தாரமே-17
எல்லாரும் எப்டி இருக்கீங்க???.. மறுபடியும் நா வந்துட்டேன் ... எல்லாரும் முன்னாடி கொடுத்த ஆதரவ இப்பவும் குடுங்க 🙏🙏...நம்ம ஒரு சின்ன ரீகேப் போயிடலாமா??
அனிஷ்-நம்ம ஹுரோ அனிதா-நம்ம ஹுரோயின் ..அனிஷ் அனிதாவின் குழந்தை ஸ்ருதி..அனிஷூம் அனிதாவும் ஒரே காலேஜில் படித்தவர்கள்..அனிஷ் அனியின் சீனியர்.. அர்ஜுன் ரெட்டியில் வருவது போல் இருவரும் காதலித்தனர்...பிறகு பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்... அவர்களுக்கு ஸ்ருதி என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது... அவர்கள் வாழ்க்கை அழகாக போய்க் கொண்டிருக்கிறது.. அப்போது அனிதாவின் மொபைல்க்கு தெரியாத நம்பரில் இருந்து கால் வந்தது..அதில் அனிதா அனிஷிடம் இருந்து விவாகரத்து வாங்கவில்லை என்றால் அனிஷை கொல்ல போவதாக கொலை மிரட்டல் விடுத்தனர்..அதை முதலில் அலட்சியம் செய்தவள் போக போக பயம் கொள்ள ஆரம்பித்தாள்...அதனால் கோர்ட்டுக்கு சென்று விவாகரத்து வாங்க கோரினாள்..ஆனால் அனிஷ் அதற்கு சம்மதிக்கவில்லை..அனிஷ்க்கு அவள் தன்னிடம் எதையோ மறைக்கிறாள் என்பதை உண்ர்ந்தவன் அவளிடம் கேட்கிறான்...அவள் கூறியதை கேட்டு முதலில் அதிர்ச்சி அடைந்தவன்..அவளுக்கு தைரியம் கொடுக்கிறான்...இனி...
அனிதா அனிஷின் வாழ்க்கை சந்தோஷமாக போய்க்கொண்டு இருந்தது..அன்று எப்பொழுதும் போல் அனிதா எழுந்த போழுது அனிஷை காணவில்லை .. அவர்கள் கட்டிலின் பக்கத்தில் இருந்த டேபிளில் ' ஹாஸ்பிடல்ல ஒரு இம்பார்டன்ட் கேஸ்..கிளம்புறேன் பாய்...' என்று நோட் எழுதியிருந்தது..அதை எடுத்து பார்த்தவள் ..' எப்பபாரு வேலை ..வீட்ல இருக்கவங்களாம் மனுஷனா தெரியல..வரட்டும் வச்சுகிறேன்.. அட்லீஸ்ட் மார்னிங் கிஸ்ஸாச்சும் குடுத்துருக்கலாம்'...என்று மனதிற்குள் அனிஷை அர்ச்சனை செய்து கொண்டே தன் காலை வேலைகளை முடித்து விட்டு ஸ்ருதியை எழுப்ப சென்றாள்...அங்கே தாயும் மகளும் சிறிது நேரம் கட்டிலில் விளையாடிவிட்டு... ஸ்ருதியை குளிப்பாட்டி அவளை ரெடி செய்து விட்டு கிச்சனுள் நுழைந்தாள்..இன்று ஏதோ அவள் மனதை உருத்திக் கொண்டே இருந்தது...ஆனால் இன்று ஸ்ருதி முதல் நாள் பள்ளி செல்கிறாள்..ஆனால் கூட அனிஷ் இல்லாதது அவளுக்கு கொஞ்சம் கவலையாக இருந்தது...இருந்தாலும் காலை உணவை சமைத்து விட்டு ஸ்ருதியையும் சாப்பிட வைத்து அவளை பள்ளிக்கு அழைத்து சென்றாள்..போகும் வழியில் ஸ்ருதி அனிஷிடம் பேச அடம் பண்ணியதால் அவனுக்கு கால் செய்தால் நம்பர் ஸ்விச்ட் ஆஃப் என்று வந்தது...அவளுக்கு ஏனோ மனம் பதைத்தது அதை வெளிக்காட்டாமல் தன் மகளிடம் குனிந்தவள் " பேபி...அப்பா பிஸியா இருக்காங்க அதா கால் அட்டன்ட் பண்ணால...பட் பேபி ஸ்கூல்ல இருந்து வந்ததுக்கு அப்புறம் அப்பா ஸ்ருதிக்கு பிடிச்ச சாக்லேட்ஸ் வாங்கி தருவாரு ...ஓகேவா???...கம்மான் அம்மாக்கு ஹைஃபை குடுங்க !!!" என்று தன் மகளை சமாதானம் செய்து ஸ்கூல்க்கு அனுப்பி வைத்தாள்...அவள் வீட்டுக்கு வந்ததுக்கு பிறகும் கால் செய்தபோது அதே போல் வந்தது...அனிஷ் எப்பவும் ஆப்ரேஷன் தேட்டரில் இருந்தால் மொபைலை ஆஃப் செய்து விடுவான்...அதனால் அப்படிதான் இருக்கும் என்று அமைதியாக விட்டாள்...ஆனால் நேரம் போக போக மனம் பதைத்தது...பிறகு ஹாஸ்பிடல்க்கு கால் செய்தாள்... அங்கே அனிஷ் காலையிலேயே கிளம்பி விட்டதாக சொன்னார்கள்..மணி மதியம் 3 ஆகி விட்டது ... ஸ்ருதியை சென்று அழைத்து வந்தாள்...இன்னும் அவனை காணவில்லை என்றதும் அவள்..அனிஷின் அப்பாக்கு கால் செய்தாள்...பின் தான் ஞாபகம் வந்தது அவர் தன் நண்பர்களுடன் உலக சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார்...அவரை டிஷ்டர்ப் செய்ய வேண்டாம் என்பதால்...அவர் அட்டன்ட் செய்தவுடன் ஸ்ருதியிடம் கொடுத்து தாத்தாவிடம் பேச விட்டாள்...ஸ்ருதியும் தன் தாத்தாவிடம் அன்று நடந்தது எல்லாம் தன் மழலை மொழியில் கூறிக்கொண்டிருந்தாள்...அவரும் தன் பேத்தி சொல்வதை ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்தார்...
அனிஷின் நண்பரான கார்த்திக்கிற்கு கால் செய்தாள்...அவன் எடுத்தவுடன்..." அனிதாமா எப்டி இருக்க?? அண்ணாவ மறந்துட்ட பாத்தியா??..அந்த திருட்டு பையன் அனிஷ் எங்க??" என்று அவன் கூறியவுடன் நிஜமாகவே நிலைக்குலைந்து போனாள்...அவள் அழுக்குரலில் " அண்ணா...அனிஷ காலைல இருந்து காணோம்னா ..என்று ஆரம்பித்து காலையில் இருந்து நடந்தவற்றை கூறினாள்.. அதை கேட்டவுடன் பயந்து போன கார்த்திக் அவளுக்கு தைரியம் கூறிவிட்டு தன் வந்து வருவதாக கூறி காலை கட் செய்தான்...தன் மொபைலை எடுத்தவள் அனிஷிடம் " அனிஷ் ப்ளீஸ் சீக்கிரம் வந்துடுங்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு " என்று வாய்ஸ் மெஸேஜ் அனுப்பினாள்..சிறிது நேரத்திற்குள் வந்த கார்த்திக் அனிஷை தாங்கள் செல்லும் இடம் எல்லாம் சென்று தேடியும் கிடைக்கவில்லை என்றான்...அவன் கூறி முடித்த சிறிது நேரத்தில் அனியின் மொபைல் அலறியது..அது ஏதோ தெரியாத நம்பர் என்றதும் கார்த்திக் பேசினான் அவன் பேசி முடித்த போது அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது...அனியிடம் திரும்பி " அனிஷ்க்கு ஆக்ஸிடென்ட் அனிமா ..."என்று கூறினான்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro