தாரமே-19❤️❤️
கேரளம் தான் எவ்வளவு அழகான பிரதேசம்..மிதமான வெயில்...திரும்பும் இடம் எல்லாம் இயற்கை தாயின் நிறம்.. வானத்தை தொடும் பனை மரங்கள்..அதன் மேலே ஆண்கள் அதன் நீரை எடுத்து கொண்டு...கண்ணுக்கெட்டிய தூரம் முழுவதும் இரம்யம் மட்டுமே நிறைந்து இருந்தது...ஆனால் அதன் அழகை இரசிக்கும் மனநிலையில் அவன் இல்லை...அவன் நினைவெல்லாம் அவர்களின் கடந்த வாழ்க்கையை சுற்றியே அழைத்தது...இரண்டு வருடங்கள் முன் அவனிடம் யாராவது அனிதாவும் தானும் பிரியப் போவதாக கூறினால் சிரித்து விட்டு சென்றிருப்பான்...ஆனால் இப்போது எவ்வளவு மாறிவிட்டது அவள் தான் எவ்வளவு மாற்றத்தை அடைந்து விட்டாள்..இரண்டு வருடங்கள் முன் தன் பின்னாடியே சுற்றிக் கொண்டு கொஞ்சிக் கொண்டு ஒரு தேவதையாக இருந்தவள் இப்பொழுது ஒரு ஹாஸ்ப்பிட்டலில் டாக்டராக ஒரு தேவதையாக இருக்கிறாள்...இப்பவும் அவனால் அவளை மறக்க முடியவில்லை அவளை பார்க்கும் அவளை அணைக்க வேண்டும் போல் துடிக்கும் தன்னை கட்டுபடுத்துவது எவ்வளவு கஷ்டமாக இருந்தது..ஆனாலும் அவனால் அனிதா தன்னை விட்டு சென்றாள் ...அப்படி யார் தான் அவளை விரட்டியது??? அந்த மர்ம நபரைத்தான் இரண்டு வருடங்களாக தேடுகிறான்..அன்று நடந்தது இன்று நடந்தது போல் மனதில் இருக்கிறது ..
இரண்டு வருடங்கள் முன்...
அன்று அதிகாலையில் எமர்ஜென்சி என்று அழைத்தனர்..தன் அருகில் உறங்கி கொண்டிருந்த அனிதாவை எழுப்ப வேண்டாம் என்று நினைத்தவன்..தான் கிளம்புவதாக நோட் மட்டும் எழுதி வைத்து விட்டு சென்றான்..காரில் சென்று கொண்டு இருந்தபோது முன்னாள் சென்று கொண்டிருந்த டிரக் திடிரென்று திரும்பி விட்டது...அவனும் சுதாரித்து பின் நோக்கி சென்றால் ..பின்னால் வந்த டிரக் அவன் காரை இடித்து தள்ளி விட்டது...இவை அனைத்தும் ஒரு நிமிடத்தில் நடந்து விட்டது ..அனிஷ் ஸுட் பெல்ட் அணிந்து இருந்ததால் அவனுக்கு அவ்வளவு பாதிப்பு ஆகவில்லை ஆனால் நடந்த அதிர்ச்சியில் அவனின் கண்கள் மங்கியதாக தெரிந்தது அப்போது ஒரு பெண் .. கருப்பு நிற உடை அணிந்து இருந்தாள் அவளின் முகம் மங்கியே தெரிந்தது அவனருகில் வந்த அவள்...ஒரு ஊசியை செலுத்தினாள்...அவ்வளவு தான் அவன் கண்கள் தானாக மூடி விட்டது..அவன் கண்களை திறந்த போது தான் மருத்துவமனையில் இருப்பதை உணர்ந்தான்..தன்னருகில் அனிதாவை தேடிய போது அவளை காணவில்லை... அந்த நிமிடம் எவ்வளவு துடித்து போனான் என்பதை நினைக்கும் போது அனியின் மீது கோபம் அதிகமானது...அதே கோபத்தில் அவன் காரை வேகமாக செலுத்தினான்..
அவன் டாக்டர் .ஆனந்தராஜனின் வீட்டின் முன் வந்து நிருத்தினான் ...கீழே இறங்கியவன் சுற்றி பார்த்த போது..அங்கே ஒரு குழந்தை தன் கையில் பொம்மையை வைத்து கொண்டு அதனிடம் பேசி கொண்டிருந்தாள்..அந்த குழந்தையின் முகம் தெரியவில்லை... கொஞ்சம் கிட்டே சென்ற போது குழந்தை பேசியது கேட்டது..." ரோஸி ... உனக்கு தெரியுமா?? இன்னைக்கு பேரன்ட்ஸ் மீட்டிங் இருந்தது அதுல அம்மா மட்டும் தா வந்தாங்க.. என்னோட அப்பா எங்கனு கேட்டுட்டு அவங்களே அவ அப்பாக்கு அவள பிடிக்காம விட்டுட்டு போயிட்டாங்கனு சொல்றாங்க..ரோஸி நெஜமாவே அப்புக்கு ஸ்ருதிய பிடிக்கலையா??? ஸ்ருதி அவ்வளவு மோசமா???" என்று அழு குரலில் தன் மகள் கூறியதை கேட்டு அனிஷ் துடித்து போனான்..அவன் அங்கிருந்து நகர எத்தனித்த போது அங்கே அனிதா வந்தாள்..." ஹே மை ஸ்வீட் ஹார்ட்....என்று கூறி கொண்டே தன் மகளை தூக்கி அணைத்துக் கொண்டாள்..அவள் திரும்பும் போது அங்கே இருந்த அனிஷை பார்த்தவள் தன் மகளை இறுக அணைத்து கொண்டு அங்கிருந்து வேகமாக சென்று விட்டாள்...
அவள் பின்னே செல்ல வேண்டும் போல் இருந்த தன்னை அடக்கி கொண்டவன் வீட்டை நோக்கி சென்றான்..
அனிதா தன் வீட்டிற்குள் வந்த பின்னும் ஸ்ருதியை அணைத்து கொண்டே அமர்ந்து இருந்தாள்..அவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது..ஸ்ருதியும் தன்னை விட்டு சென்று விடுவாள் என்று பயங்கர பயமாக இருந்தது..அனிஷை ஸ்ருதியிடம் பிரிக்க வேண்டும் என்று விரும்பவில்லை...ஆனால் அனிஷூம் அவளும் சேர்வதற்கான வாய்ப்பு சுத்தமாக இல்லை...அது மட்டுமல்லாமல் தன்னை இரண்டு வருடங்கள் முன் மிரட்டிய அப்பெண் ஸ்ருதியை ஏதாவது செய்து விடுவாளோ என்ற பயமும் இருந்தது...தன் குழந்தையை அணைப்பில் இருந்து விடுவித்தவள் அவளிடம்.." பேபி ..ஸ்வீட் ஹார்ட் ..உனக்கு தெரிஞ்சவங்க யாராச்சும் உன்க்கிட்ட பேசுனா ... கண்டிப்பா அம்மாக்கிட்ட சொல்லிடனும்..ஓகேவா???" என்று கேட்டாள் அதற்கு ஸ்ருதி பதில் கூறாமல் கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தாள்..பின் தன் அம்மாவை நோக்கியவள் " அம்மா..அப்பா வந்து பேசுனாலும் சொல்லனுமா??" என்று கூறிய தன் மகளை இறுக அணைத்து கொண்டாள் அனி...
" அம்மா ...அப்பாக்கு நம்மள பிடிக்கலையா மா??? அவருக்கு ஸ்ருதியும் மம்மியும் வேண்டாமா??? ஸ்ருதி தெரியாம ஏதாச்சும் தப்பு செஞ்சுடேனா??? டாடிக்கிட்ட சாரி கேக்கலாம் மா...என்னோட மேம் இன்னைக்கு சொன்னாங்க யாராச்சும் ஏதாவது தப்பு செஞ்சு இருந்தா ..சாரி கேட்டா அவங்க மனிச்சிடுவாங்கலாம்...நம்மலும் கேக்கலாம் மா!!" என்று ஸ்ருதி அழு குரலில் கூறிக்கொண்டு இருந்தபோது உள்ளே நுழைந்த அனிஷ் ...ஸ்ருதியை நோக்கி கை நீட்டியவன் " அப்பாக்கு ஸ்ருதி மேல எந்த கோபமும் இல்ல...அப்பாக்கு ஸ்ருதி தா ரொம்ப இம்பார்டண்ட்...பேபி அப்பாக்கிட்ட ஓடி வாங்க!!!!" என்று தழுதழுத்த குரலில் கூறினான்...
எதிர்பாராத நேரத்தில் உள்ளே நுழைந்த தன் அப்பாவை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள் அந்த அப்பாவிற்கு ஏங்கின குழந்தை ❤️❤️
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro