தாரமே-15
அன்று அவர்களின் திருமண நாள்.... திருமண நாளின் முந்தைய இரவு முழுதும் மோனியை தூங்க விடவில்லை .. பேசியே சாகடித்து விட்டாள்..பின் அவளை மிரட்டி உறங்க வைத்தாள்.. காலையில் அவளை எழுப்புவதற்குள் அனைவருக்கும் உறக்கமே வந்துவிட்டது அவ்வளவு களைத்து போய்விட்டனர்..ஆனால் மாப்பிளையோ அனைவரும் எழுவதற்கு முன்னே எழுந்து ரெடி ஆகிவிட்டான்...பின் அனி அடர் சிவப்பு நிற சேலையில் தேவதையாக ரெடி ஆகினாள்.. இயற்கையாகவே அவளுக்கு அழகு முகம் என்பதால் சாதாரண ஒப்பனையிலேயே தேவதையாக ஜொலித்தாள்..அவளை பார்த்த அனிஷோ தன்னவளை பார்த்து ஒரு நிமிடம் இமைக்க மறந்தான்..பின் கட்டிமேளம் ஒலிக்க தன்னவளின் சங்கு கழுத்தில் பொன்தாலியை கட்டினான்..இதுவரை அனிதா ராஜாக இருந்தவள் அனிதா ராகவாக மாறினாள்...பின் அனைவரிடமும் ஆசிர்வாதம் பெற்று தங்கள் இனிய வாழ்வினை ஆரம்பித்தார்கள் அந்த புதிய தம்பதியர்...
இதுவரை தன் பிறந்த வீட்டின் இளவரசியாக இருந்தவள் இப்போது தன் புகுந்த வீட்டின் ராணியாக நுழைந்தாள்.. அனைவரிடமும் பிரியா விடை பெற்று கிளம்பினர் போகும் வழி முழுக்க அழுது கொண்டிருந்த அவளை தன் தோளில் வைத்து அமைதிப்படுத்தினான்... ஆனால் இப்பொழுது அவர்கள் போனது முன்னே அனிதா போன வீடு இல்லை ..இது ஒரு சாதாரண வீடு போன்று இருந்தது..ஆனால் குட்டியாக அழகாக இருந்தது.. யோசனையாக அனிஷை திரும்பிப் பார்த்தபொழுது அனிஷ் சிரித்துக்கொண்டே .... " எனக்கு தெரியும் அனி உன்னோட பயமே என்னோட பணத்த பார்த்து தான் அதனால தான் நான் யு எஸ் போய் சம்பாதுச்ச காசுல இந்த வீட கட்டுனைன்... !!!" என்று கூறி அவளின் முன்நெற்றியில் முத்தமிட்டான்..அனிதாவிற்கோ தன்னவனின் காதலை நினைத்து நெகிழ்ந்து போனாள்..அவளால் எவ்வளவு முயன்றும் தன் அழுகையை நிறுத்த முடியவில்லை..அழுது கொண்டிருந்தவளை தன் கைகளில் ஏந்தி உள்ளே அழைத்து சென்றான் அனிஷ்...
அவர்களின் வீடு குட்டியாக ஆனால் மிகவும் நேர்த்தியாக இருந்தது.. இருப்பினும் சில இடங்களில் இருந்த பொருட்களை மாத்தி வைத்துவிட்டு திரைசீலைகளையும் போர்வகளையும் மாத்தி முடித்துவிட்டு மணியை பார்த்தால் 10 தாண்டியது...அனிஷ் எங்கே என்று தேடியவள் அவனை காணவில்லை என்றதும் அவனுக்கு தன் மொபைலில் அழைக்கலாம் என்று பார்த்தால் அதை தன் வீட்டில் வைத்துவிட்டு வந்ததை நினைத்து தன்னை நொந்து கொண்டாள்.. அனிஷைத் தேடி மாடிக்கு சென்றவள் ....ஒரு நிமிடம் இமைக்க மறந்து நின்றாள் அங்கு அனிஷ் சிவப்பு மற்றும் வெள்ளை நிற பலூன்களை வைத்து அழகாக அந்த இடத்தை அலங்கரித்து வைத்திருந்தான்... அதற்கு நடுவில் ஒரு ரெட் வெல்வெட் கேக்கில் லவ் யூ அணில் குட்டி என்று எழுதி இருந்தது ....அறிவும் கோட்ஷூட் எல்லாம் அணிந்து ஆண்களுக்கே உரிய கம்பீரமாக இருந்தான் ....இமைக்க மறந்து அங்கேயே நின்றவளை நோக்கி வந்தவன் அவள் ஏதோ கேட்க வந்ததும் அவளின் உதடுகள் மீது தன் விரலை வைத்தவன் அவளை தன் கைகளில் ஏந்திக்கொண்டு கேக்கின் அருகில் நிறுத்தினான்...
அவளின் காதருகில் குனிந்தவன் " ப்ளீஸ்டி அணில்குட்டி இப்போ எதுவும் பேசாதடி..இங்க உனக்கு பிடிச்ச மாதிரி மொட்டமாடி ...நிலா வெளிச்சம்..அப்றம் எப்போதுமே உனக்கு பிடிச்ச பலூன்ஸ்..ரெட் வெல்வெட் கேக் தென் உன்னோட ஃபேவரைட் நான்..பிடிச்சுருக்கா ???" என்று காதல் மின்ன கேட்டவனிடம் கண்களில் கண்ணீரோடு ஆமென்று தலையாட்டினாள்..அவளை தன் மார்போடு அணைத்துக் அவளின் முன் நெற்றியில் தன் இதழ் பதித்தவன்.." எப்பவுமே என்னோட லைஃப் விட்டு போக மாட்டேல அனிமா.." அவளின் சம்மதத்தை பெற்றவன் மனநிறைவுடன் அவளை அணைத்துக் கொண்டான்...
பின் அனிஷ் ஏதோ கால் வந்தது என்று பேச போனவன்.. திரும்பி வந்தபோது அங்கே இருந்தது வெறும் டேமில்தான் அனைத்தும் அனியின் வாயில் இருந்தது..அனைத்தையும் சாப்பிட்டு விட்டு வெகுளியாக தன்னை பார்த்து சிரித்த தன் மனைவி இன்னும் குழந்தைதான் என்று அனிஷ் நினைத்தான்..பின் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த ரூமிற்கு சென்றவர்கள் களைப்பின் காரணமாக உறங்கி விட்டனர்..காலையில் அனிஷ் எழுந்தபோது அனி தலையணையை கட்டிக்கொண்டு உறங்கி கொண்டிருந்தாள்.." க்கும்..என்னைய கட்டிப்பிடிக்க சொன்னா இவளப்பாரு பில்லோவ கட்டிப்பிடிச்சுட்டு தூங்குறா!!!😭😭' என்று நொந்துக்கொண்டு எழுந்தவன் தன் மனைவி உறங்கும் அழகை இரசத்துக் கொண்டு இருந்தான்....
பின் அவளை எழுப்ப நினைத்தவன் " மேடம் !!மேடம்..என்று அவளை எழுப்ப முயன்றான்... ஆனால் பாவம் அவனின் முயற்சிகள் எல்லாம் வீண்..ஒரு முடிவு எடுத்தவனாக ஜாக்கிங் சென்று விட்டான்...அவன் திரும்பி வந்தபோதும் அவளின் தேவதை உறங்கி கொண்டுதான் இருந்தாள்..அவள் உறங்கும் அழகை இரசித்துக் கொண்டு இருந்தவன்...அவளின் மூக்கோடு தன் மூக்கினை உரசினான்... இதழ்களில் புன்னகையோடு தன் அழகிய விழிகளை திறந்தாள் அனி....
"குட் மார்னிங் அனிஷ்!!!" என்று கூறியவளை முறைத்தவன் " இன்னும் கொஞ்ச நேரம் தூங்கியிருந்தா மதியமே ஆயிடும்...!!" அசடு வழிந்தவள்.." சரி அனிஷ் என்னோட காஃபி எங்க ???" " எந்திருச்சதே லேட் இதுல காஃபி வேறயா??? போ போய் காஃபி கொண்டு வாடி!!!" என்று பொய் கோபத்துடன் கூறியவளை முறைத்துக் கொண்டே சென்றவள்..தன் போர்களமான கிச்சனுக்குள் நுழைந்தாள்... குளித்துவிட்டு வெளியே வந்த அனிஷை அழைத்தது தீயின் வாசனைதான்..உடனே கிச்சனுக்குள் நுழைந்தவன் அங்கே அனிதா தீஞ்சு போன பாத்திரத்தை பரிதாபமாக பார்த்துக் கொண்டு இருந்தாள்... ஒருபக்கம் தீ எறிந்துக்கொண்டு இருந்தது...இதை பார்த்த அனிஷிற்கு மயக்கம் வராத குறைதான்...
Daily oru 500 words irukka ud podure guys...thappa nenaikkadhinga...byeee❤❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro