஆனால் அப்பாவை போல் தன் கடமையை நிறைவேற்ற உலகில் யாரும் இல்லை...

தன் மகளை இரண்டு வருடங்கள் கழித்து பார்க்கிறோம் என்ற உணர்வே அவனுக்கு மகிழ்வித்தது...அதே சமயம் தன் தந்தையை இரண்டு வருடங்கள் கழித்து பார்க்கிறாள் ஸ்ருதி‌..அவளுக்கு அது கனவா??நினவா??என்றே குழப்பமாக இருந்தது..தன் அப்பாவிற்கு நிஜமாகவே தன் மேல் கோபம் இல்லை என்று மகிழ்ச்சி அடைந்தாள்..அங்கே அனிதாவோ அவனை கண்டு அவள் அதிசயிக்கவில்லை அவளுக்கு தெரியும் அவன் கண்டிப்பாக வருவான் ஆனால் இவ்வளவு சீக்கிரம் என்று தெரியவில்லை...

அந்த இடத்தில் மூன்று பேரும் மூன்று விதமான உணர்வுகளுடன் இருந்தனர்.. முதலில் உலகிற்கு வந்தவள் அனிதா அனிஷின் செல்ல மகள் ஸ்ருதி..தன் தந்தையை நோக்கி ஓடி சென்று கட்டிக்கொண்டாள்...அந்த அப்பா-மகள் உறவை கலைத்து விட விரும்பாதவளாக அனிதா..உள்ளே சென்று விட்டாள்..ஸ்ருதி தன் தந்தையை நோக்கி " அப்பா..இனிமே ஸ்ருதிய விட்டு போக மாட்டீங்கள??..ப்ராமிஸ்??" என்று தன் மழலை குரலில் கேட்டதிற்கு அனிஷ் சிரித்து கொண்டே பின்கி பிராமிஸ் செய்தான்..பின் தந்தையும் மகளும் இரண்டு வருடங்கள் பிரிந்து இருந்ததற்கு எல்லாம் சேர்த்து ஆட்டம் போட்டார்கள்..சிறிது நேரத்திற்குள் அங்கே அனிதா ஸ்ருதிக்கு பாலும் அனிஷிற்கும் தனக்கும் ஜூஸ் எடுத்து கொண்டு வந்தாள்...ஜூஸை பார்த்ததும் ஸ்ருதிக்கு பால் பிடிக்காமல் போய் விட்டது.." அம்மா எனக்கும் ஜூஸ்..ப்ளீஸ்" என்று அடம் பண்ண ஆரம்பித்தாள்..அனி " நோ நோ..முடியவே முடியாது..!!" என்று அரட்டினாள்..முன்னாடி என்றால் ஸ்ருதி ஒரு அரட்டலில் அம்மா பேச்சை கேட்டு பாலை குடித்து இருப்பாள்..ஆனால் இப்போது தான் அப்பா இருக்கிறாரே..அதனால் அடம் அதிகரித்தது.. சமாளிக்க முடியாமல் அனிஷை பார்த்து முழித்தாள் அனிதா..

அங்கு இருந்த சூழ்நிலையை பார்த்த போது அனிஷிற்கு தான் மறுபடியும் இரண்டு வருடங்கள் முன் கடந்து வந்தது போல் இருந்தது..சிரித்து கொண்டே தன் செல்ல மகளை தூக்கி கொண்டவன்..அனிதா விடம் " எனக்கும் பால் கொடு அனி!!" என்று கூறினான்..அதை கவனித்தவுடன் அனியின் முகம் மலர்ந்தது ஸ்ருதியின் முகம் சுருங்கியது...

நேரம் எப்படி சென்றது என்று தெரியவில்லை..மணி எட்டாகி விட்டது..அனிஷை தன் கூடவே இருக்க வேண்டும் என்று அடம் பண்ண ஆரம்பித்தாள் ஸ்ருதி ...ஸ்ருதி தூங்கியவுடன் கிளம்பலாம் என்று முடிவு எடுத்தான் அனிஷ்..இரவு உணவு முடித்து விட்டு ஸ்ருதியை தூங்க செய்தார்கள்..அந்த அன்பு இருந்தும் இல்லாதது போல் இருக்கும் அழகிய தம்பதி...

வெகு நாட்களுக்கு பிறகு நிம்மதியாக தன் பெற்றோர்களுடன் உறங்கினாள் ஸ்ருதி..ஸ்ருதி உறங்கியவுடன் வெளியே வந்த அனிஷ்..அனிதாவை பார்த்து " இரண்டு வருஷமா உங்க இரண்டு பேர பார்க்காம எவ்ளோ கஷ்டப்பட்டேனு தெரியுமா???நீ யார் பற்றியுமே கவலை படமா உன்னோட உயிருக்கு பயந்துட்டு ஓடி போயிடுவேனு நான் கனவுல கூட நினைத்து பார்க்கல.. அட்லீஸ்ட் உன்னோட அம்மா அப்பாவையாச்சும் நினைத்து பார்க்கலல..நீங்க உயிரோட இருக்கீங்களா?? இல்லையான்னு தெரியாம எவ்ளோ கஷ்டப்பட்டோம்னு தெரியுமா??? எனக்கு ஒரு தடவையாவது கால் பண்ணிருக்கலாம்ல???..எதுக்கு இப்படி பண்ண அனிதா ???" என்று தன் இரண்டு வருடங்கள் பொலம்பல்களை எல்லாம் கொட்டி தீர்த்தான்... அவனிடம் எல்லா உண்மைகளையும் கூற வேண்டும் என எழுந்த தன் நாவை கஷடப்பட்டு அடக்கி கொண்டாள்...பின் அனிஷை நேராக பார்த்து " ஆமா அனிஷ்..என்னோட உயிருக்கு பயந்துதான் இங்க வந்தேன்..என்னால தினமும் எனக்கும் என்னோட பொண்ணுக்கும் எதாச்சும் ஆகிடுமோனு பயந்துட்டே வாழ்ற வாழ்க்கை வேணாம்னு தான் பிரிந்து வந்தேன்..!!" என்று கூறினாள்...அவளை நம்ப முடியாதவன் போல் பார்த்த அனிஷ்..அவளிடம்" மூன்று வருஷத்துக்கு முன்னாடி நீ டிவர்ஸ் கேட்டப்போ நா கொடுக்கல...ஆனா இப்போ நா டிவர்ஸ்க்கு க்ளைம் பண்ண போறேன்...ஸ்ருதியோட கஸ்டடிய எப்படி இருந்தாலும் எனக்கு வாங்கிருவேன்‌..உன்ன மாதிரி ஒரு சுயநலமான ஒருத்தி கிட்ட என்னோட பொண்ண நா குடுக்க மாட்டேன்..!!" என்று கூறிவிட்டு கோபத்தில் அங்கிருந்து விரைந்து வெளியேறி விட்டான்..

அவன் சென்ற பின் அனிதாவிற்கு மூச்சு முட்டியது.. அவளால் நிற்க கூட முடியாமல் தரையில் விழுந்து விட்டாள்..இரண்டு வருடங்கள்..730 நாட்கள்.. ஒவ்வொரு நாளும் அவனிடம் பேச துடித்து..அவன் குரலை கேட்க துடித்து..அவன் மடியில் படுக்க துடித்து..அவனை கட்டி அணைக்க துடித்து..சொல்ல முடியாத எவ்ளோ கஷ்டங்களை அனுபவித்தாள்..அவன் குரலை கேட்பதற்காக எஸ்.டி.டி பூத்தில் வாரம் ஒருமுறையாவது அவன் நம்பரை டயல் செய்து அவன் குரலை கேட்டு விடுவாள்.. இவ்வளவு காதலிக்கும் அவளை சுயநலம் பிடித்தவள் என்கிறானே..🥺🥺

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro